உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, June 30, 2011

செல்போனே, தள்ளிப்போ!

செல்போன் டவர்களில் இருந்து பரவும் மின்காந்த அலைகளால், சிட்டுக் குருவி போன்ற பறவை இனங்கள் அழிந்து வருவதாக இயற்கை ஆர்வலர்கள் பதறுகிறார்கள். சிட்டு குருவிகளுக்கு மட்டுமல்ல... இதனால் பொதுமக்களுக்கும் அபாயகரமன நோய்கள் உண்டாகலாம்! என்ற இன்னோர் அணுகுண்டை வீசுகிறார்கள், உலக சுகாதார மருத்துவ விஞ்ஞானிகள்!

.நா. உலக சுகாதார அமைப்பின் சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் மே 26 தொடங்கி ஜுன் 2ம் தேதி வரை எட்டு நாள் மாநாடு ஒன்றை பிரான்ஸில் நடத்தியது. 14 நாடுகளை சேர்ந்த 31 விஞ்ஞானிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் புற்று நோய் தடுப்பு குறித்து அதற்கான நவீன சிகிச்சைகள் குறித்து விவாதங்களும் ஆய்வுக் கட்டுரைகளும் எடுத்து வைக்கப்பட்டன. இந்த மாநாட்டில்தான், செல்போன் பயன்படுத்துவதால் மூளைப் புற்று நோய் வரலாம்' என்ற அபாய அறிவிப்பை வெளியிட்டு அதிரவைத்து இருக்கிறார்கள்...

மிஹ்ராஜ்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

அன்று தப்லீக் மதரஸாவில் பயின்று இன்று ஏகத்துவ அறிஞராய் திகழும் இலங்கை மவ்லவி எம்.ஐ.அன்ஸார் (தப்லீகி) அவர்களின் மாணவர் மவ்லவி எஸ்.எம். அப்துல் ஹமீது (ஷரயி) அவர்களின் உரை தொகுப்பிலிருந்து ஓர் அழகிய சொற்பொழிவு

http://www.srilankamoors.com/Media-centre/Mihraj.html

Saturday, June 25, 2011

ஜும்ஆ மட்டும் கூடுமா?


ஐயமும்-தெளிவும்

ஐயம்:

அஸ்ஸலாமு அலைக்கும்.
எங்கள் ஊரில் ஐந்து பள்ளிகளில் ஜும்ஆத் தொழுகை நடைபெறுகிறது. அவை போக, ஒரு பள்ளிக்கூடத்தில் வெள்ளிக்கிழமை, குத்பா+ஜும்ஆத் தொழுகை மட்டும் நடத்துகின்றனர்.

ஐவேளைத் தொழுகை நடத்தப்படாத இடத்தில் இவ்வாறு வெள்ளிக்கிழமை மட்டும் ஜும்ஆத் தொழுவதற்கு இஸ்லாமிய முன்னுதாரணம் உண்டா? ஐவேளை தொழுகை நடத்தப்படாத இடத்தில் ஜும்ஆ நடத்துவது கூடுமா?

- நிஜாமுத்தீன், அதிராம்பட்டினம்.

தெளிவு:

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,
ஜும்ஆத் தொழுகை மட்டும் தொழுவதற்கென ஜமாஅத்தினர் ஓரிடத்தைத் தேர்வுசெய்து, அந்த இடத்தைக் குறிப்பிட்டு இன்ன இடத்தில் ஜும்ஆத் தொழுகை நடத்தப்படும் என்று மக்களுக்கு அறிவித்து, அங்குத் தொடர்ந்து ஜும்ஆத் தொழுகையை மட்டும் நடத்திக்கொள்ளலாம். இதற்கு மார்க்க ரீதியாகத் தடையேதும் இல்லை.

ஈமான் கொண்டோரே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் நல்லறிவுடையோராக இருப்பின் இதுவே உங்களுக்கு நன்மை பயப்பதாகும் (அல்குர்ஆன் 62:9).

"வெள்ளிக்கிழமை நாளில் ஜும்ஆத் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைவுகூர தொழுமிடத்துக்குச் செல்லுங்கள்!" என இறைவசனம் உத்தரவிடுகின்றது.

ஜும்ஆத் தொழுகை நடத்தப்படும் இடம் பள்ளிவாசல் அல்லது கல்விக்கூடம், மண்டபம், திடல் போன்ற இடமாகவும் இருக்கலாம். குறிப்பிட்ட இடத்தில் ஜும்ஆத் தொழுகைக்கான அழைப்பை அறிவித்து, தொழுகைக்கு முன் உரை நிகழ்த்தி, உரைக்குப்பின் இமாமைப் பின்பற்றிக் கூட்டாக இரண்டு ரக்அத்கள் தொழுதிட வேண்டும். இதுவே ஜும்ஆத் தொழுகைக்கான நிபந்தனையாகும்.

"எனக்கு முன்னர் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. எதிரிகளுக்கும் எனக்குமிடையில் ஒரு மாத காலம் பயணம் செய்யும் இடைவெளியிருந்தாலும் அவர்களின் உள்ளத்தில் பயம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் நான் உதவப்பட்டுள்ளேன். பூமி முழுவதும் சுத்தம் செய்யத் தக்கதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. என்னுடைய சமுதாயத்தில் தொழுகையின் நேரத்தை அடைந்தவர் (தாம் இருக்கும் இடத்தில்) தொழுதுகொள்ளட்டும்! போரில் கிடைக்கிற பொருள்கள் எனக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளன. எனக்கு முன்பு ஹலாலாக்கப்பட்டதில்லை. (மறுமையில்) பரிந்துரை செய்யும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளேன். ஒவ்வொரு நபியும் தங்களின் சமூகத்திற்கு மட்டுமே நபியாக அனுப்பட்டார்கள். ஆனால், மனித இனம் முழுமைக்கும் நான் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன்" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார் (நூல்கள்:புகாரி 335, 438 முஸ்லிம் 810, நஸயீ, அஹ்மத், தாரிமீ).


''எனக்கு பூமி முழுவதும் தொழுமிடமாக ஆக்கப்பட்டுள்ளது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதில் இஸ்லாம் தடைசெய்துள்ள பிற மதத்தினர் வழிபடும் தெய்வங்களின் நினைவுச் சின்னங்கள் எதுவும் இல்லாதிருப்பின் பள்ளிக்கூடத்தில் வாரத்துக்கு ஒருமுறை ஜும்ஆத் தொழுகை மட்டும் நடத்துவதைத் தவறென்று கூறமுடியாது!

(இறைவன் மிக்க அறிந்தவன்)

Thanks to: http://www.satyamargam.com/1735

Monday, June 20, 2011

சிறுவர் துஷ்பிரயோகம்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்


மவ்லவி. (இலங்கை) அப்துல் ஹமீது (ஷரயி)
அவர்கள் வழங்கும் படிப்பினைக்கான மற்றுமொரு ஆய்வுரை

Friday, June 10, 2011

மந்திரமா? தந்திரமா?

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

மந்திரமா? தந்திரமா?
வழங்குபவர் : மவ்லவி. (இலங்கை) அப்துல் ஹமீது (ஷரயி)


கடந்த [2010] வருடம் அதிரை இஸ்லாமிக் மிஷன் {AIM} ஏற்பாட்டில் நடைபெற்ற கோடைகால பயிற்சி முகாமின் ஒரு பகுதியாக மாலைவேளைகளில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில் மந்திரமா? தந்திரமா? என்ற சிறப்பு நேரடி நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த உளவியல் நிபுணர், ஊடகவியலாளர், அரபுக் கல்லூரி முதல்வர் என பல்துறை அறிஞராய் விளங்கும் மவ்லவி அப்துல் ஹமீது (ஷரயி) அவர்கள் கலந்து கொண்டு குர்ஆன் ஹதீஸ் போதனைகளுடன் செயல் விளக்கம் செய்து காண்பித்தார்கள்.

பாருங்கள்! பரப்புங்கள்!! மூட நம்பிக்கையற்ற, ஓரிறை மீது நம்பிக்கையுள்ள சமுதாயம் உருவாகட்டும்!!!