உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, January 21, 2018

திருக்குர்ஆனைப் படிக்க வேண்டுமென்றால் இறைவன் தந்த பகுத்தறிவே போதும்


அறிவியல் சான்றுகள்
1400 ஆண்டுகளுக்கு முன்னால் எந்த மனிதனுக்கும் தெரியாத அன்றைக்கு இறைவனுக்கு மட்டுமே தெரிந்த பல விஷயங்கள் திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளன.

எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபியால் இதைச் சொல்லி இருக்கவே முடியாது என்பதையும், இறைவன் தான் சொல்லி இருக்க முடியும் என்பதையும் நேர்மையான பார்வையுடையவர்களால் அறிந்து கொள்ள இயலும். அது போன்ற வசனங்களைக் கீழே தந்துள்ளோம்.
இவ்வசனங்களை வாசியுங்கள். அத்துடன் இந்த வசனங்களின் குறிப்பு எண்ணுக்கான விளக்கத்தையும் வாசித்தால் இதை இன்னும் நன்றாக அறிந்து கொள்ள இயலும்.
பிற கோள்களிலிருந்து பூமிக்கு வரும் ஆபத்துக்களைத் தடுக்கும் முகடாக வானம் அமைந்துள்ளது - 2:22, 21:32, 40:64, 52:5
(பார்க்க : 288வது குறிப்பு)

பூமியிலிருந்து மேலேறிச் செல்பவற்றைத் திருப்பியனுப்பும் தன்மை வானத்திற்கு உண்டு - 86:11 (பார்க்க : 149வது குறிப்பு)
மனித உடலின் தோல்களில் தான் வேதனையை உணரும் நரம்புகள் உள்ளன - 4:56 (பார்க்க : 119வது குறிப்பு)
விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும்போது மனித இதயம் சுருங்கும் - 6:125 (பார்க்க : 172வது குறிப்பு)
பூமியில் மட்டும் தான் மனிதன் வாழ முடியும் - 2:36, 7:24, 7:25 (பார்க்க : 175வது குறிப்பு)
ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவைகள் பூமியின் மீது மோதாமல் இருப்பதற்குப் புவிஈர்ப்பு விசையே காரணம் - 16:79, 67:19 (பார்க்க : 260வது குறிப்பு)
விண்வெளியில் எவ்வளவு தொலைவு மனிதனால் செல்ல முடிந்தாலும், பூமிக்கு அடியில் மலையின் உயரம் அளவுக்குச் செல்ல இயலாது - 17:37 (பார்க்க : 266வது குறிப்பு)
பூமி உருண்டை என்பதை உணர்த்தும் துல்கர்ணைன் பயணம் - 18:90 (பார்க்க : 274வது குறிப்பு)
பூமி தொட்டிலாக அமைக்கப்பட்ட அற்புதம் - 20:53, 43:10, 78:6 (பார்க்க : 284வது குறிப்பு)
பெருவெடிப்பின் மூலமே உலகம் தோன்றியது என்ற தற்காலக் கண்டுபிடிப்பு குறித்த அறிவியல் முன்னறிவிப்பு - 21:30 (பார்க்க : 287வது குறிப்பு)
கருவில் வளரும் குழந்தை மூன்று மாதங்கள் கழித்தே மனித உருவம் பெறும் - 23:14 (பார்க்க : 296வது குறிப்பு)
நிலத்தடி நீர் எவ்வாறு சேமிக்கப்படுகிறது - 23:18 (பார்க்க : 297வது குறிப்பு)
கடல்கள் ஒன்றோடொன்று இணைந்திருந்தாலும் அவற்றுக்கு இடையே தடுப்பு உள்ளது - 25:53, 27:61, 35:12 55:19,20 (பார்க்க : 305வது குறிப்பு)
காற்றின் சராசரி வேகம் எவ்வளவு என்பதைக் கணித்துச் சொல்லும் அற்புதம் - 34:12 (பார்க்க : 325வது குறிப்பு)
வானங்களுக்கும், பூமிக்கும் இடையே ஈர்ப்பு சக்தி - 35:41, 13:2, 31:10, 22:65 (பார்க்க : 328வது குறிப்பு)
பல கிழக்குகள், பல மேற்குகள் என்று கூறுவதன் மூலம் பூமி உருண்டை என்பதை நிரூபித்தல் - 37:5, 55:17, 70:40 (பார்க்க : 335வது குறிப்பு)
பெருவெடிப்புக்குப் பின் தூசுப்படலத்திலிருந்து கோள்கள் உருவாயின - 41:11 (பார்க்க : 353வது குறிப்பு)
மனித இனம் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் பூமியிலிருந்தே தங்கள் எடைகளை எடுத்துக் கொள்கின்றன - 6:98, 50:4, 71:17 (பார்க்க : 167வது குறிப்பு)
விண்வெளிப் பயணம் சாத்தியமே - 55:33-35 (பார்க்க : 304வது குறிப்பு)
விரல்ரேகை மனிதனின் முக்கிய அடையாளம் - 75:4 (பார்க்க : 208வது குறிப்பு)
உயிரின உற்பத்தியில் பெண்களுக்கும் பங்குண்டு - 76:2 (பார்க்க : 207வது குறிப்பு)
தேனீக்களின் வாயிலிருந்து தேன் வெளிப்படவில்லை, தேனீக்களின் வயிற்றிலிருந்து தான் வெளியாகின்றது - 16:69 (பார்க்க : 259வது குறிப்பு)
கடலின் மேற்புறத்தில் மட்டுமின்றி கடல் ஆழத்திலும் பேரலைகள் ஏற்படுகின்றன - 24:40 (பார்க்க : 303,429வது குறிப்புகள்)
அன்னியப் பொருள் எதையும் ஏற்காத கர்ப்ப அறை, கருவை மட்டும் குறிப்பிட்ட காலம்வரை ஏற்றுக் கொள்ளும் - 13:8 (பார்க்க : 144வது குறிப்பு)
பொய் சொல்வதற்கான நரம்புகள் மூளையின் முன் பகுதியில்தான் உள்ளன - 96:15 (பார்க்க : 426வது குறிப்பு)
காற்றிலுள்ள ஆக்ஸிஜன் நீக்கப்பட்டால் அது அனைத்து உயிரினங்களையும் அழித்து விடும் - 51:41,42 (பார்க்க : 366வது குறிப்பு)
கைகளை விலாப்புறத்துடன் சேர்த்துக் கொள்வது பயத்தைக் குறைக்கும் என்ற மனோதத்துவ உண்மை - 28:32 (பார்க்க : 367வது குறிப்பு)
விந்து எங்கிருந்து வெளியேறுகின்றது என்ற அறிவியல் உண்மை - 86:7 (பார்க்க : 231வது குறிப்பு)
வான்வெளியிலும் பாதைகள் உண்டு - 51:7 (பார்க்க : 323வது குறிப்பு)
பூமிக்கு ஈர்க்கும் சக்தி உள்ளது - 13:2, 31:10 (பார்க்க : 240வது குறிப்பு)
சூரியனும் கோள்களும் ஓடுகின்றன - 13:2, 31:29, 35:13, 36:38, 39:5 (பார்க்க : 241வது குறிப்பு)
சந்திரன் பிளந்தது பற்றியும் அதற்கான சான்று சந்திரனில் பதிவாகி உள்ளது பற்றியும் அறிவித்திருப்பது - 54:1 (பார்க்க : 422வது குறிப்பு)
வான் எல்லை விரிவடைந்து கொண்டே செல்கின்றது - 51:47 (பார்க்க : 421வது குறிப்பு)
உயிரினங்கள் மட்டுமின்றி அனைத்திலும் ஜோடி உண்டு - 13:3, 20:53, 36:36, 43:12, 51:49 (பார்க்க : 242வது குறிப்பு)
உலக வெப்பமயமாதலால் பனிப்பாறை உருகி, கடல் மட்டம் உயர்ந்து நிலப்பரப்பு குறையும் - 13:41, 21:44 (பார்க்க : 243வது குறிப்பு)
வான்மழை எவ்வாறு உருவாகின்றது என்பது பற்றி இன்றைய விஞ்ஞானிகளின் கூற்றை அப்படியே முழு விபரத்துடன் விளக்கும் அதிசயம் - 24:43 (பார்க்க : 419வது குறிப்பு)
அணு ஆயுதங்கள் தயாரிக்க முடியும் - 105:1-5, 11:82, 15:74, 26:173, 27:58, 51:32 (பார்க்க : 412வது குறிப்பு)
'இருள்கள்' என்று பன்மையாகக் கூறுவதன் மூலம் நிறங்களுக்கு அலைநீளம் உண்டு என்பதையும், நிறத்திற்கு நிறம் அலைநீளம் மாறுபடும் என்பதையும் விளக்கியுள்ளது. - 2:17, 2:19, 2:257, 5:16, 6:1, 6:39, 6:59, 6:63, 6:97, 6:122, 13:16, 14:1, 14:5, 21:87, 24:40, 27:63, 33:43, 35:20, 39:6, 57:9, 65:11 (பார்க்க : 429வது குறிப்பு)
பொருட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் தொழில் நுட்பம் பற்றி ஆராயத் தூண்டுதல் - 2:259 (பார்க்க : 406வது குறிப்பு)
குளோனிங் சாத்தியம் என்பது பற்றி 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறி ஆராயத் தூண்டுதல் - 19:21, 19:29,30, 21:91, 23:50 (பார்க்க :415வது குறிப்பு)
ஒட்டகத்தின் விந்தையான உடலமைப்பைப் பற்றிய விளக்கம் - 88:17, 36:41,42 (பார்க்க : 399வது குறிப்பு)
இரும்பு இப்பூமியில் உருவாகவில்லை, வானிலிருந்து இறக்கப்பட்டது - 57:25 (பார்க்க : 423வது குறிப்பு)
படுவேகமாகச் சுழலும் பூமியை அதிர்விலிருந்து காக்கும் முளைகளாக மலைகள் உள்ளன - 15:19, 16:15, 21:31, 27:61, 31:10, 41:10, 50:7, 77:27, 78:7, 79:32 (பார்க்க : 248வது குறிப்பு)
பூமி உருவானதற்குப் பின்னர் தான் மலைகள் உருவாயின என்ற விஞ்ஞானிகளின் கூற்றை உண்மைப்படுத்துதல். - 41:9,10 (பார்க்க : 248வது குறிப்பு)
நவீனக் கருவிகளும், ஆய்வுக் கூடங்களும் இல்லாத காலத்தில், பால் எவ்வாறு உற்பத்தியாகின்றது என்பது குறித்த அறிவியல் உண்மை - 16:66 (பார்க்க : 257வது குறிப்பு)
மனிதனைத் தூக்கிச் செல்லும் அளவுக்குப் பெரிய பறவைகள் உலகத்தில் இருந்தன என்ற அறிவியல் உண்மை - 22:31 (பார்க்க : 416வது குறிப்பு)
வருடத்திற்கு எத்தனை மாதங்கள் என்பது நெறிமுறைப்படுத்தப்படாமல் இருந்த காலத்தில் 12 மாதங்கள்தான் என்று அறிவித்தது - 9:36 (பார்க்க : 202வது குறிப்பு)
கவலையில் ஆழ்ந்திருப்பவர்களுக்கு, தவறான தகவல் மூலம் அதைவிடப் பெருங்கவலையை ஏற்படுத்தினால் கவலை மறைந்து விடும் என்ற மனோதத்துவ விளக்கம் - 3:153 (பார்க்க : 102வது குறிப்பு)
மரபணுக்கள் வழிவழியாக தொடரும் - 7:172 (பார்க்க : 189வது குறிப்பு)
சென்ற நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ரிலேடிவிடி (Relativity) எனும் சார்பியல் கோட்பாடு - 22:47, 32:5 (பார்க்க : 293வது குறிப்பு)
மனிதன் குரங்கில் இருந்து படைக்கப்படவில்லை - 3:59, 4:1, 6:2, 6:98, 7:189, 15:26, 15:28, 22:5, 23:12, 30:20, 32:7, 35:11, 37:11, 38:71, 39:6, 40:67, 49:13, 55:14 (பார்க்க : 507368வது குறிப்பு)
மனிதர்களை மூக்கு சரியாக அடையாளம் காட்டும் - 68:16 (பார்க்க : 371வது குறிப்பு)
பூமி பல அடுக்குகளைக் கொண்டது என்பதை துரப்பணக் கருவிகள் இல்லாத காலத்தில் கூறிய திருக்குர்ஆன் - 65:12 (பார்க்க : 425வது குறிப்பு)
தண்ணீருக்குள் பிரசவம் நடப்பது தாய்க்கும் சேய்க்கும் நல்லது - 19:24 (பார்க்க : 436வது குறிப்பு)
குழந்தையின் பாலினத்தைத் தீர்மானிப்பது ஆண்களின் உயிரணுக்களே - 75:39 (பார்க்க : 437வது குறிப்பு)
மன அழுத்தம் நீக்கும் மருந்தை அன்றே சொன்னது - 13:28 (பார்க்க : 477வது குறிப்பு)
தேனீக்களின் வழி அறியும் திறன் - 16:68 (பார்க்க : 474வது குறிப்பு)
அதிர்வுகளை அறியும் திறன் எறும்புகளுக்கு உள்ளது 27:18 (பார்க்க : 470வது குறிப்பு)
நோன்பின் நன்மைகள் - 2:184 (பார்க்க : 475வது குறிப்பு)
தாய்ப்பால் ஊட்டுவதன் நன்மை – 2:233 (பார்க்க : 478வது குறிப்பு)
யஹ்யா என்ற பெயரில் இதற்கு முன் ஒருவரும் இருந்ததில்லை என்ற பிரகடனம் மூலம் இறைவேதம் என நிரூபித்தல் – 19:7 (பார்க்க : 467வது குறிப்பு)
முன்னறிவிப்புகள்
கஅபா ஆலயம் காலாகாலம் நிலைத்திருக்குமென்ற முன்னறிவிப்பு - 2:125, 3:97, 5:97, 14:35, 28:57, 29:67, 95:3, 105:1-5, 106:3,4 (பார்க்க : 34வது குறிப்பு)

மக்காவாசிகள் வளமான வாழ்வை அடைவார்கள் என்ற முன்னறிவிப்பு - 9:28 (பார்க்க : 410வது குறிப்பு)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களோடு கலந்து வாழ்ந்திருந்தும், அவர்களை மனிதர்களால் கொல்ல முடியாது என்று பிரகடனம் - 5:67 (பார்க்க : 145வது குறிப்பு)
குதிரை, ஒட்டகங்கள் போன்ற வாகனங்களை மட்டுமே மனிதன் அறிந்திருந்த காலத்தில், நவீன வாகனங்கள் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படும் என்ற முன்னறிவிப்பு - 16:8 (பார்க்க : 253வது குறிப்பு)
மக்காவில் முஸ்லிம்கள் அடி உதைகளுக்கு ஆளாகிக் கொண்டிருந்த காலத்தில், விரைவில் இஸ்லாமிய ஆட்சி உருவாகும் என்ற முன்னறிவிப்பு - 73:20 (பார்க்க : 118வது குறிப்பு)
முஸ்லிம்கள் மிகச் சிறுபான்மையாக இருந்த காலத்தில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள் என்ற முன்னறிவிப்பு - 17:76, 54:45 (பார்க்க : 268வது குறிப்பு)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பாரசீகர்களால் ரோமாபுரி வல்லரசு தோற்கடிக்கப்பட்டு, நிர்மூலமாக்கப்பட்டது. ரோமாபுரி வெற்றி பெறும் என்று கற்பனை செய்ய முடியாத நேரத்தில், "சில ஆண்டுகளில் ரோமாபுரி, பாரசீகத்தை வெற்றி கொள்ளும்" என்ற முன்னறிவிப்பு - 30:2,3,4 (பார்க்க : 313வது குறிப்பு)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருக்குப் பயந்து மக்காவை விட்டு வெளியேறி அகதியாக இருந்த நிலையில், அவர்கள் மக்காவை வெற்றி கொள்வார்கள் என்ற முன்னறிவிப்பு - 28:85 (பார்க்க : 311வது குறிப்பு)
பாலைவனமாக இருந்த மக்காவுக்கு, உலகின் பல பகுதிகளிலிருந்தும் கனிகள் வந்து சேரும் என்ற முன்னறிவிப்பு - 14:37, 28:57 (பார்க்க : 246வது குறிப்பு)
ஒரு மலைக் குகையில் வேதச் சுவடிகள் பாதுகாக்கப்பட்டது பற்றிய முன்னறிவிப்பு - 18:9 (பார்க்க : 271வது குறிப்பு)
முஹம்மது நபியின் பெரிய தந்தையான அபூலஹப் என்பவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மாட்டான் என்ற முன்னறிவிப்பு - 111:1,2 (பார்க்க : 356வது குறிப்பு)
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பிரளயத்தின்போது நூஹ் என்ற இறைத்தூதர் கப்பலில் காப்பாற்றப்பட்டார். அந்தக் கப்பல் ஒரு மலை மீது பாதுகாக்கப்பட்டுள்ளது என்ற முன்னறிவிப்பு - 11:44, 29:15, 54:15 (பார்க்க : 222வது குறிப்பு)
மதீனாவில் ஆதிக்கம் செய்து கொண்டிருந்த நயவஞ்சகர்கள், விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என்ற முன்னறிவிப்பு - 33:60 (பார்க்க : 185வது குறிப்பு)
குர்ஆன் காலாகாலத்துக்கும் பாதுகாக்கப்படும் என்ற முன்னறிவிப்பு - 15:9 (பார்க்க : 143வது குறிப்பு)
பல்லாயிரம் ஆண்டுகளாக வற்றாது வாரி வழங்கும் ஜம்ஜம் கிணறு 3:97 (பார்க்க : 438வது குறிப்பு)
தர்க்கரீதியான சான்றுகள்
குர்ஆனைப் போல் யாராலும் இயற்ற முடியாது என்று அறை கூவல் - 2:23,24, 10:38, 11:13, 17:88, 28:49, 52:34 (பார்க்க : 7வது குறிப்பு)

குர்ஆனில் முரண்பாட்டைக் காட்ட முடியாது என்ற அறைகூவல் - 4:82, 41:42 (பார்க்க : 123வது குறிப்பு)
முந்தைய வேதங்களில் மத குருமார்கள் மறைத்தவற்றை எழுதப்படிக்கத் தெரியாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலம் குர்ஆன் வெளிப்படுத்தியது - 3:93, 7:157, 48:29 (பார்க்க : 97வது குறிப்பு)
இறைத் தீர்ப்பு பெறுவதற்காகப் பிற மதத்தவர்களுக்கு அறைகூவல் விட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆன்மிக பலம் - 3:61 (பார்க்க : 94வது குறிப்பு)
இறை அதிகாரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று அறிவிப்பதன் மூலம் தர்க்க ரீதியாக இறைவேதம் என்று நிரூபித்தல் - 3:128 (பார்க்க : 100வது குறிப்பு)
குருடரைப் புறக்கணித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கடுமையாகக் கண்டிக்கும் வசனத்தையும் மக்களுக்கு ஓதிக் காட்டி, தர்க்க ரீதியாக இறைவேதம் என்று நிரூபித்தல் - 80:1-8 (பார்க்க : 168வது குறிப்பு)
நபிகள் நாயகம், தமது தூய வாழ்க்கையைத் தமது நம்பகத் தன்மைக்குச் சான்றாக ஆக்கி, அதன் மூலம் தாம் கொண்டு வந்த வேதம் உண்மையானது என்று நிறுவுதல் - 10:16 (பார்க்க : 212வது குறிப்பு)
நபிகள் நாயகம் அவர்களைப் பைத்தியக்காரர் என்று எதிரிகள் சொன்னபோது யார் வேண்டுமானாலும் என்னைப் பரிசோதனை செய்யலாம் என்று அறைகூவல் விட்டு இதை முறியடித்தது - 7:184, 15:6, 23:70, 34:8, 34:46, 37:36, 44:14, 52:29, 68:2, 68:51, 81:22 16 (பார்க்க : 468வது குறிப்பு)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி மீது களங்கம் சுமத்திய ஒருவருக்கு, மனிதாபிமான உதவிகள் நிறுத்தப்பட்டபோது அதைக் குர்ஆன் கண்டிப்பதன் மூலம் இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொந்தக் கருத்து அல்ல, இறைவேதம் தான் என்று தர்க்க ரீதியாக நிரூபித்தல் - 24:22 (பார்க்க : 364வது குறிப்பு)
இப்படி ஏராளமான வசனங்கள் திருக்குர்ஆனை முஹம்மது நபி கற்பனை செய்து கூறவில்லை. அவரைப் படைத்த இறைவனின் வார்த்தையே என்பதை நிரூபிக்கின்றன.
நன்றி
சகோதரி ஆயிஷா யாஸ்மீன் 
முகநூல் பதிவிலிருந்து

Friday, January 12, 2018

அதிரையில் இன்று அஸருக்கு பின் மவ்லவி அப்பாஸ் அலி அவர்களின் சிறப்பு மார்க்க விளக்க அமர்வு

அதிரையில் இன்று மாலை மவ்லவி அப்பாஸ் அலி அவர்கள் கலந்து கொண்டு மார்க்க விளக்கவுரை நிகழ்த்தும் சிறப்பு அமர்வு சிஎம்பி லேன் பகுதியில் அமைந்துள்ள ALM பள்ளிக்கூட வளாகத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதில் சிறப்பு மார்க்க விளக்க நிகழ்ச்சியையும் அதனைத் தொடர்ந்து தலைப்பை ஒட்டி நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சியை வழங்கவுள்ளார்கள்.

அதிரையில் அப்பாஸ் அலி

இன்ஷா அல்லாஹ் இன்று சிறப்பு இஸ்லாமிய மார்க்க அமர்வு மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி.

இன்று மாலை (13.01.2018 சனிக்கிழமை) அஸர் தொழுகையை தொடர்ந்து ALM ஸ்கூல் மஸ்ஜிதில் (CMP Lane) நடைபெறும்.

பாண்டிச்சேரியில் மாற்றுமதத்தவரை திருப்திப்படுத்த வஹியை பலி கொடுத்த பிஜேயின் செயல் எதன் அடிப்படையில் ஆனது?

அவரின் செயலை நியாயப்படுத்த அவரை தக்லீது செய்யும் கரீம், இபுறாஹிம் போன்றவர்கள் கொடுக்கும் வியாக்கியானம் சரியா?

தத்லீஸ் என்றால் என்ன?

அதன் நிலைபாடு என்ன?

இந்த ஹதீஸ் ஆபாசமானதா?

நபியின் செயல் ஜாபிர் ரலிக்கு எப்படி தெரியும் என்ற கேள்வி சரியா? அதனால் ஹதீஸ் நிராகரிக்கப்படலாமா

போன்ற ததஜவினர் அறிவுப்பூர்வம் (?) என வைக்கும் வாதத்திற்கான பதிலை பெறவும், தன் மூளையை ததஜ தலைமை அலுவலகத்தில் அடகு வைத்து விட்டு வட்டியை மட்டும் பயன்படுத்தோவரை தவிர, தன் சுயசிந்தனையோடு போராடிக்கொண்டிருக்கும் ஏனைய ததஜவினரும் தமிழ் கூறும் நல்லுள்ளங்களும் தெளிவு பெற அல்லாஹ் கிருபை செய்ய வேண்டும்.

வாய்ப்புள்ள அனைவரும் கலந்து கொண்டு சமீபத்தில் பாண்டிச்சேரியில் மறுக்கப்பட்ட ஹதீஸ் குறித்து குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தெளிவு பெற்றுச் செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

நிகழ்ச்சி ஏற்பாடு
அதிரை தாருத் தவ்ஹீத்

Friday, January 5, 2018

உயர்கல்வியை தொடர முடியாதோருக்கு தரமான தொழிற்கல்வி; வங்கி பணியை ராஜினாமா செய்து சமுதாய கல்லூரி தொடக்கம்: 10 ஆண்டுகளாக தொடரும் கல்விச் சேவை


பொருளாதார பின்னணி இல்லை; உயர் கல்வியை தொடர முடியவில்லை என்று ஏங்கி நிற்பவர்களுக்காகவே இயங்கி வருகிறது புதுச்சேரி அருகேயுள்ள சுவாமி விவேகானந்தர் ஊரக சமுதாயக் கல்லூரி.
ரிசர்வ் வங்கி பணியை ராஜினாமா செய்துவிட்டு இக்கல்லூரியை தொடங்கி 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறார் சுப்பிரமணியன்.
புதுச்சேரி அருகே தமிழக பகுதியான கனகசெட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவக்கல்லூரி அருகேயுள்ள இக்கல்லூரியில் எளிய குடும்பத்தினர் மட்டுமில்லாமல், பள்ளிக் கல்வியைத்தொடர முடியாத பலரின் குழந்தைகளும் தொழிற்கல்வியை ஆர்வமுடன் கற்று வருகின்றனர். இந்த சமுதாயக் கல்லூரி பற்றி அதன் நிறுவனர் சுப்பிரமணியன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
மும்பையில் ரிசர்வ் வங்கியில் பணியாற்றி வந்தேன். மூன்று மகன்கள் இருந்தனர். பணியைத் தாண்டி சமூகத்துக்கு ஏதாவது செய்ய விரும்பினேன். மும்பையில் இருந்த வீட்டை விற்றேன்.
தொடர்ந்து, சென்னை லயோலா கல்லூரி சேவியர் அல்போன்ஸ் வழிகாட்டுதல்படி சமுதாயக் கல்லூரி தொடங்க முடிவு எடுத்தேன். வீட்டை விற்று கிடைத்த பணத்தை புதுச்சேரி அருகே இடத்தை வாங்கி இக்கல்லூரியை தொடங்கினேன்.
கீற்றுக்கொட்டகையில் கடந்த 2008-ம் ஆண்டில் 70 மாணவர்களுடன் வகுப்புகளைத் தொடங்கினோம். தற்போது ஆண்டுதோறும் 500-க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெறுகின்றனர்.
சத்குரு ஸ்ரீ ஞானானந்தா சேவா அறக்கட்டளை மூலம் இயங்கும் இந்த சமுதாயக் கல்லூரியில் ஆட்டோமோட்டிவ் சர்வீஸ் டெக்னீசியன், அக்கவுண்ட்ஸ் எக்ஸிகியூட்டிவ், கம்ப்யூட்டர் ஹார்டுவேர், சுகாதார செவிலியர் உதவியாளர், மெடிக்கல் லேப் டெக்னிசியன், பிளம்மிங் டெக்னாலஜி, பிரிட்ஜ் மற்றும் ஏசி பழுதுபார்த்தல், ஹவுஸ் மற்றும் இன்டஸ்ட்ரீயல் எலக்ட்ரீசியன், இன்டஸ்ட்ரீயல் டெக்னிசியன், டெய்லரிங், எம்ப்ராய்டரி மற்றும் ஆரி ஓர்க், செல்போன் சர்வீிசிங், ஹவுஸ் கீப்பிங், சிசிடிவி சர்வீசிங் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
ஏழைகள் மட்டுமில்லாமல் ஆதரவற்றோரின் குழந்தைகள், சிறைவாசிகளின் குழந்தைகள் என பலர் இங்கு தொழிற்கல்வி பயில்கின்றனர். பொறியியல் படிக்கும் பலர் மாலையில் நேரடி பயிற்சி பெற வருகின்றனர்.

9 ஆண்டுகளில் 2 ஆயிரம் பேர்

காலையில் யோகா, தியான பயிற்சியுடன் வகுப்புகளை தொடங்குகிறோம். 9 மாதங்கள் இங்கு பயிற்சி பெற்றவுடன் 3 மாதங்கள் நிறுவனங்களில் தொழில் சார்ந்த பயிற்சி பெறுகின்றனர். கடந்த 9 ஆண்டுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயிற்சி முடித்து பல நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். 50-க்கும் மேற்பட்டோர் சுயதொழில் தொடங்கி பலருக்கும் பணி தந்துள்ளனர். 25-க்கும் மேற்பட்டோர் சிங்கப்பூர், குவைத் உட்பட பல வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர்.
மனநிலை மாற்றம் முக்கியம் என்பதால் அது சார்ந்த பயிற்சி தருகிறோம். இங்கு படித்தோர் பணிக்கு சென்ற பிறகு இங்கு வந்து நாங்கள் நல்ல நிலையில் இருப்பதை தெரிவிப்பதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி. பயிலும் அனைவருக்கும் ஆண்டுதோறும் பணி கிடைத்துவிடுகிறது. இங்கு படிப்போருக்கு உதவும், அறிவு பங்குதாரர்களாக பல தனியார் நிறுவனங்கள் உள்ளன. அத்துடன் பயிற்சி பெறவும் பணி தரவும் தொழிற்சாலை மற்றும் வேலைவாய்ப்பு பங்குதாரர்களாக தனியார் நிறுவனங்கள் உள்ளனர். அத்துடன் அறங்காவலர்கள் உதவியும் நிறுவனம் உயர்வுக்கு காரணம் என்றார்.
சுப்பிரமணியத்தின் மனைவியும் கல்லூரி முதல்வருமான அனுராதா கூறும்போது, ‘எங்கள் முதல் மகன் படிப்பை முடித்திருந்த நிலையில், என் கணவர் ரிசர்வ் வங்கி பணியை விட்டு சமூக பணியை தொடங்கினார். அவர் எது செய்தாலும் அப்பணி சரியாகவே இருக்கும் என்பதால் நான் அவருக்கு துணை நின்றேன். கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் கோயில் யாத்திரை, மகன் வீடுகளுக்கு சென்று தங்கியதில்லை. இங்குள்ள ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளே எங்கள் குழந்தைகளாக மாறிவிட்டார்கள். பல கஷ்டங்கள் இருந்தாலும், அதைத் தாண்டி வாழ்வில் உயர விரும்பும் இவர்களுக்கு கற்று தருவதே இறைவன் எங்களுக்கு இட்ட பணி’ என்றார்.


கல்லூரி அறங்காவலர்களில் ஒருவரான ஹரிஹர சுப்பிரமணியன் கூறும்போது, ‘முக்கிய தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். அவர்கள் ஆய்வகங்கள் அமைக்க உதவுகின்றனர். படிக்கும் அனைவருக்கும் மதிய உணவு இலவசமாக தருகிறோம். கணினி பயிற்சியும், ஆங்கிலத்தில் பேசவும் பயிற்சி தருகிறோம். பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் இணைந்து கல்லூரி செயல்பட்டு வருகிறது. பயிற்சி குறைந்த கட்டணத்தில் தரப்படுகிறது. இக்கட்டணம் ரூ. 6 ஆயிரத்தில் இருந்து ரூ. 9 ஆயிரம் வரை இருக்கும். தகவல் அறிய இணையத்திலும் (www. svrcc.in) பார்க்கலாம். பயிற்சி பெற விரும்புவோர் 0413 2655193 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்’ என்றார்.
கல்லூரியிலிருந்து புறப்பட்டபோது பிரபல இருசக்கர வாகன நிறுவனத்தில் இருந்து ஆய்வகம் அமைக்க அனுப்பிய சாதனங்கள் வந்திறங்கின. ‘கடந்த வாரம்தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். தற்போது வந்துவிட்டது. அடுத்து இப்பணிகள் தொடங்கும்’ என்று ஆர்வத்துடன் கூறினர் சுப்பிரமணியனும், அவரது மனைவி அனுராதாவும்.
Thanks to: http://tamil.thehindu.com/opinion/reporter-page/article22373075.ece

Sunday, December 17, 2017

குவைத்தில் ஒரு வாரம் தொடர் இஸ்லாமிய நிகழ்ச்சி மவ்லவி. இஸ்மாயில் ஸலஃபி வழங்குகிறார்

குவைத்தில் ஒரு வாரம் தொடர் இஸ்லாமிய நிகழ்ச்சி மவ்லவி. இஸ்மாயில் ஸலஃபி வழங்குகிறார்

'பித்னாக்கள்;' நிறைந்த காலத்தில் மார்க்க அறிவே அடிப்படை பாதுகாப்பாகும்.

'அல்லாஹ் யாருக்கு நலவை நாடுகின்றானோ அவர்களுக்கு மார்க்க அறிவை விசாலமாக்குகின்றான்' (நூல்: புகாரி)

எனவே, அனைவரும் கலந்து கொண்டு மார்க்க அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்: அதிரை அமீன்
Monday, November 13, 2017

சொல்லத்தான் வேண்டும்.சொல்லுவேன்...

சொல்லத்தான் வேண்டும்.சொல்லுவேன்...
கல்லோ முள்ளோ அம்போ எறியுங்கள்.ஆனால் கொஞ்சம் சிந்தியுங்கள்.
சில தினங்களிற்கு முன் பெண்களுக்கான ஒரு அமர்வில் உரையாற்றக் கிடைத்தது.அமர்வின் இறுதியில் ஒவ்வொரு பெண்ணாக தயங்கித் தயங்கி,வெட்கப்பட்டுக் கொண்டு வந்து என்னிடம் கேட்டார்கள்,"சகோதரி,உடலுறவின் போது ஓதுவதற்கு துஆ இருப்பதாக சொன்னீர்களே,அதை எழுதித் தருவீர்களா?"
இதுதான் இன்றைய முஸ்லிம் சமூகத்தின் பெண்கள் நிலை.

புற்றீசல்கள் போல ஆயிரம் பெண்கள் மத்ரசாக்கள்.மகள் கெட்டுப் போய்விடுவாள் என அஞ்சி பூப்படைந்ததுமே மத்ரசாக்களில் விடப்பட்ட பெண்பிள்ளைகள்.வெறுமனே மவ்லவியாக்கள் என்றும் ஹாபிழாக்கள் என்றும் ஆலிமாக்கள் என்றும் வாங்கிய பட்டங்கள் சுருட்டி வைக்கப்பட்ட நிலையில் பத்திரமாய் இருக்கின்றன.ஆனால் கற்றவை கற்பிக்கப் பட்டவை எத்தி வைக்கப்படவில்லை என்றே சொல்லுவேன்.
மத்ரசாக்களின் நோக்கம் கொஞ்சம் அரபும்,தஜ்வீதும் கற்பிப்பதா?
அதனுடன் சேர்த்து தையலும்,கைவேலையும்,சமையலும் கற்பிப்பதா?

தெருவிலுள்ள நான்கு பிள்ளைகளுக்கு ஓத சொல்லிக் கொடுத்து விட்டால்,இருபது பிள்ளைகளுக்கு மக்தப் நடத்தி முடித்து விட்டால் அவர்கள் சத்தியப்பிரமாணமாய் சொன்ன தஃவாவின் பணி நிறைவுற்றதாய் அர்த்தமா?
ஒரு வகையில் அந்த மவ்லவியாக்களை சாடுவதில் அர்த்தமே இல்லை.ஏனெனில் அவர்களது பானையில் போடப்பட்ட பண்டம் அவ்வளவுதான்.பிரசங்கம் செய்ய அவர்கள் பயிற்றுவிக்கப் படவில்லையே.அவர்களிடமும் விஷய ஞானமும் இல்லை.அதை தேடும் ஆர்வமும் அவர்களிடம் இல்லை.வினைத்திறனான தாஇயாக்கள் மன்னித்து விடுங்கள்.அல்லாதவர்கள் மாறிவிடுங்கள்.
சில காலங்களின் முன் இலங்கையின் பிரபல மத்ரசாவில் பட்டம் பெற்ற ஒரு பெண்ணிடம்,மாரியதுல் கிப்திய்யா மூலம் நபிகளாருக்கு இப்றாஹீம் என்ற மகன் பிறந்திருக்கிறதென்றால், அடிமை என்பதன் பூரண விளக்கத்தை" கேட்டிருந்தேன்.நான் சொன்ன பதினொரு மனைவியருள் ஒருவரை விலக்கிவிட்டு மாரியதுல் கிப்தியாவை மனைவியாக நிரூபிக்க முயன்றாரே தவிற விளக்கம் தரவேயில்லை.
இதே போல இன்னொரு மவ்லவியா,"நபிகளார் எத்தனை முறை ஹிஜ்ரத் செய்தார்கள்?" என என்னிடம் சந்தேகம் கேட்கிறார்.
இவை சில எடுத்துக் காட்டுகள் தான்.இன்னும் நிறைய சம்பவங்கள் இருக்கின்றன.
இவர்களிடம் போய் இன்னும் ஆழமாய் எப்படி இஸ்லாத்தை தெரிவது...?
இலங்கையில் ஆண்கள் மத்ரசாக்கள் போல பெண்கள் மத்ரசாக்களில் (ஓரிரு ஆண்கள் மத்ரசாக்கள் தவிற ஆண்கள் மத்ரசாக்களும் ஒன்றும் சாதித்ததில்லை) தரமாய்,ஆழமாய் போதிக்கப்படுவதே இல்லை.
பல்கலைக்கழக தரத்திலுள்ளது,பல்கலைக்கழக நுழைவு வீதம் இத்தனை என விளம்பரம் செய்கிறார்களே தவிற தாஇயாக்களை வெளியாக்கும் விகிதம் பெரும்பாலும் பூச்சியம் தான்.
எங்கள் மத்ரசாக்கள் தரமானவை.நாங்களும் தாஇயாக்கள் என்று சத்தம் போட முன் சகோதரிகளே, ஒரேயொரு முறை சகோதரி அஸ்மா ஹுதா,சகோதரி தைமிய்யா சுபைரின் வட்ஸப் குழுமங்களையும்,யூடியூப் சனல்களையும் உருது,ஹிந்தி மொழிமூல குழுமங்களையும் எட்டிப் பாருங்கள்.அத்தனை ஆழமாய் அழகாய் தெளிவாய் எத்தி வைக்கிறார்கள் என்று.உங்களின் தரமும் சாதனைகளும் தலைகுனியலாம்.
தமிழகத்திலும் அத்தனை தரமாய் மவ்லவியாக்கள் இருக்கிறார்களோ தெரியவில்லை.இல்லையென்றே தோன்றுகிறது,இருந்திருந்தால் அல் இஸ்லாஹ்,அஸ்ஸுன்னா போன்ற வட்ஸ் அப் ஆலிமாக்களுக்கான குழுமங்களின் பாடங்களை ஏன் மவ்லவி மார் கற்பிக்கப் போகிறார்கள்?
தேடிப் படிக்கும் ஆர்வமுள்ள சில பெண்கள் தவிற நிறைய பெண்களுக்கு ஐந்து வேளை தொழுவதும்,ரமழானில் நோன்பு நோற்று குர்ஆன் ஓதுவதும்,ஹபாயா பர்தாவும் தாண்டி இஸ்லாம் தெரியாது.
பெண்ணென்றால் பித்னா,நரகத்தில் உங்களைத்தான் நபிகளார் கண்டார்கள் என மவ்லவிமார் நம்பிக்கையிழக்கச் செய்தார்களே தவிற பெண்களுக்கென்று தனியான மார்க்க விளக்க வகுப்புகள் நடைபெறுவதில்லை.
ஒவ்வொரு ரமழானிலும் தராவிஹ் தொழ வந்தவர்களுக்கு தஃலீமை வாசித்துக் காட்டியதற்கு பதில் ஹைழுடைய,நிபாஸுடைய சட்டங்களை சொல்லித் தந்திருக்கலாம்.
ஜனாஸாவுடைய சட்டங்களை சொல்லித் தந்திருக்கலாம்.குளிப்பாட்டுகிறோம் என்ற பெயரில் நோவினை செய்து கொண்டிருக்கிறார்கள்.
யூத சதித்திட்டம்,உலக வரலாறு என ஆராய்ச்சி செய்து அறிக்கைகளை துப்பியவர்கள் அகீதாவை அணுவணுவாய் போதித்திருக்கலாம்.
பெண்கள் பாடசாலைக்கு,பல்கலைக் கழகத்திற்கு போவது ஹராம் என பத்வா வழங்கியவர்கள் பிக்ஹையாவது சொல்லித் தந்திருக்கலாம்.
ஆண்கள் எங்களை மிகைத்து விட்டார்கள்,பெண்களுக்கு போதிப்பதற்காய் தனியான ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்ட பெண்களுக்கு தனியான ஒரு நாளில் போதித்த தூதரின் வழிமுறை ஏன் காணாமல் போனது ?
ஆண்களை வாரமொரு முறை குத்பாக்களில் சந்தித்தவர்கள் பெண்களுக்காக இரு பெருநாள் தினங்கள் போதும் என ஏன் வரையறுத்துக் கொண்டார்கள்.?
ஒரு சமூகத்தினர் தானாக தன்னை மாற்றிக் கொள்ளாதவரை அவர்களை யாராலும் மாற்ற முடியாது.
அன்றைய அன்சாரிப் பெண்கள் தாமாகத்தான் கல்வியை தேடிப் போனார்கள்.தமக்கென ஒரு நாளை ஒதுக்கித் தாருங்கள் என்றும் கேட்டார்கள்.
ஆனால் இன்றைய எமது பெண்கள் மார்க்கத்தை படிப்பதற்கென்றால் கொஞ்சம் பின்வாங்கியே நிற்கிறார்கள்.
எங்கோ தையலுக்கும் ,சமையலுக்கும்,facial ற்கும் நேரகாலமின்றி,வயது பேதமின்றி,வெட்கம் கூச்சமின்றி,பெருமிதமாய் வகுப்புகளுக்கு செல்பவர்களுக்கு மார்க்க விளக்க வகுப்புகளென்றால் "இந்த வயதில் படிப்பதா?"என்ற வெட்கம் வந்து விடுகிறது,பாவம்.
மணிக்கணக்காய் செலவிட்டு டைல்ஸை துடைப்பவருக்கும்,புதிய ரெசிப்பி ஒன்றால் குடும்பத்தை மகிழ்விப்பவளுக்கும் பத்து நிமிடம் ஒதுக்கி மார்க்கத்தை படிக்கவும் முடியவில்லைதான், பாவம்.
வட்ஸ் அப்,டெலிக்ராம்,பேஸ்புக் போன்ற ஊடகங்களில் cookery,shopping,கவிதை குழுமங்களில் அவர்கள் காட்டும் ஆர்வம் மார்க்க விளக்க குழுமங்களில் இல்லை.
சகோதரிகளே,
கற்க அனுமதிக்கவில்லை,வகுப்புகள் நடைபெறவில்லை,அடுப்படியில் அடைத்து வைத்து விட்டார்கள் என புலம்பியது போதும்.

You tube ல் சமையல் ரெசிப்பி தேடிய அதே விரல்களால் islamkalvi.comqurankalvi.com,al quran open college என்றும் கொஞ்சமாய் தட்டிப் பாருங்கள்.நிறையவே தொடர் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.அகீதா,பிக்ஹ்,தப்ஸீர்,தஜ்வீத்,ஹதீஸ்,ஸீரா என அத்தனையும் கற்றுக் கொள்ளலாம்.இன் ஷா அல்லாஹ்.(உபயோகமான links இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்)
மவ்லவியாக்கள்,ஆலிமாக்கள் உங்களுக்கு தெரிந்த பத்து பேரை வைத்து வட்ஸப் குழுமங்களை ஆரம்பியுங்கள்.என்றோ மத்ரசாவில் படித்த கொப்பியை பார்த்தாவது வாசியுங்கள்.காலப் போக்கில் தேர்ச்சியடைந்து விடலாம்.இன் ஷா அல்லாஹ்.
நேரத்தில் கொஞ்சம் அர்ப்பணிப்பும் வேலையில் கொஞ்சம் திட்டமிடலும் தேவைப்படலாம்.
நினைவில் கொள்ளுங்கள் திரிகையில் கோதுமையை கையால் அரைத்து,குடிக்கும் தண்ணீருக்காகவும் இயற்கை தேவைகளுக்காகவும் எங்கோ பல மைல் நடந்து போன அந்த பெண்கள் தான் படிப்பதற்காகவும் நேரம் ஒதுக்கிக் கொண்டார்கள்.
ரப்பின் வழியில் ,வெற்றியின் பால் அழைப்பதற்கு மத்ரசாவில் ஓதி எடுத்த பட்டங்களோ,சான்றிதழ்களோ தேவையில்லை.
"லாஇலாஹ இல்லல்லாஹ் " என்று மொழிந்த அந்த ஷஹாதா மட்டும் தான் அன்றைய ஸஹாபாக்களின் ஒரே தகுதியாக இருந்தது.

கலீமா சொன்ன ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் தஃவா என்பது கடமையே.அதுவே காலத்தின் கட்டாயமும்.அதற்கு பெண்கள் நாங்களும் விதிவிலக்கில்லை.
islamkalvi.com for online islamic library
ISLAMKALVI.COM