உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Saturday, March 31, 2012

நானும் கணிணித் தமிழுருத் தந்தையும்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

நேற்றைய தினம் 30.03.2012 அதிரை தந்த கணிணித் தமிழுருத் தந்தையுடன் சிறுபொழுதை மம்ஸர் பூங்காவில் கழித்துவிட்டு வந்த எமக்கு நினைவுகளில் பல்லாண்டுகள் வந்து சென்றன அசைவுகளாய்.


ஜமீல் காக்கா அவர்களுடன் என் முதல் அறிமுகம் என்பது ஓர் முகம் காண அறிமுகமே! கடற்கரை தெருவில் ஒரு குடும்பமே நஜாத்...தாம் என்று வெறுப்புடன் சொன்னார் பிஎஸ்ஸி பகுருதீன் என்றும் அறியப்படுகின்ற எங்கள் நண்பர், அக்கணம் பற்றிக் கொண்டது ஜமீல் காக்காவை பார்க்கும் ஆவல்.


குர்ஆன் யாருக்கு? என்று மேடையிட்டதும், தன் இளவலின் திருமணத்திற்கு தடையாய் முளைத்த உள்ளூர் காங்கிரஸ்காரரை வெளியூர் காங்கிரஸ்காரரை வைத்து முள்ளெடுத்த விதம் எல்லாம் பள்ளிகால பரவசம்.


தம்மாம் மாநகரில், அரப் பேங்க் பில்டிங் மாடியில் ஜமீல் காக்கா அவர்கள் தங்கியிருந்த போது, அந்த மர்கஸிற்கு அடிக்கடி சென்று வரக்கூடிய வாய்ப்பை பெற்றேன். அப்போதெல்லாம் கம்ப்யூட்டரை எட்ட நின்று மருட்சியுடன் பார்த்தபோது அதில் ஜமீல் காக்கா தன் தமிழ் எழுத்துருவை உருவாக்கி கொண்டிருந்ததை பலமுறை பார்த்த நேரடி காட்சிகள் இன்னும் நினைவில் பசுமையாய்.


தம்மாமில் காக்காவின் கைவண்ணத்தில் நம் தமிழை டிஜிட்டல் வடிவில் பார்த்தபோதும், அதன் பின் சமரசம் இதழில் தமிழுருக்களை கண்டறிந்த ஜமீல் காக்காவின் பள்ளி படிப்பு குறித்தும் அறிந்தபோதும் அதிர்ந்தேன் சந்தோஷத்தில்.


நான் துபை வரும் சில தினங்களுக்கு முன்பு, இனி நான் கம்ப்யூட்டருடன் மட்டும் தான் பேசுவேன் (அதிலும் அல்லாஹ் உதவியால் ஜெயித்து காட்டியது வேறு விஷயம்) என அதிரை இஸ்லாமிக் மிஷனிடமிருந்து தன்னை தூரப்படுத்திக் கொண்ட காக்கா அவர்களை நிர்வாகிகளுடன் நேரில் ஷார்ஜா சென்று சந்தித்து தோல்வியுடன் திரும்பியபோது வெறுப்பின் முதல் வித்து விதைக்கப்பட்டது.


காலப்போக்கில் நாங்கள் இயக்க தக்லீதுகளாய் மாற, எம்மோடு இல்லாதவர்களை எதிரிகளாய் ஜார்ஜ் புஷ் கண்கொண்டு பார்த்தோம் அதில் ஜமீல் காக்காவும் ஒருவராய் போனார்கள். ஒருமுறை எங்களின் இயக்கத் தலைவர் ஒருவர் இந்தியாவிலிருந்து துபை வர. அவரை காண தனிப்பட்ட முறையில் குடும்பத்துடன் துபை விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்த ஜமீல் காக்கா எங்கள் இயக்கத் தலைவரை சந்தித்து விடக்கூடாது என்று முயன்று தோற்றுப்போனோம் அவ்வளவு வெறுப்பு (அவர்) அருமை தெரியா நம்; மண்ணின் மைந்தனின் மேல்.

ஒருநாள் தன் பேரனுடன் ஷார்ஜாவிலிருந்து துபை வந்திருந்த ஜமீல் காக்காவின் தோற்றத்தை பார்த்ததும் பதறிவிட்டேன் உள்ளூர, முழுக்க நரையுடன். கருமை நிற முடியுடன் கடைசியாக பார்த்தவனுக்கு அவர் நரை நான் சந்திக்காமல் இழந்துவிட்ட வருடங்களைச்  சொன்னது. என் உடன்பிறப்பு அப்துல் நாசர் அவர்களை நேசித்த ஒரு மனிதரை நான் நேசிக்கத் தவறியது என் கைசேதமே.

காலங்களை சூழலச் செய்யும் அல்லாஹ் நாடினான், இயக்கங்களுக்கு முழுக்குப் போட்டோம். இனங்கண்டு கொண்டோம் இனியவர்களை. இணைந்தோம் உள்ளத்தில் கசடுகள் ஏதுமின்றி, இன்ஷா அல்லாஹ் இனி தொடர்வோம் ஒப்பற்ற ஓரிறை வழியில்.

சரி, மீண்டும் மம்ஸருக்கு வருகிறேன்
நம் கணிணித் தமிழரை இன்னும் அதிகம் பேசவிட்டு கேட்டிருக்க வேண்டும்.
இனி அதிரையில் இருக்கப்போகும் ஜமீல் காக்காவுடன் எவ்வாறு நாம் இணைந்து மார்க்கத்திற்கும் சமுதாயத்திற்கும் பங்காற்ற முடியும் என ஆலோசித்திருக்க வேண்டும். ஜமீல் காக்கா அவர்களுக்கு அறிமுகமாவர்களுடன் நம்மை நாமும் அறிமுகம் செய்திட வாய்ப்பளித்திருக்க வேண்டும். ஒரு சிலருக்கு மட்டும் வழங்கப்பட்ட வாய்ப்பு இன்னும் பரவலாக்கப்பட்டிருக்க வேண்டும். இரைச்சல் மிகுந்த பூங்கா தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் மேலும் இது ஓர் அரங்க நிகழ்வாக நடந்திருக்க வேண்டும். பிரிவுபசார விழா தோற்றம் தவிர்க்கப்பட்டு ஓர் புரிந்துணர்வு நிகழ்வாக நடந்திருந்தால் இன்னும் சந்தோஷமே.

அல்ஹம்துலில்லாஹ், முடிந்ததை ஓர் பாடமாக கொள்வோம். எதிர்கால நிகழ்வுகள் நம் அதிரை சாதனையாளர்களை அடையாளம் காட்டிடும் வகையில் அமைந்திட வாழ்த்தி விடைபெறுகிறேன்.

தமிழின் 247 எழுத்துக்களையும் என் இருவிரல்களுக்குள் திணித்த தழிழுருவின் தந்தைக்கும், ஊக்கமளித்து தமிழ் தட்டச்சை எனக்கு நிஜமாக்கிய சகோதரர் தாஹா (அப்பியான் யூசுப் அவர்கள் மருமகன்) அவர்களுக்கும் நன்றி.

நினைவும் நிழலும்
அதிரைஅமீன்

கோவை அய்யூப் நிகழ்வில் இஸ்லாத்தை ஏற்ற இருவர்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்


துபை அவ்காஃப் ஏற்பாட்டில் மம்ஸார் அவ்காஃப் அரங்கில் 30.03.2012 வெள்ளியன்று நடைபெற்ற இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்வின் இறுதியில் 2 சகோதரர்கள் இஸ்லாத்தை தங்களின் வாழ்வியலாக ஏற்றுக் கொண்டார்கள். எல்லாப் புகழும் வல்லோன் அல்லாஹ்வுக்கே!


தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்ந புஷ்பநாதன் என்ற சகோதரர் யாஸீன் என்றும் பெரம்பலூர் மாவட்டம் அரியலூரை சேர்ந்த செல்வராசு என்ற சகோதரர் உமர் என்றும் தங்களுடைய பெயரை தெரிவு செய்தவர்களாக இஸ்லாத்தினுள் பாலகர்களாய் நேற்று முதல் தவழத் துவங்கினர்.


இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்களுக்கு அவ்காஃப் சார்பாக குர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன. சொற்பொழிவு நிகழ்ச்சிக்குப் பின், இஸ்லாத்தை ஏற்ற மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முஸ்லீமல்லாத சகோதரர்களுக்கும் சிறப்பு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது. சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் சகோதரர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்கள்.


உண்மைதனை உணர்ந்து வரும் மக்கள் அலை முன், கடல் நுரைகளாய் நிறைந்து காணும் இஸ்லாத்தை இலவசமாக பெற்ற பெரும்பான்மைவாத முஸ்லீம்களே! நாம் எப்போது குர்ஆனையும் நபிகளாரின் நடைமுறைகளையும் வாழ்க்கையில் கொண்டு வரப்போகிறோம்? அதுபோல் ஏகத்துவம் பேசிக்கொண்டே இயக்கங்களில் தொலைத்த இஸ்லாத்தை மீட்டெடுக்கப் போவது என்னாளோ?

 
மம்ஸரிலிருந்து மஃஸரை நோக்கி
S.அப்துல் காதர்

Friday, March 30, 2012

இறுதி நாளும் அதன் அடையாளங்களும்!

1- அல்லாஹ் இவ்வுலகத்தை நிரந்தரமாக இருப்பதற்காக படைக்கவில்லை. மாறாக அதற்கென முடிவு நாள் வரும். அந்நாளே இறுதி நாளாகும். அதுவே ஐயத்திற்கிடமில்லாத உண்மையுமாகும். அல்லாஹ் சொல்கிறான்:
 
நிச்சயமாக இறுதிநாள் வந்தே தீரும் அதில் சந்தேகமில்லை.(40:59) நிராகரிப்பாளர்கள் இறுதி நாள் எங்களிடம் வருமா? எனக் கேட்கிறார் கள்(நபியே) நீர் கூறும்: ஆம்! எம் இறைவனின் மீது சத்தியமாக நிச்சயமாக அது உங்களிடம் வரும்.(34:3)

(விசாரணைக்குரிய) காலம் நிச்சயமாக வந்தே தீரும்; அதில் சந்தேகமே இல்லை – எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதில் நம்பிக்கை கொள்ளவில்லை. (54:1)

மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு (விசாரணை நாள்) நெருங்கிவிட்டது. ஆனால் அவர்களோ அதைப் புறக்கணித்து பராமுகமாக இருக்கிறார்கள்.(21:1)

எனினும் அது நெருக்கமாக இருக்கிறதென்பது மனித அறிவால் அறிந்து கொள்ளக்கூடிய விஷயமல்ல. அதை அவர்கள் அறிந்து கொள்ளவும் முடியாது. எனினும் அல்லாஹ்வின் விசாலமான அறிவையும் உலகத்தில் கடந்துவிட்ட கால அளவையும் கவனிக்கும்போது மறுமைநாள் சமீபமானது என அறியலாம். மறுமை பற்றிய அறிவு அல்லாஹ் தனக்கே சொந்தமாக்கிக் கொண்ட மறைவான விஷயங்களிலுள்ளதாகும். அவன் இவ்விஷயத்தைத் தனது படைப்புகளில் எவருக்கும் அறிவித்துக் கொடுக்கவில்லை. அல்லாஹ் கூறுகிறான்:

Wednesday, March 28, 2012

துபை மாநகரில் சர்வதேச அமைதி மாநாடு

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

துபை அரசு, முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் உலக அமைதி விருது கமிட்டியினர், அல் மனார் சென்டர் ஒத்துழைப்புடன் வருடந்தோறும் நடத்தப்பட்டு வரும்  துபை சர்வதேச அமைதி மாநாடு இந்த வருடம் 'உண்மையான அமைதியின் மூலம் உலகை ஒன்றிணைப்போம்' என்ற இலக்குடன் இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் ஏப்ரல் 12, 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் துபை வேல்டு டிரேட் சென்டரில் நடைபெறவுள்ளது.

கருத்தரங்கம்
ஜூம்ஆ தொழுகை
இறுதி வெற்றிக்கு வழிகாட்டும் கண்காட்சி
வணிக அரங்கம்
சிறுவர் அரங்கம்
என சிறப்புடன் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில்

12.04.2012 வியாழன் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை
13.04.2012 வெள்ளி காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை
14.04.2012 சனி காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை பங்குபெறலாம்

அனுமதி இலவசம்
அனைத்து நம்பிக்கையுடைய மக்களும் கலந்து கொள்ளலாம்

இம்மாநாட்டின் கருத்தரங்கில் சர்வதேச அளவில் நல்லறிமுகமுள்ள கீழ்க்காணும் அழைப்பாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.

அழைப்பாளர் சயீத் ரகீயா
அழைப்பாளர் அப்துல் ரஹீம் கிரீன்
டாக்டர் ஜாகிர் நாயக்
ஷைக் அப்துல் ரஹ்மான் அல் சுதைஸ்
ஷைக் மிஷாரி அல் அஃபாஸி
அழைப்பாளர்; யூசுப் எஸ்டெஸ்
அழைப்பாளர் தவ்பீக் சௌதுரி
அழைப்பாளர் முஹம்மது சாலேஹ்
அழைப்பாளர் அஹ்மது ஹமத்
அழைப்பாளர் ஹூஸைன் யீ
அழைப்பாளர் மாயன் குட்டி மதார்
அழைப்பாளர் அப்துல் பாரி யஹ்யா
அழைப்பாளர் முஹம்மது அல் ஷரீஃப்

ஆகியோர் கலந்து கொண்டு இஸ்லாம் கூறும் உலக அமைதியை எடுத்தியம்பவுள்ளனர்.


Saturday, March 24, 2012

கோவை அய்யூப் மார்ச் மாத (2012) துபை நிகழ்ச்சிகள்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்


இன்ஷா அல்லாஹ்
நடக்க இருப்பவை

பெண்களுக்கான தர்பியா


இன்ஷா அல்லாஹ் வரும் 25.03.2012 முதல் 29.03.2012 வரை பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெறும்

இடம்  :  தார் அல் ஹூதா மர்கஸ் - அல் மம்ஜர்

நேரம்  : தினமும் காலை 9.30 முதல் பகல் 12.30 வரை

படத்தின் மீது சுட்டி பெரிதாக்கி படிக்கவும்


சிறப்பு பயான்


இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை (30.03.2012) அன்று மாலை 6 மணியளவில்

இடம்  : துபை அவ்காஃப் வளாக அரங்கம், மம்ஜார், Century Mall அருகில்

(கடந்த மாதம் 'அந்த நாள் வரும் முன்' என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்ற அதே அரங்கம்)

தலைப்பு : 5 வருவதற்கு முன் 5ஐ பேணுங்கள்

மேற்காணும் நிகழ்ச்சி முஸ்லீமல்லாத சகோதரர்களுக்கும் மிக்க பயனுள்ளதாக அமையவுள்ளதால், முஸ்லீமல்லாத சகோதரர்களை அதிகமதிகம் அழைத்து வர வேண்டுகிறோம்.

நடந்தவை

கடந்த வெள்ளிக்கிழமை (23.03.2012) அன்று, துபை அவுது மேத்தா பகுதியில் அமைந்துள்ள பாகிஸ்தான் எஜூகேசன் அகாடமி அரங்கில் துபை அவ்காஃப் (ஏற்பாட்டில் நடைபெற்ற மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் சகோதரர் கோவை அய்யூப் கலந்து கொண்டு 'தாரசில் தரமான அமல்கள் எது' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

பேசும் படங்களுடன்
S. அப்துல் காதர்








Friday, March 23, 2012

உஷாரய்யா, உஷாரு! அபுதாபியில் அபராதங்கள்

அபுதாபி தெருக்களில் இனி

1. எச்சில் துப்பினால்   - 100 திர்ஹம்
2. சிகரெட் துண்டுகளை போட்டால் - 200 திர்ஹம்
3. பப்புள்காம் மென்று துப்பினால் - 500 திர்ஹம்
4. குப்பைகள் மற்றும் குளிர்பான டின்களை வீசினால் - 500 திர்ஹம்

பிடிபடுபவர்களிடம் மேற்கண்டவாறு ஸ்பாட் ஃபைன் [Spot Fine] வசூலிக்கப்படும் என அபுதாபி முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது.

தெனாவெட்டு பார்ட்டிகள் இனி பர்ஸில் பணத்தோடு செல்வது நல்லது.(!?)

அல்லது

இந்தப் பழக்கங்களை விட்டொழித்தால் எல்லோருக்கும் நல்லது, உங்கள் பர்ஸிற்கும் பாதுகாப்பு, எப்படி வசதி?

தகவல்
அதிரைஅமீன்

படத்தின் மீது சுட்டி பெரிதாக்கி படிக்கவும்


Thursday, March 22, 2012

பகுத்தறிவு என்றால் என்ன?

தங்களை பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்கிறவர்கள் மனிதக் கற்பனையில் குறிப்பாக புரோகிதர்களின் கற்பனையில் படைக்கப்பட்ட எண்ணற்ற கோடிக்கணக்கான பொய்க கடவுள்களை மறுப்பதற்குப் பதிலாக அகில உலகங்களையும், அவற்றிலுள்ள அனைத்தையும், மனிதளையம் படைத்து ஆட்சி செய்யும் அந்த ஒரேயொரு இறைவனையும் மறுத்து வருகிறார்கள். மனிதனும் மற்ற ஐயறிவு பிராணிகளைப் போன்ற ஒரு பிராணியே! அவற்றைப் போல் பிறந்து வளர்ந்து இணைந்து அனுபவித்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகிறவனே! ஓரிறைவன், மறு உலக வாழ்க்கை என்பதெல்லாம் சுத்த ஹம்பக்; மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் மதவாதிகளின் கற்பனை என்று கூறி வருகிறார்கள்.

அவர்களின் பிரதான அடிப்படைக் கொள்கை மனிதனும் எண்ணற்ற பிராணிகளைப் போல் ஒரு பிராணி என்பதேயாகும். மனிதப் பிராணி அல்லாத இதர அனைத்துப் பிராணிகளுக்கும் இருப்பது ஐயறிவு மட்டுமே. ஆனால் மனிதனுக்கு மட்டும் விசேஷமாக ஆறாவது அறிவான பகுத்தறிவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை ஓரிறை மறுப்பாளர்களான பகுத்தறிவு நாத்திகர்களும் மறுக்க மாட்டார்கள்.

முதலில் இந்த பகுத்தறிவு என்றால் என்ன? என்பதை ஆய்வு செய்துவிட்டுப் பின்னர் விசயத்திற்கு வருவோம். இதர பிராணிகளுக்க இருப்பது போல் பார்த்து அறிவது, கேட்டு அறிவது, முகர்ந்து அறிவது, ருசித்து அறிவது, தொட்டு அறிவது என இந்த ஐயறிவுகளும் (ஐம்புலன்களும்) மனிதனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஐயறிவு துணையுடன் ஆய்ந்தறியும் திறனான பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் இற்த பகுத்தறிவு மேலே குறிப்பிட்டுள்ள ஐயறிவுகளின் உதவி கொண்டு மட்டுமே செயல் படமுடியும். இந்த ஐயறிவுகள் வராத – கட்டுப்படாத பல பேருண்மைகளை மறுக்கும் நிலையில் பகுத்தறிவாளர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்வோர் இருக்கின்றனர். அந்த பேருண்மைகளை பின்னர் ஆய்வுக்கு எடுப்போம். 

Tuesday, March 20, 2012

23.03.2012 துபை அவ்காஃப் நிகழ்ச்சியில் கோவை அய்யூப் சிறப்புரை

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

துபை இஸ்லாமிக் அஃபயர்ஸ் & சாரிடபுள் ஆக்டிவிடீஸ் டிபார்ட்மென்ட்

(அவ்காஃப்) சிறப்புடன் நடத்தும்


மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும்
23-03-2012 வெள்ளி மாலை 06:00 மணியளவில்

இடம்:
பாகிஸ்தான் எஜூகேஷனல் அகாடமி அரங்கம்
(அவுது மேத்தா மெட்ரோ ரயில் நிலையம் அருகில் - க்ரீன் லைன்) பர்துபை
PAKISTAN EDUCATIONAL ACADEMY HALL
(Near Oud Metha Metro Station - Green Line)
(Behind Rashid Hospital & Opp. Indian High School)

சிறப்புரையாற்றுபவர்:
கோவை S. அய்யூப் அவர்கள்

தலைப்பு:
தராசில் தரமான அமல் எது?

பெண்களுக்கு தனி இட வசதி மற்றும் வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மேலதிக விபரங்களுக்கு: Mob: 055-2177618/ 050-3509345 / 050-8480401

Pickup Places: Deira Naif Road Khalid Masjid & Near Karachi Darbar

Saturday, March 17, 2012

டிஜிட்டல் அப்பாவிகளின் அந்தரங்கம்! (தினமணி கட்டுரை)

இணையத்தில் உலவுகிறீர்களா? அப்படியெனில் உங்களது பெயர், வயது,பாலினம், வேலை செய்யும் இடம், பிடித்தது,பிடிக்காதது போன்ற சுய விவரங்கள் அடங்கிய அடையாள அட்டையை கழுத்தில் மாட்டிக்கொண்டு சுற்றி வருகிறீர்கள் என்றுதான் பொருள். இணையத்தை போகிற போக்கில் மேயும், அதிலேயே பல மணிநேரங்களைச் செலவிடும், அங்கேயே குடியிருக்கும் 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோருக்கு இதுதான் கதி.

இணையத்தில் யாரும் மறைந்து வாழ முடியாது. எதையாவது செய்துவிட்டு, அதுயாருக்கும் தெரியப்போவதில்லை என்று நினைப்பது மாபெரும் அறியாமை. அனைவரும் கண்காணிக்கப்படுகிறார்கள். ஒவ்வோர் அசைவும் பதிவு செய்யப்படுகிறது. இப்படி நம்மைக் கண்காணிப்பவர்களுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது, நம்மைப் பின்தொடர்ந்து நாட்டின் ராணுவ ரகசியங்களையா தெரிந்து கொள்ளப் போகிறார்கள் என்று நினைக்கிறீர்களா,அப்படியானால், நீங்கள்தான் அப்பாவி நம்பர் 1.

பணம் கொடுக்காமல் கிடைக்கிறது என்பதற்காக எதையாவது பயன்படுத்தினால், அங்கு விற்கப்படும் பொருளே நீங்களாகத்தான் இருப்பீர்கள் என்பது பொருளாதார நிபுணர் ஒருவர் கூறியிருக்கும் அருமையான வாசகம். நடைமுறை வாழ்க்கை, டிஜிட்டல் வாழ்க்கை என இரு வகையான வாழ்க்கையில் மக்கள் அல்லல்பட்டு வரும் இந்த நிலையில் இந்த வாசகம் மிகப் பொருத்தம்.

இதுவரை இணையச் சேவையில் எதையாவது பணம் கொடுத்து வாங்கியிருக்கிறீர்களா, மின்னஞ்சல் அனுப்புவதற்கும் பெறுவதற்கும் கட்டணம் செலுத்தியிருக்கிறீர்களா எனக்கேட்டால், இணையத்தைப் பயன்படுத்தும் பெரும்பாலானவர்களின் பதில் "ஊகூம்' என்பதாகத்தான் இருக்கும். சினிமா டிக்கெட்,சென்ட் பாட்டில், கூலிங் கிளாஸ் போன்றவற்றை வேண்டுமானால் இணையத்தின் மூலம் வாங்கியிருக்கலாம். ஆனால், மின்னஞ்சல்,சமூக வலைத் தளம், சாட்டிங்? ஊகூம்தான்.

வாடிப்பட்டி என்று டைப் செய்தவுடனேயே, அந்த ஊர், எந்த நாட்டில், எந்தமாநிலத்தில் இருக்கிறது, நீங்கள் இப்போது இருக்கும் இடத்திலிருந்து அந்த ஊருக்கு எவ்வளவு தொலைவு, எந்தப் பாதையில் செல்ல வேண்டும், அந்த ஊரின் தலைவர் யார், மக்கள் தொகை எவ்வளவு என்பன உள்ளிட்ட எல்லாத் தகவல்களையும் விரல் சொடுக்கும் நேரத்தில் பெற்றுவிட முடிகிறது.

அந்த ஊரில் குறிப்பிட்ட ஒரு நபரின் வீடு எந்த இடத்தில் இருக்கிறதுஎன்பதைக்கூட கண்டுபிடித்துவிட முடியும். இதற்கெல்லாம் எப்போதாவது பணம் கொடுத்திருக்கிறீர்களா? இதையெல்லாம் இவர்கள் நமக்கு ஏன் இலவசமாக சேவை செய்ய வேண்டும் என்கிற கேள்வி எப்போதாவது உதித்திருக்கிறதா? இல்லையென்றால், நீங்கள் நம்பியிருக்கும் நிறுவனங்கள் இதுவரை உங்களைத்தான் விற்று வந்திருக்கின்றன.

இலவசமாகச் சேவையளிக்கும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் இப்போதைய மதிப்பு ரூ.5 லட்சம் கோடி. கடந்த நிதியாண்டின் வருவாய் மட்டும் 20 ஆயிரம் கோடியைத் தாண்டியிருக்கிறது.

இலவசமாகச் சேவையளிக்கும் ஃபேஸ்புக்காரர்கள், எப்படி இவ்வளவு பணத்தைச் சம்பாதித்தார்கள்? மறைக்காமல் கூறுவதென்றால், நம்மை விற்றுத்தான். அதுசரி, நம்மை ஒரு பொருளாக விற்க முடியுமா என்ன? நிச்சயமாக முடியும்.

பணம் கொடுப்பவர்கள் மட்டும்தான் வாடிக்கையாளர். சும்மா வந்து போகிறவர்களெல்லாம் வாடிக்கையாளர் அல்லர். பணம் தருவோரிடம் வேறு என்னென்ன பொருள்களையெல்லாம் விற்றுப் பணம் பெற முடியும் என்று நிறுவனங்கள் யோசிப்பது வழக்கம். பணம் தராமல் இலவச சேவைகளை மட்டுமே பயன்படுத்துபவரை என்ன செய்வது? அவர்களையே விற்றுவிட வேண்டியதுதான்.

அந்த வகையில்,தங்களது சேவைகளைப் பயன்படுத்தும் அனைவரின் தகவல்களையும் கூகுள்,பேஸ்புக், டுவிட்டர் போன்ற நிறுவனங்கள் தங்களது தரவுத் தளத்தில் சேகரித்து வைக்கின்றன.

தகவல்கள் என்றால், அவர் அடிக்கடி என்னென்ன இணையதளங்களைப் பார்வையிடுகிறார்,எந்த மாதிரியான தகவல்களை அனுப்புகிறார், எந்த நேரத்தில் இணையத்தைப் பயன்படுத்துகிறார் என்பதெல்லாம்தான். இவைதான் விளம்பர நிறுவனங்களுக்கு விற்கப்படுகின்றன.

விளம்பரதாரர்கள் மற்றும் அவர்களுக்கான ஏஜென்சிகளைப் பொருத்தவரை இது மிகவும் மதிப்புமிக்க பொருள். அதனால், எத்தகைய பயனராக இருந்தாலும் அவரது சுயவிவரங்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட விலை உண்டு.

இதற்கெல்லாம் ஒரு கட்டுப்பாடே இல்லையா என்று கவலைப்பட வேண்டாம். இருக்கிறது. ஒவ்வொரு நிறுவனமும், தங்களது சேவைகளுக்காக "அந்தரங்கக் கொள்கை'என்கிற ஒன்றை வகுத்தளிக்க வேண்டியது கட்டாயம். பயனர்களின் தகவல்கள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பது போன்ற விளக்கங்களை அவை கொண்டிருக்கும். ஆனால், இவையெல்லாம் ஒரு அளவுக்குத்தான் நிறுவனங்களைக் கட்டுப்படுத்துகின்றன.

இந்த விஷயத்தில், மற்ற நிறுவனங்களைவிட கூகுள் ஒருபடி முன்னேறியிருக்கிறது. தேடுபொறி, மின்னஞ்சல், யூடியூப் என்கிற விடியோ சேவை, அனலிடிக்ஸ் என்னும் இணையதள புள்ளிவிவரங்களை அளிக்கும் சேவை உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட சேவைகளை கூகுள் வழங்கி வருகிறது. இவை அனைத்துக்கும் தனித்தனியே இருந்த அந்தரங்கக் கொள்கைகளை, அண்மையில் பொதுவான ஒரே கொள்கையாக கூகுள் அறிவித்திருக்கிறது.

இதன்படி,ஒரு சேவையைப் பயன்படுத்துவோரின் அந்தரங்கத் தகவல்கள், பிறசேவையைப் பயன்படுத்தும்போது எதிரொலிக்கும். உதாரணத்துக்கு யூடியூப்பில் ஒரு விடியோவை பார்க்கிறீர்கள் என்றால், கூகுள் தேடலின்போது, அது சம்பந்தமான தகவல்கள் முதன்மைப்படுத்தப்படும் அல்லது விளம்பரமாக வெளியிடப்படும்.

"கூகுள் டாக்ஸ்' எனப்படும் ஆவணங்களைச் சேமித்து வைக்கப்படும் இடம், நாற்காட்டி, மின்னஞ்சல் என அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதால், பயனரின் அனைத்துத் தகவல்களையும் கூகுள் மிக எளிதாகச் சேமித்து வைத்துவிடுகிறது. கூகுள் "டாஸ்போர்டு' என்கிற பகுதியில் நாம் இதுவரை இணையத்தில் என்னவெல்லாம் செய்திருக்கிறோம் என்று பார்க்க முடியும். இதை அழிக்க முடியும் என்றாலும், அதுஎத்தனை பேருக்குத் தெரியும்?

கடைசியாக ஒன்று, எனது பேஸ்புக் சுவரில் யாரோ தேவையற்ற ஆபாசத் தகவல்களைப் பதிவிடுகிறார்கள் என்று இணையத்தில் உலவும் பலர் கதறுவதைக் கேட்டிருப்போம். அந்த "யாரோ'உருவாக வாய்ப்பளித்தது வேறு யாருமல்ல, சம்பந்தப்பட்ட அப்பாவியேதான்.

Thanks to :  Syedali SYED MASOOD & ibrahim pdm

Friday, March 16, 2012

ADT 2ம் அமர்வு தொடர் நிகழ்வின் செய்தி சுருக்கம்

கடந்த வாரம் 09.03.2012 வெள்ளியன்று துபை தவ்ஹீத் இல்லத்தில் அதிரை தாருத் தவ்ஹீத் டிரஸ்ட்டின் முக்கிய ஆலோசணை அமர்வு நடைபெற்றதை அறிவீர்கள்.


அதன் தொடர்ச்சி, இந்த வாரம் 15.03.2012 வியாழன் பின்னேரம் இஷா தொழுகைக்குப் பின் துபை தவ்ஹீத் இல்லத்தில் சகோதரர் ஜமீல் காக்கா அவர்கள் தலைமையில் மீண்டும் கூடியது.


 
இந்த தொடர் அமர்வின் வழியாக அதிரையில் நம்முடைய முதற்கட்ட இலக்கை அடைய உதவ முடிந்தது, எல்லாப் புகழும் இறைவனுக்கே!


இன்ஷா அல்லாஹ், 2ம் அமர்வு தொடர் நிகழ்வின் விபரங்கள் உறுப்பினர்களுக்காக நம் ADT குழுமத்தில் நிர்வாகிகளால் வெளியிடப்படும்.

செய்தியும் படங்களும்
S. அப்துல் காதர்

Wednesday, March 14, 2012

தவிர்க்கப்பட வேண்டிய விருந்துகள்

விருந்தளிப்பதையும், விருந்துக்கு அழைக்கப்படும்போது ஏற்றுக்கொள்வதையும் வலியுறுத்தி ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் சமுதாயத்தில் வழக்கத்தில் உள்ள விருந்துகளில் பெரும்பாலானவை விருந்துகள் அல்ல. திருமண விருந்து, அகீகா, புதுமனை புகுதல் போன்ற அனுமதிக்கப்பட்ட விருந்தாக இருந்தாலும் அந்த விருந்துகளில் இஸ்லாம் கூறும் முறைகள் பின்பற்றப்படுவதில்லை.
“செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் விருந்து தான் விருந்துகளில் மிகவும் கெட்டதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்
எந்த விருந்துகளில் செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப் படுகிறார்களோ விருந்தளிக்கும் இடத்தில் மார்க்கம் அனுமதிக்காத ஆடல், பாடல், கச்சேரிகள் போன்றவை இடம்பெற்றால் அத்தகைய விருந்துகளையும் புறக்கணிக்க வேண்டும்.
நான் நபி (ஸல்) அவர்களுக்காக விருந்து தயார் செய்து அவர்களை அழைத்தேன். அவர்கள் வந்து என் வீட்டில் உருவப்படங்களை கண்டதும் திரும்பிச் சென்றுவிட்டனர். அறிவிப்பவர்: அலீ (ரலி) நூல்: இப்னுமாஜா
யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் மதுபானம் பரிமாறப்படும் விருந்துகளில் அமரவேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்கள்: அஹ்மத், நஸயீ, திர்மிதீ

அழைப்பு: அதிரை தாருத் தவ்ஹீத் (ADT) ஆலோசணைக் கூட்டம்

கடந்த வாரம் வெள்ளியன்று மஃரிப் தொழுகைக்கு பின் துபை தவ்ஹீத் இல்லத்தில் அதிரை தாருத் தவ்ஹீத் டிரஸ்ட்டின் (ADT) முக்கிய ஆலோசணை அமர்வு நடைபெற்றதை அறிவீர்கள்.

அதன் தொடர்ச்சி, இன்ஷா அல்லாஹ் வரும் வியாழன் (15.03.2012) பின்னேரம் இஷா தொழுகைக்குப் பின் துபை தவ்ஹீத் இல்லத்தில் நடைபெறவுள்ளது.

குர்அன், ஹதீஸ் அடிப்படையில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டுள்ள அமீரகம் வாழ் அதிரை சகோதரர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தவ்ஹீத் இல்லம்
நைஃப் ரோடு
அல் புத்தைம் பள்ளி எதிர்புறம்
DULF (டல்ஃப்) ஹோட்டல் பின்புறமுள்ள அல்ஜரூனி பில்டிங்
முதல் தளம், அறை எண் : 109

தொடர்புக்கு : 055 2829759

வஹியை முரண்பாடாக்கி காட்டும் வழி தவறியவர்கள்

சில காலம் 'பகுத்தறிவு' நாத்திகம் பேசி

இரு மகாமகம் குர்ஆன் ஹதீஸ் போதித்து

இப்போது 'பட்டறிவு' நாத்திகனாய்

டார்வினுக்கு புது உருவம்

நம்பணும் தான் ஆனா.. நம்ப முடியல எனும் புதிய பரிணாமக் கோட்பாடு

ஆபத்தான சிந்தனை செருக்கர்களை அடையாளங்காட்டுகிறார்

இலங்கை மவ்லவி. SM. அப்துல் ஹமீது ஷரயி அவர்கள்

சுட்டிக் கேளுங்கள்...

http://www.srilankamoors.com/WAHIYAI-MURANPADAKI-KATUM-WALITHAWARIYAWARKAL.html

Thanks to : www.srilankamoors.com

Saturday, March 10, 2012

அதிரை தாருத் தவ்ஹீத் டிரஸ்ட் (ADT) 2ம் அமர்வு

அல்லாஹ்வின் அருளால் 09.03.2012 வெள்ளி மாலை மஃரிப் தொழுகைக்குப்பின் துபை மாநகரில், தவ்ஹீத் இல்லத்தில் கூடியது. சுமார் 4 மணி நேரம் நீண்ட அமர்வில் முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட்டன.

சிறப்பாக, அதிரையிலிருந்து மையப்படுத்தப்பட்டு குர்ஆன் ஹதீஸை பின்பற்றும் சகோதரர்கள் ஒலியலை ஊடாக ஓரலையாய் நேரலையில் சென்னை, துபை, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிலிருந்தும் இணைக்கப்பட்டு மசூரா நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அலசப்பட்ட விஷயங்கள், முடிவுகள் குறித்து நிர்வாகிகள் மூலம் ADT குழுமத்தில் இன்ஷா அல்லாஹ் வெளியிடப்படும்.







இன்ஷா அல்லாஹ் ADT யின் அடுத்த தொடர் அமர்வு எதிர்வரும் 15.03.2012 வியாழன் பின்னேரம் இஷா தொழுகைக்குப்பின் தவ்ஹீத் இல்லத்தில் கூடும் என்றும், குர்ஆன் ஹதீஸை பின்பற்றும் அமீரகம்வாழ் அனைத்து அதிரை சகோதரர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

செய்தியும் நிழற் பதிவும்
S. அப்துல் காதர்

இஸ்லாத்தை வாழ்வியலாக ஏற்ற சகோதரர்கள்

திருமங்கலக்குடி, எளிதில் யாரும் மறக்கும் ஊரல்ல, பரம்பரை கதை பேசி பள்ளிக்குள் சக முஸ்லீமை விட மறுக்கும் ஓர் கூட்டம், மறுப்போரை மறைந்தோராக்கும் இன்னொரு கும்பல் என அவர்தம் இழிச் செயல்கள் இஸ்லாத்தின் மீது பழியாய் படர, ஆனால் அல்லாஹ்வோ அவனை மட்டும் வணங்கும், அவனுக்கே கட்டுப்படும் மனிதர்களை அவர்களிலிருந்தே வெளிப்படுத்துகிறான்.

எண்ணங்களில் இல்லா எண்ணிக்கை முஸ்லீம்களுக்கு மத்தியில் இரு சகோதரர்கள் இஸ்லாத்தை உணர்ந்து உள்ளங்களில் ஏந்தினர்.

 முஹமது யாசீர்

கடந்த வாரம் 02.03.2012 வெள்ளியன்று, துபை மாநகரில் ஒரு தனியார் நிறுவனத்தில் அக்கவுண்டன்டாக பணியாற்றும் சகோதரர் தமிழ்வாணன் (27) முஹமது யாசிர் என்றும்,

 முஹமது இப்ராஹிம்

இந்த வாரம் 09.03.2012 வெள்ளியன்று, அபுதாபியில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஏசி டெக்னீஷியனாக பணிபுரிகின்ற சகோதரர் கலையமுதன் (23) முஹமது இப்ராஹீம் என்றும்,

உடன்பிறப்புக்களான இவ்விருவரும் இஸ்லாத்தை உள்வாங்கி, உணர்ந்து, உண்மை முஸ்லீமாய் வாழும் உன்னத நோக்குடன் தங்களின் வாழ்வியலாக இஸ்லாத்தை தெரிவு செய்து கொண்டனர்.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருமங்கலக்குடி என்ற ஊரைச் சேர்ந்த சகோதரர்கள் இவ்விருவரும், சுமார் 5 வருடங்களுக்கு முன் இஸ்லாத்தை ஏற்ற தங்களின் மூத்த சகோதரர் முஹமது அவர்கள் மூலம் குர்;ஆன் தமிழாக்கம், ஹதீஸ் நூற்கள், புத்தகங்கள் பெற்று படித்தும், இஸ்லாத்தின் ஓப்பற்ற ஓரிறை கோட்பாடு, ஏற்ற தாழ்வற்ற சமத்துவம் பிடித்தும், தாங்கள் இருக்க வேண்டிய சரியான மார்க்கம் இஸ்லாமே என உணர்ந்தும், எத்தகைய நிர்பந்தங்களுமின்றி முஸ்லீம்களாய் மாறியதற்கான காரணிகளாய் ஒர் குரலில் கூறினர்.

 முஹமது

இன்ஷா அல்லாஹ், தங்களுடைய பெற்றோருக்கும், தங்கைக்கும் இஸ்லாத்தை எத்தி வைத்து வருவதாகவும் விரைவில் அவர்களும் இஸ்லாத்தை ஏற்பார்கள் என இறையருள் மீது நம்பிக்கை தெரிவிக்கும் சகோதரர்கள் மூவருக்கும் ஓர் குறை, அது உள்ளத்தில் இத்துத்துவா காவிப் புழுதி படர்ந்து திரியும் தங்களின் மற்றொரு சகோதரனுக்கும் இஸ்லாம் சென்றடைய வேண்டும் என்பதே.

அவர்களின் சகோதரனுக்கும், பெற்றோர் மற்றும் தங்கைக்கும் தூய இஸ்லாம் கிடைத்திட, முன்மாதிரி முஸ்லீம்களாய் வாழ்ந்திட, அவர்கள் தொடர்ந்து செய்ய விரும்பும் தஃவா பணியில் வெற்றியடைந்திட நாமும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இறைஞ்சுவோமாக!

வேண்டுதல் :
அபுதாபி, முஸஃபா, ஐகாட் சிட்டியில் தங்கியுள்ள சகோதரர் முஹமது இப்ராஹிம் அவர்களுக்கு தொழுகை முறை, தூஆக்கள், குர்ஆன் ஒத பயிற்சி, சிறிய சூராக்கள் மனனம் போன்ற விஷயங்களில் உதவிட, தங்களுடைய ஒய்வு நேரத்தில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் மட்டும் போதிக்க ஆர்வமுள்ள, வாய்ப்புள்ள சகோதரர்கள் எங்களை (aimuaeadirai@gmail.com)தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

இவ்வேண்டுதல் இயக்கரீதியாக செயல்படுபவர்களுக்கு அல்ல.

சந்திப்பு மற்றும் புகைப்படம்
அதிரை அமீன்

Thursday, March 8, 2012

தொழுகை முறை

நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. (அல்குர்ஆன் 4:103)

தொழுகைகளையும், நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள்! (அல்குர்ஆன் 2 : 238)

(முஹம்மதே!) வேதத்தி­ருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான். (அல்குர்ஆன் 29:45)

இணைவைப்பு மற்றும் இறை மறுப்புக்கும் (முஸ்­மான) அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி­) நூல் : முஸ்­லிம்

நமக்கும், அவர்களுக்கும் (இறை மறுப்பவர்களுக்கும்) உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும். அதை விட்டவர் காஃபிராகி விட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: புரைதா (ரலி­) நூல்: நஸயீ

என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : மா­க் பின் ஹுவைரிஸ் (­லி) நூல் : புகாரீ

(சரியான முறை)                                  (சரியான முறை)
இந்த நபி மொழியைக் கவனத்தில் கொண்டு அடிப்படையில் நாம் எவ்வாறு தொழ வேண்டும் என்பதை நபிகளார் காட்டித் தந்த அடிப்படையில் அறிந்து கொள்வோம்.