உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, February 28, 2012

மார்க்கப்பணியை அல்லாஹ்விற்காகவே செய்ய முன்வாருங்கள்!

1. காலத்தின் மீது சத்தியமாக. 2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். 3. ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). (103:1-3)

நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்க ளும் ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்களாக இருக்கின்றனர். அவர்கள் நல்லவற்றை ஏவுகிறார்கள், தீயவற்றை விலக்குகிறார்கள், தொழுகையைக் கடைபிடிக்கிறார்கள். ஜகாத்தை கொடுத்து வருகிறார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் அடிபணிகிறார்கள். அவர் களுக்கே அல்லாஹ் கருணை புரிகிறான்…” (9:71)
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமு தாயங்களில்) நீங்கள் சிறந்த சமுதாயமாக இருக் கிறீர்கள். நீங்கள் நல்லவற்றை ஏவுகிறீர்கள்; தீயவற்றை விலக்குகிறீர்கள்; அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறீர்கள்…” (3:110)
நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், தீயதிலிருந்து விலக்குபவர்களாகவும் உங்களில் ஒரு கூட்டம் இருக்கட்டும். அவர்களே வெற்றி பெற்றோர் ஆவர். (3:104)
இந்த இறைவாக்குகள் அனைத்தும் இறுதி நபிக்கு முன்னர் நபிமார்கள் செய்து வந்த மார்க்கப்பணி இறுதித் தூதரின் உம்மத்தாகிய நம்மீது சுமத்தப்பட்டிருக்கிறது; கடமையாக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்த்துகின்றன.

மேலும், நபிமார்கள் அனைவரும் இம்மார்க்கப் பணியை முழுக்க முழுக்க அல்லாஹ்வின் பொருத்தம் நாடி, நாளை மறுமையில் அந்த இறைவனிடம் மட்டுமே கூலி-சம்பளத்தை எதிர்பார்த்துச் செய்ய வேண்டும்; ஒருபோதும் மக்களிடம் கூலி-சம்பளத்தைக் கேட்கவும் கூடாது; எதிர்பார்க்கவும் கூடாது என்பதை அனைத்து நபிமார்களும் பகிரங்கமாகப் பிர கடனப்படுத்தியதை 6:90, 10:72, 11:29,51, 25:57, 26:109,127,145,164,180, 34:47, 38:86, 42:23 ஆகிய 13 குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன.

36:21 குர்ஆன் வசனம் கூலி வாங்காமல் மார்க்கப் பணி செய்கிறவர்களை மட்டுமே மக்கள் பின்பற்ற வேண்டும்; அவர்கள் மட்டுமே நேர்வழி நடப்பவர்கள் என உறுதிப்படுத்துகிறது. கடமையான மார்க்கப் பணிக்குச் சம்பளம் வாங்கினால் அதனால் மக்கள் சுமையேற்றப்பட்டு வழிதவற அது காரணமாகிவிடும் என்பதை 52:40, 68:46 குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன.

அதனால்தான்  இம்மதகுருமார்கள் சிறிதும் இறையச்சம் இல்லாமல், துணிந்து குர்ஆன் வசனங்களை 2:159,161,162 கூறுவது போல் திரித்து, வளைத்து தவறான விளக்கங்கள் கொடுப்பது, பொய்ச் சத்தியம் செய்வது, அல்லாஹ்மீதே ஆணையிட்டுப் பொய் உரைப்பது, துணிந்து மற்றவர்கள் மீது அவதூறு பரப்புவது, நேரடி குர்ஆன், ஹதீஸ் கருத்மதுக்களைக் கேட்கவிடாமல் மக்களைத் தடுப்பது இப்படிப்பட்ட நரகத்திற்கு இட்டுச் செல்லும் துர்ச் செயல்களைத் துணிந்து செய்ய முடிகிறது.

இந்த உண்மைகளை மேலே எழுதப்பட்டுள்ள குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் சுய சிந்தனையுடன், தன்னம்பிக்கையுடன் படித்து விளங்குகிறவர்கள் ஒப்புக் கொள்வார்கள். இந்த வசனங்கள் எல்லாம் முன்சென்ற காஃபிர்கள், யூதர்கள், கிறித்தவர்கள் பற்றி இறங்கியவை; முஸ்லிம்களான நம்மை இவை கட்டுப்படுத்தா எனக் கூறுவார்கள்.
அல்லாஹ் கண்டித்துக் கூறும் ஒரு தவறை ஆதத்தின் மக்களில் யார் செய்தாலும் தவறு தான்; தண்டனைக்குரிய குற்றம்தான். உதாரண மாக லூத்(அலை) அவர்களின் சமூகம் ஓரினப் புணர்வில் ஈடுபட்டதாக குர்ஆன் 7:80,81 வச னங்களில் அல்லாஹ் கண்டித்துக் கூறுகிறான். இந்தக் கடும் கண்டனம் அந்தச் சமூகத்திற்குரி யது. எங்களுக்கில்லை என்று கூறுகிறார்களா?

ஓர் அரசு அதிகாரி அரசிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு பணிபுரிகிறார், இந்த நிலையில் தனது பணிக்காக மக்களிடம் கூலி வாங்குவது பகிரங்கமான லஞ்சம்-கையூட்டு என்பதில் மாற்றுக் கருத்து உண்டா? இல்லையே! அதேபோல் மார்க்கப் பணிக்கு இவர்களுக்கு அல்லாஹ்விடமே கூலி இருக்கிறது என்று அல்குர்ஆனும், ஹதீஸ்களும் தெளிவாகக் கூறிக் கொண்டிருக்க இந்த மவ்லவிகள் மார்க்கப் பணிக்காக மக்களிடம் கூலி-சம்பளம் வாங்குவது கையூட்டு -லஞ்சமே.

“”மக்களே! நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன். அவன் தூய்மையை அன்றி வேறு எதனையும் ஏற்றுக் கொள்ள மாட்டான். அன் றியும் நிச்சயமாக, அல்லாஹ் எதனைத் தூதர்களுக்குப் பணித்தானோ அதனையே நம்பிக்கையாளர்களுக்கும் பணித்துள்ளான்”. “”தூதர்களே! நீங்கள் தூயவற்றையே உண்ணுங்கள், நற்செயல்களையே செய்யுங்கள்….” (23:51) என்று இறை வன் கட்டளையிடுகிறான். (அதேபோல்)

“”நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு அளித்தவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்…” (2:172) என்றும் அவன் கட்டளையிட்டுள்ளான் என்று நபி(ஸல்) கூறியபின் ஒருவனைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்.

அவன் மண் புழுதிகளில் சிக்கி, நெடும் தொலைப் பயணத்துக்கு ஆளாகி, (ஹஜ்ஜுக் குச் சென்று) தலைவிரி கோலமான நிலையில் தன் இரு கைகளையும் விண்ணை நோக்கி உயர்த்தியவனாக, “”இறைவனே! இறைவனே!! என் துஆவை ஏற்றுக் கொள்வாயாக!” என்று கூறுவானானால் -அவன் உண்பதும், குடிப்பதும், உடுத்தியிருப்பதும் ஹராமாகவும் ஆக, அவன் ஹராமான பொருள்களைக் கொண்டு வளர்ந்து வரும் நிலையில் இறைஞ்சுவனானால், அவனுடைய இறைஞ்சலுக்கு எவ்வாறு விடை அளிக்கப்படும்?” (அதாவது அவனு டைய துஆ எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?) என்று கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி) முஸ்லிம் திர்மிதீ, அல்ஹதீஸ் 4321)

கடமையான மார்க்கப் பணிக்குக் கூலி-சம்பளம் அறவே கூடாது என்று இத்தனை குர் ஆன் வசனங்கள் கூறிக் கொண்டிருக்க ஹதீஸ்கள் இதுபற்றி என்ன கூறுகின்றன என்று பாருங்கள்.
“”குர்ஆனை ஓதுங்கள்! அதன் மூலம் சாப்பிடவோ, பொருள் திரட்டவோ முற்படாதீர்கள்” என்று நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள். (அஹ்மத், தஹாவி, தப்ரானி, இப்னு அஸாகிர்)

“”எவர் குர்ஆனை ஓதுகிறாரோ அவர் அல்லாஹ்விடமே கேட்கட்டும், வருங்காலத்தில் குர்ஆனை ஓதிவிட்டு மக்களிடமே (கூலி-சம்பளம்) கேட்பவர்கள் தோன்றுவார்கள்” என்று நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள். (திர்மிதி, அஹ்மத்)

குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் தெளிவாக நேரடியாக இப்படிக் கூறிக் கொண்டிருக்க இந்த மவ்லவிகள் குர்ஆன் வசனத்தைத் திரித்து வளைத்து அதன் நேரடிக் கருத்தை எப்படி மறைக்கிறார்கள் தெரியுமா?
கடமையான மார்க்கப் பணிபுரிகிறவர்கள், சொந்தமாக உழைத்துப் பொருளீட்ட வாய்ப்பு இல்லாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு ஜகாத், சதக்கா நிதியிலிருந்து கூலி-சம்பளமாகக் கொடுக்கலாம் எனச் சுய விளக்கம் கொடுக்கிறார்கள்.

அல்குர்ஆனை வஹி மூலம் பெற்ற நபி(ஸல்) அவர்கள் மட்டுமே  குர்ஆன் வசனங்களுக்கு 2:213, 16:44,64 வசனங்களின் படி விளக்கம் கொடுக்கக் கடமையும் உரிமையும் பெற்றவர்கள் என்பதையும், நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு யாருக்கும் சுய விளக்கம் கொடுக்கும் உரிமை இல்லை என்பதை 7:3, 33:36,66-68, 18:102-106, 59:7, 9:31 குர்ஆன் வசனங்கள் மிகக் கடுமையாக எச்சரிப்பதை ஒருபோதும் விளங்க மாட்டார்கள். அந்தளவு உள்ளங்கள் இருளடைந்து விட்டன.

2:273 வசனத்திற்கு இவர்கள் கூறுவதுதான் உண்மையான பொருள் என்றால், அதைக் கண்டிப்பாக நபி(ஸல்) நடைமுறைப்படுத்திக் காட்டி இருப்பார்கள். மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளும் ஒரே நோக்கத்துடன், வேறு நோக்கமே இல்லாமல் மஸ்ஜிதுன் நபவிக்குப் பக்கத்திலிருந்த திண்ணையில் கிடந்த அஸ்ஹாபுஸ்ஸுஃப்பாக்களுக்கு அரசு கஜானாவிலிருந்து மாதாமாதம் கூலி-சம்பளம் கொடுக்கக் கட்டளையிட்டிருப்பார்கள். குறைந்தபட்சம் முஹாஜிர்களை அன்சார்களிடம் சாட்டி விட்டது போல், இந்த அஸ் ஹாஃபுஸ்ஸுஃப்பாக்களையும், இதர வசதியுள்ள நபி தோழர்களிடம் சாட்டிவிட்டு, அவர்களின் உணவுத் தேவையை நிறைவேற்றிக் கொடுக்கக் கட்டளையிட்டிருப்பார்கள். ஏன் செய்யவில்லை? என்று இந்த மவ்லவிகள் என்றாவது சிந்தித்திருப்பார்களா?
அதுபோல் அன்று முழுநேர மார்க்கப் பணி புரிந்த நபிதோழர்களுக்கும் அப்படி ஏற்பாடு செய்து சமுதாயத்திற்கு வழிகாட்டி இருப்பார்கள்.

பல நாட்கள் பட்டினி கிடந்து மயங்கி விழும் நிலையிலும் அவர்களில் சிலர் இருந்துள்ளனர். ஆயினும் அவர்கள் யாரிடமும் 2:273 கூறுவது போல் தங்கள் நிலையை வெளிப்படுத்தியதில்லை. அவர்களது பரிதாப நிலையைப் பார்த்து நபிதோழர்கள் அவர்களாக முன்வந்து உபகாரம் செய்ததாகவே ஹதீஸ்கள் கூறுகின்றன. இதையே 2:273 இறைக் கட்டளை வலியுறுத்துகிறது.

கடமையான மார்க்கப் பணிக்கு கூலி-சம்பளம் வாங்க குர்ஆனில் வேறு ஆதாரமே இல்லை. 2:273 இறைவாக்கும் சம்பளம் பேசி மாதா மாதம் குறிப்பிட்டத் தொகை வாங்க அனுமதிக்கவில்லை என்பது தெளிவான பின்னர் இந்த மவ்லவிகள் எடுத்து வைக்கும் சுய விளக்கம் என்ன தெரியுமா?

சில நபி தோழர்கள் ஒரு ஊர் வழியாக வரும்போது அவ்வூர் மக்களின் தலைவரைப் பாம்பு கடித்து வேதனையால் அவர் துடித்துக் கொண்டிருந்தார். அப்போது நபிதோழர்களில் ஒருவர் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி விஷத்தை இறக்கினார். அதற்காக அத்தலைவர் 30 ஆடுகளைக் கொடுத்தார். ஆயினும் குர்ஆன் ஓதி காசு வாங்கக் கூடாது என்ற தடை இருப்பதின் காரணமாக ஐயப்பட்டு ஆடுகளை ஓட்டிக் கொண்டு வந்து நபி(ஸல்) அவர்களிடம் நடந்ததைக் கூறி, வாங்கிக் கொண்டு வந்த ஆடுகள் ஹலாலா? ஹராமா எனக் கேட்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் பங்கு வைத்துக் கொள்ளும்படியும், தனக்கொரு பங்கு தரும்படியும் கூறியதாக அபூ ஸஈது(ரழி) அறிவித்து புகாரீ, முஸ்லிம், அபூதாவூது, திர்மிதீ ஆகிய நூல் களில் இருப்பதாக அல்ஹதீஸ் 4694ம் ஹதீஸில் பதிவாகி இருக்கிறது.

இச்சம்பவத்தைப் பெரிய ஆதாரமாகக் காட்டி மார்க்கப் பணிக்குக் கூலி வாங்குவதை நியாயப்படுத்துகிறார்கள். கடமையான மார்க்கப் பணிக்கு கூலி கூடாது என்று அல்குர்ஆனில் நேரடித் தடை இல்லாதிருந்தால் அவர்களின் இவ்வாதம் சரிதான். ஆனால் தெளிவான தடை இருக்கிறதே! அதனால் தானே நபி தோழர்கள் நபியிடம் வந்து ஆடுகள் ஹலாலா, ஹராமா எனக் கேட்கிறார்கள்! அந்த நபிதோழர் ஃபாத்திஹா சூராவை ஓதினார். ஆனால் விஷம் இறங்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். குர்ஆன் ஓதியதற்காக ஆடுகள் கிடைத்திருக்குமா? கிடைத்திருக்காதே!

அப்படியானால் வைத்திய அடிப்படையில் அவ்வாடுகள் கூலியாகக் கொடுக்கப்பட்டனவே அல்லாமல், குர்ஆன் ஓதியதற்காகக் கொடுக்கப்படவில்லை என்பது விளங்குகிறதே! இந்த ஹதீஸை கொண்டு குர்ஆன் ஓதி நோயைச் சுகப்படுத்தினால் அதற்காகக் கூலி வாங்க அனுமதி உண்டு என்பதற்கே ஆதாரம் கிடைக்கிறது. பள்ளிகளில் தொழுதுவிட்டு வெளியே வரும்போது அங்கு காத்து நிற்கும் நோயாளிகளுக்கு குர்ஆனிலிருந்து சில வசனங்களைக் கொண்டு ஓதிப் பார்க்கலாம். இங்கும் நோய் சுகமான பின்னர் அதற்குரிய கூலியை பெறலாமே அல்லாமல் குர்ஆன் ஓதியதற்காக கூலி வாங்குவது அனுமதிக்கப்பட்டதல்ல என்பதே குர்ஆன், ஹதீஸ் நேரடியாகக் கூறும் உண்மையாகும்

தொழ வைப்பதற்காக நாங்கள் நேரம் ஒதுக்கி வரவேண்டிய நிலையில் இருக்கிறோம். அதற்காகச் சம்பளம் வாங்குகிறோம் என்ற வாதத்தை வைக்கின்றனர். இதுவும் மிகத் தவறான வாதமே! எப்படி என்று பாருங்கள். பெரும்பாலான இமாம்கள் தொழுகை ஆரம்பிக்கும் இறுதிக் கட்டத்தில்தான் பள்ளிக்கு வருகிறார்கள். அவர்களுக்கு முன்னதாகவே பல தொழுகையாளிகள் பள்ளிக்கு வந்து காத்துக் கிடக்கிறார்கள். அது மட்டுமா? தொழுகைக்காக அழைப்பு விடுக்கும் (பாங்கு) முஅத்தின் தொழுகைக்கு அரை மணி நேரமோ, 20 நிமிடங்களோ முன் கூட்டியே வந்து பாங்கு சொல்லும் கட்டாயத்தில் இருக்கிறார். நேரம் ஒதுக்கி முன்னரே வந்து பாங்கு சொல்லும் முஅத்தினுக்கே அதற்காகச் சம்பளம் கொடுக்க மார்க்கத்தில் அனுமதி இல்லை என்றே ஹதீஸ் கூறுகிறது. அது வருமாறு: “”முஅத்தினை நியமனம் செய்தால் எந்த விதமான பிரதிபலனும் (கூலியோ, சம்பளமோ) பெற்றுக் கொள்ளாத ஒருவரை நியமிக்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் இறுதியான உறுதி மொழி வாங்கினார் கள்” என்று உஸ்மான் இப்னு அபில் ஆஸ்(ரழி) கூறினர். (அபூதாவூது, திர்மிதீ)

கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுத்துப் பாருங்கள்! தொழுகைக்கு 30 நிமிடமோ, 20 நிமிடமோ முன்கூட்டியே நேரம் ஒதுக்கி வந்து பாங்கு சொல்லும் முஅத்தினுக்கே சம்பளம் கொடுக்க மார்க்கத்தில் அனுமதி இல்லை என்று ஹதீஸ் தெளிவாக நேரடியாகக் கூறும் நிலையில், தொழுகைக்குக் கடைசி நேரத்தில் அவசர அவசரமாக வந்து, தொழுகை விரிப்பைக் கூட முஅத்தினே ஒழுங்குபடுத்தி வைத்த நிலையில், வரிசைகளை நேர்படுத்தி ஒழுங்குபடுத்தாமலும், முன் வரிசைப் பூர்த்தியாகி இரண்டாம் வரிசையில் நிற்கிறார்களா? என்று பார்க்காமலும் ருகூவுக்குப் பின்னுள்ள சிறு நிலையிலும், இரண்டு சுஜூதுக்கு இடைப்பட்ட நிலையிலும் போதிய அவகாசம் கொடுக்காமலும் அவசர அவசரமாகத் தொழுது, தொழுகை முடிந்ததோ இல்லையோ தலைப் பாகையை அவிழ்த்து எறிந்துவிட்டு வெளியே பறந்து செல்லும் இமாமுக்கு, தொழுகைக்காக நேரம் ஒதுக்கி வருகிறார் என்பதற்காகச் சம்பளம் கொடுப்பதை மார்க்கம் அனுமதிக்குமா? இப்படி எல்லாம் சுய புராணங்களை அவிழ்த்து விட்டு அறிவு குறைந்த சுய சிந்தனையற்ற ஆட்டு மந்தைபோல் மவ்லவிகள் பின்னால் கண்மூடிச் செல்லும்  மக்களை ஏமாற்ற முடியுமே அல்லாமல் அல்லாஹ் வை ஏமாற்ற முடியுமா? ஒருபோதும் முடியாது.
மக்கள் இமாமுக்கு முன்னாலேயே வந்து சுன்னத்து தொழுது, காத்துக் கிடந்து கடமையான தொழுகையைத் தொழுத பின்னர் உபரியான தொழுகைகளையும் ஆர அமர தொழுது விட்டு, அதாவது இமாமுக்கு முன்னர் வந்து, இமாமுக்குப் பின்னர் செல்லும் அந்த மக்கள் மண்ணையா சாப்பிடுகிறார்கள்? அவர்கள் உழைத்துப் பொருளீட்டி அவர்களும், அவர்கள் குடும்பத்தார், உறவினர் முதல் சாப்பிட்டு, இந்த உழைப்பதில் சோம்பேறித்தனம் காட்டும் இமாம்களுக்கும் கொடுக்கவில்லையா?

இந்த நிலையில் இகாமத் சொல்லும் நேரம் நெருங்கும்போது அவசர அவசரமாக வந்து தலைப்பாகைக் கட்டிக்கொண்டு தொழவைத்து விட்டு அவசர அவசரமாக வெளியேறும் இந்த இமாம்களுக்குத் தங்கள் கைகளால் ஹலாலான முறையில் உழைத்துச் சாப்பிடுவதற்கு என்ன கேடு?
இமாம்களின் நிலை இதுவென்றால், அடுத்து கடமையான பிரசார பணி செய்கிறவர்களும் கூலிக்கே மாரடிக்கிறார்கள். இமாம்களைப் போல் ஒரு நாளில் அதிகபட்சம் சுமார் 5 மணிநேரம் செலவிடும் அவர்கள் முழு நேரப் பணியாளர்களாம். அதனால் அவர்களுக்கு ஹலாலான முறையில் பொருளீட்ட நேரம் இல்லையாம்! அதனால் பிரசார பணிக்குச் சம்பளம் வாங்குகிறார்களாம்.

மார்க்கப் பணிக்குக் கூலி வாங்கி நாங்கள் குபேரர்கள் ஆகிவிட்டோமா? அன்றாடம் நாட்களை ஓட்டுவதே பெரும் சிரமமாக இருக்கிறது. வறுமையில் வாடுகிறோம் என்று மவ்லவிகள் கூறுகிறார்கள். “”மக்களிடம் கையேந்துபவர்களுக்கு கொடுக்கும் வாசலை அல்லாஹ் மூடிவிடுகிறான். அல்லாஹ்வை மட்டும் முழுமையாக நம்பி அவனிடம் மட்டுமே கையேந்துகிறவர்களுக்கு கொடுக்கும் வாசலை முழுமையாகத் திறந்து விடுகிறான் அல்லாஹ் என்ற” என்ற ஹதீஃத் இம்மவ்லவிகளுக்குத் தெரியாதா?

இங்கு இன்னொரு விஷயத்தையும் முக்கிய மாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். நம் மீது 3:110, 9:71, 103:1-3 மூலம் விதிக்கப்பட்ட கடமையான மார்க்கப் பணிகளுக்கு, அவற்றைச் செய்யாவிட்டால் நாளை மறுமையில் கேள்வி கேட்கப்பட்டு தண்டிக்கப்படுவோம் என்ற வகையிலுள்ள மார்க்கப் பணிகளுக்கு கூலி-சம்பளம் வாங்குவது மட்டுமே தடுக்கப் பட்டுள்ளது. நம்மீது விதிக்கப்படாததை அதாவது செய்யா விட்டால் ஏன் செய்யவில்லை என்று கேட்டுத் தண்டிக்கப்படாத பணிகளான குர் ஆனை, ஹதீஸ்களை எழுதிக் கொடுப்பது, மொழி பெயர்ப்பது, நூல்கள் வெளியிடுவது, வெளியூர்களுக்கு அழைப்பின் பேரில் சென்று பிரசாரம் செய்யும்போது பயணப்படி இவை அனைத்திற்கும் பணம் பெறுவது மார்க்கத்தில் தடை செய்யப்படவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால் நபிமார்கள் செய்த மார்க்கப் பணிகள் மட்டுமே முஸ்லிம்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. அவை அல்லாத வைக்கு கூலி-சம்பளம் பெறுவதை மார்க்கம் தடை செய்யவில்லை என்பதே சரியாகும்.

இதை ஆதாரமாக வைத்து இமாமத் செய்வது எங்கள் மீது கடமை இல்லையே என்று மவ்லவிகள் எதிர்க் கேள்வி கேட்கலாம். நபி(ஸல்) இமாமத் செய்தார்கள். ஆனால் அதற்காக ஊதியம் பெறவில்லை. மேலும் யாராக இருந்தாலும் ஐங்கால தொழுகை கடமை. உள்ளூரில் இருக்கும் போது ஜமாஅத்தும் வலியுறுத்தப்பட்ட சுன்னத். அந்த அடிப்படையில் ஒரு மவ்லவி பள்ளிக்குச் செல்லும்போது, அந்த மஹல்லாவாசிகளில், நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளபடி இமாமத் செய்யும் தகுதி அவருக்கே இருக்கிறது. எனவே நபி(ஸல்) அவர்களின் கட்டளைப்படி அம்மக்களுக்கு இமாமத் செய்யும் பொறுப்பு அவருக்கு ஏற்படுகிறது. எனவே இதைக் காரணம் காட்டி தொழ வைக்க கூலி-சம்பளம் பெற முடியாது.

இமாமத், பிரசார பணிகளை ஈமானின் உறுதியோடு அல்லாஹ்வையும், மறுமையையும் மிகமிக உறுதியாக நம்பி, அல்லாஹ்விடமே அவற்றிற்குரிய கூலியை எதிர்பார்த்து தூய எண்ணத்தோடு செய்ய முன் வந்தால் நிச்சயமாக அல்லாஹ் அதற்குரிய வழியை எளிதாக்கித் தருவான். இது 29:69ல் அல்லாஹ் உறுதியாக அளிக்கும் உத்திரவாதமாகும்.

Thanks to readislam.com

Thursday, February 23, 2012

'அல்குர்ஆன்' பாக்கியம் நிறைந்த வேத நூல்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

கண்ணியமிக்க சகோதரர்களே!    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்குர்ஆன் என்பது அல்லாஹ்வின் வார்த்தைகள். மனிதன் எப்படி வாழவேண்டும் என்ற முழுமையான வழிகாட்டுதலைத் தருகிறது.

இக்குர்ஆன் தனிமனித, குடும்ப, சமூக வாழ்வின் அத்தனை அம்சங்களை இலகுநடையில் விளக்கப்படுத்துகிறது. மனிதனைப் படைத்த அல்லாஹ் அந்த மனிதன் எப்படி அல்லாஹ்வை நம்ப வேண்டும், பின்பற்ற வேண்டும். கட்டளைகளை ஏற்று நடக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறான்.

ஆன்மீகத்தை (இபாதத்களை) மட்டும் சொல்லித் தராமல் கொடுக்கல்-வாங்கல் (கடன்) அடைமானம், வட்டி, வியாபரம், குழந்தைக்கு பாலூட்டல், குழந்தை வளர்ப்பு, திருமண வாழ்வு, குடும்பப் பிரச்சினைக ளைத் தீர்த்து வைத்தல், தலாக், ஜீவனாம் சம் (மஹர்) பெண்ணுரிமை, பெற்றோரை பேணுதல், குடும்ப உறவை அண்டுதல், அடுத்த வீட்டாரை மதித்தல், பிற மக்களுடன் பரஸ்பரம் அன்பை பரிமாறுதல், நல்லிணக்கத்துடன் நடத்தல், வீட்டுக்குள் செல்லும் ஒழுங்குகள், நம்பிக்கை நாணயம் பேணல், வாரிசுரிமை, சொத்துப் பங்கீட்டு , ஒழுக்க மேம்பாட்டும் அதனை சீர் குலைக்கும் காரணிகளும்இ சமூக சீர்கேடுகள், சமுதாய கொடுமைகள், குற்றவியல் சட்டங்கள், பொருளாதாரம், அரசியல், அனாதைகள் பராமரிப்பு, கல்வி, லௌகீக விடயங்கள் என்று அன்றாட வாழ்வுக்கான அனைத்து விடயங்களையும் அல்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.
அல்லாஹ்வை நம்பிய மனிதன் (முஸ்லிம்) அந்தக் குர்ஆனையும் நம்ப வேண்டும். குர்ஆனை இறைவேதமாக நம்பியவன் அந்தக் குர்ஆனை தினம்தோறும் ஓதுவதுடன் அதன் விளக்கங்களையும் படித்துப் பின்பற்ற வேண்டும். இதற்காகவே அல்குர்ஆன் அருளப்பட்டது. அல்லாஹ் அருளிய இந்த வேதம் படிப்பதற்கும் விளங்குவதற்கும் இலகுவானது. கருத்து முரண்பாடற்றது. நடைமுறைக்கு ஏற்றமானது. அதனாலேயே மிகத் தெளிவான வேதமாக உள்ளதுஇ இதனாலேயே இக்குர்ஆனை படித்து சிந்தித்துணர மாட்டீர்களா? என்று அல்லாஹ் கேட்கிறான்.

'உங்களிடம் ஒரு வேதத்தை அருளி னோம். அதில் உங்களுக்கு 'அறிவுரை இருக்கிறது. நீங்கள் விளங்க வேண்டாமா? (21:10)
இது பாக்கியம் நிறைந்த வேதம். இதன் வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும் அறிவுடையோர் படிப்பினை பெறுவதற்காகவும் (நபியே) உமக்கு அருளினோம். (38:29)  
அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா? (47:24)      
'அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாத வரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்' (4:84)
வாழ்கின்ற வாழ்வு அமைதியானதாக நிம்மதியானதாக இருக்க வேண்டுமானால் அந்த வாழ்வுக்கு பரகத் பொருந்திய அல்லாஹ்வுடைய வேதமான அல்குர்ஆன் வழிகாட்டுகிறது. பாக்கியம் (பரகத்) நிறைந்த வேத நூலை இறக்கி வைத்த அல்லாஹ், அதில் அறிவுரைகள் வழிகாட்டல்கள் உண்டு என உறுதியாகக் கூறுகிறான். அதனைப் பார்த்து பின்பற்ற வேண்டும் என்றும் கட்டளையிடுகிறான்.
எவர் குர்ஆனை படிக்காமல் விளங்காமல் சிந்திக்காமல் அதனை விட்டு விலகி நடக்கிறாரோ அவருடைய உள்ளத்தில் அல்லாஹ்வின் அருள் இருக்காது. பூட்டுக்களால் மூடப்பட்ட இருண்ட அறையாகவே அது இருக்கும். இன்று குர்ஆன் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வந்துள்ளது. பல தப்ஸீர் நூல்ளை வைத்துத்தான் இலகுவான நடையில் மார்க்க அறிஞர்கள் குர்ஆனை மொழி பெயர்த்துள்ளார்கள். படித்துப் பார்க்க வேண்டிய பொறுப்பு முஸ்லிம்களைச் சார்ந்தது. நாளாந்தம் பத்திரிகைகள் படித்து விளங்க முடியுமாக இருந்தால் அதைவிட இலகுவாக குர்ஆனை விளங்க முடியும். (விளங்க முடியாது என்றால் உலமாக்களை அணுகி படிக்க வேண்டும்). பத்திரிகை படிப்பதற்குஇ செய்திகள் பார்ப்பதற்குஇ நேரம் ஒதுக்குபவர்கள் குர்ஆனை படிப்பதற்கு குறைந்தது 15 நிமிடங்களாவது ஒதுக்கக் கூடாதா?
குர்ஆனின் போதனைகளை விட்டு ஓரமாகக் கூடியவர்களின் இம்மை வாழ்வும் மறுமை வாழ்வும் படுமோசமானதாக பயங்கரமானதாக அமையும் என்ற அல்குர்ஆனின் எச்சரிக்கையை எப்போதும் மனதில் வைத்திட வேண்டும். எவர் எனது போதனையைப் புறக்கணிக்கிறாரோ அவனுக்கு (இம்மையில்) நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்.
என் இறைவா! நான் பார்வையுடையவனாக (உலகில்) இருந்தேனே ஏன் என்னை குருடனாக எழுப்பினாய் என்று அவன் (மறுமையில்) கேட்பான்.
அப்படித்தான்இ நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன. அதை நீ (உலகில்) மறந்தவாறே, (வாழ்ந்தாய்) இன்று (நீயும்) மறக்கப்படுவாய் என்று (அல்லாஹ்) கூறுவான். (20: 124-126).
குர்ஆனைப் பார்த்து படிப்பினை பெற்று வாழாமல் புறக்கணித்தவன் மறுமையில் குருடனாக எழுப்பப்படுவான்; என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.
நிச்சயமாக இந்தக் குர்ஆன் மிக நேரான வழியை அறிவிக்கின்றது. விசுவாசம் கொண்டு நற்கருமங்களைச் செய்வோருக்கு நிச்சயமாக மிகப் பெரிய கூலி உண்டு என்றும் நன்மாராயம் கூறுகிறது. (17:9).
மக்களை இக்குர்ஆன் மிக நேரான வழிக்கு இட்டுச் செல்லும் என்று அல்லாஹ் உத்தரவாதமளிக்கிறான். அதனைப் பற்றிப் பிடிக்கும் மக்களாக முஸ்லிம்கள் இருக்க வேண்டும்.
அல்குர்ஆன் ஓதும் இடங்களுக்கு (வீடுகளுக்கு) அருள் நிறைந்த மலக்குகள் இறங்குகிறார்கள் மற்றும் ஸகீனத் இறங்குகிறது. ஷைத்தான் அந்த வீட்டிலிருந்து ஓடுகிறான். குர்ஆனுடன் தொடர்பாகின்றபோது மனிதனின் செயற்பாடுகள் நன்மையின் பாலும் இறை திருப்தியின் பாலும் சென்றுவிடுகிறது. இம்மை மறுமை வாழ்வு பயனுள்ளதாக அமைந்துவிடுகிறது.
எனவே 'பாக்கியம் (பரகம்) நிறைந்த வேத நூல்' என்று அல்லாஹ் கூறுவது அந்தக் குர்ஆனை அழகான அச்சில் வடித்து உயர்ந்த துணியில் வைத்து வீடுகளில் கடைகளில் தொங்கவிடுவதற்கோ மேனியில் கட்டிக் கொள்வதற்கோ மரணித்தவர்களுக்காக ஒதி பார்சல் பண்ணுவதற்கோ தாயத்துகளாக தடுகளாக எழுதி வியாபாரம் பண்ணுவதற்கோ அல்ல. உயிருடன் நடமாடும் மானுட சமூகம் நல்லுணர்ச்சி பெறுவதற்கே!
வாழ்க்கையின் ஒவ்வொரு எட்டிலும் குர்ஆன் பேசப்படக்கூடியதாக அமையும் போதே வாழ்வு பரகத் பொருந்தியதாக ஆகிவிடுகிறது. ஆகவே நம் ஒவ்வொருவர் வாழ்வையும் குர்ஆனின் அடிப்படையில் அமைத்து வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்வானாக! ஆமீன்.      

(நன்றி: islamkalvi.com)

வெளியீடு: தவ்ஹீத் இல்லம் தஃவா குழு

Tuesday, February 21, 2012

கோவை அய்யூப் துபை நிகழ்வுகள் முடிவல்ல, இனி(ய) ஆரம்பமே!

அல்லாஹ்வினுடைய மாபெரும் அருளால் துபை மாநகரின் பல்வேறு பகுதிகளில், அதிலும் 2 நிகழ்வுகள் துபை அவ்காஃபின் ஆதரவுடன் நடைபெற்றதை அறிவீர்கள்.

இந்த நிகழ்வுகளின் தூய வெற்றி தஃவாவுக்கான பல்வேறு வாயில்களை திறந்து விட்டுள்ளன, அல்ஹம்துலில்லாஹ்.

முதலாவதாக, இனி தவ்ஹீத் சகோதரர்கள் இயக்கங்களுக்குள் ஏகத்துவத்தை அடகு வைக்கப்போவதில்லை மாறாக சத்திய மார்க்கம் யாரிடமிருந்து வந்தாலும் வரவேற்போம் என வேற்றுமை களைந்து அலைஅலையாய் சங்கமித்து, இனியும் வருவோம் என செயலில் நிரூபித்தனர்.

இரண்டாவதாக, சகோதரர் கோவை அய்யூப் அவர்களுக்கு அவ்காஃப் தஃவாவிற்கான சான்றிதழ் வழங்கியது, இன்ஷா அல்லாஹ் இனி தடையின்றி அமீரகத்தில் மார்க்கத்தை அதன் தூய வடிவில் எத்தி வைக்க முடியும்.

மூன்றாவதாக, துபையில் 2 மஸ்ஜிதுகளில் அவ்காஃப் அனுமதியுடன் தமிழ் இஸ்லாமிய தஃவாவிற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

நான்காவதாக, துபை அவ்காஃப் அனுமதியுடன் மர்கஸ் ஒன்று அல் முத்தீனா பகுதியில் விரைவில் இயங்கவுள்ளது.

ஐந்தாவதாக, இஹ்லாஸூடன் இம்மையில் கூடி மறுமைக்காக உழைத்தால், குறுகிய காலத்தில் இத்தனை வாய்ப்புகளை வழங்கியுள்ள எல்லாம் வல்ல ரஹ்மான் இன்னும் நாம் எதிர்பாராத நன்மைகளை இன்ஷா அல்லாஹ் அருளுவான்!


கடைசியாக 17.02.2012 வெள்ளியன்று துபை அவ்காஃப் வளாக அரங்கில் நடைபெற்ற நிகழ்வின் புகைப்படங்கள்!










Friday, February 17, 2012

இறைவனின் மன்னிப்பு வேண்டுமா?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

கண்ணியத்திற்குரிய சகோதரர்களே!     அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

இன்று நம்மிடையே எங்கு பார்த்தாலும் பகைமை உணர்வு, மோதல் போக்கு, பழிவாங்கும் சிந்தனை, பிறர் குறையை கண்டறிந்து விளம்பரப் படுத்தும் இழிசெயல், நீயா! நானா! என்ற ஆணவப் போக்கு, என்னைப் பேசினாயா! என்னைத் திட்டினாயா! என்னை அடித்தாயா! உன்னை விடமாட்டேன் பார் என்கிற அதிகாரப் பேச்சு இவை அனைத்தும் நமது உள்ளத்தில் அதிகரித்ததால், மனிதனின் மானம், மரியாதை, கண்ணியம் அனைத்தும் சந்தையில் விலைபேசப்படுகின்றன. இந்த இழிசெயல் தொடர்ந்தால் மனித சமூகத்தில் சகோதரத்துவமும், ஒற்றுமையும் கேள்விக் குறியாகிவிடும். பாதிக்கப்பட்டவன் திரும்ப எதிர்ப்பை பதிவு செய்வது மனித உரிமை என்றாலும், இஸ்லாம் அதைவிட உயர்ந்த பண்புகளை நமக்கு போதிக்கின்றது என்பதை நினைவுபடுத்துவதுதான் இந்த வார பிரசுரத்தின் செய்தியாகும்.

நாமும் மனிதர்கள், நம்மிடையேயும் நிறைய குறைகள் உண்டு. தவறுகளுக்கு அப்பாற்பட்டவன் அல்லாஹ் மட்டுமே என்கிற உணர்வு நமக்கு எப்பொழுதும் மேலோங்கி இருந்தால் மேற்கண்ட இந்த தீயகுணங்கள் நமக்கு வருமா? சிந்திப்பீர்!
நம்மை சுற்றி உள்ளவர்களின் தவறுகளை அலட்சியம் செய்து, மன்னித்து பழகுவது அல்லாஹ் விரும்பும் நல்ல பண்புகள் என்று நமக்கு தெரியாதா? நமக்கு பிறர் தீங்கிழைத்தால் நாமும் பதிலுக்கு தீங்கிழைத்துத்தான் ஆகவேண்டுமா? இல்லையே! ஏன் நாம் சிந்திக்க மறுக்கின்றோம். ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்குவது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதனை நாம் ஏன் மறந்துவிட்டோம். அல்லாஹ்வும், அவனது தூதரும் மற்றும் நபித்தோழர்களின் வாழ்வும் நமக்கு போதிக்கும் வழிகள் தான் என்ன?
 

Wednesday, February 15, 2012

குடும்பத்தை பிளவுபடுத்தும் பாவிகள்


 '.....அவர்களிடமிருந்து கணவன் மனைவியரிடையே பிரிவை உண்டாக்கும் செயலை கற்றுக் கொண்டார்கள்'. (அல்குர்ஆன் 2:102)
   
குடும்ப வாழ்க்கையின் அவசியம் குறித்து நாம் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறோம். நமது குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சியும் நல்லுறவும் நீடிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுகிறோம். ஆனால் மற்றவர்களின் குடும்பங்களைப் பற்றி நமக்கு இத்தகைய நல்லெண்ணம் இருப்பதில்லை.

ஒரு ஆணைப் பற்றியோ பெண்ணைப் பற்றியோ ஏதேனும் சிறு குறை நமக்குத் தெரியவந்தால் நம்மால் இயன்ற அளவுக்கு அதைப் பெரிதாக்குகிறோம். கணவனின் குறையை மனைவியிடமும் மனைவியின் குறையைக் கணவனிடமும் பன்மடங்கு அதிகப்படுத்தி பற்ற வைக்கிறோம். இருக்கின்ற குறைகளை மட்டுமின்றி இல்லாத வதந்திகளையும் கூட உண்மை போல சித்திரித்து அதனைப் பரப்புவதில் இன்பம் காண்கிறோம் இதனால் நமக்கு கிடைக்கும் லாபம் என்ன? நன்மை என்ன? ஒன்றுமே இல்லை. ஆனாலும் இச்செயலில் ஈடுபடுவதில் அளவிலாத ஆனந்தம் அடைகிறோம்.
நமது குடும்பத்தைப் பற்றிப் பரப்பப்படும் வதந்திகளால் நமது நிம்மதி குறைந்தால் நமது நிலை என்ன? அதே நிலையைத் தானே மற்றவர்களும் அடைவார்கள் என்றெல்லாம் நாம் சிந்திப்பதில்லை. இந்த விஷயத்தில் ஆண்களைவிட பெண்கள் பலபடிகள் மேலே உள்ளனர். ஒரு பெண்ணின் குறைகளைப் பெரிதுபடுத்துவதிலும் வதந்திகளைப் பரப்புவதிலும் இவர்களுக்குக் கிடைக்கும் ஆனந்தமே அலாதியானது.

  
மற்றவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால் மறுமை வாழ்க்கையைப் பூரணமாக நம்பக்கூடியவர்கள் இந்தச் செயலின் பயங்கர விளைவுகளைப் பற்றி அறிந்து கொண்டால் குடும்பங்களைப் பிரிக்கின்ற கொடுஞ்செயலில் இறங்க மாட்டார்கள்.
இத்தகைய மக்களுக்கு இந்த வசனத்தில் போதுமான எச்சரிக்கை இருக்கிறது. குடும்பங்களுக்கிடையே பிளவு ஏற்படுவது ஷைத்தானின் செயல்பாடுகள் என்று இவ்வசனம் கூறுகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் கிடையாது என்று இவ்வசனம் கடுமையாக எச்சரிக்கிறது. மனிதர்கள் செய்யும் காரியங்களில் மகா கெட்ட காரியம் இது எனவும் இவ்வசனம் அறிவுறுத்துகிறது.
எந்தச் செயலில் ஷைத்தான் அதிகமாக திருப்தியடைகிறானோ அந்தச் செயல் அல்லாஹ்வின் கடும் கோபத்திற்குரியதாகும் என்பதை நாம் அறிவோம். ஷைத்தான்கள் மிகமிக மகிழ்ச்சியடையும் காரியங்களில் முதலிடம் தம்பதியருக்கிடையே பிளவை ஏற்படுத்தும் இந்தச் செயலுக்கே உள்ளது. இதைப் பின்வரும் நபிமொழியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
(ஷைத்தான்களின் தலைவனாகிய) இப்லீஸ் தனது சிம்மாசனத்தை தண்ணீரில் அமைத்துக் கொள்கிறான். அங்கிருந்து கொண்டு (மக்களை வழி கெடுப்பதற்காக) தனது படையினரை அனுப்புகிறான். பெரிய அளவில் குழப்பம் ஏற்படுத்துபவரே அவனுக்கு நெருக்கமானவர்களாக இருப்பார்கள். ஒரு ஷைத்தான் வந்து நான் இன்னின்ன காரியங்களைச் செய்தேன் என்று இப்லீசிடம் கூறுவான். அதற்கு இப்லீஸ் 'நீ ஒன்றுமே செய்யவில்லை' எனக் கூறுவான். மற்றொரு ஷைத்தான் வந்து 'நான் கணவன் மனைவிக்கிடையே பிரிவை ஏற்படுத்தி விட்டேன்' என்பான். அதைக் கேட்ட இப்லீஸ் அவனைத் தன்னருகில் நிறுத்திக் கொள்வான். நீயே சிறந்தவன் எனவும் கூறுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி)
   
இப்லீஸ் மிகவும் மகிழ்ச்சியடையும் காரியம் செய்பவர்கள் கணவன் மனைவியரிடையே பிரிவை ஏற்படுத்துவோர் தான் என்பதைவிட கடுமையான எச்சரிக்கை வேறு என்ன இருக்க முடியும்? இத்தகைய காரியத்தில் ஈடுபடுவோர் தாங்கள் ஷைத்தானுக்குத் துணை செய்கின்றனர் என்பதை உணர வேண்டும்.
மற்றொரு நபிமொழியைப் பாருங்கள்! 'அல்லாஹ்வின் அடியார்களில் மிகவும் கெட்டவர்கள் கோள் சொல்லித் திரிபவர்களும் நேசமாக இருப்பவர்களிடையே பிரிவை ஏற்படுத்துபவர்களும் தான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் கனம் (ரலி), நூல்: அஹ்மத்
அன்னியோன்யமாக இருப்பவர்களைப் பிரிப்பது தான் அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பூட்டும் என்பதை இதிலிருந்து உணரலாம். மேலும் கோள் சொல்லித் திரிபவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது என்றும் நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (புகாரி)
அன்னியோன்யமாக இருப்பவர்கள் என்பது பலதரப்பினரைக் குறிக்கும் என்றாலும் கணவன் மனைவியர் தான் இதில் முதலிடம் வகிப்பவர்கள். அவர்களுக்கிடையே உள்ள நெருக்கம் வேறு எவருக்கிடையேயும் இருக்க முடியாது.மேலும் இல்லாத குற்றங்களைக் கற்பனை செய்து வதந்திகளைப் பரப்பி குடும்பங்களைப் பிரிப்பதையும் நபி (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

கற்பனை செய்வதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். கற்பனை செய்வது தான் மிகப் பெரிய பொய்யாகும். மேலும் பிறர் குறைகளைத் துருவித் துருவி ஆராயாதீர்கள் என்பதும் நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ்மத்)
 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களாகிய எங்களிடம் உறுதிமொழி எடுத்தனர். நாங்கள் இட்டுக் கட்டி அவதூறுகளைப் பரப்புவது கூடாது என்பதும் அந்த உறுதி மொழியில் அடங்கும். (அறிவிப்பவர்: உமைமா பின்த் ரகீகா, நூல்: அஹ்மத்)
குடும்பங்களில் பிரிவை ஏற்படுத்துவதில் முக்கியப்பங்கு அவதூறுக்கு உண்டு. கற்பொழுக்கமுள்ள பெண்களைப் பற்றி அவதூறு கூறுவது எந்த அளவுக்கு குற்றமாகக் கருதப்படுகிறது என்றால் அவ்வாறு அவதூறு கூறுவோர் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் அவர்களுக்கு 80 கசையடிகள் அளிக்கப்பட வேண்டும் என்று திருக்குர்ஆன் (24:04) கூறுவதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
 ஒரு பெண் மீது களங்கம சுமத்துவோர் இதற்கு நான்கு நேரடி சாட்சிகளைக் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் எனவும் அந்த வசனம் (24:04) கூறுகிறது. ஒரு பெண்ணின் தவறான நடத்தையை ஒருவர் அல்லது இருவர் அல்லது மூவர் நேரடியாகக் கண்டால் கூட அதை அவர்கள் பகிரங்கப்படுத்தினால் அவர்கள் அவதூறு கூறியவர்களாகவே கருதப்படுவார்கள்.
அவதூறின் காரணமாக ஒரு பெண்ணின் வாழ்க்கை பாதிக்கும். குடும்பம் பிளவுபடும். அதை அறவே தவிர்ப்பதற்காகத் தான் இதற்கு மட்டும் நான்கு சாட்சிகள் தேவை என்று குர்ஆன் கூறுகிறது. ஏனைய எந்தக குற்றச் செயலுக்கும் இரண்டு சாட்சிகள் போதும் எனக்கூறும் இஸ்லாம் இந்த விஷயத்தில் மட்டும் நான்கு சாட்சியம் தேவை எனக் கூறுவது ஏன் என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
   
 நேருக்கு நேர் கண்ட நடத்தை கெட்ட செயலைக் கூட பரப்பக்கூடாது. குறைந்த பட்சம் நான்கு பேருக்கு முன்னிலையில் நடந்தால் மட்டுமே அது குறித்துப் பேசவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. ஒரு பெண்ணிடம் நாம் கண்ட இழிசெயலையே கூறக்கூடாது என்றால் இல்லாத ஒன்றைக் கற்பனை செய்து கூறி பெண்ணின் வாழ்க்கையைப் பாழாக்குவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை சொல்லத் தேவையில்லை.
ஒரு வீட்டிலிருந்து ஒரு ஆண் வெளியே வருவதைக் காண்கிறோம். அவன் எதற்குச் சென்றான் என்பது நமக்குத் தெரியாது. உள்ளே வேறு யாரெல்லாம் இருந்தார்கள் என்பதும் நமக்குத் தெரியாது. ஆனால் இந்தக் காட்சிக்கு கண், காது, மூக்கு வைத்து ஊரெல்லாம் பரப்பி விடுகிறோம். இஸ்லாமிய ஆட்சி நடந்தால் நமக்கு 80 கசையடி வழங்கப்பட்டிருக்கும். இவ்வளவு பெரிய குற்றத்தை சர்வ சாதாரணமாக நாம் செய்து வருகிறோம்.
தன் மீது இப்படி ஒரு பழி சுமத்தப்பட்டால் தனது நிலை என்ன என்று எந்த பெண்ணும் சிந்திப்பதில்லை. தன் குடும்பத்துப் பெண்கள் மீது இத்தகைய அவதூறு பரப்பப்பட்டால் தனது நிலை என்ன என்பதை எந்த ஆணும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
    இன்னும் சொல்வதாக இருந்தால் தம்பதியரிடையே மனக்கசப்பு இருந்தால் அதை நீக்கி இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே முஸ்லிம்களின் பணியாக இருக்க வேண்டும். இந்தப் பணிக்காக பொய் கூட கூறலாம் என்று இஸ்லாம் கூறுகிறது. மனிதர்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்காக ஒருவர் எதைக் கூறினாலும் அவர் பொய்யரல்ல என்பது நபிமொழி. அறிவிப்பவர்: உம்மு குல்சூம் (ரலி)இ நூல்கள்: அஹ்மத், புகாரி
   
 பிரிந்து கிடப்பவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக பொய்களைக் கூட கூறலாம் என்றால் இணக்கம் ஏற்படுத்துவது எந்த அளவு இறைவனுக்கு உகந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.
இறைவன் தனக்குப் பிடிக்காத பொய்யைக் நட நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்காக அனுமதிக்கிறான்.இந்த நல்ல நோக்கத்திற்காகத் தான் நாம் கற்பனை செய்யலாம். கசப்பை நீக்க உதவும் எத்தகைய பொய்யையும் கூறலாம். ஆனால் நாமோ பிரிப்பதற்காக இதைச் செய்து கொண்டிருக்கிறோம்.
தொழுகை, நோன்பு, தர்மம் ஆகிய காரியங்களை இறைதிருப்திக்காக நாம் செய்கிறோம். மறுமையில் நல்ல நிலையைப் பெறுவதற்காக இந்தக் காரியங்களில் ஏற்படும் சிரமங்களைச் சகித்துக் கொள்கிறோம். இதை விட சிறந்த காரியம் ஏதும் இருக்க முடியுமா? இருக்கிறது அதுதான் குடும்பத்தார்களிடையே நல்லுறவை ஏற்படுத்துவது.
   
 நோன்பு, தொழுகை, தர்மம் ஆகியவற்றுக்காக கிடைக்கும் மதிப்பை விட சிறந்த மதிப்பைப் பெற்றுத் தரும் ஒரு காரியத்தை நான் உங்களுக்குக் கூறட்டுமா என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் ஆம் என்றனர். அது தான் குடும்பத்தில் நல்லிணக்கம் ஏற்படுத்துதல் என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தனர். மேலும் குடும்பங்களில் பிளவை ஏற்படுத்துவது நல்லறங்களை அழித்து விடக்கூடியது எனவும் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி), நூல்கள்: திர்மிதி, அபூதாவூத்)
   
ஆகவே பிரிந்தவர்களைச் சேர்த்து வைப்போம். நல்லறங்களைப் பாழாக்கும் குடும்பப் பிரிவினை செய்வதைத தவிர்ப்போம்.

N.K.அப்துல்லாஹ்
 Thanks to islampaathai.com