உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, March 31, 2015

சொம்பு அடிவாங்கியதை ஒப்புக்கொண்ட பல்பு வியாபாரிகள்! (Updated)



அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

என்ன இன்றைக்கு பொழுது போகலையே என்றிருந்த நமக்கு, பல்புகளை ஏமாந்த மக்களின் தலையில் கட்டும் பியூஸாக போன வியாபாரிகளின் நடமாட்டம் பற்றி தகவல் கிடைத்ததை தொடர்ந்து இன்றைய பொழுது அவர்களுக்கு அர்ப்பணம்.

கவனிக்கவும்: 
புதிதாக படிப்பவர்கள் கீழ்க்காணும் லிங்கில் நமது முந்தைய ஆக்கத்தை படித்தால் இந்த பதிலடியின் அர்த்தம் விளங்கும் 



அதிரை ததஜவின் ஒப்புதல்:

ததஜவின் அதிரடி ஃபத்வா குறித்த நமது ஆக்கத்திற்கு பல்பு போட்டு வெளிச்சம் கூட்டி அதிரடியாக உண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.

அந்த ஃபத்வாக்கள், கேமராவை அனைத்தப்பிறகு கொடுத்த ஃபத்வாவாம். ஆக பத்வாவை மறுக்கவில்லை. அப்பன் குதிருக்குள் இல்லை என்று பல்பு போட்டு சொல்லியுள்ளனர்.

எனவே, மீண்டும் கேட்கிறோம் நீங்கள் ஒப்புக்கொண்ட உங்களுடைய பத்வாவில் உண்மையாளர்களாக, உறுதியானவர்களாக இருந்தால் உங்களுடைய பத்வாகளை நடைமுறைப்படுத்த 'திராணி' இருக்கிறதா?

அல்லாஹ்வும் ரசூலும் சொல்லும் சூனியத்தை, அல்லாஹ்வும் ரசூலும் சொன்னது போல் நம்பியதால் பீஜே என்பவரால் முஷ்ரிக் ஆக்கப்பட்ட, (அல்லாஹ் பாதுகாப்பானாக)

1.    பெற்றோர்களின் சொத்தை திருப்பிக் கொடுக்கப் போவது எப்போது? இனி வாங்காமல் இருக்க என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?

2.    உறவுகளை முறித்துக் கொள்ளப் போவது எப்போது? இனியும் உறவு கொண்டாடாமல் இருக்க என்ன முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?

3.    ஏற்கனவே எடுத்த பெண்களை எப்போது தலாக் விடப்போகிறீர்கள்? இனிமேலும் பெண் எடுக்காமலிருக்க என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?

மேலும் உங்களுடைய மேற்காணும் பத்வாக்களை மீறுபவர்களுக்கு அமைப்புரீதியாக என்ன தண்டனை?

மேற்காணும் சுய பத்வாக்களை நடைமுறைபடுத்துவீர்களா அல்லது ததஜ அகராதிப்படி இதுவும் பிம்பிளிக்கி பிளாப்பியா?

பெண்களின் சாட்சியத்தை நாங்கள் ஏற்கிறோம், நீங்கள்?????

கேமராவில் பதியப்படவில்லை என்ற தகவல் அப்பாஸ் அலி பேசிய பிறகே அப்பெண்களால் சுட்டிக்காட்டப்பட்டது.  தொடர்ந்து அதே மேடையிலேயே அந்த வீடியோவை பதியவேண்டியதுதானே என்ற குற்றச்சாட்டை அப்பாஸ் அலி வாபஸ் பெற்றார் ஆனால் அந்த ஃபத்வாவை பற்றிய விமர்சனம் அப்படியே உள்ளது. நம் நிலையும் அதேதான்.

ஆக, வீடியோ பதிவு செய்யப்படவில்லை என்ற உண்மை கூட அந்த சகோதரிகள் தாமாக முன்வந்து சொன்ன பிறகு தான் உங்களுக்கே விளங்கும் அளவுக்கு பியூஸ் போனவர்களாக இருந்துள்ளீர்கள், பேஷ், பேஷ்.

வீடியோ பதிவு செய்தார்களா? ஒழித்தார்களா? என்பதையெல்லாம் விட அப்பெண்களின் கேள்வியும் அதற்கு ததஜ சார்பில் மவ்லவி அப்துல் நாசரால் வழங்கப்பட்ட அதிகாரபூர்வ பத்வாவும் மிக முக்கியமானது, பாரதூரமானது என்பதை சிந்திக்கும் தகுதியுள்ளோர் உணர்வர்.

நடந்தது விவாதமா? கேள்வி பதில் நிகழ்ச்சியா?

பெண்களின் கேள்விக்கு அப்துல் நாசரின் திணறலை மறைக்க அவர்கள் போட்ட அடுத்த பல்பு

'அப்துல் நாசர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அவர்கள் திரும்ப திரும்ப கேள்விக்கேட்கிறார்கள்
ஒவ்வொன்றுக்கும் தாவித் தாவி போகக்கூடாது ஒன்றைவிட்டு இன்னொன்றுக்கு தாவிச் செல்லும் இதே நிலைதான் ஒவ்வொரு கேள்விக்கும் அங்கே நிலவியது.
இந்த இடத்தில் நாம் அந்த சகோதரிகளை குறை சொல்வதற்காக இதைக் குறிப்பிடவில்லை. 'அல்லாஹ் யாருக்கு நலவை நாடுகிறானோ அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தைக் கொடுத்துவிடுகிறான்' (புஹாரி 71) என பதிகிறார்கள்.'

அப்பன் மட்டும் அல்ல சித்தப்பனும் குதிருக்குள்தான் என பதிகிறார்கள். பெண்கள் கேட்ட கிடுக்கிப்பிடி கேள்விகளை மறுக்கமுடியாமல் இவ்வளவு சப்பைக்கட்டுகளை கட்டி பல்பு விற்று பெண்கள் அடுத்து அடுத்து கேள்விகள் கேட்டனர் இவர் பதில் சொல்லாமல் அல்லாஹ் நாடுவானா? என்று கேள்வி கேட்டு அங்கேயே நின்றுகொண்டார் என்பதை வெளிச்சம் போட்டு தெளிவு படுத்தியுள்ளனர்.

இது விவாத நிகழ்ச்சியா அல்லது கேள்விக்கு பதில் சொல்லும் நிகழ்ச்சியா? நாங்கள் கேட்ட கேள்விக்கு பெண்கள் பதில் சொல்லவில்லை என காரணம் சொல்லி சமாளிக்க?

பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி என்று பீலா விட்டு விட்டு வந்திருந்த பெண்களை 'உரையாற்றுகிறேன்' பேர்வழி என 1 1/2  மணி நேரம் கொன்றுவிட்டும், பின்பு பதில் என்கிற பெயரில் ஒவ்வொரு கேள்விக்கும் சுமார் 45 நிமிடங்கள் என அறுத்து டைம்பாஸ் செய்துவிட்டும், பெண்கள் தங்களுக்குள்ள சந்தேகங்களை அவர்களுக்கு கிடைத்த கேப்பில் எழுப்பினால் தாவித்தாவி போவதாக அளுத்துக் கொள்கிறீர்கள். மவ்லவி அப்துல் நாசர் இத்துடனாவது தப்பித்தாரே என பெருமைபட்டுக் கொள்ளுங்கள்.

இறுதியாக:

38:29   كِتَابٌ أَنزَلْنَاهُ إِلَيْكَ مُبَارَكٌ لِّيَدَّبَّرُوا آيَاتِهِ وَلِيَتَذَكَّرَ أُولُو الْأَلْبَابِ
இது பெரும் பாக்கியங்கள் நிறைந்த ஒரு வேதமாகும். (நபியே!) இதனை நாம் உம்மீது இறக்கி அருளியுள்ளோம். இந்த மக்கள் இதனுடைய வசனங்களைச் சிந்திக்க வேண்டும்; அறிவுடையோர் இதிலிருந்து படிப்பினை பெற வேண்டும் என்பதற்காக!  38:29

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்து முடித்தபோது 'உறவு' எழுந்து, (இறைஅரியணையின் கால்களைப் பற்றிக்கொண்டு) '(மனிதர்கள் தம்) உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரியே இப்படி நிற்கிறேன்' என்று கூறி (மன்றாடி)யது.

அல்லாஹ், 'ஆம்; உன்னை (அதாவது உறவை)ப் பேணி நடந்துகொள்பவனுடன் நானும் நல்ல முறையில் நடந்துகொள்வேன் என்பதும், உன்னைத் துண்டித்துவிடுபவனை நானும் துண்டித்துவிடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?' என்று கேட்டான். அதற்கு உறவு, 'ஆம் (திருப்தியே) என் இறைவா!' என்று கூறியது. அல்லாஹ், 'அது உனக்காக நடக்கும்' என்று சொன்னான் என்றார்கள்.

பிறகு, 'நீங்கள் விரும்பினால் 'நீங்கள் புறக்கணித்து பூமியில் குழப்பம் ஏற்படுத்தவும், உங்கள் உறவுகளை முறிக்கவும் முயல்வீர்களா? அவர்களையே அல்லாஹ் சபித்தான். அவர்களைச் செவிடாக்கினான். அவர்களின் பார்வைகளைக் குருடாக்கினான். அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள்மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?' (47:22-24) ஆகிய இறைவசனங்களை ஓதிக்கொள்ளுங்கள்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. நூல்: முஸ்லீம் 4994

அதிரை ததஜ சகோதரர்களே! மேற்காணும் குர்ஆன் மற்றும் ஹதீஸின் கருத்துப்படி சிந்தித்து, வழிகெடுக்கும் தனிமனித மயக்கத்திலிருந்து விடுபட்டு அல்லாஹ்வுக்கு உகந்த பாதையை தோந்தெடுத்து வெற்றியடைந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். அதை விடுத்து பியூஸாக போனவர்களின் பல்பு வியாபாரங்கள் எத்தகைய பலனையும் தராது என கூறி நிறைவு செய்கின்றோம்.

Monday, March 30, 2015

துபையில் 03.04.2015 வெள்ளியன்று முஃப்தி உமர் ஷரீப் காசிமியின் மார்க்க விளக்க நிகழ்ச்சி

குவைத் ஹாஸ்பிட்டல் என்று அழைக்கப்பட்ட அல் பரஹா ஹாஸ்பிட்டல் வளாகத்தில் அமைந்துள்ள அரங்கத்தில்...


அமீரகம் துபாயில் இன்ஷா அல்லாஹ் வருகிற (03-04-2015) வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு முதல் முப்தி உமர் ஷரிப் காஸிமி அவர்கள் மனித சமுதாயத்திற்கான தீர்வுகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.

மேலும் இந்நிகழ்ச்சிக்கு பெண்களுக்கு தனி இட வசதி Deira,Sonapur,Al Quoz,Jebel Ali பகுதிகளிலிருந்து வாகன வசதி செய்யப்பட்டு உள்ளது.

நிகழ்ச்சி நடைபெறும் இடம்:
AL OWAIS AUDITORIUM,
அல் பராஹா மருத்துவமனை வளாகம்,
அல் பராஹா,துபாய்
தொடர்புக்கு: 056-7371442/056-7371449 

Thanks to: AdiraiPirai

துபையில் ஓதுவோம் வாருங்கள் அல்குர்ஆன் ஓத தொடர் பயிற்சி வகுப்பு


அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.

கடந்த டிசம்பர் 2014 முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை MTCT-மர்க்கஸில் "ஓதுவோம் வாருங்கள்" என்ற தலைப்பில் அல்குர்ஆன் தொடர் வகுப்பு நடைபெற்று வருகின்றது.

உஸ்தாத் ஜுனைது உமரி MA Arabic அவர்கள் திருக்குர்ஆனை பொருளுணர்ந்து கொள்வதற்கும் தஜ்வீது முறைப்படி ஓதுவதற்கும் பவர் பாயின்ட் மூலம் பயிற்சி அளிக்கின்றார்கள்.

குர்ஆன் ஓதத் தெரியாதவர்களுக்கு சிறப்பு பயிற்சியும் தனி கவனமும் செலுத்தப்படுகின்றது.

குர்ஆனை கற்றுத்தருவதோடு அதனோடு வாழ்நாள் முழுவதும் தொடர்பை ஏற்படுத்த உதவுகின்றோம்.


உங்களின் அன்றாட ஐவேளைத் தொழுகை மற்றும் அல்லாஹ்வோடு உங்களின் தொடர்பு ஆகியவைகள் மேம்படவும் உங்களின் கடந்தகால வாழ்க்கை உறுதியாக மாறிடவும் உதவுகின்றோம்.
  • குர்ஆனை புரிந்து கொள்வது எளிது - நிச்சயமாக இக்குர்ஆனை நன்கு நினைவுபடுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா(அல்-குர்ஆன் 54:32)
  • குர்ஆனின் சிறு பகுதியேனும் யார் உள்ளத்தில் மனனம் இல்லையோ அவர் உள்ளம் பாழடைந்த வீட்டைப் போன்றது
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) ஆதாரம் : திர்மிதி

எனவே இவ்வாய்ப்பை பயன்படுத்திகொள்ளுமாறு துபை சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

குறிப்பு: கட்டணம் ஏதுமின்றி கற்றுத் தரப்படுகிறது.

For Madukkur Thouheed Charitable Trust

Saturday, March 28, 2015

ததஜவினரின் தள்ளுபடிக்காக காத்திருக்கும் ஹதீஸ்கள் - மவ்லவி அப்பாஸ் அலி எச்சரிக்கை

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினரால் நடத்தப்பெறும் அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரியின் சார்பாக ALM பள்ளிக்கூட வளாகத்தில் பெண்களுக்காக 'நவீன குழப்பங்கள்' குறித்த விழிப்புணர்வு கேள்வி பதில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் மவ்லவி அப்பாஸ் அலி Misc அவர்களின் அறிமுகவுரை மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சிகள் வாயிலாக ததஜவினர் முஸ்லீம் சமூகத்தில் ஊடுருவி செய்து வரும் கொள்கை குழப்பங்கள், வழிகெட்ட முஹ்தஸ்ஸிலா சிந்தனைகள், பகுத்தறிவின் பெயரால் தனிமனித வழிபாடு, சூனியம் சம்பந்தமான தகிடுதத்தங்கள், ஸஹீஹான ஹதீஸ் மறுப்புக்கள் மற்றும் மனமுரண்டுகளை தனது விளக்கவுரையில் தோலுரித்து காட்டினார்.

இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, புலி வால் பிடித்த கதையாய் தங்களுக்கு விளக்கம் தெரியாத ஹதீஸ்களை மறுக்கப்போய் இன்று அதன் சங்கிலித் தொடராய் பலநூறு ஹதீஸ்களை தள்ளுபடி செய்யும் இழிநிலைக்கு தள்ளப்பட்டுள்ள பரிதாபநிலையையும், இன்னும் அவர்களால் பதில் சொல்ல முடியாத நிலையிலுள்ள ஸஹீஹான பல ஹதீஸ்கள் வருங்காலங்களில் தள்ளுபடி செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டு, தகுந்த நேரத்தை எதிர்பார்த்துள்ள அவலத்தை பட்டியலிட்டு அம்பலப்படுத்தினார்.

மாலை 5 மணிமுதல் இரவு 9.15 வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பயனுள்ள பல கேள்விகளை எழுப்பிய பெண்கள் தங்களின் மார்க்கத்தேடலை பறைசாற்றினர். அல்ஹம்துலில்லாஹ், இன்றைய கேள்வி பதில் நிகழ்வு சிந்திக்கின்ற மக்களுக்கு மிகவும் பயன் தரக்கூடிய ஒன்றாகவும், நவீன குழப்பவாதிகளிடமிருந்து நம்மை நாமே பாதுகாத்து கொள்வதற்கு விழிப்புணர்வு தரக்கூடிய ஒன்றாகவும் அமைந்திருந்தது. 

இன்ஷா அல்லாஹ் இதன் காணொளி விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.

களத்திலிருந்து
கமாலுதீன்

நிகழ்ச்சி துவங்குமுன் எடுத்த புகைப்படங்கள்




 


அதிரையில் இஸ்லாத்தை ஏற்ற பட்டதாரி குடும்பம் - நமக்கு ஒரு பாடம்

9:100   وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُم بِإِحْسَانٍ رَّضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ
9:100. (இஸ்லாத்தின் அழைப்புக்கு) முதன் முதலில் பதிலளித்த முஹாஜிர்கள், அன்ஸாரிகளைக் குறித்தும், அவர்களை யார் நேர்மையோடு பின்பற்றினார்களோ அவர்களைக் குறித்தும் அல்லாஹ் திருப்தி கொண்டான். அவர்களும் அவனைக் குறித்து திருப்தி அடைந்தார்கள். கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனத் தோப்புகளை அல்லாஹ் அவர்களுக்காகத் தயார் செய்து வைத்திருக்கின்றான்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். இதுவே மகத்தான வெற்றியாகும்.

இது செய்தி:

அதிரை CMP லேனில் இயங்கும் ALM பள்ளிக்கூட ஜூம்ஆ மஸ்ஜிதில் நேற்று நடைபெற்ற ஜூம்ஆ தொழுகையை தொடர்ந்து கும்பகோணத்தை சேர்ந்த பட்டதாரி குடும்பத்தினர் நால்வர் அதிரை தாருத் தவ்ஹீத் சகோதரர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் தூய இஸ்லாமிய மார்க்கத்தை தங்களது வாழ்வியலாக ஏற்றனர், எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

மௌலவி. அப்துல் ரஹ்மான் அவர்கள் ஒரிறைக் கலிமாவை சொல்லிக் கொடுத்ததை தொடர்ந்து,

சகோதரர் விஜயராகவன் BBA    (குடும்பத் தலைவர்) - உமர் ஆகவும்
சகோதரி லக்ஷ்மி    (குடும்பத் தலைவி) -    வாஹிதா ஆகவும்
சகோதரர் சாய் கிருஷ்ணா (மகன்) – ஸையான் அகமது எனவும்
சகோதரர் விஷ்ணுவர்தன்    (மகன்) - சமி அகமது எனவும்

பெயர்களை மாற்றிக் கொண்டு அன்று பிறந்த பாலகர்கள் எனும் சிறப்புடன் முஸ்லீம்களாயினர்.

இது பாடம்:

இது அன்றாடம் உலகில் ஏராளமான மக்களின் உள்ளங்களை ஈர்த்து வரும் செய்திகளில் ஒன்று தான் ஆனால் பரம்பரை முஸ்லீம் என மார்தட்டிக் கொண்டுள்ள நாம் அழைப்புப் பணியில் என்ன செய்தோம் என்பதே கேள்வி! ஆனால் மிகச்சில வருடங்களுக்கு முன் மாரிமுத்து ஆக இருந்து இஸ்லாத்தை ஏற்றவரும், தாருத் தவ்ஹீதின் தீவிர ஆதரவாளருமான சகோதரர் யஹ்யா அவர்களின் அழைப்புப்பணியின் மூலம் ஒரு குடும்பத்திற்கு ஒரிறைக் கொள்கையை எத்திவைக்க முடிகின்றபோது கோளாறு யாரிடம் என நாம் ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்திட கடமைப்பட்டுள்ளோம்.

6:90   أُولَٰئِكَ الَّذِينَ هَدَى اللَّهُ  ۖ فَبِهُدَاهُمُ اقْتَدِهْ ۗ قُل لَّا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا  ۖ إِنْ هُوَ إِلَّا ذِكْرَىٰ لِلْعَالَمِينَ
6:90. (நபியே!) அவர்கள்தாம் அல்லாஹ்வினால் நேர்வழி காட்டப்பட்டவர்கள். அவர்களுடைய வழியினையே பின்பற்றிச் செல்வீராக! நான் இந்த (அழைப்புப்) பணிக்காக எந்தவிதக் கூலியையும் உங்களிடம் கோரவில்லைஎன்று கூறுவீராக! இது அகிலத்தார் அனைவர்க்கும் உரிய ஓர் அறிவுரையே ஆகும்.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பியபோது அவர்களிடம், 'நீங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரிடம் செல்கின்றீர்கள். எனவே, அவர்களுக்கு முதலாவதாக, அல்லாஹ் ஒருவன் எனும் (ஏக இறைக்) கொள்கையை ஏற்கும்படி அழைப்புக் கொடுங்கள். அதை அவர்கள் புரிந்து (ஏற்றுக்) கொண்டால், தினந்தோறும் ஐந்து நேரத் தொழுகைகளை அவர்களின் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள். அவர்கள் (அதை ஏற்று) தொழவும் செய்தால் அவர்களிடையேயுள்ள செல்வர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு அவர்களிடையேயுள்ள ஏழைகளுக்குச் செலுத்தப்படுகிற ஸகாத்தை அவர்களின் செல்வங்களில் அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள். அதையும் அவர்கள் ஒப்புக்கொண்டால் அவர்களிடமிருந்து (ஸகாத்தை) வசூலித்துக் கொள்ளுங்கள். (ஆனால்,) மக்களின் செல்வங்களில் சிறந்தவற்றைத் தவிர்த்திடுங்கள்' என்றார்கள். புஹாரி: 7372.

அதிரையிலிருந்து
முகமது (SIS) உதவியுடன்
நிஜாம் மற்றும் ஹாஜா



படங்கள் உதவி: அதிரை நியூஸ்