உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Saturday, March 21, 2015

இஸ்லாமிய சட்டமே குற்றங்களைத் தடுக்கும்! - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்க்கமான தீர்ப்பு!




இஸ்லாமிய சட்டமே குற்றங்களைத் தடுக்கும்!
- சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்க்கமான தீர்ப்பு!
=================================================
-மக்கள் ரிப்போர்ட் செய்தியாளர்.சேலம்.ஹுசைன்

கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், வன்கொடுமைகள், பிறர் சொத்துக்களை அபகரித்தல் என மனித குலத்திற்கெதிரான சமூக குற்றங்கள் நாள்தோறும் பெருகிவரும் சூழலில் இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகள் பல்வேறு விதமான சட்டங்களை இயற்றி குற்றங்களை தடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

குற்றங்களைத் தடுக்கின்ற காவல்துறை நவீனமயமக்கப்படுகிறது. காவல்துறைக்கு தேவையான வசதிகள் அரசாங்கத்தால் செய்து கொடுக்கப்படுகின்றன. ஆயினும், குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியேதான் உள்ளது.

எந்த சட்டங்களாலும் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களையோ, கொலை, கொள்ளை மற்றும் ரவுடியிசத்தையோ கட்டுப்படுத்த முடியவில்லை. டெல்லி காவல்துறை அதிநவீனமக்கப்பட்டிருக்கும் நிலையில், மகளிர் காவல் நிலையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டிருக்கிற நிலையில், தனியாக பெண்களுக்கெதிரான குற்றங்களை கையாள தனி ஆணையாளர், மகளிர் காவலர்களைக் கொண்ட 24மணி நேர ஹெல்ப் லைன் வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத வகையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை எக்குதப்பாக எகிறுகிறது.

கடந்த 2014 ல் மட்டும் 1 லட் சத்து 47ஆயிரம் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன என்ற புள்ளி விவரத்தை தருகிறார் டெல்லியின் காவல்துறை ஆணையர் பி.ஸ். பாஸ்ஸி.

இவை, இந்திய நீதிமன்றங்கள் வழங்கும் தண்டனைச் சட்டங்களால் குற்றங்கள் குறையவில்லை; குற்றவாளிகளுக்கும் குற்றத்தை செய்ய நினைப்பவர்களுக்கும் இந்த தண்டனைகள் அச்சத்தை எற்படுத்தவில்லை என்பதை தெளிவாக உணர்த்துகின்றன.

நாட்டில் குற்றங்கள் குறைய வேண்டுமானால் அது இஸ்லாமிய சட்டங்களால் மட்டுமே முடியும் என்ற கூற்று நிரூபிக்கப்பட்டு வருகிறது! இஸ்லாமிய சட்டங்கள் கொடூரமானவை என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில், அப்படி முன் வைப்பவர்களே அவர்களை அறியாமல் பல சந்தர்ப்பங்களில் இஸ்லாமிய சட்டங்கள் வேண்டும் என்று யதார்த்தத்தை பேசுவதை பார்க்க முடிகிறது.

ஆம்! இஸ்லாமிய சட்டங்கள் குற்றவாளிகளுக்கு மட்டுமல்லாமல் குற்றத்தை செய்ய நினைப்பவர்களுக்கும் அச்சச்சத்தை ஏற்படுத்த வல்லது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மன நிறைவையும், நாட்டு மக்களுக்கு அச்சமில்லாத அமைதியான - பாதுகாப்பான சூழலையும் ஏற்படுத்த இஸ்லாமிய சட்டங்களால்தான் முடியும். இதை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். வைத்தியநாதன் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் "வாதி பிரதிவாதி - நீதி!' என்ற புதிய தொடர் ஒன்றை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் எழுதி வருகிறார்.

கடந்த 17.03.2015 தேதியிட்ட இதழில் வெளியாகி இருக்கும் இந்தத் தொடரின் முதல் கட்டுரையில், கடந்த ஜூலை 2014ல் நீதிபதி வைத்தியநாதன் முன் வந்த ஒரு வழக்கு குறித்து சுட்டிக்காட்டும் வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் - இந்த வழக்கில் நீதிபதி வைத்திய நாதன் வழங்கிய உத்தரவு இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்து கடும் அதிர்வலைகளை உண்டு பண்ணியது என்கிறார்.

"குற்றங்களை ஒழிக்க முதலில் பயத்தை ஏற்படுத்த வேண்டும். தண்டனைகளின் பயம் குற்றத்தை குறைக்கும் என்பதே அந்த உத்தரவின் அடித்தளம். நீதிபதி வைத்திய நாதனின் உத்தரவானது அந்த ஒரு வழக்கிற்காக மட்டும் வழங்கப்பட்டதாக எடுத்துக் கொள்ளாமல், பெருகி வரும் குற்றங்களை கட்டுப்படுத்த முனைந்த ஒரு நீதிபதியின் கருத்தாகவும் அவரின் ஆதங்கமாகவும் பேசப்பட்டது என்றும் கூறுகின்ற வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன், அந்த தீர்ப்பை அப்படியே பதிவு செய்துள்ளார்.

""துரதிருஷ்டவசமாக குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் கைகளை வெட்டும் அளவிற்கு கடுமையான சட்டங்கள் நமது நாட்டில் இல்லை. அப்படி வலுவான மற்றும் கடுமையான சட்டங்கள் இருந்தால் மட்டுமே குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் தைரியமாக அப்படிப்பட்ட செயல்களைச் செய்ய மாட்டார்கள்.

இஸ்லாமிய நாடுகளில் சிறு திருட்டு செயல்களுக்குக் கூட, அப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடும் நபர்களின் கைகளை வெட்டியும், விரல்களைத் துண்டித்தும் கொடூரமான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது. புனிதக் குர்ஆனில் திருட்டு "ஹராம்' (அல்லாஹ்வால் தடை செய்யப்பட்ட செயல்) என கருதப்படுகிறது.

இறைத் தூதர் நபிகள் நாயகம் அவர்கள், "திருடர்களை சமுதாயத்தின் சமூக விரோதிகள் எனவும், அப்படிப்பட்டவர்கள் தண்டிக்கப்படவில்லை என்றால் அது ஊழலாகப் பெருகி தேசத்தையே பாதித்து விடும்' என சபித்துள்ளார்.

ஈரான் நாட்டில் திருடர்களின் கைகளையும், விரல்களையும் வெட்ட நவீன கருவியை புகுத்தியுள்ளது அங்குள்ள நீதிமன்றம் என நான் சமீபத்தில் படித்த செய்திக் குறிப்பின் வாயிலாக தெரிந்து கொண்டேன்.

மோசடி செயல்களில் ஈடுபடும் நபர்களின் விரல்களை வெட்டும் தண்டனை நமது நாட்டில் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் நமது நாட்டில் அப்படிப்பட்ட சட்டம் நடைமுறையில் இல்லை. அப்படிப்பட்ட தண்டனைகள் கொடுக்கப்பட்டால்தான் குற்றச் செயல் புரிபவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்பட நினைப்பவர்கள் அப்பாவிகளின் சொத்துக்களை அபகரிக்க துணிய மாட்டார்கள்...''

இதுதான் நீதிபதி வைத்தியநாதன் வழங்கிய அந்தத் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு!

இது தீர்ப்பு என்பதை விட, வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் சொல்வதைப்போல நாட்டில் பெருகி வருகின்ற குற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்கிற நீதியரசர் வைத்தியநாதனின் உள்ளக் கிடக்கைதான்! அமைதியையும், பாதுகாப்பையும் விரும்புகின்ற நாட்டு மக்களின் உள்ளக்கிடக்கையும் இதுதான் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது.

பல நீதிபதிகளுக்கு இஸ்லாமிய சட்டங்கள் தெரியாது அவர்கள் திருமறைக் குர்ஆனையும் நபிகள் நாயகத்தையும் படிக்காததால்...!

அதே சமயம் இஸ்லாமிய சட்டங்களை அறிந்து வைத்திருக்கும் ஒரு சில நீதிபதிகள் கூட, குற்றங்களுக்கு உகந்த இஸ்லாமிய சட்டங்களைப் பற்றி நீதிபதி வைதியநாதனைப்போல துணிந்து தமது தீர்ப்புகளில் மேற்கோள் காட்ட முன்வருவதில்லை.

கொலை போன்ற கொடிய குற்றங்களுக்கு இஸ்லாம் மரண தண்டனையை வழங்குவதை மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சித்து வருகிறார்கள். அவர்களின் இந்த விமர்சனம் என்பது நாட்டு மக்களின் மனநிலைக்கு எதிரானது என்பதை, கொடூர குற்றங்களுக்கு உச்சபட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என்று அவ்வப்போது மக்கள் ஒன்று திரண்டு போராடுவதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

கடந்த 2012ல் டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கொடூரமாக பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு தலைநகர் தில்லியில் பல நாட்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், "குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்' என குரலெழுப்பியதை மறந்துவிட முடியாது.

இந்த சம்பவத்தையடுத்து தண்டனைகளை கடுமையாக்க நீதிபதி வர்மா தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியும் அதன் பரிந்துரைகளை செய்தது. ஆயினும் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே இருப்பதை நிதர்சனமாக பார்க்க முடிகிறது. நீதிபதி வர்மா கமிட்டி பரிந்துரை வேலைக்கு ஆகாது என்பதை நாட்டில் பெருகும் குற்ற எண்ணிக்கைகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

"சட்டத்தின் அணுகுமுறை கடுமையாகும் போதுதான் அரசியலமைப்பு ஷரத்துகளின்படி தனி நபரின் சுதந்திரம் மற்றும் உரிமைகள் பாதுகாக்கப்படுகிறது'' என்கிறார் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்.

இது இஸ்லாமிய குற்றவியல் சட்டதின் அடிப்படை கூறு ஆகும். மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிப்பதாக சட்டங்கள் இருக்க வேண்டும். அந்த உத்தரவாதத்தை இஸ்லாமிய சட்டங்களில்தான் காண முடியும்!

படங்கள்: வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்,நீதியரசர் வைத்தியநாதன்.(நன்றி :குமுதம் ரிபோர்ட்டர்) சென்னை உயர் நீதி மன்றம்

Shared in FB by  Fais Faisal

No comments:

Post a Comment