உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Saturday, March 14, 2015

'பீஜேயானிகள்' பற்றிய நமது பதிவுகள் குறித்து ஓர் விளக்கம்

بسم الله الرحمن الرحيم

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

 وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنفَ بِالْأَنفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصٌ ۚ فَمَن تَصَدَّقَ بِهِ فَهُوَ كَفَّارَةٌ لَّهُ ۚ وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ

அவர்களுக்கு நாம் அதில், 'உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்;' எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே! (அல்குர்ஆன்: 5:45)

நாங்கள் சார்ந்திருக்கும் முஹல்லாவிற்குட்பட்ட அல்லாஹ்வின் இல்லங்களை ஷிர்க்கின் கோட்டையாக அறிவித்துவிட்டும், முஹல்லாவாசிகளை முஸ்லிம்களாக அங்கீகரிக்காமலும், முஹல்லாவாசிகள் ஜனாஸா தொழுகையில் பங்கேற்பதை நிராகரிக்க வழக்கமான அறிவிப்பின்படி காலை 9:00 மணிக்கு ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிப்பு செய்துவிட்டு
ம், முஹல்லாவாசிகளை ஜனாஸா தொழுகைக்காக பள்ளியில் காத்திருக்க வைத்துவிட்டு இரகசியமாக பீஜேயானி சகாக்களுக்கு மட்டும் குருந்தகவல் மூலம் தொழுகை பற்றிய அறிவிப்பை கொடுத்து  ஜனாஸா தொழுகையை தெருவில் வைத்து நடத்திவிட்டு, அவர்கள்  ஷிர்க்கின் கோட்டை என கூறிய மையவாடியில் மட்டும் இடம் கேட்கும் பீஜேயானிகளின் முரண்பாடுகள் குறித்து ஜூம்ஆ பள்ளி முஹல்லாவாசிகளுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் வெளிச்சம் போட்டுகாட்டும் பதிவுகளை வெளியிட்டோம்.

இதற்கு மாறாக பீஜேயானிகள் தமிழகம் மற்றும் இலங்கையின் பல மார்க்க அறிஞர்களையும் அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பையும் வீண் வம்பிழுத்தது தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியது போன்றவையே நாம் வரிக்கு வரி பதிலடி கொடுக்க காரணமானது. இவ்வாறு வம்பிழுப்பது அவர்களின் தலைவன் வழி இயல்பு.

இந்தப் பதிவுகளில் இடம் பெற்ற சில வார்த்தைகளை சகோதரர்கள் சிலர் ஆட்சேபித்துள்ளனர் சொட்டை, குஞ்சுகள், புள்ளி ராஜா போன்றவை அவர்கள் பயன்படுத்திய அதே வார்த்தைகள் தான். செட்டிங் செல்லப்பா, நித்தியானந்தா போன்றவை கழிவுகள், பெண்ப
க்தர்கள் என அவர்கள் விமர்சித்த வார்த்தைக்கு மாற்று வார்த்தைகள். பீஜே வணங்கிகள் பீஜேயானிகள், போன்றவை முஷ்ரிக்குகள், காஃபிர்கள், இஸ்லாத்திற்கு மாற்றமாக சகாபாக்களை பின்பற்றக்கூடியவர்கள் என்ற சொற்களுக்கு மாற்று. 'தலைவன் முதல் தொண்டன் வரை' அவர்கள் பிறர் மீது காரி உமிழும் வார்த்தைகளுக்கு முன் இவை ஒன்றுமே இல்லை என்பதை அறியத் தருகின்றோம். அவர்கள் வரம்பு மீறும் அதேஅளவே அல்லது அதைவிட குறைவான அளவே நாமும் வரம்பு மீறுகிறோம். இவை அல்லாஹ் நமக்கு தந்த உரிமை என்பதை மறுக்க வேண்டிய அவசியமில்லை.

மன்னிக்கலாமே என்ற ஆலோசனையை முன் வைக்கலாம். இத்தகைய சொற்கள் அவர்கள் அனைவரையும் குறித்து எழுதப்படுகின்றதா? என்றால் இல்லை. மாறாக யாரெல்லாம் தனது புதிய மதத் தலைவன் மேல் உள்ள வெறியின் காரணமாக அடுத்தவர்களை முகநூல் போன்ற சமூக தளங்களில் புண்படுத்துகின்றார்களோ, இன்னும் யாரெல்லாம் மார்க்கம் இது தான் எனத் தெரிந்த பிறகும் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்த
ன் காரணமாக உண்மையை மறைக்கின்றார்களோ அவர்களை மட்டுமே இவ்வார்த்தைகள் குறிக்கும். அதே நேரத்தில் அதிரை கிளைத் தலைவர் பீர் முஹமது, செயலாளர் பக்கீர் முகைதீன், மூத்த உறுப்பினர் அப்துல் ரெஜாக், முஹம்மது ஸாலிஹ், ஹைதர் அலி, ஹாஜா அலாவுதீன் மற்றும் பல சகோதரர்களை நமது வார்த்தைகள் சுட்டாது மாறாக அவர்கள் அறியாமையினால் தான் இன்னும் அங்கே நீடிக்கின்றனர் என நல்லெண்ணம் கொள்கின்றோம். (இது சம்பந்தமாக ஏற்கனவே ஒரு பதிவிலும் விளக்கியுள்ளோம்). இதே அளவுகோல் தான் அவர்களின் அனைத்து கிளை உறுப்பினர்களுக்கும் என்பதை அறிந்து கொள்க! ஏனெனில், அவர்களில் பலர் சுயமாக முடிவெடுக்க முடியாத நிலையிலும் எதை கேட்டாலும் தலைமையை கேட்டுச் சொல்கின்றேன் என எப்போதும் பதில் சொல்லக்கூடியவர்களே! எங்களது இந்த எண்ணத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் சரி ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரியே.

தலைவன் எவ்வழி தொண்டனும் அவ்வழி என்ற அடைமொழிக்கேற்ப, நமக்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என நமது பதிவுகளுக்கு சம்பந்தமில்லாத பல மார்க்க அறிஞர்களையும் அதிரை தாருத் தவ்ஹீத் என்ற அமைப்பையும் வம்பிழுப்பதையும் ஒரு பிழைப்பாக கொண்டுள்ளனர் பீஜேயானிகள். அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பை பொறுத்தவரை எவனது முதுகுக்கு பின்னாலிருந்தும் இயங்கும் அமைப்பல்ல மாறாக எதிர்த்தாலும் ஆதரித்தாலும் முகத்திற்கு நேரே செய்யக்கூடியவர்கள் என்பதையும் நாங்கள் அறிந்தே வைத்துள்ளோம்.

அதிரை இஸ்லாமிக் மிஷன் என்ற வலைதளத்தை நடத்தக்கூடிய ஆசிரியர் குழுவினரை அதிரையின் பெரும்பாலான சகோதரர்கள் அறிந்தே வைத்துள்ளனர். நமது வலைதளத்தில் வெளியிடப்படக்கூடிய பதிவுகளுக்கு நாங்களே பொறுப்பு என்பதை அறிவுள்ளோர் அறிவர். மேலும் பல இஸ்லாமிய, தவ்ஹீத் இயக்கங்களுடைய செய்திகளையும் அவ்வப்போது பதிந்தும் பகிர்ந்தும் வருகின்றோம்.

தவ்ஹீத் போர்வைக்குள் ஒழிந்து கொண்டுள்ள, சுன்னத் ஜமாஅத் போர்வைக்குள் ஒழிந்து கொண்டுள்ள, இன்னும் பல கேடுகெட்ட மார்க்க விரோதிகளையும் எதிர்காலத்திலும் அல்லாஹ்விற்காக எதிர்க்க தயங்க மாட்டோம் என கூறி முடிக்கின்றோம்.

இவண்
ஆசிரியர்குழு
அதிரை இஸ்லாமிக் மிஷன்

 

No comments:

Post a Comment