உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, March 8, 2015

அதிரை குத்பா பள்ளி தீண்டத்தகாத பள்ளியா? முஹல்லாவாசிகள் ஜனாஸா தொழுகை செய்தால் பாவமா?

9:31   اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِّن دُونِ اللَّهِ وَالْمَسِيحَ ابْنَ مَرْيَمَ وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا إِلَٰهًا وَاحِدًا ۖ لَّا إِلَٰهَ إِلَّا هُوَ ۚ سُبْحَانَهُ عَمَّا يُشْرِكُونَ
9:31. அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும், மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை - அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்.




நான் என்னுடைய கழுத்தில் தங்கத்தாலான சிலுவை இருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன் அப்போது அதியே, உன் கழுத்திலிருக்கும் அதை வீசிவிடு என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவ்வேளை நான் அதை வீசிவிட்டேன் மேலும் நபியவர்கள் சூரத்துல் பராஆவின் (சூரத்துத் தவ்பா) 31 வது வசனத்தை ஓதினார்கள். அப்போது நான் 'நாங்கள் அவர்களை (பாதிரியார்களை) வணங்கவில்லையே' எனக் கூறினேன். அதற்கு நபியவர்கள் அல்லாஹ் ஹராமாக்கியதை (பாதிரியார்கள்) ஹலாலாக்கியதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா? மேலும் அல்லாஹ் ஹலாலாக்கியதை அவர்கள் (பாதிரியார்கள்) ஹராமாக்கியதை நீங்கள் ஏற்கவில்லையா? எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அது தான் அவர்களை வணங்குவதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அதி இப்னு ஹாதம் (ரலி)
நூல்: அல் முஆஜமுல் கபீர் லித்தபராணி

பிற்சேர்க்கை: 
இது பலகீனமான ஹதீஸ் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றாலும் அஷ்ஷைக். அல்பானி போன்ற அறிஞர்கள் 'ஹசன்' தரத்தில் சேர்த்துள்ளனர். இந்த ஹதீஸை ஒரு ஆதாரமாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் குர்ஆனுடைய வசனமே போதுமான ஆதாரமாக திகழ்கின்றது.

மேற்காணும் 9:31 வசனத்தின் அடிப்படையில், சாணுக்கு சாண் முழத்துக்கு முழம் பீஜே என்கிற போலிச் சாமியாரை வணங்குகின்ற அதிரை அடிமைகளை தட்டிவைப்போர் யாருமின்றி தறுதலைத்தனம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுள்ளது.

கடந்த 04.03.2015 அன்று மாலை மேலத்தெருவைச் சேர்ந்த ஆமினம்மாள் அவர்கள் வஃபாத்தானார்கள் அவர்களுடைய ஜனாஸா அடுத்த நாள் 05.03.2015 காலையில் அடக்கம் செய்யப்பட்டதும் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் அதிரை மேலத்தெரு முழுமைக்கும் நேரகாலம் பாராமல் சேவை செய்த இந்த முஸ்லீம் பெண்மணியின் ஜனாஸாவை இஸ்லாமியர்கள் புடைசூழ நின்று ஜனாஸா தொழுகை நடத்தி அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டு பிரார்த்தித்து அடக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும் மாறாக அதிரை பீஜே அடிமைகளுக்கு மதவெறி தலைக்கேற ஜனாஸாவை தெருவில் வைத்து பீஜேயானிகள் சுமார் 10, 15 பேர் மட்டும் கலந்து கொண்டு ஜனாஸா தொழுகை நடத்திவிட்டு ஜூம்ஆ பள்ளியில் முஸ்லீம்களின் மையவாடியில் கொண்டு போய் அடக்கம் செய்திருக்கின்றார்கள், விஷயம் இத்துடன் முடிந்து விடவில்லை கிறுக்குத்தனத்தின் உச்சத்தில் பீஜேயானிகள் ஆடுவதால் கீழ்க்காணும் கேள்விகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் ஜூம்ஆ பள்ளி முஹல்லாவாசிகள் முன்வைக்கின்றோம்.

குறிப்பு: மறைந்த ஆமினம்மாள் அவர்கள் மேல் நமக்கு எந்த காழ்ப்புணர்வும் இல்லை மாறாக அளப்பெரிய மதிப்பே உள்ளது என்பதை முதலிலேயே தெளிவுபடுத்தி விட்டு கேள்விகளுக்குள் செல்கின்றோம்.

1.    ஜூம்ஆ பள்ளியையும் அதிரையின் ஏனைய அல்லாஹ்வின் இல்லங்களையும் பள்ளிவாசல்களாகவே ஏற்றுக்கொள்ளாத பீஜேயானிகளுக்கென்று அதிரையில் தனி வணக்கஸ்தலம் உள்ளது அங்கே கொண்டு போய் ஜனாஸா தொழுகை வைப்பதற்கும், அங்கேயே அடக்குவதற்கும் அல்லது வீட்டின் பின்புறம் அடக்கிக் கொள்வதற்கும் என்ன தடை? ஜனாஸா தொழுகை நடத்தினால் அவர்களின் வணக்கஸ்தலத்திற்கு தீட்டுப்பட்டுவிடுமா?

2.    பீஜேயானிகள் பார்வையில் ஜூம்ஆ பள்ளியும் அதிரையின் அனைத்து பள்ளிவாசல்களும் சூனியத்தை நம்பும் முஷ்ரிக்குகள் / காஃபிர்களின் பள்ளிவாசல்கள் அதனால் இந்தப்பள்ளிகளில் 5 வேளையோ, ஜூம்ஆ தொழுகையோ தொழவும் மாட்டார்கள், இப்போது ஜனாஸா தொழுகையையும் தானாக நிறுத்திக் கொண்டு விட்டார்கள். ஜனாஸாவை அடக்குவதற்கு மட்டும் குத்பா பள்ளி மற்றும் இதர பள்ளிவாசல்களின் மையவாடிகள் மட்டும் கூடுமா?

3.    ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்வதற்காக ஜூம்ஆ பள்ளியில் வந்து காத்திருந்த மக்களை முட்டாளாக்கிவிட்டு, முஹல்லாவாசிகள் ஜனாஸா தொழுகையில் ஈடுபட்டால் அல்லது பிரார்த்தனை செய்தால் தீட்டுப்பட்டுவிடும் என திருட்டுத்தனமாக, பொது முன்னறிவிப்பின்றி தெருவில் தொழுவித்தவர்கள் முஹல்லாவாசிகளின் அடக்கத்தலத்தில் ஜனாஸாவை அடக்க வெட்கமாக இல்லையா?

4.    குத்பா பள்ளியை பொருத்தவரை இதற்கு முன் பீஜேயானிகள் விரும்புகின்ற படி ஜனாஸா தொழுகை நடத்தவும், அடக்கம் செய்யவும் பெருந்தன்மையுடன் அனுமதி தரப்பட்டுள்ள பள்ளி தான் அப்படி இருக்கையில் பள்ளியை புறக்கணித்த காரணம் என்ன? அல்லாஹ்வின் பள்ளி திடீரென தீண்டத்தகாதது ஆனதன் காரணமென்ன?

5.    ஆடு பகை குட்டி உறவு என்கிற கதை மாதிரி பள்ளிவாசலும் முஹல்லாவாசிகளும் பகை மையவாடி மட்டும் உறவா? இது என்னங்கடா லாஜிக்?

6.    ஜூம்ஆ பள்ளியில் எந்தவித பிரச்சனைகளுமின்றி இதற்கு முன் சகோதரர் ரெஜாக் அவர்களும், சமீபத்தில் பரீதா அம்மாள் அவர்களுக்காக சகோதரர் பக்கீர் முகைதீன் அவர்களும் இன்னும் பலரும் தொடர்ந்து நபிவழி அடிப்படையில் ஜனாஸா தொழுகை நடத்தியர்கள் தானே? இப்போது எது தடுத்தது?

7.    மதுரையில் பெண் சம்பந்தமான விவகாரத்தில் சிக்கி தற்போது அதிரையில் அதனை மறைத்து வாழ்ந்து கொண்டுள்ள மன்மத குஞ்சை முஸ்லீம்களின் ஜனாஸாக்களிலும் இதர நிகழ்ச்சிகளிலும் அவரையும் ஓரு மவ்லவியாக முன்னிலைப் படுத்தப்படுவதன் மர்மம் என்ன? மதரஸாவுக்கே ஒழுங்காக போகாதவன் ஆலிம் என்றால் முழுமையாக மார்க்கத்தை கற்றுத் தோந்தவர்களை என்ன பெயர் சொல்லி அழைப்பது?

8.    மேலத்தெரு குத்பா பள்ளி நிர்வாகத்திற்கும், முழுமையாக குர்ஆன் ஹதீஸை பின்பற்றுகின்ற முஸ்லீம்களுக்கும் இடையே தீர்த்துக் கொள்ள முடிகின்ற சில மஸாயில்கள், பித்அத் பிரச்சனைகள் பல இருந்தாலும் குர்ஆனையும் ஸஹீஹான அனைத்து ஹதீஸ்களையும் ஏற்றுக் கொண்ட, இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுகின்றவர்களின் பள்ளிவாசலாகும். இந்தப்பள்ளியில் குர்ஆன் தமிழாக்கத்தை திரித்தும், நூற்றுக்கணக்கில் ஸஹீஹான ஹதீஸ்களை மனமுரண்டாக மறுத்தும் வருகின்ற பீஜே குஞ்சுகள் இந்தப் பள்ளியின் மையவாடியை சொந்தம் கொண்டாட நிர்வாகமும், முஹல்லாவாசிகளும் அனுமதிக்கலாமா?

தொழுகையில் தொப்பி போடனும், 4 மத்ஹபை பின்பற்ற வேண்டும், விரலை அசைக்கக்கூடாது என்றெல்லாம் மார்க்கத்திற்கு எதிராக தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கும் ஜூம்ஆ பள்ளி நிர்வாகம் பீஜேயானி மதத்தினரின் மேற்படி விஷயத்தில் எங்கே சென்றது, என்ன செய்து கொண்டுள்ளது என்று தெரியவில்லை!

மேலத்தெரு மற்றும் கீழத்தெரு ஜமாஅத்தினரால் இணைந்து நிர்வகிக்கப்படும் ஜூம்ஆ பள்ளி நிர்வாகம் உறக்கம் களைந்து எழுந்து ஜூம்ஆ பள்ளியின் கண்ணியம் காக்க முன்வருமா? என பொறுத்திருந்து பார்ப்போம்.

இன்னும் யூதர்களைப் போன்ற இந்த தனி மதப்பிரிவினரை ஒரு ஜமாஅத் என்றும் தனி அமைப்பு என்றும் நம்பும் அப்பாவி இஸ்லாமிய சகோதரர்களுக்கு இந்த ஹதீஸை சமர்பிக்கின்றோம்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தினர் வருவார்கள்: அவர்கள் குறைந்தவயது கொண்ட இளைஞர்களாயிருப்பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாயிருப்பார்கள். பூமியிலேயே மிகச் சிறந்த சொல்லை (குர்ஆன் வசனங்களை) எடுத்துச் சொல்வார்கள். அவர்கள், வேட்டைப் பிராணியி(ன் உடலி)லிருந்து (வேடன எய்த) அம்பு (அதன் உடலுக்குள் பாய்ந்து மறுபுறமாக) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போன்று இஸ்லாத்திலிருந்து வெளியேறிச் சென்றுவிடுவார்கள். அவர்களின் இறைநம்பிக்கை(யும் மார்க்க விசுவாசமும்) அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டி (இதயம் வரை) செல்லாது. எனவே, அவர்களை நீங்கள் எங்கு எதிர்கொண்டாலும் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அவர்களை ஒழிப்பது, அவர்களைக் கொன்றவர்களுக்கு மறுமை நாளில் நற்பலனாக அமையும்' என்று கூறினார்கள் என அலீ (ரலி) அறிவித்தார்.  
Sahih Al Buhari : 5057 Volume : 5 Book : 66


2 comments:

  1. அடுத்தவங்க சரியான மவ்லவியா பட்டம்பெற்றவர்களா மன்மத குஞ்சுகளா என்று போடறதுக்கு முன்னாடி நீங்க எடுத்த வச்சி ஹதீசுக்கு சனத ஒழுங்கா பாருங்க. லயிபான ஹதீஸ் போட்டுட்டு ஏன்னா ஆட்டம்.

    ஆரம்ப நாள் முதல் இறைச்சதின் அடிபடையில் கட்டப்பட்ட பள்ளி தான் அல்லாஹ்வை வணங்க தகுதியான ஆலயம் 9:107,108 வசனங்கள் பார்க்கவும் . மதுஹப்வாதிகள் அல்லாஹ் கூறும் தூய்மையை விரும்பும் ஆண்கள் அல்ல .

    எனவே தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் செய்தது சரியே ! அதிராம்பட்டின தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களுக்கு அல்லாஹ் அருள் புரிய துவா செய்கிறேன் !

    ReplyDelete
  2. சகோதரர் அபூபக்கர் அவர்களே, இறையச்சமில்லாத மத்ஹபுவாதிகளின் மையவாடி மட்டும் எதற்கு என்பது தானே எங்கள் கேள்வி.

    ReplyDelete