உயிருடன் இருக்கும் போது ஜூம்ஆ பள்ளியை ஷிர்க்கின் கோட்டையாக வருணித்து அங்கே தொழ மறுக்கும் பீஜேயானிகள் மவுத்தான பிறகு மட்டும் ஷிர்க்கின் கோட்டைக்குள் போக நினைப்பது ஏன்???
இது தான் பீஜேயானிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் அல்லாஹ்வின் இல்லங்களைப் பற்றியும் உங்களைப் பற்றியும் கொண்டிருக்கும் நம்பிக்கை ஆனால் ஷிர்க் வைக்கும் பள்ளியின் கபரஸ்தானில் மட்டும் இடம் வேண்டும்! சூப்பர் பகுத்தறிவு!
ஆனால், இவர்கள் தங்களுடைய வார்த்தையில் உண்மையாளர்களா? இவர்களுடைய வணக்கஸ்தலம் மட்டும் இணை வைப்பிற்கு அப்பாற்பட்டதா? என்பதை அவர்களின் நடைமுறைகளோடு சற்று உரசிப் பாருங்கள்.
அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை - அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன். 9:31
மேற்காணும் வசனத்தின்படி அங்கே, முழுக்க முழுக்க பீஜே என்பவரே மறைமுகமாக வணங்கப்படுகிறார். அங்கே அவருடைய (முஹ்தஸ்ஸிலா) பகுத்தறிவு வாதங்களுக்கு எதிராக கேள்வி கேட்டால் தூக்கியெறியப்படுவீர் மாறாக அடிமைகள் மட்டுமே அந்த மதத்தில் நீடிக்க முடியும், அவர் இஷ்டத்திற்கு தமிழ்ப்படுத்திய குர்ஆன் மட்டுமே அங்கு அனுமதிக்கப்படும், அவர் ஒப்புக் கொண்ட ஹதீஸ்கள் மட்டுமே அங்கே அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்படும், அவர் தூக்கியெறிந்த அனைத்து ஸஹீஹான ஹதீஸ்களும் அங்கும் தூக்கியெறிப்படும், அவர் மண்ணடியிலிருந்து சொல்லும் நாளில் தான் பிறை மற்றும் பெருநாள், அவர் எழுதிய மற்றும் அவர் அங்கீகரித்த புத்தகங்கள் மட்டும் தான் அனுமதிக்கப்படும், அவருடைய கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டுமே அங்கே ஜூம்ஆ உரை நிகழ்த்த முடியும் மற்றும் தொழுவிக்க முடியும் மாறாக ஷிர்க் வைக்கும் இமாமின் பின்னால் தொழ மாட்டோம் என்பதெல்லாம் பித்தலாட்டம்.
உதாரணத்திற்கு, மேலத்தெரு அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பள்ளிவாசலின் இமாம் மவ்லவி. அப்துல் மஜீத் அவர்களை பற்றி நாம் அறிந்துள்ளவரை அவர் ஷிர்க் வைப்பவர் அல்ல, மல்லூது ஹத்தம் பாத்திஹா ஓதுபவரல்ல, கூடு கந்துரியை ஆதரிப்பவருமல்ல, மேலும் ஹராமான முறையில் சம்பாதிப்பவருமல்ல. இந்த மவ்லவி அப்துல் மஜீத் அவர்களை அங்கே தொழ வைக்கவும், ஜூம்ஆ நிகழ்த்தவும் அனுமதிக்கச் சொல்லுங்கள் பார்ப்போம். ஒரு காலத்திலும் பீஜே என்ற வழிகேடரின் கொள்கையை ஏற்றுக் கொள்ளாதவர்களை, உறுப்பினர் கார்டு வாங்காதவர்களை முஸ்லீமாக கூட ஏற்க மாட்டார்கள். (விதிவிலக்காக பேரணி, மாநாடு, பொதுக்கூட்ட சமயத்தில் மட்டும் அவர்களால் நீங்கள் தற்காலிக முஸ்லீமாக கருதப்படுவீர்கள்).
அங்கே நடக்கும் ஜூம்ஆ மற்றும் வேறு பல பயான் நிகழ்ச்சிகளில் வழமையாக நம்ம ஜமாஅத், நம்ம ஜமாஅத் என சுயதம்பட்டம் அடித்து பெருமையாக பேசுவதை கேட்டிருப்பீர்கள். இந்த 'நம்ம ஜமாஅத்' என்ற சொல்லுக்குப் பின் ஒழிந்திருக்கும் உருவம் பீஜே என்ற வழிகேடர் என்பதை கண்டிப்பாக அறிவாளிகள் உணர்ந்திருப்பீர்கள், அவரை மறைமுகமாக புகழ்வதில் அப்படியொரு பக்தி ஆனால் பள்ளிவாயில்களில் அல்லாஹ்வை தவிர மற்ற யாரையும் அழைக்கக்கூடாதென்பது அல்லாஹ்வின் கட்டளை. புகழுக்கும் புகழப்படுவதற்கும் கண்ணியமிக்க அல்லாஹ் ஒருவனே தகுதியானவன் என்பது ஒவ்வொரு முஸ்லீமும் அறிந்த ஒன்று.
நேற்றைய தினம் நாம் பீஜேயானிகள் பற்றி ஒரு பதிவிட்டிருந்தோம் அதில் விடுபட்ட சில விஷயங்களை மட்டும் ஜூம்ஆ பள்ளி முஹல்லாவாசிகளின் சிந்தனைக்காக...
1. தெருவில் நின்று ஜனாஸா தொழுகை வைப்பது தான் நபிவழி என்றால் இதற்கு முன் இறந்த பீஜேயானிகள் குடும்பத்தினருக்கு வைக்கப்பட்ட தொழுகை யாருடைய வழி?
2. இதற்கு முன் ஜூம்ஆ பள்ளியில் உறவினர்கள் ஜனாஸாவிற்கு தொழுகை நடத்திய அப்துல் ரெஜாக் காக்கா மற்றும் பக்கீர் முகைதீன் காக்கா மற்றும் பலர் என்ன வழியில் தொழுகை நடத்தினார்கள்?
3. ஜனாஸாவை தெருவில் வைத்து தொழுகை நடத்த ஆதாரம் எதிலுள்ளது?
4. சுமார் 4, 5 பெண்கள் தொழுவதற்காக நூற்றுக்கானக்கான முஹல்லா ஆண்கள் தொழ முடியாமல் செய்வது யாருடைய வழி?
5. பெண்கள் ஜனாஸா தொழுவது என்பது வலியுறுத்தப்பட்ட சுன்னத்தா?
நேற்று நமது பதிவிற்கு மறுப்பென்ற பெயரில் உப்புசப்பில்லாத ஒன்று வந்தது அதில் நாம் குறிப்பிட்ட ஹதீஸ் பலவீனமானது என்ற ஒன்றை தவிர உருப்படியாக ஒன்றுமில்லை அதேவேளை நாம் பலமாக குறிப்பிட்டிருந்த குர்அன் வசனத்தைப் பற்றி பேச்சு மூச்சை காணோம். மேலும் நம்முடைய பதிவிற்கு வலுசேர்க்கும் 'சேம் ஸைடு கோல்' பதங்கள் தான் நிறைந்திருந்தன
சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் தி.க வினர் 'ஆபாசத்தில் விஞ்சி நிற்பது ராமாயணமா? மகாபாரதமா? என்று பட்டிமன்றம் நடத்தினர். அதற்கு போட்டியாக இந்து முன்னனியினர் காமத்தில் விஞ்சியது மணியம்மையா? கன்னிமேரியா? கதீஜாவா? (நவூதுபில்லாஹ்) என போட்டி பட்டிமன்றம் நடத்தி, தி.க நிகழ்ச்சிக்கு சம்பந்தமில்லாத முஸ்லீம்களையும் கிருத்தவர்களையும் வம்பிழுத்தனர் அதேபோல் பதிவிட்ட நமக்கு சரியான பதில் தர துப்பில்லாதவர்கள் பதிவுக்கு சம்பந்தமில்லாதவர்களை எல்லாம் வம்பிழுத்துள்ளனர், பாவம் இந்த சந்து முன்னனியினர்.
'இன்ஷா அல்லாஹ் பொழுது போகாதபோது கிழிந்த முகமூடி விளக்கி காட்டப்படும்'
உமது கேள்விகள் எமது பதில்கள் :
ReplyDelete1. தெருவில் நின்று ஜனாஸா தொழுகை வைப்பது தான் நபிவழி என்றால் இதற்கு முன் இறந்த பீஜேயானிகள் குடும்பத்தினருக்கு வைக்கப்பட்ட தொழுகை யாருடைய வழி?
أَلَيْسَ اللَّـهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ
2. 2. இதற்கு முன் ஜூம்ஆ பள்ளியில் உறவினர்கள் ஜனாஸாவிற்கு தொழுகை நடத்திய அப்துல் ரெஜாக் காக்கா மற்றும் பக்கீர் முகைதீன் காக்கா மற்றும் பலர் என்ன வழியில் தொழுகை நடத்தினார்கள்?
முதல் கேள்விக்கான பதிலே இதற்கும்
3. ஜனாஸாவை தெருவில் வைத்து தொழுகை நடத்த ஆதாரம் எதிலுள்ளது?
வசதி இல்லாத நேரத்தில் நிர்பந்தத்தில் தெருவில் தோழா பிரச்சனை இல்லை . அல்லாஹ் அனுமதி அளிக்காத குப்ரை கொண்ட பள்ளிகளில் தொழுவதை விட தெருவில் தொழுவது மேலானது .
لَا تَقُمْ فِيهِ أَبَدًا ۚ لَّمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَىٰ مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَن تَقُومَ فِيهِ ۚ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَن يَتَطَهَّرُوا ۚ وَاللَّـهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ
ஆரம்ப நாள் முதல் இறை அச்சத்தின் அடிபடையில் கட்டப்பட்ட பள்ளி தான் அல்லாஹ்வின் பள்ளி என்று அல்லாஹ் கூறும்போது எப்படி குப்ரில் இருக்கும் பள்ளியில் தொழுவது ?
4. 4. சுமார் 4, 5 பெண்கள் தொழுவதற்காக நூற்றுக்கானக்கான முஹல்லா ஆண்கள் தொழ முடியாமல் செய்வது யாருடைய வழி?
கொள்கை வாதிகளுடைய மதிப்பு தெரியாதவர்கள் தான் இவ்வாறு கிறுக்குவார்கள் . மார்க்கத்தை சரியான முறையில் பின்பற்ற இனியாவுது முயற்சி செய்யுங்கள் .
அதிகமான மக்கள் என்பதை விட ஷிர்க் இல்லாதவர்கள் தான் பிராத்தனை செய்ய தகுதியானவர்கள் .
5. பெண்கள் ஜனாஸா தொழுவது என்பது வலியுறுத்தப்பட்ட சுன்னத்தா?
வழியுருதபட்டதா என்று பார்ப்பதை விட பெண்கள் தொழ தடையா ?
இப்படி ஒவ்வொரு சுன்னத்தையும் அலட்சியம் செய்ததால் தான் இன்று நீங்கள் தவ்ஹீதை விட்டு சந்தி சிரிக்கிறீர்கள் .
உறுப்பினர் அல்லாத பலர் இமாம்களாக இருந்துள்ளனர் பல ஊர் மற்காஸ்களில் அதில் எனது ஊர் பரங்கிபேட்டை சேர்ந்தே பொருந்தும். அதனால் அவதூறுகளை தூர்வாரி வீச வேண்டாம் .
நானே உறுப்பினர் அல்லாத போது பிறை போன்ற விடயங்களில் ஹிஜ்ரா கணக்கை பின்பற்றிய பொழுது கூட தவ்ஹீத் ஜமாத்தினர் என்னை இமாமாக ஏற்று கொண்டும் தொழுதிருக்கிறார்கள் .
அதேப்போல் தவ்ஹீத் ஜமாத்தில் உறுப்பினர் அட்டை இருந்தால் தான் தவ்ஹீத்வாதி என்று நாம் யாரையும் கூறவில்லை . தவ்ஹீத் கொள்கையில் இறந்த உறுப்பினர் அல்லாத பலருக்கும் ஜனாசா தொழுகை நடத்தி இருக்கிறோம் .
உங்களை போன்ற குப்ரை ஈமான் கொள்பவர்களுக்கு கண்டிப்பாக நாம் ஜனாசா தொழ வைக்க மாட்டோம்
பீ ஜே vai தக்லீத் செய்பவர்களுக்கும் கேடு உண்டாகட்டும் , பீ ஜே தவ்ஹிது ஜமாஅத் மீது அவதூறு பரப்பும் அதிரை தாருல் குப்ர் மீதும் கேடு உண்டாகட்டும் !
சகோதரர் அபுபக்கர் அவர்களே!
ReplyDeleteஉங்களால் இயன்றளவு பதில் சொல்ல முயற்சிக்கின்றீர்கள் சந்தோஷம் ஆனால் இருபதிவுகளின் மையக் கருத்தான ஷிர்க்வாதிகளின் மையவாடி குறித்து மவுனித்து விடுகிறீர்களே, அது ஏன்?