உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, February 17, 2012

இறைவனின் மன்னிப்பு வேண்டுமா?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

கண்ணியத்திற்குரிய சகோதரர்களே!     அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

இன்று நம்மிடையே எங்கு பார்த்தாலும் பகைமை உணர்வு, மோதல் போக்கு, பழிவாங்கும் சிந்தனை, பிறர் குறையை கண்டறிந்து விளம்பரப் படுத்தும் இழிசெயல், நீயா! நானா! என்ற ஆணவப் போக்கு, என்னைப் பேசினாயா! என்னைத் திட்டினாயா! என்னை அடித்தாயா! உன்னை விடமாட்டேன் பார் என்கிற அதிகாரப் பேச்சு இவை அனைத்தும் நமது உள்ளத்தில் அதிகரித்ததால், மனிதனின் மானம், மரியாதை, கண்ணியம் அனைத்தும் சந்தையில் விலைபேசப்படுகின்றன. இந்த இழிசெயல் தொடர்ந்தால் மனித சமூகத்தில் சகோதரத்துவமும், ஒற்றுமையும் கேள்விக் குறியாகிவிடும். பாதிக்கப்பட்டவன் திரும்ப எதிர்ப்பை பதிவு செய்வது மனித உரிமை என்றாலும், இஸ்லாம் அதைவிட உயர்ந்த பண்புகளை நமக்கு போதிக்கின்றது என்பதை நினைவுபடுத்துவதுதான் இந்த வார பிரசுரத்தின் செய்தியாகும்.

நாமும் மனிதர்கள், நம்மிடையேயும் நிறைய குறைகள் உண்டு. தவறுகளுக்கு அப்பாற்பட்டவன் அல்லாஹ் மட்டுமே என்கிற உணர்வு நமக்கு எப்பொழுதும் மேலோங்கி இருந்தால் மேற்கண்ட இந்த தீயகுணங்கள் நமக்கு வருமா? சிந்திப்பீர்!
நம்மை சுற்றி உள்ளவர்களின் தவறுகளை அலட்சியம் செய்து, மன்னித்து பழகுவது அல்லாஹ் விரும்பும் நல்ல பண்புகள் என்று நமக்கு தெரியாதா? நமக்கு பிறர் தீங்கிழைத்தால் நாமும் பதிலுக்கு தீங்கிழைத்துத்தான் ஆகவேண்டுமா? இல்லையே! ஏன் நாம் சிந்திக்க மறுக்கின்றோம். ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்குவது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதனை நாம் ஏன் மறந்துவிட்டோம். அல்லாஹ்வும், அவனது தூதரும் மற்றும் நபித்தோழர்களின் வாழ்வும் நமக்கு போதிக்கும் வழிகள் தான் என்ன?
 
அல்லாஹ்வின் கட்டளைகள் தரும் வழிமுறை:
1. (நபியே) மென்மையையும், மன்னிக்கும் தன்மையையும் மேற்கொள்வீராக! நன்மையை ஏவுவீராக! அறிவீனர்களை அலட்சியம் செய்வீராக. (அல் அஃராப் 7:199)
2. ...கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள் நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான். (ஆலு இம்ரான் 3:134)
3. நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார். (ஃபுஸ்ஸிலத் 41:34)
மனித உரிமையை கூறும் அல்லாஹ் கோபத்தை கட்டுப்படுத்தி, மன்னிக்கும் தன்மையும், தீயதை செய்தவருக்கு நன்மையை செய் என்றும் கூறுகிறான்.

நபி(ஸல்) அவர்களின் போதனை கூறும் வழிமுறை:
1. மக்களை தனது கோபத்தால் வீழ்த்துபவன் வீரனல்ல. மாறாக ஒருவர் தனக்கு ஏற்படும் கோபத்தை கட்டுப்படுத்தி ஆள்பவனே வீரன் என நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். (நூல்: புஹாரி).
2. மூன்று விஷயங்களை நான் சத்தியமிட்டு கூறுகிறேன் அவை வருமாறு:
).   தர்மம் செய்வதால் செல்வம் குறையாது, ). பிறரை மன்னிப்பதால் அல்லாஹ் உங்களுக்கு கண்ணியம் அளிப்பான், ). யாசகத்தின் வாசலை திறந்தால் ஏழ்மையின் வாசலை அல்லாஹ் திறப்பான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். நூல்: திர்மிதி, ஹ்மது
3. அல்லாஹ்வுக்காக ஒருவர் ஒருபடி கீழ் இறங்கினால், அவனை அல்லாஹ் ஒருபடி மேல் உயர்த்துவான் என நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். நூல்: இப்னுமாஜா.

தன்னை வேதனை செய்தவர்களை, தன்னுடைய சிறிய தந்தையை கொன்றவர்களை, தன்னுடைய தோழர்களின் சொத்துகளை சூறையாடி நாடு கடத்தியவர்களையெல்லாம் மன்னித்த நபி(ஸல்) அவர்கள் கூறிய மேற்கண்ட நபிமொழிகள் நமக்கு எதனை உணர்த்துகின்றது.
நபித்தோழர்களின் வாழ்வு தரும் படிப்பினைகள்:
1. உஹதுப் போரில் தனது தந்தையை தன் கண்னெதிரே அறியாமல் கொன்ற நாயகத்தோழரை மன்னித்தார் ஹுதைபா(ரலி) அவர்கள். (நூல்: புஹாரி).
2. நபித்தோழர்களின் மனது நோகுமாறு பேசியவுடன் திருந்தி ஓடிப்போய் மன்னிப்பு கேட்ட அபூபக்கர் ரலி) அவர்கள். (நூல்: முஸ்லிம்)
3. உமர்(ரலி) மற்றும் அபூபக்கர் (ரலி) ஆகியோருக்கிடையில் ஏற்பட்ட மனக் கசப்பை தீர்க்க நபி(ஸல்) அவர்கள் எடுத்த முயற்சி. (நூல்: முஸ்லிம்)
இந்த செய்திகள் அனைத்தும் எதனை நமக்கு உணர்த்துகிறது தோழர்களே! சிந்தித்தால்..... பகைமை உணர்வு, மோதல் போக்கு இவை அனைத்தும் நல்ல பண்புகள் அல்ல. மன்னிக்கும் தன்மை அல்லாஹ்வுக்கு பிடித்தமானது என்பதனை நாம் உணர்வோம்.
v  சகோதரத்துவத்தோடு நாம் வாழப் பழக வேண்டுமா?
v  மனிதர்களும், அல்லாஹ்வும் நம்மை நேசிக்க வேண்டுமா?
v  அல்லாஹ் நம்மை மன்னிக்க வேண்டுமா?
ü  கோபம் வரும்போது கட்டுக்குள் கொண்டு வருவோம்!
ü  பொறுமையை கடைபிடிப்போம்!
ü  உள்ளத்தில் உள்ள பகைமையை அப்புறப்படுத்துவோம்!
ü  நாமும் குறைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை அனுதினமும் நினைவில் கொள்வோம்!
ü  தமக்கு தங்கிழைத்தவர்களை மன்னித்து பழகுவோம்!

இன்ஷாஅல்லாஹ் நம்மாலும் நிச்சயம் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என சபதம் எடுப்போம். எல்லாம் வல்ல அல்லாஹ் நமது உள்ளத்தில் உள்ள குரோதங்களை அகற்றி சகோதரத்துவத்தை ஏற்படுத்துவானாக!

'உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்' என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். 'அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்' என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்: நிகரற்ற அன்புடையோன். (அந்நூர் 24:22)

அடியார்களை மன்னிப்போம்!                           அல்லாஹ்வின் மன்னிப்பை பெறுவோம்!!

தவ்ஹீத் இல்லம் தவா குழு துபை

No comments:

Post a Comment