உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Monday, February 9, 2015

ததஜ தம்பிகள் திருந்திவிட்டார்களா? உண்மையாக இருக்கட்டும், வரவேற்கிறோம்.

சென்ற வாரம் அதிரை தாருத் தவ்ஹீத் இணையதளத்தில் 2 ஆக்கங்கள் வெளியாகியிருந்தன, படிக்காதவர்கள் கீழ்வரும் சுட்டியில் சென்று பார்த்துக் கொள்ளவும்.

ஒன்று, டாஸ்மாக்கிலிருந்து நேரடியாக மேடையேறிவிட்டாரோ என எண்ணத்தோன்றும் வகையில் பேசும் ஒருவருக்கு எச்சரிக்கையும்,



இன்னொன்று, அதிரையில் கூலிக்கு மார்க்கத்தை கூவும் ஒருவரின் மீதுள்ள பெண் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரித்து அறிந்து பெண்களை பெற்றவர்கள் (ததஜ குடும்பத்தினருக்கும் சேர்த்தே பொதுவாக) அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டி கொண்டும் எழுதப்பட்டிருந்தன.



இதில் சம்பந்தப்பட்டுள்ள அஷ்ரப்தீன் என்பவரும், இது தொடர்பான விஷயங்களுடன் சம்பந்தப்பட்டுள்ள பீஜே என்பவரும் வெளிப்படையாக தங்களுடைய கருத்தை ஆதரித்தோ எதிர்த்தோ தெரிவிக்கவில்லை மாறாக 'மௌனமே சம்மதம்' என்ற அடிப்படையில் அவர்கள் இருவரும் மேற்படி குற்றச்சாட்டுகளை ஒத்துக்கொண்டு அமைதியாக இருப்பதாவே கருத முடிகிறது ஆனால் சமீபத்திய அப்பாஸ் அலி விலகல், அன்வர் தப்லீகி விசா பிரச்சனை வரை துள்ளிய கள்ள ஐடிக்காரர்கள் உட்பட ததஜ தம்பிமார்கள் எவருமே எத்தகைய கருத்தையும் தெரிவிக்காமல் மிக மிக அமைதியாக உள்ளார்கள். 

ஒருவேளை அஷ்ரப்தீன், பீஜேயின் மௌன சம்மதத்தை ஏற்றுக் கொண்டு விட்டார்களா அல்லது அஷ்ரப்தீன் பீஜேயுடைய யோக்கியதைகளின் ஆதாரங்கள் அம்பலத்துக்கு வந்துவிடும் என்ற முன் எச்சரிக்கையா அல்லது இனி யாரையும் சந்தேகப்படக்கூடாது, விமர்சிக்கக்கூடாது என அல்லாஹ்வுக்கு பயந்து திருந்திவிட்டார்களா என தெரியவில்லை, அல்லாஹ் அஃலம்.

காரணம் எதுவாக இருந்தாலும் நாம் ததஜ தம்பிகள் மீது நல்லெண்ணம் கொள்வோம். அதாவது இனி தலைமையே சொன்னால் கூட இனி யாருடைய மானத்தோடும் விளையாட மாட்டார்கள் என நம்புவோம். இதுவரை தலைமையை நம்பி பரப்பியதற்காக சம்பந்தப்பட்ட சகோதரர்களிடம் ரகசியமாகவாவது மன்னிப்பு கேட்டு மறுமையில் வெற்றியடைந்து கொள்ளட்டும்.

ததஜ தலைமைக்கு பொய் என்றால் என்னவென்றே தெரியாது, அவர்கள் மட்டுமே உண்மையை பேச உலகத்திற்கு வந்தவர்கள் என்ற மாயையை சுக்குநூறாக்கிய ததஜ தம்பிமார்களை வரவேற்கிறோம். அஷ்ரப்தீன் விஷயத்தில் அமைதி காத்ததுபோல் இனி ததஜ தலைமையே சொன்னாலும் சரி எதையும் ஆராயாமல் நம்ப மாட்டோம், பரப்ப மாட்டோம், தலைமை சொன்னது என்பதற்காக அடுத்தவர்களின் மானத்தோடு விளையாட மாட்டோம் என அல்லாஹ்விற்கு மட்டும் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாக மாற அன்புடன் அழைக்கிறோம். 

No comments:

Post a Comment