அல்லாஹ்வுடைய அருளால் துபை அல்மனார் சென்டர் தமிழ் தஃவா பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு மார்க்க விளக்க நிகழ்ச்சிகளில் இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள மவ்லவி மன்சூர் மதனி அவர்கள் கலந்து கொண்டு மார்க்க விளக்கவுரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.
நேற்று 06.02.2015 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்குப் பின் துபை, அல்கோஸ் பகுதியில் அமைந்துள்ள அல்மனார் குர்ஆன் ஸ்டடி சென்டர் அரங்கில், 'நபி (ஸல்) அவர்களின் 3 இரவுகள்' என்ற தலைப்பில் படிப்பினைமிக்க 3 இரவுகளில் நடந்த சம்பவங்களை கூறி உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
முன்னதாக, 05.02.2015 வியாழக்கிழமை இஷாவுக்குப்பின் துபை, அல் பராஹா பகுதியில் அமைந்துள்ள அல் மனார் சென்டரில் 'ஆயத்தல் குர்ஸி' குறித்து பயன்மிக்கதோர் தர்பியா நிகழ்ச்சியை வழங்கினார்கள்.
மேலும் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை காலையில் மீண்டும் அல் பராஹா அல் மனார் சென்டரில் 'முஸ்லீம் என்றால் யார்?' என்ற பொருளில் தர்பியா வகுப்பை வழங்கினார்கள்.
மதினாப்பா பேரன்அபூ அப்துல் ரஹ்மான்
No comments:
Post a Comment