உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Monday, January 26, 2015

துபை MTCT கல்வி கருத்தரங்கில் CMN.சலீம் அவர்களின் சிறப்புரை சுருக்கம்



அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

24/01/2015
சனி அன்று மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளையின் துபை கிளை சார்பாக நடத்தப்பட்ட கல்வி கருத்தரங்க நிகழ்ச்சியில் சமூக நீதி அறக்கட்டளையின் நிறுவனரும் தமிழ்நாடு முஸ்லீம் கல்வி இயக்கத்தின் தலைவருமாகிய CMN சலீம் அவர்கள் வழங்கிய உரையின் சுருக்கம்:-


சமூக மாற்றம் என்பது சாதாரணமானது அல்ல, அது தானாக நிகழும் நிகழ்வும் அல்ல. பொருளாதாரத்தைப் பெருக்கி சொகுசாக வாழ்வதே இன்றைய வாழ்வின் இலக்குஎன்ற சிந்தனை புகுத்தப்பட்டுள்ள முதலாளித்துவ வாழ்க்கைச் சூழலில், தெளிவான மேற்கத்திய சூழ்ச்சியும் அதில் அகப்பட்டுக் கிடக்கும் நமது அரசின் கொள்கை முடிவுகளும் சேர்ந்து ஒரு சாதார முஸ்லீமை எவ்வாறு பாதிக்கின்றன. நமது சமூக அமைப்புக்களின் பங்களிப்பு அம்மக்களை நோக்கி எவ்வாறு இருக்க வேண்டும்.

மேலும் இன்றைய முஸ்லிம் சமூகத்தில் அறிவு ஜீவிகள் என்று அறியப்பட்டவர்களுக்கும் முஸ்லிம் பொது மக்களுக்கும் மத்தியில் ஒரு மிகப் பெரிய தொடர்பு இடைவெளி நிலவுகிறது.

கல்வியாளர்கள் தங்களால் இயன்றதை, தங்களுக்குச் சரி என்று பட்டதை இது தான் சரியான பாதை என்று சமூக மக்களிடம் திணிக்கின்றனர். அப்படிப்பட்ட கல்விச் சேவையை சிறந்த செயல்முறையாகச் செய்து தங்கள் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கின்றனர்.

ஆனால் முஸ்லிம்களின் கல்வி மற்றும் அறிவுசார் தேவைகள், எதிர்பார்ப்புகள் வேறுவிதமாக இருக்கிறது. இஸ்லாமிய (ஷரீஅத்) அடிப்படையிலான கல்வி, சமூக, பொருளாதாரம் போன்ற வாழ்வியல் தேவைக்கு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமோ அவை அத்துணையையும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் இன்றைய கல்வியாளர்கள் மற்றும் செல்வந்தர்கள் மீது மட்டும் சுமத்தப்பட்டுள்ளது என்று நினைக்காமல் நமது சமூக  அமைப்பு & ஜமாஅத் மூலங்கள் வாயிலாகவும் அதனை எவ்வாறு கொண்டு செல்வது போன்ற ஆலோசணைகளையும் வழங்கி இந்த பொறுப்புகளைச் சரியாகப் புரிந்து கொள்ளாவிட்டால் - தங்களுக்கான கடமைகளைச் சரியாக நிறைவேற்றாவிட்டால் - முஸ்லிம் சமுதாயத்தில் மாற்றம் வருதற்கு வாய்ப்பில்லை என தனது விளக்கவுரையின் மூலம் தெளிவுபடுத்தினார்.


மேலும் வியாபார சமூகமாயிருந்த முஸ்லீம் சமூகம் எங்கே வீழத்தொடங்கியது நவீன உலகின் மாறுதல்களை உள் வாங்கிகொண்டு இஸ்லாமிய அடிப்படையில் அதனை எவ்வாறு மீட்டெடுக்கலாம்  என மிகச்சிறந்த ஆரோக்கியமான உரையை வழங்கினார்கள்

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்

MTCT
DUBAI

No comments:

Post a Comment