உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, January 4, 2015

19 ½ புலிக்கேசியின் தம்பிகளான அதிரை ததஜவினர்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்19 ½ புலிக்கேசியின் தம்பிகளான அதிரை ததஜவினர்

இப்படி ஒரு தலைப்பிட்டு அவர்களை பற்றி எழுதவே கைகூசுகிறது ஏனெனில் அதன் சரித்திர பின்னனி கேள்வி கேட்டு வளர்ந்தவர்களை கொண்டது ஆனால் நேற்று வரை அவர்களில் ஒருவராக இருந்த ஆய்வாளர் அப்பாஸ் அலி அவர்களை பற்றியும் அவர்களின் குணநலன் பற்றியும் மிக மிக அறிந்தவர்களாக இருந்தும், தாருத் தவ்ஹீத் அமைப்பினர் அனுமதியளித்த பிறகும் சந்திக்க அல்லது ததஜ தலைமையின் உத்தரவுப்படி அப்பாஸ் அலி அவர்களை கேள்விகளால் திணறடிக்க, மார்க்க விளக்கம் பெற கேள்விகளை எழுப்ப முன்வராமல் கடித நாடகம் நடத்தி விட்டு, நிகழ்ச்சி மாலை 6.30 மணிக்கு துவங்கயிருந்த நிலையில் 5.30 மணிக்கெல்லாம் 19 ½ புலிக்கேசியின் ஏகபோக சவடால் வாரிசுகளாக தங்களை தாங்களே அறிவித்து கொண்டு ஓட்டமெடுத்தது 'இவர்கள் சுய அறிவற்ற தக்லீது கூட்டம்' என்பதை அதிரையர்கள் மற்றும் வலையுலக முஸ்லீம்கள் மத்தியில் இன்னொருமுறை வெளிச்சம் போட்டு காட்டியது.

இத்தனைக்கும் ததஜ தலைமையின் அதிகாரபூர்வ தர்கா பாதுகாவலரும் திடீர் 'ஆய்'வாளருமான 'அந்த அரைவேக்காடு' அதிரையில் பதுங்கியிருந்து கொண்டு போக்குகாட்டி பயமுறுத்தி கொண்டிருந்தது நகைச்சுவையா? அல்லது திகில் காட்சியா? என தெரியவில்லை. 

அப்பாஸ் அலியின் நிகழ்ச்சி நடப்பதற்கு ஒரு நாள் முன்பே அவரது உரையை உளறலாக வருணித்து வரிக்கு வரி இந்த கோமாளி பதில் சொல்லும் என பில்டப் வேறு, ஏனிந்த கேப்மாரித்தனம் என தெரியவில்லை.

எது எப்படியோ அல்லாஹ்வுடைய அருளால் அப்பாஸ் அலி அவர்களின் உரையும் கேள்வி பதில் நிகழ்ச்சியும் திட்டமிட்டபடி மிகச்சிறப்பாக நடந்தேறியது. பொதுமக்கள் மிக ஆர்வமுடன் முன்வந்து நேரடியாக கேள்விகள் கேட்டு தெளிவுபெற்றனர்.

கேள்விகள் கேட்காவிட்டாலும் அதிரை ததஜ சகோதரர்கள் பலர் நிகழ்ச்சியில் வெளிப்படையாக கலந்து கொண்டனர். மார்க்கத்தை அதன் தூய வடிவில் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக ததஜ அமைப்பின் முடிவையும் மீறி கலந்து கொண்ட அத்தகைய சகோதரர்களுக்கு அல்லாஹ் மென்மேலும் நல்லருள் புரிந்து அசத்தியத்திலிருந்து விலகி சத்தியத்தின் பக்கம் ஒன்று சேர்ந்திட செய்வானாக என பிரார்த்தித்து நிறைவு செய்கின்றோம்.

{குறிப்பு:  நிகழ்ச்சியில் பகிரங்கமாக கலந்து கொண்ட அந்த சில ததஜ சகோதரர்களின் மீது மேற்படி விமர்சனம் பொருந்தாது.}

முன்னதாக அதிரை தாருத் தவ்ஹீதின் அமீர் அஹமது காக்கா அவர்கள் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு தலைமை ஏற்க ஜமீல் காக்கா அவர்கள் அறிமுகவுரையாற்ற மவ்லவி அப்பாஸ் அலி அவர்கள் 'முஃமீன்களின் பார்வையில் சூனியம்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி தொடர்ந்து சூனியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் கூறினார்கள். நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரலை செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அதிரை தாருத் தவ்ஹீத் சகோதரர்கள் விரிவாக செய்திருந்தனர்.

19 ½ ஓர் விளக்கம்
ரசாத் கலிபா என்பவன் தனக்கென இங்கிலிஸ் குர்அன் ஒன்றை உருவாக்கி வைத்துக் கொண்டு ஹதீஸ்கள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக தள்ளுபடி செய்து உருவாக்கிய கும்பலின் பெயர் தான் 19.

பீஜே என்பவரும் தனக்கென ஒரு தமிழ் மொழிபெயர்ப்பு குர்ஆன் ஒன்றை உருவாக்கி வைத்துக் கொண்டு ஹதீஸ்களை படிப்படியாக தள்ளுபடி செய்து வருவதால் இந்த நவீன கும்பலை 19½ என அழைக்கலாம். இவர்கள் முழுமையாக ஹதீஸ்களை தள்ளுபடி செய்து முடித்தவுடன்  ½ யை எடுத்து விட்டு 19 கும்பலுடன் ஒன்று சேர்த்துவிட வேண்டியது தான்.

3 comments:

 1. முஸ்லிம் சமுதாயத்தினை பிடித்துள்ள 7 ½ நாட்டு சனியனை நீங்கள் 19 ½ என்று போட்டது தவறு

  ReplyDelete
 2. "எங்களிடம் முப்பது கேள்விகளுக்கு மேல் உள்ளன. அவை அனைத்தையும் கேட்க எங்களுக்கு 2 மணி நேரம் தாருங்கள்" என்று கேட்ட அததஜ ஆட்கள் எங்கே ஓடி ஒளிந்தார்கள்?

  அடுத்து, பத்தாம் தேதியன்று ததஜவின் 'ஒரு கோமாளி நாடகம்' அரங்கேற வேண்டியுள்ளது; இதை நினைவில் கொண்டு, அந்தக் 'கோமாளி'க்காக ஒதுக்கி வைத்துள்ளார்களோ, தெரியவில்லை..! நடு நிலையில் நின்று சிந்திப்பவர்களுக்கு நேற்றிரவு நடந்து முடிந்த நிகழ்ச்சி ஒரு eye opener ஆக இருக்கட்டும்..!

  ReplyDelete
 3. "எங்களிடம் முப்பதுக்கு மேல் கேள்விகள் உள்ளன. அவற்றை மட்டும் கேட்க எங்களுக்கு இரண்டு மணி நேரம் வேண்டும்" என்று கேட்டவர்களுக்கு, நாம் எட்டு மணி முதல் பத்து மணி வரை நேரம் ஒதுக்கியிருந்தும், ஏன் அவர்களால் கூட்டத்தின் முன்னால் வர முடியவில்லை?" என்ற மில்லியன் டாலர் கேள்வி, பொது மக்களுள் பலருக்குப் புரியவில்லை..! பலமான மீடியாவைக் கையில் வைத்துள்ள ததஜ தலைமையிலிருந்து இன்னும் வரவில்லையோ?

  ReplyDelete