அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு
அப்பாஸ் அலி விவாதத்திற்கு செய்யது இப்ராஹிம்தான் வருவார் என்று ததஜ அடம்பிடிப்பதால் மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விவாதம் இனி நடக்க வாய்ப்பில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டது. இது குறித்து இரண்டு தரப்பும் மற்றும் இரண்டு தரப்பு ஆதரவாளர்களும் விமர்சனங்கள், நியாய அநியாயங்கள் பேசிக்கொண்டிருந்தாலும், இதன் பின்னணியிலுள்ள ஒரு உண்மையை மக்கள் மத்தியில் எடுத்து வைக்கும் கடமை நமக்கு இருக்கிறது.
யாரையும் விமர்சனம் செய்ய வேண்டும் என்பதோ, இது குறித்து பேசியும் எழுதியும் மக்களை சலிப்புக்கும் வெறுப்புக்கும் உள்ளாக்குவதோ நமது நோக்கம் இல்லை. TNTJ என்ற இயக்கம் ஒரு தனி கொள்கையுடைய கட்சி என்று அறிவித்து அவர்கள் செயல்பட்டால் இவர்களைப் பற்றி நமக்கு எந்த கவலையும் இல்லை. இவர்களை பற்றி பேசவேண்டிய அவசியமும் நமக்கு இல்லை. ஆனால் அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் காட்டித்தந்த தூய வழியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஜமாஅத் உலகத்திலேயே TNTJ மட்டும்தான் என்ற ஒரு பொய்யான மாய தோற்றத்தை மக்கள் மத்தியில் உருவாக்கி, நாங்கள் மட்டும்தான் நேர் வழியில் இருக்கிறோம் மற்ற அனைவரும் வழிகேட்டில் இருக்கிறார்கள் என்று ஒரு பொய்யை திரும்ப திரும்ப உரக்கச் சொன்னதன் மூலம் மக்களை நம்ப வைக்க முயற்சி செய்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுவிட்டார்கள்.
இவர்களின் இந்த மார்க்க விரோத போக்கை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டிய காலத்தின் கட்டாயம் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. உண்மையில் TNTJ என்ற இயக்கம் குர்ஆன் மற்றும் நபி வழியில் செயல்படும் ஒரு இயக்கமா? அல்லது ஒரு தனி மனிதனின் சுய அறிவின்படியும், மனஇச்சைப்படியும் செயல்படும் ஒரு இயக்கமா? என்பதை மக்களிடத்திலே சொல்ல வேண்டிய கடமையும், பொறுப்பும் எனக்கு மட்டுமல்ல ஒவ்வொரு முஸ்லிமிற்கும் இருக்கிறது.
TNTJ விலுள்ள மற்ற மார்க்க அறிஞர்களையெல்லாம் பின்னுக்கு தள்ளி மக்களால் அங்கீகரிக்கப்படாத செய்யது இப்ராஹீமை முன்னிறுத்துவதை ஆதரித்தும் எதிர்த்தும் விமர்சனங்கள் பல கோணங்களில் வைக்கப்பட்டாலும், TNTJ வின் இந்த பிடிவாதத்தில், இந்த முடிவில் மார்க்கத்தின் வழிமுறையோ, அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் காட்டித்தந்த நடைமுறையோ எதுவும் இல்லை. பி. ஜே என்கின்ற ஒரு தனி மனிதரின் மனஇச்சை போக்கினாலும், தான் இருக்கக்கூடிய இடத்தில் தனக்கு இரண்டாவது இடத்தில் கூட இன்னொருவர் வந்துவிடக்கூடாது என்ற இறுமாப்பினாலும், தானே எல்லாம் என்ற அகம்பாவத்தினாலும் இந்த சமுதாயமும், தவ்ஹீத் பிரச்சாரமும் கண்ட ஒரு துரோக வரலாறு மீண்டும் திரும்புகிறது என்பதுதான் உண்மை.
சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் கல்யாண வீட்டில் தானே மாப்பிள்ளையாக இருக்கவேண்டும். இறப்பு வீட்டில் தானே ஜனாஸாவாக இருக்கவேண்டும் என்ற மனநிலைதான் காரணம். நாம் முன்வைக்கின்ற செய்தி நாம் கற்பனை செய்தோ யூகம் செய்தோ அவதூறு சொல்லுகிறோம் என்றோ எண்ணிவிட வேண்டாம். இந்த பதிவை போடுவதற்கு முன் நாமும் அல்லாஹ்வை அஞ்சிய நிலையில், ஏதாவது தவறுதலாக பதிந்து விட்டால் அல்லாஹ்விடம் நாளை பதில் சொல்லவேண்டியிருக்கும் என்ற அச்ச உணர்வு மேலோங்கத்தான் பதிவிடுகிறோம். நாம் எடுத்து வைக்கின்ற காரணங்களை, கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக பொதுவாழ்க்கையில் இருக்கும் பி.ஜே அவர்களுடன் ஏதாவது சந்தர்ப்பங்களில் அவருடன் இருந்தவர்களால் ஆமாம் இது உண்மைதான் என்பதை ஒப்புக்கொள்ள முடியும்.
TNTJ விலுள்ள மற்ற அனைவரையும் ஓரம்கட்டிவிட்டு இன்றைக்கு செய்யது இப்ராஹிமை பிஜே ஏன் தூக்கிப் பிடிக்கிறார் என்பதற்கான காரணம் தமிழக தவ்ஹீத் வரலாற்றை அறிந்தவர்களாலும், பிஜேயை புரிந்தவர்களாலும் விளங்கிக்கொள்ள முடியும்.
தமிழகத்தில் தவ்ஹீத் என்ற விதை போடப்பட்டு ஜாக் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டவுடன் அப்போது மற்றவர்களை விட தவ்ஹீத் சகோதரர்கள் மத்தியில் பிரபலமானவராகவும் ஒரு ஹீரோவாகவும் பார்க்கப்பட்டவர் பிஜே ஒருவர்தான். நாளடைவில் தவ்ஹீத் பிரச்சாரம் மக்கள் மத்தியில் ஓங்க ஆரம்பித்தவுடன் மற்றவர்களும் குறிப்பாக ஹாமீத் பக்ரி, எஸ்கே, ஸைபுல்லாஹ் ஹாஜா, சம்சுல் லுஹா, எம்.ஐ.சுலைமான் போன்றவர்களும் தவ்ஹீத் சகோதரர்கள் மத்தியில் பிரபலமாக ஆரம்பித்தார்கள். இவர்களுக்கும் மவுசு கூடியது. இப்படி தமிழகத்தில் தவ்ஹீத் பிரச்சாரம் மேலோங்கி ஒரு புரட்சியாக வெடித்துக்கொண்டு இருந்த நேரத்தில்தான் ஜாக் அமைப்பு உடைந்தது. இதற்கு யார் காரணம் என்பதை நடுநிலையோடு பார்க்கக்கூடிய மக்கள் அனைவருக்கும் தெரியும். பி. ஜே என்கின்ற ஒரு தனி மனிதரின் மனஇச்சை போக்கும், தான் இருக்கக்கூடிய இடத்தில் தனக்கு இரண்டாவது இடத்தில் கூட இன்னொருவர் வந்துவிடக்கூடாது என்ற இறுமாப்பும், தானே எல்லாம் என்ற அகம்பாவமும்தான் காரணம் என்பதை நாம் சொல்லவில்லை, என்ன காரணத்தை சொல்லி பிஜே அவர்கள் ஜாக் அமைப்பை உடைத்தாரோ இதுதான் உண்மை என்பதை அந்த காரணமே சொல்லும். இவர் வெளியேறுவதற்கான காரணம் இவர் யார் மீது குற்றம் சாட்டினாரோ அவர்கள் கொள்கை மாறி போய்விட்டார்களா? இணைவைப்பை ஆதரித்து பேசிவிட்டார்களா? மறைமுகமாக ஹத்தம் ஃபாத்திஹா ஓதி சம்பாதித்தார்களா? அல்லது யாருடைய செயல்பாடுகளை எதிர்த்தார்களோ அந்த சுன்னத் ஜமாத்தினருடன் கள்ள தொடர்பு வைத்திருந்தார்களா? எதுவும் இல்லை.
தனக்கு முக்கியத்துவம் குறைந்தாலோ, தனது புகழ் மங்கினாலோ உடனே அந்த இயக்கத்தை உடைத்து தனக்கான ஒரு புதிய களம் காணுவது, அல்லது அதற்கு காரணமானவர்களை சமுதாயத்தில் முக்கியத்துவம் இல்லாமல் ஒரேயடியாக ஒழித்துக்கட்ட நினைப்பது இதுதான் இவருடைய குணாதிசயம் என்பது இவருடன் நெருங்கி பழகியவர்களுக்கு நன்றாகவே தெரியும். இதற்காக இவர் கையிலெடுக்கும் நான்கு ஆயுதங்கள் ஒன்று பொருளாதார குற்றச்சாட்டு. மற்றொன்று பாலியல் குற்றச்சாட்டு. இதை நம்ப வைக்கும் சாதூர்யமான இவரின் வசிய பேச்சு. இதை செயல்படுத்துவதற்கு தனக்கு மிகவும் நம்பகமானவர்களை, விசுவாசிகளை கொச்சையாக சொல்வதென்றால் ஜால்ரா அடிப்பவர்களை களம் இறக்குவது. இதன் சமீபத்திய உதாரணம்தான் செய்யது இப்ராஹீம். அன்று முதல் இன்று வரை இது தொடர்கிறது என்பதை இவரின் செயல்பாடுகளை கவனித்து வரும் முஸ்லிம் சமுதாயம் மறுக்காது. இவரும் இவரை சார்ந்தவர்களும் இல்லை என்று மறுத்தாலும் கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக இவரது போக்கை பதிவு செய்துக்கொண்டு இருக்கும் வரலாறும் இதை மறுக்காது.
தவ்ஹீத் பிரச்சாரத்தை ஒரு புரட்சியாகஎடுத்துச் சென்று, அடி, உதைபட்டு பல தியாகங்கள் செய்து ஒற்றுமையுடன் களப்பணியாற்றிக் கொண்டிருந்த தவ்ஹீத் சகோதரர்கள் மத்தியில் நிரந்தர பிளவை உண்டாக்கி, தமிழகத்தில் தவ்ஹீத் பிரச்சாரத்தின் வீரியத்தை நீர்த்துப்போகச் செய்த இவரின் முதல் துரோகத்தை வரலாறு என்றைக்கும் மன்னிக்காது. தன்னலம் பார்க்காது களப்பணியாற்றிய தவ்ஹீத் சகோதரர்களை மற்றவர்கள் பார்த்து எள்ளி நகையாடச் செய்தவர் இவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ,
அங்கிருந்து புறப்பட்டு அடுத்ததாக சமுதாய களம் காண இறங்கினார். த.மு.மு.க. உருவாகியது. முஸ்லிம்களுக்காக உருவாக்கப்பட்ட இரண்டு லீக்குகளும் வலுவிழந்து அன்றைக்கு ஏற்பட்ட வெற்றிடத்தை பேரியக்கமாக உருவான த.மு.மு.க நிரப்ப ஆரம்பித்தது. ஒன்றுபட்டு வீரியம் கொண்டு எழுந்த சமுதாய இயக்கம்., பி. ஜே என்கின்ற ஒரு தனி மனிதரின் மனஇச்சை போக்கினாலும், தான் இருக்கக்கூடிய இடத்தில் தனக்கு இரண்டாவது இடத்தில் கூட இன்னொருவர் வந்துவிடக்கூடாது என்ற இறுமாப்பினாலும் , தானே எல்லாம் என்ற அகம்பாவத்தினாலும் த.மு.மு.க உடைந்தது. முஸ்லிம் சமுதாயத்திற்கு இவர் செய்த அடுத்த துரோகத்தை வரலாறு பதிவு செய்தது.
புரசைவாக்கம் தாக்கர் தெரு த.மு.மு.க அலுவலகத்தில் இந்த துரோகம் எப்பொழுது புகைய ஆரம்பித்தது.
அங்கு நடந்தது என்ன?
இன்ஷா அல்லாஹ் உண்மை வரலாறு தொடரும்.....
No comments:
Post a Comment