பண்டைய துபையின் வரலாற்றையும் வாழ்க்கை முறைகளை இன்றைய உலகிற்கு எடுத்து இயம்பும் ஓர் இடமாக 'ஹெரிடேஜ் வில்லேஜ்' என்கிற பரந்துபட்ட அருங்காட்சியகத் தொடர் விளங்குகிறது. இந்த செய்திகளை சேகரிப்பதற்காக சுமார் 3 முறை சென்று வந்தும் முழுமையாக சேகரிக்க முடியவில்லை இன்னும் இங்கே வர விரும்புபவர்கள் கட்டாயம் பொறுமை என்கிற ஒரு பண்பையும் சேர்த்து எடுத்து வந்தால் மட்டுமே ஒரளவாவது நிதானமாக பார்க்கலாம், வரலாற்றை கிரகிக்கலாம்.
டைவிங் வில்லேஜ், ஹெரிடேஜ் வில்லேஜ், பாரம்பரிய கட்டிடங்கள், பாலைவன பரப்பு என பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தாலும் அவற்றுள்ளும் பல உட்பிரிவுகள் உள்ளன. குறிப்பாக அல் ஜூத்தூர் ஆர்ட் சென்டர், புலவர்கள் சங்கம், ஷேக் சயீத் அல் மக்தூம் பின் தானி மாளிகை, ஜூமா மற்றும் ஓபைத் பின் தானி மாளிகை, அல் பர்தாஹ் மியூசியம் என பலவகையான வரலாற்று தொகுதிகள் உள்ளன.
இன்ஷா அல்லாஹ் இனி முடிந்த மட்டும் ஷிண்டாகா அரணையும் அதை சுற்றியுள்ள பகுதிகளை புகைப்படங்களாய் பார்த்து விட்டு மிக முக்கியமான, அவசியம் பார்க்க வேண்டிய ஷேக் சயீத் அல் மக்தூம் மாளிகைக்குள் அடுத்த அத்தியாயத்தில் உள்நுழைவோம்.

என்னாது அந்தக்கால துபையிலும் 51 ?
(அதிரை மற்றும் பினாங்கு 51 ஐ பற்றி அறிந்தவர்கள் தனிப்பதிவாக அல்லது பின்னூட்டமாக யார் மனதையும் புண்படுத்தாமல் சுவையாக பகிரவும்)
(அதிரை மற்றும் பினாங்கு 51 ஐ பற்றி அறிந்தவர்கள் தனிப்பதிவாக அல்லது பின்னூட்டமாக யார் மனதையும் புண்படுத்தாமல் சுவையாக பகிரவும்)
பாலைவன வாழ்க்கை முறை
40 வயதை கடந்தவர்களே! நமதூர் வேலிகள் ஞாபகம் வருதா?
மீனவர்களின் வீடுகள் மற்றும் பயன்பாட்டில் இருந்த பொருட்கள்
லாந்தரும், பெட்ரோமாக்ஸ் லைட்டும் நமதூரில் மட்டுமல்ல 50 வருடங்களுக்கு முந்தைய துபையிலும் தான் ஒளிவீசியுள்ளது
சமையல் அறை
அல் பர்தாஹ் மியூசியம் by Dubai Customs
(மதுரைக்கு போட்டியாக) அரபி மொழி வளர்த்த துபை புலவர் சங்கம்???
ஹெரிடேஜ் வில்லேஜில் இன்னும் பயன்பாட்டில் உள்ள 3 மஸ்ஜிதுகள்
பின் ஹாரிப் மஸ்ஜித்
கட்டப்பட்ட ஆண்டு : 1942
புணர்நிர்மானம் செய்யப்பட்ட ஆண்டு : 1999
ஒழுச் செய்வதற்கு பயன்பட்ட கிணறு - இன்று காட்சி பொருளாக
பின் ஜாயித் மஸ்ஜித்
கட்டப்பட்ட ஆண்டு : 1964
புணர்நிர்மானம் செய்யப்பட்ட ஆண்டு : 1998
பின் உதைபா மஸ்ஜித்
கட்டப்பட்ட ஆண்டு : 1914
புணர்நிர்மானம் செய்யப்பட்ட ஆண்டு : 2001
இதுவரை நாம் கண்டது ஹெரிடேஜ் வில்லேஜின் புறப்பார்வை மட்டுமே இன்னும் காண வேண்டிய அகமும் புறமும் ஏராளம் உள்ளன, காத்திருங்கள்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
அதிரை அமீன்
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
அதிரை அமீன்
No comments:
Post a Comment