உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Saturday, February 26, 2011

25.02.2011 அன்று வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரம்


இந்த வார (25.02.2011) அதிரை ஜூம்ஆ நிகழ்வுகள்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருநாமம் போற்றி 25.02.2011 அன்று நடந்த அதிரை ஜூம்ஆவில் மவ்லவி. அன்சாரி MA (அரபி) அவர்கள் கலந்து கொண்டு 'இஸ்லாம் ஒர் மென்மையான மார்க்கம்' என்ற தலைப்பின் கீழ் இஸ்லாம் வலியுறுத்தும் மனிதநேயம், சகோதரத்துவம் மற்றும் சகிப்புத்தன்மை குறித்து நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை தொகுத்து அழகுற விளக்கினார்கள்.

 

இரண்டாம் அமர்வில், இன்றைய சர்வதேச பிரச்சனைகளை குறித்து அலசினார்கள், சென்ற வாரத்தை விட பெருமளவில் ஆண்களும் பெண்களும் ஜூம்ஆவில் கலந்து கொண்டனர்.


''மக்கள் (தங்களது) ஜும்ஆத் தொழுகைகளை விட்டு விடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அல்லாஹ் அவர்களுடைய இதயங்களில் முத்திரை பதித்து விடுவான். அவர்கள் (பாவத்தில் மூழ்கி) மதி மறந்தவர்களாய் ஆகி விடுவார்கள்'' என நபி(ஸல்) அவர்கள் மிம்பர் கட்டையின் மீது (நின்று) கூற நாங்கள் கேட்டிருக்கிறோம் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) மற்றும் அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம் 470

 

நபி(ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தும் போது, அவர்களுடைய கண்கள் சிவந்து விடும். சத்தம் உயர்ந்து விடும். கோபம் அதிகரித்து விடும். காலையிலோ, மாலையிலோ தாக்குதல் நடத்த வரும் பகைவர்களின் ஒரு படையை பற்றி எச்சரிப்பவரைப் போன்று உரையாற்றுவார்கள். பின்னர் ''வேதத்தில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களது வழியாகும். (மார்க்கத்தில்) புதிதாக தோற்றுவிக்கப்படும் ஒவ்வொரு செயலும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழி கேடாகும்'' என்று கூறுவார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம் 476

 

முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில், வெள்ளிக்கிழமை உரையில், நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து பாராட்டி, அதற்குப் பின்னர் உரத்த குரலில் பேசுவார்கள் என உள்ளது.

முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில், ''யாரை அல்லாஹ் நேர்வழிப்படுத்திவிட்டானோ, அவரை வழி கெடுப்பவர் யாரும் இல்லை. இன்னும் யாரை அல்லாஹ் வழி கெடுத்து விட்டானோ, அவரை நேர்வழிப்படுத்துபவர் யாரும் இல்லை'' என உள்ளது.

நஸயீயில் ''ஒவ்வொரு வழி கேடும் நரகத்தையே சேரும்'' என்று உள்ளது.


தகவல்
அதிரையிலிருந்து
அப்துல் காதர்

Thursday, February 24, 2011

விபத்து

உரை: மௌலவி அமீறுல் அன்சார் (மக்கி) இலங்கை

http://www.srilankamoors.com/Media-centre/VIPATHU.html

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
"நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், 'எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள் சபைகள்" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்" என்று கூறினார்கள். மக்கள், 'பாதையின் உரிமை என்ன?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்" என்று பதிலளித்தார்கள். ஸஹீஹுல் புகாரி 2465. Volume :2 Book :46

Saturday, February 19, 2011

அதிரையில் நடைபெற்ற மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையால் 18.02.2011 வெள்ளிக்கிழமை மாலை தக்வா பள்ளி அருகே அதிரை இஸ்லாமிக் மிஷன் சார்பாக மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில், அதிரை ஜூம்ஆவிற்காக வருகை தந்திருந்த மவ்லவி. மீரான் முஹைதீன் ஸலாஹி அவர்கள் கலந்து கொண்டு 'கலாச்சார சீரழிவுகள் - ஒர் ஆய்வு' என்ற தலைப்பில் உரை நிகழ்த்த, தொடர்ந்து பேசிய சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் 'மனிதனுக்குத் தேவை மறுமைச் சிந்தனை' என்ற தலைப்பின் கீழ் எழுச்சிமிகு பேருரையாற்றினார்கள்.

குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் பேருரைகள் நிகழ்த்தபட்டபோது பொதுமக்கள் அனைவரும் எத்தகைய வீண் அசைவுகளுமின்றி, நிகழ்ச்சியின் இறுதிவரை கலையாமல்,உரையோடு ஒன்றியிருந்தனர் மேலும் நடுத்தெரு மற்றும் கீழத்தெரு பகுதிகளில் பெண்கள் தங்களின் வீட்டுவாசல்களில் அமர்ந்தும் சொற்பொழிவுகளை செவிமடுத்தனர். ஆண்கள் மேடை முன்பு அமர்ந்தும், இருக்கைகள் போதாமல் சூழ நின்றவர்கள் போக ஏராளமான சகோதரர்கள் தக்வா பள்ளியினுள்ளும் தஞ்சமடைந்திருந்தனர்.

முன்னதாக, AIM பொருளாளர் சகோதரர் அப்துல் காதர் அவர்கள் வரவேற்புரையாற்ற, அதிரை அன்வர் BA அவர்கள் தலைமையுரையாற்றினார்கள் இறுதியாக சகோதரர் (சாந்தா) சாகுல் அவர்கள் நன்றி நவிழ துஆவுடன் இனிதே நிறைவடைந்தது.

கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் மீட்டெடுக்கப்பட்டு, தற்போது எத்தகைய அமைப்பிற்குள்ளும் அடகுவைக்கப்படாமல் குர்ஆன் ஹதீஸை மட்டுமே ஆதாரமாக ஏற்று செயல்பட்டு வரும் அதிரை இஸ்லாமிக் மிஷன் இயக்க பேதங்களை துடைத்து தூர எரிந்துவிட்டு இன்ஷா அல்லாஹ் இதுபோன்ற சிறந்த தாயிக்களை கொண்டு தொடர் பிரச்சாரங்களை தன் சக்திக்கேற்ப செய்திட உறுதியேற்கின்றது.

குறிப்பு:
1. . இந்த பொதுக்கூட்டம் வெற்றியடைய எங்களோடு தோளோடு தோள் நின்ற ஏகத்துவ சகோதரர்கள் மற்றும் அனைத்து இயக்கத்தினருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
2. இன்ஷா அல்லாஹ் பொதுக்கூட்ட வீடியோ பதிவுகள் நம் வலைப்பூவில் விரைவில் உங்கள் பார்வைக்கு.


தகவல்
அதிரையிலிருந்து
M. அப்துல் ரஹ்மான் (SP)