உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Wednesday, October 3, 2012

இஸ்லாமிய ஒற்றுமை எங்கே?

 
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப்புகழும் உரித்தானது!
 
தாம் சார்ந்திருக்கும் இயக்கத்தின் தலைவர் எதைக் கூறினாலும் அதை தலைக்கு மேலே தூக்கிக்கொண்டாடும் இயக்கப்பற்றின் காரணமாக, ஏகத்துவத்தைப் போதிக்கின்றோம் என்று கூறிக்கொண்டே சகோதர முஸ்லிம்களுக்கிடையில் ஒருவருக்கொருவர் கீழ்தரமான வார்த்தைகளால் வசைபாடிக் கொண்டிருடிருக்கும் இயக்கங்களைச் சார்ந்தவர்களின் செயல்பாடுகள் ஒருபுறம்! தம்மை சீர்திருத்தவாதிகள் என்று கூறிக்கொண்டு தவறு செய்பவர்களைத் தட்டிக்கேட்கின்றோம் என்ற போர்வையில் தமக்குப் பிடிக்காத ஒரு ஒரு குறிப்பிட்ட இயக்கத்தைக் குறிவைத்து அவர்களைக் கடுமையான வார்த்தைகளால் வசைபாடும் இயக்கவெறியை எதிர்கின்ற இயக்க எதிர்ப்பு வெறியை உடையவர்களின் செயல்பாடுகள் மறுபுறம்!
 
யார் எக்கேடு கெட்டுப்போனால் நமக்கென்ன? நாம் உண்டு! நமது வேலையுண்டு என்று சுயநலத்தின் மொத்த உருவாய் செயல்படுபவர்களின் செயல்பாடுகள் ஒருபுறம்! தர்ஹா, சமாதி வழிபாடுகள், தட்டு, தாயத்து என்று இணை வைப்பின் உச்சத்தில் உழன்றுக் கொண்டிருந்த தமிழக முஸ்லிம்களிடையே ஏகத்துவம் வீறுகொண்டு எழுவதைப் பொறுக்காத ஷைத்தானின் சூழ்ச்சியில் சிக்குண்டு, தவ்ஹீதுவாதிகள் என்று தம்மைத்தாமே அழைத்துக் கொண்டு தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்குப்பவர்களைப் பார்த்து இவர்கள் ஒன்றுபடவே மாட்டார்களா என்று மனம் வெதும்புபவர்கள் மறுபுறம்,
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல் குர்ஆன் ஹதீஸைப் போதிப்பவர்களுக்கிடையில் நடைபெறும் இந்தக் குழுச்சண்டைகளினால் குதூகலமடைந்த குராஃபிகளும், ஷிர்க் மற்றும் பித்அத் புரிபவர்களும் வீறுகொண்டெழுந்திருக்கின்றனர்.
எவ்வித இயக்கங்கங்களையும் சாராமல் அல்லாஹ் நமக்கு இட்டபெயராகிய முஸ்லிம்கள் என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு அழகிய முறையில் அழைப்புப் பணியினைச் செய்பவர்களுக்கு முட்டுக்கட்டையாக இருப்பது இந்த குழுச்சண்டைகளே என்றால் அது மிகையாகாது! ஷிர்க், பித்அத்திலே உழன்றுக் கொண்டிருப்பவர்களிடையே அதன் தீமைகளை உணர்த்த முற்படும் போது அவர்கள் முன்னிருத்துவதோ நமது குழுச்சண்டைகளைத்தான்!
 
எனதருமை முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!
 
தமக்கும் தம் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும்! அறிவாற்றலில், விவாதத் திறமையில் தம்மை விஞ்சியவர்கள் யாருமில்லை என்று நினைப்பது நம் அகந்தையின் காரணமாக அன்றோ?
‘கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்’ (12:76) என்ற திருவசனத்தை நாம் மறந்துவிட்டோமா? அல்லது
 
‘அறிவாளிகளே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்’ (அல்-குர்ஆன் 5:100) என்ற உபதேசமெல்லாம் ஊருக்கு மட்டும்தானா?
தாம் சார்ந்த இயக்கம் தான் தலைசிறந்தது என்ற நினைப்பும், தம் இயக்கத்தை விட்டு வெளியேறியவர்கள் அல்லது தம் இயக்கத்தைச் சாராதவர்கள் எல்லாம் தடம் புரண்டவர்கள் என்ற இறுமாப்பும் அகங்காரத்தின் வெளிப்பாடுகள் அல்லவா? இந்த இயக்கங்களைப் பற்றிக்கூட கேள்விப்பட்டிராத கோடானு கோடி முஸ்லிம்கள் வாழ்கின்றனரே! அவர்களும் தடம்புரண்டவர்கள் தானா? சிந்தியுங்கள் சகோதரர்களே!

Thursday, September 27, 2012

அல்குர்ஆனில் புதைந்து கிடக்கும் விஞ்ஞானம்!

உலகத்தில் வாழக்கூடிய மக்களுக்கு வழி காட்டும் நெறிமறையாக அல்குர்ஆன் அமைந்துள்ளது. 1431 ஆண்டுகளுக்கு முன் அல்லாஹ் வின் தூதர் நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட இந்த புனித குர்ஆன், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களையும், நிகழ்ந்த சம்பவங்களையும் வரலாறாக தந்ததுடன் வாழுகின்ற மக்களுக்கு இது சட்ட நூலாகவும், விண்ணியல், மண்ணியல், தாவரவியல், கருவியல், சமுத்திரவியல், விலங்கியல் என்று பல தரப்பட்ட விஞ்ஞானங்களை எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கிறது

Post image for

அன்றைய காலகட்டத்தில் நவீன விஞ்ஞான வளர்ச்சிகளே இல்லாத காலத்தில் இறக்கி அருளப்பட்ட இந்த குர்ஆன் இன்று விஞ்ஞானம் வளர்ச்சியடைந்த காலத்தைப் பேசுவது பலதரப்பட்ட மக்களையும் வியப்பில் ஆழ்த்துகிறது. பல அறிஞர்களை ஆராய்ச்சி பண்ண தூண்டுகிறது.
“இந்த குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்குர்ஆன் 47:24 “ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா?’ 4:82 என்று அல்லாஹ் கேட்கிறான்.
“நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா? இன்னும் மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?’ 78:6, 7
“இன்னும் இப்பூமி சாயாமலிக்கும் பொருட்டு நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம். அவர்கள் நேரான வழியில் செல்லும் பொருட்டு நாம் விசாலமான பாதைகளையும் அமைத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான். 21:31

Saturday, September 22, 2012

அதிரையில் மாநபியின் மாண்பை எடுத்துரைக்க - அனைத்து அமைப்புகள் போராட்டம் - காணொளி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

அதிரையில் இன்று (21-09-2012) தக்வா பள்ளி அருகில் துவங்கிய ஊர்வலம் பேருந்து நிலையத்தில் அனைத்து ஜமாத், மற்றும் அமைப்புகளின் கூட்டான போராட்டமாக அதிரை த.மு.மு.க. தலைமையில் நடைபெற்றது.

உலக மாந்தர்ட்கு அருட்கொடையாக அருளப்பெற்ற நம் உயிரினும் மேலான உத்தம நபி(ஸல்) அலைஹிவஸல்லம் அவர்களைப் பற்றி அவதூறு பரப்ப முயன்ற கயவர்களையும், அதற்கு உறுதுணையாக இருக்கும் அமெரிக்க அரசையும், யுடியூப் நிறுவனத்தையும் கண்டித்து, இன்று அதிரை அனைத்து கட்சி, ஜமாத், அமைப்புகள் ஒன்றினைந்து மிகப்பெரிய கண்டப்போராட்டம் நடத்தினர்.

இதில் அதிரை த.மு.மு.க. சகோ. செய்யது, பாப்புலர் ஃபிரண்ட் சகோ. முஹம்மது, இந்திய தவ்ஹீத் ஜமாத் அப்துல் ஹமீத், அதிரை பே.ம.தலைவர் சகோ S. அஸ்லம் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயலாளர் சகோ தமீம் அன்சாரி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்

இறைத்தூரை இழிபடுத்த எத்தனித்த எத்தர்களை எதிர்ப்பதில் எம்மக்கள் எவ்வகையிலும் சலைத்தவர்களல்ல, அதனை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை அனைத்து சகோதரர்களும் அதிரையில் பேருந்து நிலையத்தில் ஒன்று கூடி நிருபித்தார்கள் - அல்ஹம்துலில்லாஹ் !


Thursday, September 20, 2012

அண்ணா சாலையில் இஸ்லாமியர்கள் வரலாறு காணாத போராட்டம்-ஸ்தம்பித்தது சென்னை

சென்னை: நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் வெளியாகியிருக்கும் திரைப்படத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் கூட்டுப் போராட்டத்தை சென்னையில் இன்று நடத்தின. இதனால் செனனை அண்ணா சாலை ஸ்தம்பித்துப் போனது. இதுவரை இப்படி
ஒரு போராட்டத்தை அண்ணா சாலை கண்டதில்லை என்பதால் சென்னையே
சில மணி நேரம் ஆடிப் போய் விட்டது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் அமெரிக்க தூதரகம் நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டன. இந்த போராட்டத்தில் அமெரிக்க தூதரகம் தாக்குதலுக்குள்ளானது. இதைத் தொடர்ந்து 2 நாட்களுக்குஅமெரிக்க தூதரகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் இன்று 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் கூட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அமெரிக்க தூதரகத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்துவதற்கு அண்ணா சாலை தர்கா அருகே இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இது பலரையும் வியப்படைய வைத்தது. காரணம், அண்ணா சாலையில் இதுவரை எந்தப் போராட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டதில்லை. இதனால் போலீஸ் கமிஷனர் திரிபாதியின் முடிவு பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
போராட்டத்தை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் மாலை 3 மணி முதலே போக்குவரத்துக்கு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அண்ணா சாலை முழுவதும் இஸ்லாமியர்கள் கொடிகளை ஏந்தியபடி முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். ஆங்காங்கே அமெரிக்க தேசியக் கொடி மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் அனைவரும் அண்ணா சாலை தர்கா அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று அமெரிக்காவுக்கு எதிராக கண்டனக் குரல்களைப் பதிவு செய்தனர். இதில் ஒருதரப்பினர் போலீசாரின் அரணை உடைத்துக் கொண்டு அமெரிக்க தூதரகம் நோக்கி முன்னேற முயற்சித்தனர். அவர்களையும் போலீசார் தடுத்தனர்.
இந்தப் போராட்டம் பின்னர் பெரும் வன்முறையாக மாறியது. அரசு பஸ், டூவீலர்கள் உள்ளிட்டவை தீவைத்துக் கொளுத்தப்பட்டன.

கடும் போக்குவரத்து நெருக்கடி

சென்னை அண்ணாசாலைதான் நகரின் மையமான போக்குவரத்துப் பகுதி. ஏற்கெனவே மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக இந்தப் பாதையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டத்தால் மயிலாப்பூர், ராயப்பேட்டை , அண்ணாசாலை ஆகிய தென்சென்னை பகுதிகள் ஸ்தம்பித்துப் போயிருந்தன.
இன்னொரு பக்கம் அண்ணா சாலையில் நடைபெற்ற போராட்டத்தால் மத்திய சென்னை பகுதிகளான எழும்பூர், சிந்ததாரிப் பேட்டை வழியே பேருந்துகள் திருப்பிவிடப்பட்டதால் அந்தப் பக்கமும் வாகனங்களால் நிலைகுலைந்து போனது. சென்னையில் பல மணிநேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Thanks to thatstamil.com

இன்றைய இளம்பெண்கள்

Post image for இன்றைய இளம்பெண்கள்

ஏற்கனவே ஈமான் என்றால்? என்ன இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் எப்படி வாழ வேண்டும் என்ற அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாமல், ஹிஜாப் முறையை சரிவர பேணாமல், அன்னிய ஆண்கள் (மஹ்ரம்) விஷயத்தில் எச்சரிக்கை இல்லாமல், வளரும் நம்முடைய சமுதாய பெண் பிள்ளைகள், கல்வி கற்க / தொழில் வேண்டி வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடம், ஆபிஸ், காலேஜ், ட்யூசன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங்கிளாஸ் , ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே, ஸ்கூல்-டூர், காலேஜ்-டூர், ஆபிஸ் டூர் , ஷாப்பிங் என்று போகும் இடங்களில், மஹரம் இல்லாத ஆண்களுடனும் மாற்று மத பெண்களுடனும், ஆண்களுடனும், பழகும் வாய்ப்பும், நட்பும், தோழமையும், ஏற்பட்டு அவர்களது பழக்க வழக்கங்களையும் அவர்களது கலாச்சாரத்தையும் பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள்.
 
இதன் காரணமாக சில மஹரம் இல்லாத ஆண்கள் , மாற்று மத இளைஞர்கள் நமது முஸ்லிம் பெண்களுக்கு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், ஆகிவிடுகிறார்கள். இவ்வாறு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், பழகும் மஹரம் இல்லாத ஆண்கள் , மாற்றுமத இளைஞர்கள் காதலர்களாக ஆகிவிடுகிறார்கள்.
 
இன்றைய இளம்பெண்கள் காம உணர்வால் தூண்டப்பட்டு காதல் எனும் வலையில் சிக்கி மானத்தையும் வாழ்க்கையையும் இழக்கக்கூடிய நிலைமை உருவாக முதல் காரணமாக இது இருக்கிறது. விபச்சாரத்தின் அழைப்பு வீட்டுக்குள்ளும், பாக்கெட்டுக்குள்ளும், மொபைல் போன் இண்டெர்னெட் வடிவில் வந்துவிட்டது. முஸ்லிம் பெண்களுக்கு (ஷைத்தான்கள்) மொபைல்களின் மூலமும் இண்டெர்னெட்டின் மூலம் நேரடியாக அழைப்பு விடுகிறார்கள். நமது பெண்கள் பலர் பழியாகிவிட்டார்கள்.

இனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மார்க்கத்தை பின்பற்றுங்கள், ஈமானை உறுதிப்படுத்துங்கள்.

மேலும், (நபியே!) விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக: “தங்கள் பார்வைளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும்; தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிப்பாதுகாத்துக் கொள்ளவும்; அதினின்று வெளியில் தெரியக்கூடியவைகளைக் தவிர, தங்கள் (அலங்காரத்தை) அவர்கள் வெளிப்படுத்தவேண்டாம்;

தங்கள் முந்தானைகளை தம் மேல்சட்டைகளின்மீது போட்டு (தலை, கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து)க் கொள்ள வேண்டும்;
 
மேலும், அவர்கள் தம் அலங்காரத்தை தம் கணவர்கள் அல்லது தம் தந்தையர், அல்லது தம் கணவரின் தந்தையர், அல்லது தம் குமாரர்கள், அல்லது தம் கணவரின் குமாரர்கள், அல்லது தங்கள் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் குமாரர்கள், அல்லது தம் சகோதரிகளின் குமாரர்கள், அல்லது தங்களுடைய பெண்கள், அல்லது தம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது (ஆண்களில் பெண்களின் மீது) விருப்பமற்ற பணியாளர்கள், அல்லது பெண்களின் மறைவான அவயங்களை அறிந்துக் கொள்ளாத சிறு பிராயத்தையுடைய சிறார்கள் ஆகியவர்களைத் தவிர, (மற்றவருக்கும்) வெளிப்படுத்த வேண்டாம்.
 
அன்றியும் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைந்திருப்பதை அறியப் படுவதற்காக, தங்களுடைய கால்களை (பூமியில்) அடிக்க வேண்டாம். விசுவாசிகளே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் பக்கம் (பாவமன்னிப்பைக் கோரி) தவ்பாச் செய்யங்கள். (அல்குர்ஆன் 24:31)
adiraisalafi
thanks to readislam.net


Sunday, September 16, 2012

விமர்சனங்களை வென்றவர்

Post image for விமர்சனங்களை வென்றவர்

கி பி 571 ம் ஆண்டு ஏபரல் 20 ம் தேதி மக்காவில் அநாதையாக பிறந்த முஹம்மது (ஸல்) அவர்கள் பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. இந்த உலகில் மனிதராகப் பிறந்த பிறக்கப் போகிற வேறு எந்த சக்தியும் எட்டிப் பிடிக்க முடியாதது.

சமயம், , சமூகம், அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், வரலாறு, அறிவியல், மொழி, தத்துவம், இலக்கணம், இலக்கியம், வாழ்வியல், உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அவருக்கு தீர்க்கமான ஒரு இடம் இருக்கிறது. இன்றும் நபிமருத்துவம் என்பது மக்களின் பிணி தீர்க்கும் ஒரு முறையாக இடம்பிடித்திருக்கிறது என்பது மட்டுமல்ல மனித உடல் ஆரோக்கியத்திற்கான அவருடைய வழி காட்டுதல்கள் அனைத்து மருத்துவத்துறையிலும் மேற்கோள் காட்டப்படுபடுகின்றன. சட்டம், நீதி, நிர்வாகம் மற்றும் பதிவுத்துறைகளும் அவர் கோலோச்சுகிற துறைகளாகும். அந்தப் பாலைவனச் செல்வர் விவசாயத்தையும் விட்டு வைக்கவில்லை.
மூன்றாம் உலகம் யுத்தம் ஒன்று வருமென்றால் அதற்கு தண்ணீர் தான் காரணமாக இருக்கப் போகிறது என ஐ நா மன்றம் எச்சரித்துள்ளது. நீர் பங்கீடு மற்றும் நீர்ப்பாசனம் குறித்து முஹம்மது நபியின் வழிகாட்டுதல்கள் ஏற்றுக் கொள்ளப் படுமானால் அந்த அச்சத்திற்கு வழியே இருக்காது.
இந்த துறைகளிலெல்லாம் முஹம்மது (ஸ்ல்) அறிவுரைகள், அல்லது கருத்துக்களை கூறினார் என்று ஒற்றை வரியில் நகர்ந்து விட முடியாது. இத்துறைகள் அத்தனையும் அவர் பரிசோதனை முயற்சிகளை செய்து அதில் பெரும் வெற்றி கண்டார் என்று சொன்னால் அது கூட அவரை பற்றிய முழு அறிமுகமாகிவிடாது. தான் உருக்கொடுத்த அத்தனை சிந்தனைகளையும் வழிவழியாக பின் பற்றி நடக்கும் ஒரு சமூகத்தை உருவாக்கிச் சென்றார், அந்த சமூகம் இன்றளவும் மட்டுமல்ல இனி உலகம் வாழும் காலம் வரையும் அவரது சிந்தனைகளை ஆலோசனைகளை உத்தரவுகளாக தலைமேற் கொண்டு செயல்படக் காத்திருக்கிறது.

Wednesday, September 12, 2012

சித்தீக்பள்ளி கமிட்டி மற்றும் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் தன்னிலை விளக்கம்!

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும்,.

அன்பான சித்தீக் பள்ளி முஹல்லா மற்றும் அதிரைவாசிகளுக்கு,

கடந்த சில நாட்களாக ஊரில் உள்ள மக்களிடமும் வெளிநாடுகளில் வசிக்கும் அதிரை மக்களிடமும் பேசப்பட்டு வருபவை, சித்தீக் பள்ளி மற்றும் சித்தீக் பள்ளி நிர்வாகத் தலைவர் மரியாதைக்குரிய ஹைதர் அலி ஆலிம் அவர்களைப் பற்றிய செய்திகளே. ஊரிலும் இணையத்திலும் இது தொடர்பாகப் பேசப்படும் செய்தி எங்களுக்கு வருத்தமளிக்கிறது. சித்தீக் பள்ளி தொடர்பான விசயங்களில் ஏனோ ஒரு சில மக்கள் வாய்க்கு வந்தபடி பேசிவருகிறார்கள். அதனால், நடந்த சம்பவங்களைப் பற்றி எங்களுடைய விளக்கத்தை மக்கள் மத்தியில் வைப்பது எங்கள் கடமை என்பதை உணர்ந்தே இம்மடலை வரைகின்றோம்.

சித்தீக் பள்ளிக்கும், சித்தீக் பள்ளிக்குச் சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்களுக்கும் இடையே நிலப் பிரச்சினை கடந்த சில மாதங்களாக இருந்து வருகிறது. இந்நிலையில், பள்ளிக்குச் சொந்தமான இடத்தைப் பொதுப் பாதையாக்க ஒரு சிலர் முயற்சியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நிகழ்ந்த சம்பவங்களினால் பள்ளிக்குரிய நிலத்தில் தெருப்பாதை வேண்டும் என்று வாதிடும் சிலர் வெளித் தெருவைச் சேர்ந்த ஒரு சகோதரருடன் சேர்ந்து, அநாகரீகமாகத் தகாத வார்த்தை பேசி, மிகவும் கேவலமாக சித்தீக்பள்ளி நிர்வாகத்தை கண்ணியக் குறைவாக நடத்தினார்கள். இது தொடர்பாக ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திலும் கடிதம் கொடுக்கப்பட்டு, சித்தீக்பள்ளிக்கு ஒத்துழைப்புத் தருமாறு வேண்டுகோளும் வைக்கப்பட்டது.

அன்று இரவே சித்தீக்பள்ளி சம்பந்தபட்ட அனைத்துத் தரப்பு மக்களும் கூடி ஆலோசனை செய்தார்கள். அதில், பள்ளிவாசல் நிலத்தில் பாதை விடவேண்டாம் என்று ஒரு மனதாக முடிவு செய்து கையொப்பமிட்டார்கள். யார் யார் எல்லாம் இதில் உடன்பட்டார்கள் என்ற விபரம் சித்தீக்பள்ளி நிர்வாக மினிட்ஸ் புத்தகத்தில் உள்ளது.

பிறகு இரண்டு நாட்கள் கழித்து, பள்ளிவாசல் வேலியை, தெருவில் உள்ள பெண்களை தூண்டிவிட்டு உடைத்து, சமூக விரோதச் செயல்களில் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு சில சகோதரர்கள் ஈடுபட்டுப் பதற்றத்தை ஏற்படுத்தினார்கள். இதில், ஒரு சில சகோதரர்கள் சுவர் கட்டலாம் என்று கை எழுத்து போட்டவர்களும் சுவரை இடிக்கும் வேலையையும் செய்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இருப்பினும் அன்றைய தினமே அல்லாஹ்வின் உதவியால் சித்தீக்பள்ளிக்குச் சொந்தமான நிலத்தின் சுவர்கள் வெகுவிரைவாகக் கட்டி எழுப்பட்டன.

இந்த சம்பவம் நடைபெற்ற பிறகு சில நாட்கள் கழித்து சம்சுல் இஸ்லாம் சங்கத் துணைத் தலைவர் அவர்கள், சித்தீக்பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கத்தின் கூட்டம் ஒன்றில் அஜெண்டா இல்லாமல் எடுத்து வைத்ததன் காரணத்தால், சித்தீக் பள்ளி நிர்வாகிகள் அனைவரும் சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகளை சங்கத்தில் சென்று சந்தித்துப் பேசினோம். “எங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?” என்று வினவியதோடு அல்லாமல் அன்று வரை நடைபெற்ற அனைத்தையும் முழுமையாக சொல்லிக்காட்டப்பட்டு செய்திகளை அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். அந்த உரையாடலில் சங்கத் தலைவர் அவர்கள், வெளியூர்க்காரர் ஊர் நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பதில் தவறில்லை என்று கூறியதோடு அல்லாமல், சங்க உலமா இபுறாஹீம் ஆலிம் அவர்களிடமும் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு இபுறாஹீம் ஆலிம் அவர்கள் முஹல்லாவாசிகள் அதை விரும்பினால் தவறில்லை என்று விளக்கம் கூறினார்கள். மேலும் சித்தீக்பள்ளி இடம் மீட்கப்பட வேண்டும் என்று சங்கத் தலைவர் அவர்களும் தன்னுடைய கருத்தைத் தெரிவித்தார்கள்.

அதுவரை சங்கம் இது தொடர்பாக எந்தவித ஆட்சேபனையையும் தெரிவிக்கவில்லை. சித்தீக்பள்ளிக்குச் சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது என்பதை மக்கள் தெரியவந்த சூழலில், சித்தீக்பள்ளித் தலைவராக இருக்கும் ஹைதர் அலி ஆலிம்சா அவர்களைப் பதவியிலிருந்து விலக்க ஊரில் உள்ள ஒரு சிலர் மும்முரமாக முயற்சி செய்து பல தொந்தரவுகளை ஹைதர் அலி ஆலிம்சா அவர்களுக்கும், சித்தீக் பள்ளி நிர்வாகத்துக்கும் தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். சித்தீக்பள்ளிச் சொத்து விவகாரத்திற்குள்ளான பிரச்சினையில் சம்பந்தபட்ட நபரான தக்வா பள்ளி நிர்வாகி அவர்கள்(தக்வா பள்ளி நிர்வாகிகளில் ஒருவர்) சித்தீக்பள்ளி நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார். பேச்சுவார்த்தையில் எந்த சுமூகமும் ஏற்படாத நிலையில், அந்த நிர்வாகி ஒரு மிரட்டலும் விட்டுச் சென்றார்.

இப்படி மாதங்கள் கடந்து கொண்டே சென்றன, கடந்த ரமழானில் தக்வா பள்ளி நிர்வாக கமிட்டியின் செயலாளர் அவர்கள் சித்தீக் பள்ளி கமிட்டி தலைவர் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மேல் ஒரு பொய் வழக்கு - அதாவது ஆலிம்சா அவர்கள் இளைஞர்களை வைத்து தீவிரவாத செயலில் ஈடுபடுகிறார் என்று இல்லாதவைகளை அவர் மீது சுமத்தி நீதிமன்றத்தில் 13 குற்றசாட்டுகளை வைத்து பொய் வழக்குத் தொடுத்துள்ளார். பொய்யான குற்றச்சாட்டுக்களை வைத்து ஹைதர் அலி ஆலிம்சா அவர்களைக் காவல் நிலையத்திற்குச் செல்ல வைத்தார். பிறகு சித்தீக்பள்ளி நிர்வாகத்தின் முயற்சியால் காவல் நிலையத்தில் தக்வா பள்ளி நிர்வாகி அவர்களால் கொடுக்கபட்ட பொய் புகார் இதுவரை வாபஸ் பெறப்பட்டது. இந்த சம்பவம் ஊரில் உள்ள அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதன் பின் ஹைதர் அலி ஆலிம் அவர்களை (29-08-2012) காலை 10:30 மணியளவில் வீட்டிற்குத் தனியாக வருமாறு சங்கத் தலைவரின் அழைப்புடன் வந்த சங்க பிரதிநிதி சகோதரர் சாலிஹ் அவர்களிடம், "தக்வா பள்ளி நிர்வாகிகளில் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பதால் வழக்கமான நிகழ்வுகளை தவிர மற்ற எந்தக் கூட்டத்திற்கும் செல்ல வேண்டாம் என்று வழக்கறிஞர் அறிவுறுத்தியிருக்கிறார், ஆகையால் வழக்கு முடிந்த பிறகு நானே நேரில் வந்து சந்திக்கிறேன்” என்று சொல்லி அனுப்பினார். ஆனால் அசர் தொழுகைக்கு பிறகு சங்க பிரதிநிதி சாலிஹ் மீண்டும் வந்து, “நீங்கள் வர இயலவில்லை என்றால், நாங்கள் வந்து சந்திக்கிறோம் என்று தலைவர் சொல்லியனுப்பினார்கள்” என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு ஹைதர் அலி ஆலிம், அவர்கள், "சங்கத் தலைவர் வந்து என்னை சந்திப்பதற்கு நான் பெரிய ஆள் இல்லை. இன்று தக்வா பள்ளி பயான் முடித்துவிட்டு போன் பேசிவிட்டு சந்திக்கலாம்" என்று சங்க பிரதிநிதியிடம் சொல்லி அனுப்பிய சில நிமிடங்களிலேயே சங்க தலைவர், பேரூராட்சித் தலைவர், சங்கத் துணைத் தலைவர், துணைச் செயலாளர் மற்றும் இரண்டு பிரதிநிதிகள் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் வீட்டிற்குச் சென்று சந்திக்க முற்பட்டார்கள்.

சித்தீக்பள்ளியில் வைத்துப் பேசலாம் என்று சொல்லி, வந்தவர்களை சித்தீக்பள்ளியில் அமருமாறு ஹைதர் அலி ஆலிம் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். அதே சமயத்தில் ஹைதர் அலி ஆலிம் பள்ளிக்கு வருவதற்குள் சித்தீக்பள்ளிக்கு கமிட்டி சகோதரர்கள் 4 பேர் வந்துள்ளார்கள். அவர்களிடம் சம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் அவர்கள், “இனி எத்தனை பேர் வருவீர்கள்? நீங்களா அல்லது நாங்களா என்று பார்த்துக்கொள்வோம்” என்று கூறினார்கள். அவர்கள் சித்தீக்பள்ளிக்கு வந்த 5 நிமிடத்திற்குள் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் சலாம் கூறி சித்தீக்பள்ளி உள்ளே வருகிறார்கள். உடனே சங்கத் தலைவர்கள் அவர்கள், “நீங்கள் வெளியூர்க்காரர். நாங்கள் உள்ளூர்வாசிகள். ஊரை இரண்டாகப் பிரித்துவிடாததீர்கள்” என்று சொன்னார். அருகில் இருந்த சித்தீக்பள்ளி கமிட்டி நிர்வாகி ஒருவர், சங்கத் தலைவர் அவர்களிடம், “சலாத்திற்கு பதில் கூறுங்கள் காக்கா” என்று சொல்லியும், அதை அவர் பொருட்படுத்தவில்லை. பள்ளியில் இருந்த முஹல்லா சகோதரர் ஒருவர், “நீங்களும் வெளியூர்தானே” என்று சங்கத் தலைவரைப் பார்த்துக் கூறினார். இதன் பிறகு ஏற்பட்ட சலசலப்பால், நடைபெறவிருந்த சந்திப்பு தடைபட்டது. சங்கத் தலைவர் மற்றும் அவருடன் வந்தவர்கள் அனைவரும் வெளியே சென்றுவிட்டார்கள். வெளியே செல்லும் முன், அனைவரும் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மனம் புண்படும்படியான வார்த்தைகளைப் பேசிவிட்டுச் சென்றார்கள். திரும்பத் திரும்ப ஹைதர் அலி ஆலிம் அவர்கள், “வாருங்கள் பேசலாம்” என்று கேட்டுக் கொண்டும், சந்திக்க மறுத்துவிட்டு வெளியேறினார்கள்.

30-08-2012 அன்று இரவு சித்தீக்பள்ளி முஹல்லா சகோதரர்கள் சிலரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர், துணைத் தலைவர், துணைச் செயலர், பேரூராட்சித் தலைவர் ஆகியோர் அழைத்துப் பேசினார்கள். இதில் முஹல்லா சகோதரர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு, சங்கத்தில் உள்ளவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்து, ஹைதர் அலி ஆலிம்சா அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்கள். “ஹைதர் அலி ஆலிம் அவர்களை சங்கத்தின் சார்பாக சந்திக்கவில்லை, விளக்கம் கேட்கவே சென்றோம். ஹைதர் அலி ஆலிம் அவர்களின் சொற்பொழிவில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று சங்கத் தலைவர், துணைத் தலைவர், துணைச் செயலர், பேரூராட்சித் தலைவர் ஆகியோர் ஒருமனதாக வந்தவர்கள் முன்னிலையில் ஒத்துக்கொண்டார்கள்.

ஆனால். சம்சுல் இஸ்லாம் சங்கம் ஆயிசா மகளிர் அரங்கம் மற்றும் மேலத்தெரு ஜும்மா பள்ளிக்கும் 9 முஹல்லாக்களுக்கும் அனுப்பிய கடிதத்தில் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு தொடர்பான காரணங்களைக் கூறியே அவரை வைத்து மார்க்க சொற்பொழிவாற்ற வேண்டாம் என்று கூறிப்பிட்டுள்ளார்கள். இறுதியாக, தற்காலிகமான முடிவு என்றாலும், இதை மறுபரிசிலனை செய்ய வாய்ப்பே இல்லை என்று சங்கத் துணைத் தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள். மேலே குறிப்பிட்ட அனைத்து முடிவுகளும் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய இருவரையும் கலந்தாலோசிக்காமல் எடுக்கபட்டது என்பது எங்கள் கமிட்டி நடத்திய விசாரனையில் தெரியவந்துள்ளது.

தக்வா பள்ளி நிர்வாகத்தில் இருக்கும் தனி நபர் ஒருவரால் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொய் வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என ஷம்சுல் இஸ்லாம் சங்கம் சொல்லி உள்ளாதாக ஷம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் கூறினார்கள், ஆனால் இதுவரை தக்வா பள்ளி நிர்வாகியிடம் வழக்கை வாபஸ் வாங்கவில்லை. அடுத்த மாதத்திற்கு வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. இந்தப் பொய் வழக்கால் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளார்கள்

ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கு விதிக்கபட்டுள்ள தடை பற்றி எந்தவிதக் கடிதமும் இது நாள் வரை சித்திக்பள்ளி கமிட்டிக்கு ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திலிருந்து வரவில்லை. ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கு என்று தனிப்பட்ட முறையில் வந்த கடிதம் மட்டும் தான் வந்துள்ளது என்பதை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறோம்.

மரியாதைகுறிய ஹைதர் அலி ஆலிம் அவர்கள் எந்த ஒரு இயக்கத்தினரையும் வைத்து எந்தவித இயக்க வேலையோ அல்லது எந்தவிதத் தீய காரியங்களோ இதுவரை செய்யவில்லை என்பதை அழுத்தமாக கூறிக்கொள்கிறோம். ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மேல் பொய் வழக்குத் தொடர்ந்துள்ள சகோதரரை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதற்கு துணை நிற்கும் அனைவரையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சித்தீக்பள்ளி கமிட்டித் தலைவர் பொறுப்பு வேண்டாம் என்று மூன்று முறை ராஜினாமா கடிதம் கொடுத்தார்கள் ஹைதர் அலி ஆலிம் அவர்கள். ஆனால் பள்ளி கமிட்டியில் உள்ள நாங்கள் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே இந்தப் பொறுப்பில் இது நாள் வரை இருந்து வருகிறார்கள். பதவி ஆசையால் அல்ல என்பதை உறுதியாக எல்லோருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த 03-09-2012 அன்று பொதுப் பாதையை சித்தீக்பள்ளி நிர்வாகிகள் அடைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தஞ்சை கலெக்டர் அவர்களுக்கு சென்னையிலிருந்து ஒரு நபர் அவசர மனு கொடுத்து, ஆர் டி ஓ, தாசில்தார், வி ஏ ஒ ஆகியோர் சித்தீக்பள்ளிக்கு வந்து விசாரனை நடத்தி, அப்படி ஒரு சம்பவம் அன்று நடக்கவில்லை என்று விபரங்கள் சேகரித்துத் திரும்பி சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கு சம்சுல் இஸ்லாம் சங்கம் தனிபட்ட முறையில் எழுதிய கடிதத்தில் சித்தீக்பள்ளிக்குத் தொழ வருவதற்கு மக்களுக்கு அச்சமாக இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது! அப்படி என்ன அச்சம் ஏற்படும் சூழல் சித்தீக் பள்ளியில் நிகழ்கிறது என்பதை சம்சுல் இஸ்லாம் சங்கம் மக்களுக்குக் கட்டாயம் தெளிவுபடுத்த வேண்டும். அப்படி ஏதாவது அச்சம் ஏற்படும் சூழல் இருந்திருந்தால், இந்த ரமளானில் 40க்கும் மேற்பட்ட நபர்கள் ‘இஃதிகாப்’ எப்படி இருந்திருப்பார்கள்?

சித்தீக்பள்ளிக்கான சொத்து விவகாரத்தை வைத்து நடந்து வரும் நிகழ்வுகளுக்கு, தனி நபரான ஹைதர் அலி ஆலிம் மட்டும் தான் பொறுப்பு என்று சித்தரித்து வருகிறார்கள், ஆனால் இதில் சித்தீக்பள்ளி நிர்வாகம் தான் முழு பொறுப்பு, என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறோம். ஆகையால் மரியாதைக்குறிய ஹைதர் அலி ஆலிம்சா அவர்களை மட்டும் குறிவைத்து, நீதிமன்றத்தில் பொய் வழக்கு, பொய் பிரச்சாரம், வீண் பழியை சுமத்தி அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படுவதை சித்தீக்பள்ளி கமிட்டி எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளாது. ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மேல் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொய் வழக்கை உடனே வாபஸ் பெறவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

சித்தீக் பள்ளி விவகாரத்தில் நாங்கள் எந்த நிலையிலும் ஷரியத்து முறைப்படி இணைக்கமாகவும் சுமூகமாகவும் நடந்துகொள்ளவே விரும்புகிறோம் என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறோம்.

சித்தீக்பள்ளி நிர்வாகத்தில் எந்த ஒரு முடிவாக இருந்தாலும், அனைத்தும் மசூரா அடிப்படையில் எடுக்கப்படுகிறது. எந்த ஒரு தனிநபருக்கு முடிவை தீர்மானிக்கும் அதிகாரம் இல்லை என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறோம்.

இறுதியாக வரும் 13.09.2012 அன்று பட்டுக்கோட்டை RDO அலுவலகத்தில் சித்தீக்பள்ளி நில விவகாரம் தொடர்பாக சமாதான கூட்டம் நடைபெறுகிறது. இந்த சமாதான கூட்டத்திற்கு தற்போது சித்தீக்பள்ளி நிர்வாகத்தில் உள்ள முக்கிய நபர்கள் ஒருவரை கூட அழைக்கப் படவில்லை. ஆனால் மரியாதைக்குரிய அப்துல் காதர் ஆலிம்சா அவர்களை மட்டும் சித்தீக்பள்ளி நிர்வாகி என்று குறிப்பிட்டு அழைப்பு விடுத்துள்ளார்கள். இது முழுக்க முழுக்க ஒரு தலைபட்சமான போக்கு என்பதை இங்கு எல்லோருக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்.

சித்தீக்பள்ளி நிர்வாக கமிட்டி தலைவர் மரியாதைக்குரிய ஹைதர் அலி ஆலிம் அவர்களின் தன்னிலை விளக்க ஒழிப்பேழையை இதே கேளுங்கள்.




மேலோ சொல்லபட்ட அனைத்திற்கும் சாட்சியாளன் அல்லாஹ் ஒருவனே.


மேலதிக தகவல்களுக்கு சித்தீக்பள்ளி நிர்வாகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.


இப்படிக்கு

சித்தீக்பள்ளி நிர்வாகம்,

புதுமனைத்தெரு, அதிராம்பட்டினம் – 614 701

Thanks to: adirainirubar.blogspot.com