உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Monday, September 10, 2012

சர்க்கரை வியாதிக்கு ஒட்டகப்பால்: ஆய்வு முடிவு!

சர்க்கரை வியாதியை ஒட்டகப்பால் குறைக்குமென புதியதொரு ஆராய்ச்சி முடிவு தெரிவித்துள்ளது. பிகானரியிலுள்ள டயபட்டிக்ஸ் அன்ட் கேர் ரிசர்ச் சென்டரில் பணியாற்றும் மருத்துவர் ராஜேந்திர அகர்வாள் நடத்திய இது தொடர்பான ஆய்வில் இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.

எகிப்திலுள்ள கெய்ரோ பல்கலை கழகத்தில் 54 சர்க்கரை நோயாளிகளுக்கு நடத்திய ஆய்விலும் ஒட்டகப்பால் சர்க்கரை நோயைக் குணமாக்குகிறது என்பது உறுதியாகியுள்ளது. இன்சுலின் ஊசி மருந்து தினசரி உபயோகித்துக் கொண்டிருந்த 27 பேருக்குத் தினசரி அரை லிட்டர் ஒட்டகப்பால் கொடுத்து சோதிக்கப்பட்டது. இந்த 27 பேருக்கும் சர்க்கரை வியாதி நாளுக்கு நாள் குறைந்து வருவது உறுதியானது. ஒட்டகப்பால் குடிக்காத மற்ற 27 நோயாளிகளின் நோயில் மாற்றமில்லை.

ஒட்டகப்பாலில் இரும்பு, துத்தநாகம், தாமிரம் முதலான தனிமங்களும் வைட்டமின் C யும் அதிக அளவில் அடங்கியுள்ளதும் கெய்ரோ நேசனல் நியூட்ரீசியன் இன்ஸ்டிடியூட்டில் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இப்புதிய கண்டுபிடிப்புக்கும் அரபு நாடுகளில் வசிப்போருக்குச் சர்க்கரை நோய் அதிக அளவில் இல்லாமல் இருப்பதற்கும் தொடர்பிருக்கலாம் என்ற கருத்து வலுவாகியுள்ளது.

நன்றி: www.inneram.com

Thursday, September 6, 2012

மக்களில் பெரும்பான்மையினர் கயவர்களின் பின்னால்!

மனிதன் சபல புத்தியுடையவனாகவும், பலகீனமாகவும் படைக்கப்பட்டுள்ளான். அதே சமயம் அவனது சுய புத்தியில் அபார நம்பிக்கையுடையவனாகவும் இருக்கின்றான். தன் புத்தியில் நல்லவையாகப்படுபவை அனைத்தையும் உறுதியாக நம்பி செயல்பட ஆரம்பித்து விடுகிறான். அவனின் இந்தச் செயல்பாடுகளின் பலனை இந்த உலகில் பார்ப்ப முடிவதில்லையே! நாளை மறுமையில் பார்க்க வேண்டிய நிலையில் இருக்கின்றான். 100 வயது கிழவனாக இருந்தாலும் தனது அனுபவத்தின் மூலம் இவ்வுலகில் அச்செயல்பாடுகளின் உண்மை நிலைகளை அறிந்துக் கொள்ள முடியாதே என்பதை எல்லாம் அவன் சிந்திப்பதில்லை. அதனை சிந்தித்துணரும் ஆற்றல் அவனுக்கில்லை. அதனையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான் .
 
நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை விரும்பலாம். ஆனால் அது உனக்கு தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். (2:216)
எனவே மார்க்க விஷயத்தில் அவனது சுய சிந்தனையைத் தூக்கி எறிந்து விட்டு அல்லாஹ்வின் கட்டளையை அப்படியே செயல்படுத்தினால் மட்டுமே அவனுக்கு மறுமையில் வெற்றியுண்டு.
ஆதம்(அலை) அவர்கள் மனித வர்க்கத்தினரிலே ஓரளவு மறு உலக அனுபவம் பெற்றவர்கள், சுவர்க்கத்தில் வாழ்ந்தவர்கள் ஷைத்தானின் சேட்டைகளை நேரடியாகக் கண்டு அவற்றின் விளைவுகளையும் அனுபவித்து பெரும் துன்பப்பட்டு சீரழிந்து பின் சீர் பெற்றவர்கள். அப்படிப்பட்ட ஆதம்(அலை) அவர்களைக் கூட இவ்வுலகில் வந்து தன் சுயபுத்தியைக் கொண்டு நல்லது கெட்டதைத் தீர்மானித்து வாழும்படி அல்லாஹ் அனுமதிக்கவில்லை; தனது வழிகாட்டலின்படி மட்டுமே இவ்வுலகில் வாழ வேண்டும். அப்படி வாழ்பவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும். அவர்களுக்குப் பயமோ துக்கமோ இல்லை. அதற்கு மாறாக அல்லாஹ்வின் வழிகாட்டலை விட தங்களின் சொந்த புத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்வுலகில் வாழ்பவர்கள் தோல்வியடைந்து நரகைச் சேர்வார்கள். அதில் என்றென்றும் தங்கி விடுவார்கள் என அல்லாஹ் தெளிவாகவே அறிவித்து விட்டான். அவ்வசனங்கள் வருமாறு:

Wednesday, September 5, 2012

சத்தியம் செய்ய தயாரா? ஹைதர் அலி ஆலிம் அழைப்பு

அல்லாஹ்வின்திருப்பெயரால்...
 
சத்தியம் செய்ய தயாரா? சம்சுல் இஸ்லாம் சங்கத்தினருக்கு மௌலவி ஹைதர்அலி ஆலிம் அழைப்பு:
 
மௌலவி ஹைதர் அலி ஆலிம் அவர்கள், தன் மீது சம்சுல் இஸ்லாம் சங்கத்தினர் பொய்யான குற்ற்ச்சாட்டுக்களை கூறி வருவதில் மிகவும் மன வேதனை அடைந்து, நேற்று (04.09.12) இஷாவுக்குப்பின் சித்தீக் பள்ளியில் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்குட்பட்ட ஜமாத்தார்கள் முன்னிலையில்  கீழ்கண்டவாறு அறிவித்தார்கள்:
 

அதிரையில் உள்ள ஏதாவது ஒரு ஜும்'ஆ பள்ளியில் வெள்ளிக்கிழமை அஸருக்குப்பின் குத்பா மேடையில் ஒளுவுடன் ஏறி நின்று, " நான் என் வீடு தேடி வந்த சம்சுல் இஸ்லாம் சங்கத்தினரை அவமதிக்கவுமில்லை, அந்த எண்ணம் இலட்சத்தில் ஒரு பாகம் கூட என் உள்ளத்திலும் இல்லை, மேலும் நான் எந்த இயக்கத்தினருடன் சேர்ந்து கொண்டு ஊர்ஒற்றுமைக்கு கேடு விளைவிக்கவுமில்லை, ஊரை பிரிக்கவேண்டுமென்ற எண்ணம் சிறிதும் என் மனதில் இல்லை. நான் சொல்வதுபொய்யானால் எல்லாம் வல்ல அல்லாஹ் என்னை அழித்து விடுவானாக என்று சத்தியம் செய்யதயாராக இருக்கிறேன்.
 
அதுபோல், என் மீது குற்றம் சுமத்தும் என் வீடு தேடிவந்த சம்சுல் இஸ்லாம் சங்கத்தினரும் முன் வந்து "ஹைதர் அலி ஆலிம் எங்களை அவமதித்தார், இயக்க இளைஞர்களுடன் சேர்ந்து கொண்டு ஊரை பிரிக்க முயற்சிக்கிறார், நாங்கள் உண்மையை தான் சொல்கிறோம், மாறாக நாங்கள் சொல்வது பொய்யென்றால்  எல்லாம் வல்ல அல்லாஹ் எங்களை அழித்துவிடுவானாக "என்று என்னை போல் குத்பா மேடையில் ஏறி சத்தியம் செய்ய வேண்டும்.
 
Thanks to: Mk Aboobacker

ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் விளக்கம்!

அஸ்ஸலாமுஅலைக்கும்.

நமதூர் அதிராம்பட்டினம், மார்க்க ரீதியிலும் இந்தியச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டும் வாழும் மக்களைக் கொண்ட ஊராக இருந்து வருகிறது. நமதூரில் நடக்கும் நிகழ்வுகளில் தேவையானபோது தலையிட்டு, மார்க்க ரீதியிலும் நம் நாட்டுச் சட்ட ரீதியிலும் தீர்வுகளை வழங்க நமது முன்னோர்களால் தோற்றுவிக்கப்பட்ட சம்சுல் இஸ்லாம் சங்கம் கடந்த 92ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.


உள்ளூர் முஸ்லிம் குடும்பங்களிடையே ஏற்படும் சிவில் விவகாரங்களில், குறிப்பாக திருமணம், விவாகரத்து, சொத்துப் பங்கீடு போன்றவற்றில் மார்க்க அறிஞர்களிடம் தகுந்த ஆலோசனை பெற்றுத் தீர்வுகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில், நமதூருக்கு மார்க்கச் சொற்பொழிவுக்காக சித்தார்கோட்டையிலிருந்து அழைத்துவரப்பட்ட கண்ணியத்திற்குரிய ஹைதர் அலி ஆலிம் நமது உள்ளூர் நடவடிக்கைகளுக்கு ஊறு விளைக்கும்படியாக இயக்க சார்பு இளைஞர்களைத் தூண்டி விட்டதால் எழுந்துள்ள அமைதியின்மைக்குத் தீர்வு காண வேண்டியும், அவர் வசிக்கும் பகுதி ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவின் எல்லைக்குள் இருக்கும் காரணத்தாலும், கடந்த 28 ஆம் தேதி அன்று ஷம்சுல் இஸ்லாம் சங்கதிற்கு நேரில் வந்து விளக்கம் தரும்படிக் கோரப்பட்டது.

ஜனாப் ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கும் தக்வா பள்ளி செயலாளருக்கும் இடையே வழக்கு நடந்து வருவதாலும், பொதுவில் பேசுவது வழக்கைப் பாதிக்கும் என்பதாலும், தன்னால் கலந்து கொள்ள முடியாதென்றும் தெரிவித்த நிலையில், 29அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு ஷம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் ஹைதர் அலி ஆலிம் அவர்களது வீட்டிலேயே சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றபோது, வீடு தேடி வந்தவர்களை முகமன் கூறிச் சந்திக்கும் இஸ்லாமியப் பண்பாடின்றி, சுமார் 10-20 நிமிடங்கள் வீட்டுக்கு வெளியே காத்திருக்க வைத்துவிட்டு, "சித்தீக் பள்ளியில் போய் இருங்கள், பேசலாம்" என்று தெரிவித்தார்.

அவ்வாறே, சங்க நிர்வாகிகளும் சித்தீக் பள்ளிக்குச் சென்றபோது, இயக்க சார்பு இளைஞர்களையும் உடன் வைத்துக்கொண்டு "இப்போது பேசலாம்" என்று சொன்னார். அதற்கு சங்க நிர்வாகிகள், “இயக்க சார்பு இளைஞர்களை வரவழைத்துக் கொண்டு சங்க நிர்வாகிகளுடன் பேச விரும்புவது சரியல்ல. வெளியூரிலிருந்து எத்தனையோ ஆலிம்கள் கற்கவும், கற்றுக் கொடுக்கவும் வந்துள்ளனர். ஆனால், உங்களைப் போன்று இயக்க சார்பு இளைஞர்களுடன் இணைந்து முஹல்லா சங்கத்தையும் அதன் நிர்வாகிகளான உள்ளூர் பிரமுகர்களையும் அவமதித்ததில்லை” என்று சொல்லி, அவருடன் பேசாமல் திரும்பி விட்டனர்.

அதிரையில் பல்வேறு அரசியல் கட்சி சார்பு இயக்கங்களும் சமுதாய இயக்கங்களும் இயங்கி வந்தாலும், உள்ளூர் அமைதிக்கு ஊறு விளைக்கும் அசாதாரண நடவடிக்கைகளின்போதும் சட்ட ரீதியான வழிமுறைகளில் தலையிட்டுத் தீர்வு காணும் அதிரை முஸ்லிம்களின் அங்கீகாரம் பெற்ற முஹல்லா சங்கங்களில் ஷம்சுல் இஸ்லாம் சங்கமும் ஒன்று. அவ்வகையில், ஜனாப் ஹைதர் அலி ஆலிம் மற்றும் தக்வா பள்ளி கமிட்டியிடையே ஏற்பட்டுள்ள வழக்கு காரணமாக ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அமைதியின்மை ஏற்படுவதை அனுமதிக்க முடியாது என்ற அடிப்படையில், இப்பகுதிக்குட்பட்ட ஆயிஷா மகளிர் மன்றத்தில் நடந்துவந்த ஜனாப். ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பயானை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என முடிவெடுக்கப்பட்டது.

உள்ளூர் நடவடிக்கைகளில் பொறுப்புள்ள முஹல்லா சங்கத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட நடவடிக்கையே இது. ஜனாப் ஹைதர் அலி ஆலிம் அவர்களைப் போன்ற தகுதியுடைய உள்ளூர் மார்க்க அறிஞர்களைஆலோசகர்களாகக் கொண்டுள்ள ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் ஊர் சார்ந்த நடவடிக்கைகளில் தனி நபர்கள் தலையிடுவது, முஹல்லாவாசிகளை அவமதிக்கும் செயலாகும். முஹல்லாவுடைய கட்டுப்பாடு மற்றும் அமைதிக்கு ஊறு விளைக்கும் எத்தகைய நடவடிக்கையையும் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. தேவையெனில், மார்க்கம் மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் என்பதையும் முஹல்லாவாசிகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

***********

கீழ்கண்ட விளக்கங்கள் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சிப்பவர்களுக்கும், விளக்கம் வேண்டுபவர்களுக்கும் போதுமானதாக இருக்கும் என்றும் நம்புகிறோம்:


1) ஹைதர் அலி ஆலிம் சித்தீக் பள்ளி சொத்து விவகாரத்தில்தலையிட்டதற்காகவா அவர்மீது நடவடிக்கை?

இல்லை. மேலுள்ள விளக்கத்தில் 2,3 & 4 ஆம் பத்திகளில் சொல்லப்பட்ட காரணங்களுக்காகவும், முஹல்லா சங்க நிர்வாகிகளை அவமதித்து, உள்ளூர் இளைஞர்களைத் தூண்டியதற்காகவுமே ஆயிஷா மகளிர் மன்றத்தில் அவரது பயான் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேற்கொண்டு தவறான பிரச்சாரங்களைப் பரப்பாமலிருக்க பெரிய ஜும்ஆ பள்ளி நிர்வாகத்திற்கும் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

2) ஹைதர் அலி ஆலிம் அவர்களை ஊரைவிட்டு வெளியேறும்படி சங்கம் நிர்ப்பந்தித்ததா?

இல்லை. பிரச்சினை பெரிதாகாமலிருக்க பொதுவில் பயான் செய்வதற்கு மட்டுமே தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இது பொது அமைதியை ஏற்படுத்தும் நோக்கிலும், பிரச்சினை மேலும் வலுக்காமல் இருக்கவும் எடுக்கப்பட்ட சங்கத்தின் அதிகார வரம்புக்குட்பட்ட நடவடிக்கையே அன்றி,தனி நபர் மீதான வெளியேற்றும் நடவடிக்கை அல்ல.

3) சம்சுல் இஸ்லாம் சங்கம் ஹைதர் அலி ஆலிமை அவமதித்ததா?

இல்லை. மேலே 2 & 3 ஆம் பத்திகளில் சொன்னபடி, அவரது விளக்கம் பெறும் நோக்கத்தில் கண்ணியமாக அழைக்கப்பட்டதை அவர் ஒவ்வாத காரணங்களைச் சொல்லி மறுத்ததால், பொதுவில் அவருக்கு சங்கடம் ஏற்படாமலிருக்க, அவரது இல்லத்திற்குச் சென்ற உள்ளூர் முக்கியஸ்தர்களான சங்க நிர்வாகிகளைச் சந்திக்காமல் அவர்தான் அவமதித்தார். மேலும், ஜனாப். ஹைதர் அலி ஆலிம் அவர்களை அதிரைக்கு அழைத்து வந்து, அதன் முஹல்லாவுக்குட்பட்ட சித்தீக் பள்ளி, தக்வா பள்ளி மற்றும் இமாம் ஷாஃபி பள்ளிகளில் பொறுப்பான பதவிகளைக் கொடுத்து கண்ணியப்படுத்தியதும் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்டவர்களே.

4) மார்க்க அறிஞரின் பயானைத் தடுப்பது சரியா?

சில அசாதாரண சந்தர்ப்பங்களில் மஷ்வரா அடிப்படையில் எடுக்கப்படும் அவசர நடவடிக்கையின்படி இது சரியே.

5) ஹைதர் அலி ஆலிமின் பயான்களால் நமதூர் மக்களிடம் மார்க்க விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதே?

ஓரளவு உண்மையே. எனினும், அல்லாஹ் - ரசூல் (ஸல்) அவர்களின் போதனைகளை எடுத்துச் சொல்லும் பல அறிஞர்களும் பேச்சாளர்களும் அதிரையில் உளர். அவர்களை முறையாகப் பயன்படுத்தி இருந்தாலும் அத்தகைய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இன்ஷா அல்லாஹ் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் இவ்விசயத்திலும் தொடர்ந்து கவனம் செலுத்தும்.


6) சித்தீக் பள்ளி சொத்து விவகாரத்திற்காக ஹைதர் அலி ஆலிமை பலி கடாவாக்குவது நியாயமா?


ஜனாப் ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கும் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கும் எத்தகைய விரோதமும் இல்லை. சித்திக் பள்ளி சொத்து விவகாரத்தை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திடம் ஒப்படைத்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சியபடி, உலமாக்களின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முயற்சி செய்வோம்.

7) ஹைதர் அலி ஆலிம் அவர்கள்மீது வழக்குத் தொடுத்தவர் மீது சங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?


இரு தரப்பிற்கும் இடையே நீதிமன்ற வழக்கு நிலுவையிலிருக்கும்போது முஹல்லா சங்கம் சமாதான நடவடிக்கையில் மட்டுமே ஈடுபட முடியும். அவ்வகையில்தான் இரு தரப்பையும் சுமூகமாகப் பேச வைத்துப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் முதலில் ஜனாப் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் சங்கத்திற்கு அழைக்கப்பட்டதும், வர மறுத்தபோது நிர்வாகிகள் அவரது இல்லத்திற்குச் சென்றதும் நடந்தது. ஜனாப் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் நிர்வாகிகளை அவமதிக்காமல் ஒத்துழைத்திருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சியபடி நியாயமான தீர்வு எடுக்கப்பட்டிருக்கும்.


மேலும், சம்பத்தப்பட்ட நபரிடமும் பேசியுள்ளோம், கேசைத் திரும்பப் பெறும்படியும் கூறியுள்ளோம், ஆனால் இது இருட்டடிப்புச் செய்யப்பட்டு, மக்கள் மத்தியில் குழப்பம் விளைவிக்கும் எவராக இருந்தாலும் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

******************

அன்பிற்குரியவர்களே! நமதூர் அதிராம்பட்டினம் உள்ளூரிலிருந்தும் வெளியூரிலிருந்தும் பிழைப்பு தேடிவந்த பலரை ஆதரித்தும், கண்ணியப்படுத்தியுமே வந்துள்ளது. கண்ணியத்துக்குரிய ஆலிம்கள் மட்டுமின்றி, ஆசிரியர்கள் மற்றும் வணிகர்கள் என்ற பாகுபாடின்றி அனைவரையும் ஆதரித்து வருகிறோம். எனினும், அவர்கள் எல்லோரும் முஹல்லா ஜமாத்துகளுக்குக் கட்டுப்பட்டவர்களாகவே இருந்து வருகின்றனர்.

ஜனாப். ஹைதர் அலி ஆலிம் அவர்கள் சில வருடங்களாக நமதூர் உலமாக்களின் எத்தகைய ஆலோசனையையும் ஏற்காமல், தன்னிச்சையாகச் செயல்படுவதோடு, சித்தீக் பள்ளியின் சொத்து விவகாரத்தில் இன்னொரு முஹல்லா இளைஞர்களை அழைத்துவந்து அமைதியின்மையை ஏற்படுத்தியதை அனைவரும் அறிவர். அப்பகுதியில் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் செயல்பட்டுவரும் நிலையில் உள்ளூர் நடவடிக்கையில் ஹைதர் அலி ஆலிம் செயல்பட்டது வரம்புமீறிய நடவடிக்கை என்பதோடு முஹல்லாவாசிகளின் உணர்வுகளைப் பொருட்படுத்தாத தன்னிச்சையான போக்கு என்பதையும் கவனத்தில் கொண்டு, சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் ஊர் நன்மை நாடிய நடவடிக்கைகளுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை நேரிலோ அல்லது எழுத்துப் பூர்வமாகவோ வழங்குவதே நன்மை பயக்கும்.

அவ்வகையில், பரபரப்பாகச் செய்தி வெளியிடுகிறோம் என்ற ஆர்வத்தில் வலைத்தளம் மற்றும் இணையதளங்களில் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் பதிவுகளும் தனிநபர் தளங்களும் சட்ட நடவடிக்கைக்குட்பட்டது என்பதை உணர்ந்து பொறுப்பாகச் செயல்படும்படி வேண்டுகிறோம். இவ்விசயம் தொடர்பாக மேலதிக விளக்கம் வேண்டுவோர் சங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களை தொடர்பு கொள்ளலாம்.

இப்படிக்கு,
ஷம்சுல் இஸ்லாம் சங்கம்
நிர்வாகம் – அதிரை

மீள்பதிவு

Tuesday, September 4, 2012

அன்புக்குறிய‌ அதிரை முஸ்லிம் சகோதர, ச‌கோத‌ரிகளுக்கு‏

அஸ்ஸ‌லாமு அலைக்கும் வ‌ர‌ஹ்ம‌த்துல்லாஹி வ‌ப‌ர‌காத்துஹு....

அன்புக்குறிய‌ அதிரை முஸ்லிம் சகோதர, ச‌கோத‌ரிகளுக்கு

க‌ட‌ந்த சில‌ தின‌ங்க‌ளாக ந‌ட‌ந்து வ‌ரும் பிர‌ச்சனைக‌ளின் அடிப்படைகளையும் அத‌ன் காரண‌ங்க‌ளையும் சிந்திக்கும்போது அல்லாஹ் ஸுபுஹான‌ஹு வதாஆலா ஸூரா அன்க‌பூத் அத்தியாய‌த்தில் பின்வ‌ரும் ஆய‌த்துக‌ளில் ந‌ம்மை எச்ச‌ரிக்கும் விஷ‌ய‌ங்க‌ளையும் ஆராய்வ‌து ந‌ம்மீது அவ‌சிய‌மாக‌ இருக்கிற‌து.

அல்லாஹ் கூறுகிறான்....
أَحَسِبَ النَّاسُ أَن يُتْرَكُوا أَن يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ
29:2. “நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம் என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா?

وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ ۖ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ
29:3. நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம் - ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்; இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான்.

أَمْ حَسِبَ الَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ أَن يَسْبِقُونَا ۚ سَاءَ مَا يَحْكُمُونَ
29:4. அல்லது: தீமை செய்கிறார்களே அவர்கள் நம்மைவிட்டும் தாங்கள் தப்பிக் கொள்வார்கள் என்று எண்ணிக் கொண்டார்களா? அவர்கள் (அவ்வாறு)தீர்மானித்துக் கொண்டது மிகவும் கெட்டது.

مَن كَانَ يَرْجُو لِقَاءَ اللَّهِ فَإِنَّ أَجَلَ اللَّهِ لَآتٍ ۚ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
29:5. எவர் அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று நம்புகிறார்களோ அவர்கள் (அதற்காக நல்ல அமல்களைச் செய்து கொள்ளட்டும்); ஏனெனில் அல்லாஹ்(அதற்காகக் குறித்துள்ள) தவணை நிச்சயமாக வருவதாக இருக்கிறது; அவன் (யாவற்றையும்)செவியேற்பவனாகவும், நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான்.

وَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَلَيَعْلَمَنَّ الْمُنَافِقِينَ
29:11. அன்றியும், நம்பிக்கை கொண்டவர்களை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்; நயவஞ்சகர்களையும், அவன் நிச்சயமாக நன்கறிவான்.

இன்று ந‌ட‌க்கும் பிர‌ச்ச‌னைக‌ள் அனைத்தும் ந‌ன்மைக்கும் தீமைக்கும் ந‌ட‌க்கும் போராட்ட‌மாகும். ஷைத்தானிய‌ கொடியை தூக்குவோருக்கும் அல்லாஹ்வின் கொடியைத் தூக்குவோருக்கும் ந‌ட‌க்கும் பிர‌ச்ச‌னையாகும்.வ‌ண‌க்கம் அல்லாஹ்வுக்கு ம‌ட்டுமே சொந்த‌ம்,அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையில் எந்த‌ இடைத்த‌ர‌க‌ர்க‌ளும் இல்லை என்று கூருவோருக்கும் , இல்லை வ‌ண‌க்க‌ம் என்ப‌து அல்லாஹ்வுட‌ன் ம‌ற்ற‌வ‌ர்க‌ளையும் வ‌ணங்குவ‌து அட‌க்க‌ம் என்றும் அத‌ற்காக எங்க‌ளை இட‌த்த‌ரக‌ர்க‌ளாக‌ ஆக்கி எங்க‌ளுக்கு கூலி த‌ர‌வேண்டும் என்று கொடி தூக்கி இருக்கும் கோஷ்டிக்கும் ந‌ட‌க்கும் போராட்ட‌மாகும்.

துர‌திஷ்ட‌வ‌ச‌மாக சில‌ ந‌ல்ல‌ முஸ்லிம் ச‌கோத‌ர‌ர்க‌ள், ச‌ங்க பொருப்பாள‌ர்க‌ள், ஊர்ம‌க்க‌ள் நன்ன‌ம்பிக்கையுட‌ன் தேர்ந்தெடுத்த‌ ப‌த‌வியில் இருக்கும் பொருப்பாள‌ர்க‌ள் ஷைத்தானின் வ‌லையில் சிக்கி ந‌ய‌வ‌ஞ்ச‌க‌ர்க‌ளின் பேச்சை ந‌ம்பி அவ‌ர்க‌ளுக்கு ஒத்தாசையாக‌ இருப்பது மிக‌வும் வ‌ருந்த‌த்த‌க்க‌து.

இத்த‌கைய‌ வ‌லையில் சிக்கிக்கொண்ட‌ ந‌ல்ல‌ ச‌கோத‌ர‌ர்க‌ளுக்கு நாம் சொல்வ‌தெல்லாம் "அன்புக்குறிய ச‌கோத‌ர‌ர்க‌ளே மேற்க‌ண்ட‌ அல்லாஹ்வின் ஆய‌த்துக்க‌ளை ந‌ன்கு ப‌டித்து சிந்தித்துப்பாருங்க‌ள்.நீங்க‌ள் எந்த‌ நிலையில் யாருட‌ன் இருக்கிரீர்க‌ள் என்ப‌தை உங்க‌ளுடைய‌ நெஞ்சில் கை வைத்து உங்க‌ளிட‌மே கேளுங்க‌ள்."

உங்க‌ளை அல்லாஹ் சோதிக்கிறான் என்ப‌தை நீங்க‌ள் அறிய‌வில்லையா? நீங்க‌ள் உண்மையாள‌ர்க‌ளுட‌ன் இருக்கிறீர்க‌ளா, அல்ல‌து அல்லாஹ்வுக்கு எதிரான‌ போர்செய்யத் துடிக்கும் ந‌ய‌வ‌ஞ்ச‌க‌ர்க‌ளுட‌ன் இருக்கிறீர்க‌ளா என்ப‌தை அல்லாஹ் இந்த‌ சோத‌னையின் மூல‌ம் வெளிப்ப‌டுத்த‌ப் போகிறான் என்ப‌தை நீங்க‌ள் என்னிப்பார்க்க‌வில்லையா?

உல‌மாக்க‌ள் என்ற‌ போர்வையில் த‌ங்க‌ள் குடும்ப‌ க‌வுர‌வ‌ம் காப்ப‌த‌ற்காக‌ குர் ஆனை த‌ங்க‌ளுக்கு சாத‌க‌மாக‌ வ‌லைக்க‌ முனையும் சில‌ போலிமூசாக்க‌ளுக்கு நாம் கூறுவ‌து " நீங்க‌ள் ம‌க்க‌ளை வ‌ழிகெடுக்கும் ச‌திக‌ளை இத்துட‌ன் நிறுத்தாவிட்டால் அல்லாஹ்வின் த‌ண்ட‌னைக்காக‌ காத்திருங்க‌ள்"

அனைத்து முஸ்லிம் ச‌கோத‌ர‌ர்க‌ள், ச‌கோத‌ரிக‌ள் ரஸூலுல்லாஹ்(ஸ‌ல்)அவ‌ர்க‌ள் கால‌த்தில் ந‌டந்த‌ இந்த‌ விஷ‌யத்தை சிந்திக்க‌ வேண்டுகிறோம்.

ம‌தீனாவிலிருந்து வெளியூருக்கு ரஸூலுல்லாஹ்வுட‌ன்(ஸ‌ல்) அன்ஸாரி ஸ‌ஹாபாக்களும் முஹாஜிர் ஸ‌ஹாபாக்க‌ளும் சென்றிருக்கும்போது சிறிய‌ பிர‌ச்ச‌னையின் கார‌ண‌மாக‌ ஒரு அன்ஸாரி ஸ‌ஹாபி ம‌ற்ற அன்ஸாரி ஸ‌ஹாபாக்க‌ளை த‌ன‌க்கு ஆத‌ர‌வாக‌வும் முஹாஜிர் ஸ‌ஹாபி ம‌ற்ற‌ முஹாஜிர் ஸ‌ஹாபாக்க‌ளை த‌ன‌க்கு ஆத‌ர‌வாக‌வும் அழைக்க‌ பெரும் பிர‌ச்சனை உருவாக‌ இருந்த‌ நிலையில் ரஸூலுல்லாஹ்(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் அறிந்த‌வுடன் விரைந்து அங்கு சென்று அவ‌ர்க‌ளிட‌ம் கேட்டார்க‌ள் أبدعوى الجاهلية وأنا بين ظهرانيكم இஸ்லாத்திற்கு முந்தைய‌ இருண்ட‌ அறியாமைக்கால‌த்தின் செய‌லான‌ இன‌,குடும்ப, கோத்திர‌ வாத‌த்தையா செய‌ல்படுத்த‌ முனைகிறீர்க‌ள் என்று வ‌ண்மையாக‌ க‌ண்டித்தார்க‌ள்.

இன்று இந்த‌ இர‌ட்டை வேட‌க்கார‌ர்க‌ள் கூறுவது போல் வெளியூர் ம‌னித‌ர் ந‌ம் ஊரில் பிர‌ச்சார‌ம் செய்ய‌க்கூடாது என்ப‌தை ஒரு விவாத‌த்திற்காக‌ ஏற்றுக்கொண்டால், இஸ்லாம் ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ மைல்களுக்கு அப்பாலிருந்து இங்கு வ‌ந்திருக்க வாய்ப்பில்லை. இன்று அந்த‌ ஸஹாப‌ப்பெரும‌க்கள் வ‌ந்தால் இந்த‌ ந‌ய‌வ‌ஞ்ச‌க‌ர்க‌ள் தாயிப் ந‌க‌ர‌த்து ம‌க்க‌ள் ரஸூலுல்லாஹ்(ஸ‌ல்) மீது க‌ல்லெறிந்த‌து போன்று எறிவார்க‌ளா? அல்ல‌து ப‌னூ ஹ‌னீபா என்ற‌ கோத்திர‌த்தைச்சார்ந்த‌ முஸைல‌மா என்ற பொய்ய‌ன் பனூ ஹ‌னீபா கோத்திர‌, இன‌ வாத‌த்தை தூன்டி ரஸூலுல்லாஹ் மீதும் ஸ‌ஹாபாக்கள் மீதும் போர் தொடுத்து ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ ஸஹாபாக்களை கொன்ற‌து போன்று கொல்வார்க‌ளா?

நம் ஊர் ம‌க்க‌ள் எத்த‌னை நாடுக‌ளில் ப‌ர‌வி வேலை செய்கிறார்க‌ள்? ஏன் இந்த‌ இர‌ட்டை வேட‌க்கார‌ர்களின் குடும்பத்தில் எத்த‌னை பேர் எத்த‌னை பேர் சிறிலங்கா மற்றும் பல்வேறு நாடுக‌ளில் இமாம்களாக இருந்துக்கொண்டு அடிப்படை வாழ்வாதாரத்தை பூர்த்திசெய்த வண்ணம் வாழ்கின்றனரா இல்லையா? சிந்திக்க வேண்டாமா? பாரம்பரியம் பெருமை பேசும் இவர்களிடம் கைகூலி பெற்றுகொண்டு சத்தியத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்ய சொல்கின்றனரா?

ஊர் ச‌ங்க‌ நிர்வாகிக‌ள், மற்றும் அதிகார பத‌வியில் இருப்ப‌வ‌ர்களுக்கு

உங்க‌ளுக்கு அல்லாஹ் பத‌வியைத் த‌ந்திருக்கிறான் என்ப‌த‌ற்காக‌ நீங்க‌ள் அத‌னை துஷ்பிர‌யோக‌ம் செய்ய‌ முனையாதீர்க‌ள்.உங்க‌ளை விட‌வும் மிக‌ப்பெரும் ப‌த‌வியை பிர அவ்ன், ந‌ம்ரூதுக்கு அல்லாஹ் கொடுத்தான். அவ‌ர்க‌ள் அத‌னை துஷ்பிர‌யோக‌ம் செய்த‌தின் கார‌ண‌மாக‌ ந‌ம்ரூத் செருப்பால் அடிக்க‌ப்ப‌ட்டு கொல்ல‌ப்பட்டான் என்பதை நாம் கேள்விப்பட்டு இருக்கின்றோம். நம் கண்முன்னே லிபியாவின் கடாபி உங்க‌ளை விட‌வும் இல‌ட்ச‌க்க‌ண‌க்கில் உய‌ர்ந்த‌ ப‌த‌வியை, ஆப்ரிக்காவின் மிக‌ப்பெறிய எண்ணை வ‌ள‌ம்மிக்க‌ நாட்டின் அதிகார‌த்தை 40 வ‌ருட‌ங்களாக‌ கொடுக்க‌ப்ப‌ட்டிருந்து அத‌னை துஷ்பிர‌யோக‌ம் செய்து உண்மையான உல‌மாக்க‌ளை கொடுமைப்ப‌டுத்திய‌தின் கார‌ண‌மாக‌ அல்லாஹ் க‌டாபியின் முடிவை எப்ப‌டி ஆக்கினான் என்ப‌தை நாம் க‌ண்கூடாக‌ க‌ண்டோம். செருப்பால் அடித்துக் கொல்ல‌ப்ப‌ட்டு அவ‌ன் ச‌ட‌ல‌த்தை இரைச்சிகள் பாதுகாக்க‌ப்ப‌டும் அரையில் 7 நாட்க‌ளுக்கும் மேலாக‌ வைக்க‌ப்ப‌ட்டு கேவ‌ல‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டான். இத்த‌கைய‌ நிலைக்கு உங்க‌ளை நீங்க‌லே அறியாம‌ல் ஷைத்தான் கொண்டு போகும்முன் உங்க‌ளை பாதுகாத்துக்கொள்ளுங்க‌ள்.

த‌ப்லீக் ஜ‌மாஅத் ச‌கோத‌ர‌ர்க‌ளுக்கு

இந்த‌ ந‌ய‌வ‌ஞ்ச‌க‌ர்க‌ள் இப்பொழுது வெற்றிய‌டைந்தால் நாளை வெளியூர்க‌ளிலிருந்து ஜமாஅத் வ‌ருவ‌தை த‌டை செய்ய முனைவார்க‌ள். இப்ப‌டித்தான் அவ‌ர்க‌ளை ஷைத்தான் அவ‌ர்க‌ளை ம‌ண் தின்னும் வரை கொண்டு செல்வான். இத‌ன் கார‌ண‌மாக‌ நீங்க‌ளும் ஜ‌மா அத்தில் வெளியூர் செல்வ‌தை த‌டை செய்ய‌லாம். வெளியூர்கார‌ர்க‌ள் இங்கு பிரச்சார‌ம் செய்ய‌க்கூடாது என்ற‌ அதே விவாத‌த்தை முன்வைப்பார்க‌ள்

மேண்மைக்குறிய‌ உண்மையான உல‌மாக்க‌ளுக்கு.

இந்த‌ க‌ப‌ட‌தாரிக‌ள் நாளை வெளியூர் இமாம்க‌ளை நாங்க‌ள் பின்ப‌ற்ற‌மாட்டோம். ஷாஃபி, ஹ‌ன‌ஃபி எல்லாம் வெளி நாடு. என‌வே உள்ளூர் "குட்டி" ஷ‌த்தான்களைத் தான் நாங்க‌ள் இமாம்க‌ளாக‌ பின்ப‌ற்றுவோம் என்று கூறுவ‌து வெகு தூர‌த்தில் இல்லை. ஏன் இன்னும் ஒருப‌டி மேலே சென்று இஸ்லாத்தை வெளி நாட்டிலிருந்து வ‌ந்த‌ ம‌த‌ம் என்று பாசிச‌ வாதிக‌ள் கூறுவ‌து போன்று கூறி, உள்ளூர் "குட்டி"ஷைத்தானிய‌ ம‌த‌ங்க‌ளை பிரச்சார‌ம் செய்ய முனைய‌லாம். க‌ம்யூனிச நாடுக‌ளில் இஸ்லாமிய‌ பெய‌ர் வைப்ப‌தை த‌டை செய்த‌து போன்று த‌டை செய்து மாட‌சாமி, குப்புசாமி என்று த‌ங்க‌ள் பெய‌ர்க‌ளை மாற்றிக்கொண்டாலும் ஆச்ச‌ரிய‌த்திற்கில்லை.

முனாபிக்குக‌ளுட‌ன் சேர்ந்து சூழ்ச்சி செய்யும் போலி(ஆலி)மூசாக்க‌ளுக்கு

நீங்க‌ள் உட‌னே அல்லாஹ்விட‌ம் த‌வ்பாச் செய்து மீளுங்க‌ள். முனாஃபிக்குக‌ளுட‌ன் சேர்ந்து என்ன‌ வ‌ழ‌க்கு தொடுக்க‌லாம் எப்படி ந‌ல்ல‌ உல‌மாக்க‌ளை ப‌லிவாங்க‌ளாம் என்று சூழ்ச்சி செய்வ‌தை உட‌ன‌டியாக‌ நிருத்துங்க‌ள்.இல்லையெனில் எங்க‌ள் இர‌ட்ச‌க‌ன் கூறுவ‌தையே உங்க‌ளுக்கு கூறுகிறோம்.

أَفَأَمِنَ الَّذِينَ مَكَرُوا السَّيِّئَاتِ أَن يَخْسِفَ اللَّهُ بِهِمُ الْأَرْضَ أَوْ يَأْتِيَهُمُ الْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُونَ أَوْ يَأْخُذَهُمْ فِي تَقَلُّبِهِمْ فَمَا هُم بِمُعْجِزِينَ أَوْ يَأْخُذَهُمْ عَلَىٰ تَخَوُّفٍ…………
16:45.

தீமையான சூழ்ச்சிகளைச் செய்யும் அவர்களைப் பூமி விழுங்கும்படி அல்லாஹ் செய்யமாட்டான் என்றோ, அல்லது அவர்கள் அறியாப்புறத்திலிருந்து அவர்களை வேதனை வந்து அடையாதென்றோ அவர்கள் அச்சந்தீர்ந்து இருக்கின்றார்களா?

16:46. அல்லது அவர்களின் போக்குவரத்தின்போதே (அல்லாஹ்) அவர்களைப் பிடிக்க மாட்டான் (என்று அச்சமற்றவர்களாக இருக்கிறார்களா? அல்லாஹ் அவ்வாறுசெய்தால் அவனை) அவர்கள் இயலாமலாக்க முடியாது.

16:47. அல்லது. அவர்கள் அஞ்சிக் கொண்டிருக்கும் பொழுதே (அல்லாஹ்) அவர்களைப் பிடிக்கமாட்டான் (என்று அச்சமற்றவர்களாக இருக்கிறார்களா?) ...........

த‌ங்க‌ள் முன்னோர்க‌ள் செய்த‌ த‌வ‌றுக‌ளை நியாய‌ப்ப‌டுத்த‌ முனைந்து வ‌ழிகேட்டில் விழுந்த‌ ச‌கோத‌ர‌ர்க‌ளுக்கு

உங்க‌ள் முன்னோர்க‌ள் அறிந்தோ அறியாம‌லோ செய்த‌ த‌வ‌றுக‌ளை நியாய‌ப்ப‌டுத்த‌ முனைந்து உங்க‌ளை அறியாம‌ல் அல்லாஹ்வுக்கு எதிராக‌ போர் தொடுக்க‌ முனைந்து விட்டீர்க‌ள். இன்று இந்த‌ அதிரை ம‌க்க‌ள் முன்பு வேண்டுமானால் நீங்க‌ள் உங்க‌ள் முன்னோர்க‌ள் பள்ளி நில‌த்தை திருட‌வில்லை என்ப‌தை நிரூபிக்க‌ முனைய‌லாம். ஆனால் நாளை ம‌றுமை நாளில் அனைத்து ப‌டைப்புக‌ளுக்கும். கோடான‌ கோடி ம‌க்க‌ளுக்கும் முன்னாள் அல்லாஹ்வின் முன்பு என்ன‌ விவாத‌த்தை உங்களால் முன்வைக்க‌ முடியும்? நீங்க‌ள் இப்பொழுது செய்யும் த‌வ‌றை நிருத்தி அல்லாஹ்விட‌ம் த‌வ்பாச் செய்து த‌வ‌று செய்த‌ உங்க‌ள் முன்னோர்க‌ளுக்காக பாவ‌ம‌ன்னிப்பு தேடுங்க‌ள்,அவ‌ர்க‌ளுக்காக‌ ஸ‌தக்கா செய்யுங்க‌ள். அவ‌ர்க‌ள் ஆக்கிர‌மித்த சொத்துக்க‌ளை மீட்டு அல்லாஹ்வின் ப‌ள்ளிவாச‌ல்க‌ளில் ஒப்ப‌டையுங்க‌ள். இதுதான் நீங்க‌ள் உங்க‌ள் முன்னோர்க‌ளுக்கு செய்யும் மிக‌ப் பெரும் உப‌கார‌மாகும். அவ‌ர்க‌ளை அல்லாஹ்வின் வேத‌னையிலிருந்து காப்பாற்றும் உத‌வியாகும்.
இப்ப‌டிக்கு

அதிரையை கடந்து வெளியூர், வெளிநாடு வாழ்
அதிரை முஸ்லிம்க‌ள், ம‌ற்றும் உல‌மாக்க‌ள் குழு
 
Thanks to: moyousuf
 

Saturday, September 1, 2012

ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கு எதிரான சதிகள் அம்பலம்

அன்பான சகோதரர்களே!
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கு எதிராக நடைபெற்று வசம் சதிகளை தோலுரித்த செய்திக்கட்டூரை 'ஹைதர் அலீ ஆலிம்சாவை தூக்கு' என்ற தலைப்பில் வெளியானதை வாசித்திருப்பீர்கள்.
 
 
அன்று சொன்னது அர்த்தமுள்ளது என்று நிரூபிக்கும் வகையில் ஹைதர் அலி ஆலிம்சாவுக்கு எதிரான சதிச்செயல்களை அல்லாஹ்வை மறந்து ஆட்டம்போடும் சண்டாளர்கள் பகிரங்கமாக நடத்திட துவங்கியுள்ளனர்.

சதிகள் குறித்து மேலும் விபரங்கள் அறிய நமது சகோதர வலைத்தளமான அதிரை நிருபரில் வெளியாகியுள்ள செய்தியை காண இங்கே சொடுக்குங்கள்.
 
 
அதிரை நிருபரில் வெளியாகியுள்ள மேற்படி செய்தியுடன் நாங்களும் முழுமையான உடன்படுகின்றோம்.

3:54 وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ ۖ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ
3:54. (அவர்கள்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.
 

இவண்
அதிரை இஸ்லாமிக் மிஷன்
 

Wednesday, August 29, 2012

31.08.2012 துபையில் (ADT) அதிரை தாருத் தவ்ஹீத் ஆலோசணை கூட்டம்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 31.08.2012 மஃரிப் தொழுகைக்குப்பின் துபை, தேரா, நைஃப் ரோட்டில் அமைந்துள்ள தவ்ஹீத் இல்லத்தில் அதிரை தாருத் தவ்ஹீத் (ADT) ஆலோசணை கூட்டம் நடைபெறவுள்ளது. அனைத்து அதிரை தவ்ஹீத் சகோதரர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.

பொருள்:

1. கடற்கரை தெருவில் நடைபெற்று வரும் பெண்கள் மதரஸா மேம்பாடு.

2. பிலால் நகர் பிரச்சார மைய கட்டுமானம்.

என இன்னும் பல...
 
தவ்ஹீத் இல்லம்

டேரா, நைஃப் ரோடு, அல் புத்தைம் பள்ளி (AL FUTTAIM MASJID) எதிர்புறம் அமைந்துள்ள டல்ஃப் (DULF) ஹோட்டல் பின்புறமுள்ள அல் ஜர்வானி பில்டிங், அறை எண்:109, இடைத்தளம். (MEZZANINE FLOOR)

Contact: Mr. Abdul Kader   055 2829759   Mr. Jamaludeen   055 2177618