உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, March 23, 2012

உஷாரய்யா, உஷாரு! அபுதாபியில் அபராதங்கள்

அபுதாபி தெருக்களில் இனி

1. எச்சில் துப்பினால்   - 100 திர்ஹம்
2. சிகரெட் துண்டுகளை போட்டால் - 200 திர்ஹம்
3. பப்புள்காம் மென்று துப்பினால் - 500 திர்ஹம்
4. குப்பைகள் மற்றும் குளிர்பான டின்களை வீசினால் - 500 திர்ஹம்

பிடிபடுபவர்களிடம் மேற்கண்டவாறு ஸ்பாட் ஃபைன் [Spot Fine] வசூலிக்கப்படும் என அபுதாபி முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது.

தெனாவெட்டு பார்ட்டிகள் இனி பர்ஸில் பணத்தோடு செல்வது நல்லது.(!?)

அல்லது

இந்தப் பழக்கங்களை விட்டொழித்தால் எல்லோருக்கும் நல்லது, உங்கள் பர்ஸிற்கும் பாதுகாப்பு, எப்படி வசதி?

தகவல்
அதிரைஅமீன்

படத்தின் மீது சுட்டி பெரிதாக்கி படிக்கவும்


Thursday, March 22, 2012

பகுத்தறிவு என்றால் என்ன?

தங்களை பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்கிறவர்கள் மனிதக் கற்பனையில் குறிப்பாக புரோகிதர்களின் கற்பனையில் படைக்கப்பட்ட எண்ணற்ற கோடிக்கணக்கான பொய்க கடவுள்களை மறுப்பதற்குப் பதிலாக அகில உலகங்களையும், அவற்றிலுள்ள அனைத்தையும், மனிதளையம் படைத்து ஆட்சி செய்யும் அந்த ஒரேயொரு இறைவனையும் மறுத்து வருகிறார்கள். மனிதனும் மற்ற ஐயறிவு பிராணிகளைப் போன்ற ஒரு பிராணியே! அவற்றைப் போல் பிறந்து வளர்ந்து இணைந்து அனுபவித்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகிறவனே! ஓரிறைவன், மறு உலக வாழ்க்கை என்பதெல்லாம் சுத்த ஹம்பக்; மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் மதவாதிகளின் கற்பனை என்று கூறி வருகிறார்கள்.

அவர்களின் பிரதான அடிப்படைக் கொள்கை மனிதனும் எண்ணற்ற பிராணிகளைப் போல் ஒரு பிராணி என்பதேயாகும். மனிதப் பிராணி அல்லாத இதர அனைத்துப் பிராணிகளுக்கும் இருப்பது ஐயறிவு மட்டுமே. ஆனால் மனிதனுக்கு மட்டும் விசேஷமாக ஆறாவது அறிவான பகுத்தறிவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை ஓரிறை மறுப்பாளர்களான பகுத்தறிவு நாத்திகர்களும் மறுக்க மாட்டார்கள்.

முதலில் இந்த பகுத்தறிவு என்றால் என்ன? என்பதை ஆய்வு செய்துவிட்டுப் பின்னர் விசயத்திற்கு வருவோம். இதர பிராணிகளுக்க இருப்பது போல் பார்த்து அறிவது, கேட்டு அறிவது, முகர்ந்து அறிவது, ருசித்து அறிவது, தொட்டு அறிவது என இந்த ஐயறிவுகளும் (ஐம்புலன்களும்) மனிதனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஐயறிவு துணையுடன் ஆய்ந்தறியும் திறனான பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் இற்த பகுத்தறிவு மேலே குறிப்பிட்டுள்ள ஐயறிவுகளின் உதவி கொண்டு மட்டுமே செயல் படமுடியும். இந்த ஐயறிவுகள் வராத – கட்டுப்படாத பல பேருண்மைகளை மறுக்கும் நிலையில் பகுத்தறிவாளர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்வோர் இருக்கின்றனர். அந்த பேருண்மைகளை பின்னர் ஆய்வுக்கு எடுப்போம். 

Tuesday, March 20, 2012

23.03.2012 துபை அவ்காஃப் நிகழ்ச்சியில் கோவை அய்யூப் சிறப்புரை

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

துபை இஸ்லாமிக் அஃபயர்ஸ் & சாரிடபுள் ஆக்டிவிடீஸ் டிபார்ட்மென்ட்

(அவ்காஃப்) சிறப்புடன் நடத்தும்


மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும்
23-03-2012 வெள்ளி மாலை 06:00 மணியளவில்

இடம்:
பாகிஸ்தான் எஜூகேஷனல் அகாடமி அரங்கம்
(அவுது மேத்தா மெட்ரோ ரயில் நிலையம் அருகில் - க்ரீன் லைன்) பர்துபை
PAKISTAN EDUCATIONAL ACADEMY HALL
(Near Oud Metha Metro Station - Green Line)
(Behind Rashid Hospital & Opp. Indian High School)

சிறப்புரையாற்றுபவர்:
கோவை S. அய்யூப் அவர்கள்

தலைப்பு:
தராசில் தரமான அமல் எது?

பெண்களுக்கு தனி இட வசதி மற்றும் வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மேலதிக விபரங்களுக்கு: Mob: 055-2177618/ 050-3509345 / 050-8480401

Pickup Places: Deira Naif Road Khalid Masjid & Near Karachi Darbar

Saturday, March 17, 2012

டிஜிட்டல் அப்பாவிகளின் அந்தரங்கம்! (தினமணி கட்டுரை)

இணையத்தில் உலவுகிறீர்களா? அப்படியெனில் உங்களது பெயர், வயது,பாலினம், வேலை செய்யும் இடம், பிடித்தது,பிடிக்காதது போன்ற சுய விவரங்கள் அடங்கிய அடையாள அட்டையை கழுத்தில் மாட்டிக்கொண்டு சுற்றி வருகிறீர்கள் என்றுதான் பொருள். இணையத்தை போகிற போக்கில் மேயும், அதிலேயே பல மணிநேரங்களைச் செலவிடும், அங்கேயே குடியிருக்கும் 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோருக்கு இதுதான் கதி.

இணையத்தில் யாரும் மறைந்து வாழ முடியாது. எதையாவது செய்துவிட்டு, அதுயாருக்கும் தெரியப்போவதில்லை என்று நினைப்பது மாபெரும் அறியாமை. அனைவரும் கண்காணிக்கப்படுகிறார்கள். ஒவ்வோர் அசைவும் பதிவு செய்யப்படுகிறது. இப்படி நம்மைக் கண்காணிப்பவர்களுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது, நம்மைப் பின்தொடர்ந்து நாட்டின் ராணுவ ரகசியங்களையா தெரிந்து கொள்ளப் போகிறார்கள் என்று நினைக்கிறீர்களா,அப்படியானால், நீங்கள்தான் அப்பாவி நம்பர் 1.

பணம் கொடுக்காமல் கிடைக்கிறது என்பதற்காக எதையாவது பயன்படுத்தினால், அங்கு விற்கப்படும் பொருளே நீங்களாகத்தான் இருப்பீர்கள் என்பது பொருளாதார நிபுணர் ஒருவர் கூறியிருக்கும் அருமையான வாசகம். நடைமுறை வாழ்க்கை, டிஜிட்டல் வாழ்க்கை என இரு வகையான வாழ்க்கையில் மக்கள் அல்லல்பட்டு வரும் இந்த நிலையில் இந்த வாசகம் மிகப் பொருத்தம்.

இதுவரை இணையச் சேவையில் எதையாவது பணம் கொடுத்து வாங்கியிருக்கிறீர்களா, மின்னஞ்சல் அனுப்புவதற்கும் பெறுவதற்கும் கட்டணம் செலுத்தியிருக்கிறீர்களா எனக்கேட்டால், இணையத்தைப் பயன்படுத்தும் பெரும்பாலானவர்களின் பதில் "ஊகூம்' என்பதாகத்தான் இருக்கும். சினிமா டிக்கெட்,சென்ட் பாட்டில், கூலிங் கிளாஸ் போன்றவற்றை வேண்டுமானால் இணையத்தின் மூலம் வாங்கியிருக்கலாம். ஆனால், மின்னஞ்சல்,சமூக வலைத் தளம், சாட்டிங்? ஊகூம்தான்.

வாடிப்பட்டி என்று டைப் செய்தவுடனேயே, அந்த ஊர், எந்த நாட்டில், எந்தமாநிலத்தில் இருக்கிறது, நீங்கள் இப்போது இருக்கும் இடத்திலிருந்து அந்த ஊருக்கு எவ்வளவு தொலைவு, எந்தப் பாதையில் செல்ல வேண்டும், அந்த ஊரின் தலைவர் யார், மக்கள் தொகை எவ்வளவு என்பன உள்ளிட்ட எல்லாத் தகவல்களையும் விரல் சொடுக்கும் நேரத்தில் பெற்றுவிட முடிகிறது.

அந்த ஊரில் குறிப்பிட்ட ஒரு நபரின் வீடு எந்த இடத்தில் இருக்கிறதுஎன்பதைக்கூட கண்டுபிடித்துவிட முடியும். இதற்கெல்லாம் எப்போதாவது பணம் கொடுத்திருக்கிறீர்களா? இதையெல்லாம் இவர்கள் நமக்கு ஏன் இலவசமாக சேவை செய்ய வேண்டும் என்கிற கேள்வி எப்போதாவது உதித்திருக்கிறதா? இல்லையென்றால், நீங்கள் நம்பியிருக்கும் நிறுவனங்கள் இதுவரை உங்களைத்தான் விற்று வந்திருக்கின்றன.

இலவசமாகச் சேவையளிக்கும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் இப்போதைய மதிப்பு ரூ.5 லட்சம் கோடி. கடந்த நிதியாண்டின் வருவாய் மட்டும் 20 ஆயிரம் கோடியைத் தாண்டியிருக்கிறது.

இலவசமாகச் சேவையளிக்கும் ஃபேஸ்புக்காரர்கள், எப்படி இவ்வளவு பணத்தைச் சம்பாதித்தார்கள்? மறைக்காமல் கூறுவதென்றால், நம்மை விற்றுத்தான். அதுசரி, நம்மை ஒரு பொருளாக விற்க முடியுமா என்ன? நிச்சயமாக முடியும்.

பணம் கொடுப்பவர்கள் மட்டும்தான் வாடிக்கையாளர். சும்மா வந்து போகிறவர்களெல்லாம் வாடிக்கையாளர் அல்லர். பணம் தருவோரிடம் வேறு என்னென்ன பொருள்களையெல்லாம் விற்றுப் பணம் பெற முடியும் என்று நிறுவனங்கள் யோசிப்பது வழக்கம். பணம் தராமல் இலவச சேவைகளை மட்டுமே பயன்படுத்துபவரை என்ன செய்வது? அவர்களையே விற்றுவிட வேண்டியதுதான்.

அந்த வகையில்,தங்களது சேவைகளைப் பயன்படுத்தும் அனைவரின் தகவல்களையும் கூகுள்,பேஸ்புக், டுவிட்டர் போன்ற நிறுவனங்கள் தங்களது தரவுத் தளத்தில் சேகரித்து வைக்கின்றன.

தகவல்கள் என்றால், அவர் அடிக்கடி என்னென்ன இணையதளங்களைப் பார்வையிடுகிறார்,எந்த மாதிரியான தகவல்களை அனுப்புகிறார், எந்த நேரத்தில் இணையத்தைப் பயன்படுத்துகிறார் என்பதெல்லாம்தான். இவைதான் விளம்பர நிறுவனங்களுக்கு விற்கப்படுகின்றன.

விளம்பரதாரர்கள் மற்றும் அவர்களுக்கான ஏஜென்சிகளைப் பொருத்தவரை இது மிகவும் மதிப்புமிக்க பொருள். அதனால், எத்தகைய பயனராக இருந்தாலும் அவரது சுயவிவரங்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட விலை உண்டு.

இதற்கெல்லாம் ஒரு கட்டுப்பாடே இல்லையா என்று கவலைப்பட வேண்டாம். இருக்கிறது. ஒவ்வொரு நிறுவனமும், தங்களது சேவைகளுக்காக "அந்தரங்கக் கொள்கை'என்கிற ஒன்றை வகுத்தளிக்க வேண்டியது கட்டாயம். பயனர்களின் தகவல்கள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பது போன்ற விளக்கங்களை அவை கொண்டிருக்கும். ஆனால், இவையெல்லாம் ஒரு அளவுக்குத்தான் நிறுவனங்களைக் கட்டுப்படுத்துகின்றன.

இந்த விஷயத்தில், மற்ற நிறுவனங்களைவிட கூகுள் ஒருபடி முன்னேறியிருக்கிறது. தேடுபொறி, மின்னஞ்சல், யூடியூப் என்கிற விடியோ சேவை, அனலிடிக்ஸ் என்னும் இணையதள புள்ளிவிவரங்களை அளிக்கும் சேவை உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட சேவைகளை கூகுள் வழங்கி வருகிறது. இவை அனைத்துக்கும் தனித்தனியே இருந்த அந்தரங்கக் கொள்கைகளை, அண்மையில் பொதுவான ஒரே கொள்கையாக கூகுள் அறிவித்திருக்கிறது.

இதன்படி,ஒரு சேவையைப் பயன்படுத்துவோரின் அந்தரங்கத் தகவல்கள், பிறசேவையைப் பயன்படுத்தும்போது எதிரொலிக்கும். உதாரணத்துக்கு யூடியூப்பில் ஒரு விடியோவை பார்க்கிறீர்கள் என்றால், கூகுள் தேடலின்போது, அது சம்பந்தமான தகவல்கள் முதன்மைப்படுத்தப்படும் அல்லது விளம்பரமாக வெளியிடப்படும்.

"கூகுள் டாக்ஸ்' எனப்படும் ஆவணங்களைச் சேமித்து வைக்கப்படும் இடம், நாற்காட்டி, மின்னஞ்சல் என அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதால், பயனரின் அனைத்துத் தகவல்களையும் கூகுள் மிக எளிதாகச் சேமித்து வைத்துவிடுகிறது. கூகுள் "டாஸ்போர்டு' என்கிற பகுதியில் நாம் இதுவரை இணையத்தில் என்னவெல்லாம் செய்திருக்கிறோம் என்று பார்க்க முடியும். இதை அழிக்க முடியும் என்றாலும், அதுஎத்தனை பேருக்குத் தெரியும்?

கடைசியாக ஒன்று, எனது பேஸ்புக் சுவரில் யாரோ தேவையற்ற ஆபாசத் தகவல்களைப் பதிவிடுகிறார்கள் என்று இணையத்தில் உலவும் பலர் கதறுவதைக் கேட்டிருப்போம். அந்த "யாரோ'உருவாக வாய்ப்பளித்தது வேறு யாருமல்ல, சம்பந்தப்பட்ட அப்பாவியேதான்.

Thanks to :  Syedali SYED MASOOD & ibrahim pdm

Friday, March 16, 2012

ADT 2ம் அமர்வு தொடர் நிகழ்வின் செய்தி சுருக்கம்

கடந்த வாரம் 09.03.2012 வெள்ளியன்று துபை தவ்ஹீத் இல்லத்தில் அதிரை தாருத் தவ்ஹீத் டிரஸ்ட்டின் முக்கிய ஆலோசணை அமர்வு நடைபெற்றதை அறிவீர்கள்.


அதன் தொடர்ச்சி, இந்த வாரம் 15.03.2012 வியாழன் பின்னேரம் இஷா தொழுகைக்குப் பின் துபை தவ்ஹீத் இல்லத்தில் சகோதரர் ஜமீல் காக்கா அவர்கள் தலைமையில் மீண்டும் கூடியது.


 
இந்த தொடர் அமர்வின் வழியாக அதிரையில் நம்முடைய முதற்கட்ட இலக்கை அடைய உதவ முடிந்தது, எல்லாப் புகழும் இறைவனுக்கே!


இன்ஷா அல்லாஹ், 2ம் அமர்வு தொடர் நிகழ்வின் விபரங்கள் உறுப்பினர்களுக்காக நம் ADT குழுமத்தில் நிர்வாகிகளால் வெளியிடப்படும்.

செய்தியும் படங்களும்
S. அப்துல் காதர்

Wednesday, March 14, 2012

தவிர்க்கப்பட வேண்டிய விருந்துகள்

விருந்தளிப்பதையும், விருந்துக்கு அழைக்கப்படும்போது ஏற்றுக்கொள்வதையும் வலியுறுத்தி ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் சமுதாயத்தில் வழக்கத்தில் உள்ள விருந்துகளில் பெரும்பாலானவை விருந்துகள் அல்ல. திருமண விருந்து, அகீகா, புதுமனை புகுதல் போன்ற அனுமதிக்கப்பட்ட விருந்தாக இருந்தாலும் அந்த விருந்துகளில் இஸ்லாம் கூறும் முறைகள் பின்பற்றப்படுவதில்லை.
“செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் விருந்து தான் விருந்துகளில் மிகவும் கெட்டதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்
எந்த விருந்துகளில் செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப் படுகிறார்களோ விருந்தளிக்கும் இடத்தில் மார்க்கம் அனுமதிக்காத ஆடல், பாடல், கச்சேரிகள் போன்றவை இடம்பெற்றால் அத்தகைய விருந்துகளையும் புறக்கணிக்க வேண்டும்.
நான் நபி (ஸல்) அவர்களுக்காக விருந்து தயார் செய்து அவர்களை அழைத்தேன். அவர்கள் வந்து என் வீட்டில் உருவப்படங்களை கண்டதும் திரும்பிச் சென்றுவிட்டனர். அறிவிப்பவர்: அலீ (ரலி) நூல்: இப்னுமாஜா
யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் மதுபானம் பரிமாறப்படும் விருந்துகளில் அமரவேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்கள்: அஹ்மத், நஸயீ, திர்மிதீ

அழைப்பு: அதிரை தாருத் தவ்ஹீத் (ADT) ஆலோசணைக் கூட்டம்

கடந்த வாரம் வெள்ளியன்று மஃரிப் தொழுகைக்கு பின் துபை தவ்ஹீத் இல்லத்தில் அதிரை தாருத் தவ்ஹீத் டிரஸ்ட்டின் (ADT) முக்கிய ஆலோசணை அமர்வு நடைபெற்றதை அறிவீர்கள்.

அதன் தொடர்ச்சி, இன்ஷா அல்லாஹ் வரும் வியாழன் (15.03.2012) பின்னேரம் இஷா தொழுகைக்குப் பின் துபை தவ்ஹீத் இல்லத்தில் நடைபெறவுள்ளது.

குர்அன், ஹதீஸ் அடிப்படையில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டுள்ள அமீரகம் வாழ் அதிரை சகோதரர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தவ்ஹீத் இல்லம்
நைஃப் ரோடு
அல் புத்தைம் பள்ளி எதிர்புறம்
DULF (டல்ஃப்) ஹோட்டல் பின்புறமுள்ள அல்ஜரூனி பில்டிங்
முதல் தளம், அறை எண் : 109

தொடர்புக்கு : 055 2829759