உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, October 6, 2011

அயல் தேசத்து அநாதை

இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை  வந்தவனுக்கோ சென்று விட ஆசை  இதோ அயல்தேசத்து அநாதைகளின் .. கண்ணீர் கதை !

விசாரிப்புகளோடும், எதிர்பார்ப்புகளுடனும் வருகின்ற ... தொலைபேசி அழைப்புகளை நினைத்து பரிதாபப்படத்தான் முடிகிறது !

நாங்கள் பூசிக்கொள்ளும் நறுமணத்தில் வேண்டுமானால்... வாசனைகள் இருக்கலாம்! ஆனால் வாழ்க்கையில்...?
தூக்கம் விற்ற காசில்தான்... துக்கம் அழிக்கின்றோம்! ஏக்கம் என்ற நிலையிலேயே... இளமை கழிக்கின்றோம்!

எங்களின் நிலாக்கால நினைவுகளையெல்லாம்... ஒரு விமானப்பயணத்தூனூடே விற்றுவிட்டு!
கனவுகள் புதைந்துவிடுமெனத் தெரிந்தே கடல் தாண்டி வந்திருக்கிறோம் !  மர உச்சியில் நின்று ... ஒரு தேன் கூட்டை கலைப்பவன் போல!

அம்மாவின் ஸ்பரிசம் தொட்டு எழுந்த நாட்கள் கடந்து விட்டன! இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு எழும் நாட்கள் கசந்து விட்டன!
பழகிய வீதிகள் பழகிய நண்பர்கள் கல்லூரி நாட்கள் தினமும் ஒரு இரவு நேர கனவுக்குள் வந்து வந்து காணாமல் போய்விடுகிறது! நண்பர்களோடு ஆற்றில் பிடித்த மீன் பம்பரம்

உங்கள் ஹஜ்ஜை ஆரோக்கியமாக நிறைவேற்றுங்கள்.‏


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!

உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் ஹஜ் பயணத்திற்காகத் தயாராகி வருகிறார்கள். பல்வேறு தயாரிப்புகள், பணம், உடை, உணவுப் பொருட்கள் எனப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. எப்படி தவாஃப் செய்ய வேண்டும், எவ்வாறு இஹ்ராம் உடை அணிவது, மினாவிலும் அரஃபாவிலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பன போன்ற கேள்விகளுக்கு விளக்கக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால், மிக முக்கியமான ஒரு விஷயத்தை மட்டும் ஹஜ் பயணம் மேற் கொள்பவர்கள் மறந்து விடுகின்றனர். அது, உடல்நலம்!
 ஹஜ்ஜின் போது ஹாஜிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகும் ஒரு விஷயம் ''உடல்நலம்'' குறித்ததாகும். ஏனெனில், ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களில் 60 விழுக்காட்டிற்கும் மேற் பட்டவர்கள் 60 வயதிற்கு மேலுள்ள முதியவர்கள்தாம்.
 பொதுவாகவே வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படும் பல்வேறு விதமான நோய்கள் ''ஹஜ்'' செய்வதில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. இதனைத் தவிர்த்து ''ஆரோக்கியமான ஹஜ்'' ஜினை மேற்கொள்ள இதோ சில முக்கியமான வழிகாட்டுதல்கள்.
1. ஹஜ் பயணத்திற்கு முன் நடைப்பயிற்சி அவசியம்! எப்போது ஹஜ்ஜிற்காக ''விண்ணப்பிக்கிறார்களோ'' அந்நாள் முதல் ஹாஜிகள் செய்ய வேண்டிய முதன்மையான பணி என்னவெனில், நடைப்பயிற்சிதான். நாள்தோறும் குறைந்தது 5 முதல் 7 கி.மீ வரை நடப்பது சாலச் சிறந்தது. அதுவும் குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்பே  இப் பயிற்சியைத் தொடங்க வேண்டும். ஏனெனில், ஹஜ்ஜின் போது அதிகம் நடக்க வேண்டும். மினாவில் ஷைத்தான் மீது கல்லெறியக் கூடாரத்தி லிருந்து வெகுதூரம் நடக்க வேண்டி வரும். அதே போல் அரஃபா முதல் முஸ்தலிஃபா வரை ஹாஜிகள் நடக்கும் சூழ்நிலை ஏற்படும். (இதன் தொலைவு 8 கி.மீ)

Tuesday, October 4, 2011

உங்கள் ஓட்டு யாருக்கு ? இறுதியாக களத்தில் நிற்கும் 12 வேட்பாளர்கள் முழுவிவரம்:

அன்பான‌ என் அதிரை சொந்தகளே, மண்ணின்  மைந்த‌ர்க‌ளே!
இறைவ‌னின் சாந்தியும், ச‌மாதான‌மும் ந‌ம் அனைவ‌ரின் மீதும் உண்டாக‌ட்டுமாக‌.
பொதுவாக அதிரை பேருராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மேலத்தெருவில் இருந்து ஒருவர், நடுத்தெரு அல்லது கடல்கரை தெருவில் இருந்து மற்றொருவர் நிற்பது வழக்கம் இந்தமுறை  10 க்கு மேற்பட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டி போடுவதை தவிர்த்து பொதுவான ஒரு வேட்பாளர் அல்லது குறைந்த எண்ணிக்கையிலான வேட்பாளர் களை நிறுத்தும் வகையில் அதிரை அனைத்து முஹல்லா சார்பில் ஆலிம்கள் தலைமையில் மரைக்கா பள்ளியில் 26/09/2011 அன்று நடைபெற்ற ஒருங்கிணைப்பு கூட்டத்தில் காங்கிரஸ், திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் இந்த ஒருங்கிணைப்பு முயற்சியை நிராகரித்தனர்.  சுயேச்சை  மற்றும் மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த 3 வேட்பாளர் கள் வாபஸ் வாங்கிவிட்டனர் அல்ஹம்துலில்லாஹ்.
வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் இறுதியாக களத்தில் நிற்கும் வேற்பாளர்கள்:
1.      காங்கிரஸ், கட்சிக்கு  கட்டுபடுவோம் என்று தெரிவித்துவிட்டு, குடும்பபாரம்பரியத்தை விட்டு கொடுக்காமல், மீண்டும் பேருராட்சி மன்ற தலைவர் பதவியை தக்கவைக்க வேண்டும் என்ற முயற்சியில் முஸ்லிம்கள்,  மாற்று மத சகோதரர்கள் மற்றும் கட்சி வாக்குகளை நம்பி களத்தில் நிற்கும் காங்கிரஸ் வேட்பாளர் MMS பஷீர் அஹமது.


2.      பாரம்பரியமாக திமுக கட்சிக்காக பாடுபட்ட திமுகவை சேர்ந்த முன்னோடிகளை பின்னுக்கு தள்ளிவிட்டு எப்படியும் பேருராட்சி மன்ற தலைவராகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் திமுகவில் புதிதாக தன்னை இணைத்து கொண்ட அஸ்லாம் என்பவர் தன் பணபலத்தை பயன்படுத்தி திமுக வேட்பாளராக களத்தில் நிற்கிறார். முஸ்லிம்கள் மற்றும் கட்சி வாக்குகளை நம்பி போட்டியிடுகிறார். மறைந்த பேருராட்சி மன்ற தலைவர் சாட்சா MMS அப்துல் வஹாப் அவர்களுடன் அல் அமீன் பள்ளிவாசல் விவகாரமாக அவருடன் இணைந்து கொண்டு தன்னை பிரபலமாக்கிகொண்டவர்..
3.      அதிமுகவில் காலம்காலமாக கட்சிக்காக உழைத்தவர்கள் இருக்கும் போது தன்னை அதிமுகவில் புதிதாக இணைத்து கொண்டு மக்களால் அதிகம் அறிமுகம் இல்லாத சென்னையில் தொழில் செய்து வரும் கொய்யப்பா அப்துல் அஜீஸ் என்பவர் தன் பணபலத்தை நம்பி எப்படியும் பேருராட்சி தலைவராகிவிடவேண்டும் என்ற எண்ணத்தில் ஆளும்கட்சியின் உதவியுடன் முஸ்லிம்கள் மற்றும் கட்சி வாக்குகளை நம்பி அதிமுக வேட்பாளராக  போட்டியிடுகிறார்.
4.      முன்பு அதிமுக பிறகு முஸ்லிம் லீக் கட்சி மற்றும் அதிரை பைத்துல்மாலில் தன்னை இணைத்துக்கொண்டு மக்கள் மத்தியில் அறிமுகம் ஆனவர் வழக்கறிஞர் A முனாப். அதிரையில் செல்வாக்கு இல்லாத முஸ்லிம் லீக் கட்சி சார்பாக நிற்காமல் முஸ்லிம்கள் வாக்குகளை நம்பி சுயேச்சையாக பேருந்து சின்னத்தில் போட்டியிடுகிறார்.



5. மேலத்தெருவைச் சார்ந்த சகோதர் அப்துல் ஹலீம் சுயேச்சையாக சட்டை சின்னத்தில் போட்டியிடுகிறார்.  
6.      இடது கம்யூனிஸ்ட் கட்சி சார்ப்பில் பெரிய நெசவுத்தெருவை சேக்தாவுத் கதிர்அருவாள் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
7.    தேமுதிக சார்பில் முஸ்லிம்கள் யாரும் போட்டி போட முன்வராததால் சுப்பிரமணிய கோவில் தெருவை சார்ந்த தமிழ் செல்வன் என்பவர் முரசு சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் பலன்செட்டி தெருவில் பூக்கடை மற்றும் டி கடை நடத்திவருகிறார்
8.      ரஹ்மத்துல்லா (பந்தா) பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் யானை சின்னத்தில் போட்டியிடுகிறார்
9.      B JP  சார்பில் விஜயகுமார் (பாஜக) என்பவர் புத்தகம் சின்னத்தில் போட்டியிடுகிறார்
10. முகமது மொய்தீன் (சுயே) மேசை மின்விசிறி சின்னத்தில் போட்டியிடுகிறார்
11.  பாருக் (சுயே) கணிபொறி சின்னத்தில்போட்டியிடுகிறார்
12. நெய்னா (சுயே) பேனா சின்னத்தில் போட்டியிடுகிறார்
உங்கள் ஓட்டு யாருக்கு ?
அரசியல் செல்வாக்கு, பணபலம், தனி மனித செல்வாக்கு இந்த தேர்தலின் பலப்பரிட்சை.
இப்படி இருக்கும் இந்த சூழ்நிலையில், நாம் ஊர் பாரம்பரியம், வாரிசு அரசியல், தெருப்பாகுபாடு, கட்சிகள் என்று வர இருக்கும் தேர்தலுக்காக‌ பிளவுபட்டு நிற்காமல் ஊருக்கு சேர்மன் ஒருவரே வர முடியும் என்ற சூழ்நிலை இருப்பதால் இவர் வந்தால்,
  • நிச்சயம் சுயநலமின்றி ஊருக்காக நல்லது செய்வார்.
  • ஊரின் பிரதான பிரச்சினைகளுக்கு வழி காண்பார்.
  • நமது ஊரின் அனைத்து மக்களும் எளிதாக அணுகக் கூடியவராக இருப்பார்.
  • அரசு மூலம் நம் ஊருக்காக ஒதுக்கப்பட்ட நிதி மூலம் நல்ல பல திட்டங்களை கொண்டு வந்து சேர்ப்பார்.
  • ஊர் அமைதிக்கு அவ்வப்பொழுது பங்கம் விளைவிக்கும் மதச்சாயம் பூசப்பட்ட கலவரங்கள் வராமல் துரித நடவடிக்கை மூலம் (ஆரோக்கியமான அமைதி பேச்சு வார்த்தை மூலம்) ஏற்பட இருந்த‌ உயிர், பொருள் சேத‌ங்க‌ளை த‌டுக்க‌ முய‌ல்வார்.
  • எல்லாவ‌ற்றிற்கும் மேலாக‌ ந‌ல்ல‌ காரிய‌ங்க‌ள் செய்ய‌ உள்ள‌ துணிச்ச‌ல் அதிக‌ம் கொண்ட‌வ‌ராக‌ இருப்பார்.
  • நீதி, நேர்மை தவறாது பாரபட்சம் இன்றி இறையச்சத்துடன் செயல்படுவார்.
  • ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல் 21 வார்டுகளுக்கும் சேவைகள் செய்பவராக இருப்பவர்.

இவர்களில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர் தகுதியற்றவர் என நினைத்தாள் அதற்கும் வழியிருக்கிறது 49o பயன்படுத்தி நடுநிலையாக வாக்களிக்கலாம்.
யார் வெற்றி பெற்றாலும் சுயனலமின்றி, கட்சிக்கு அப்பால்பட்டு ஊர் நலனில் அக்கறையுடன் செயல்படுபவராக இருக்க வேண்டும் என்பதே
நாம் எதிர்பார்ப்பது.
அபு அப்துல் ரஹ்மான்

உங்கள் வார்டில் போட்டியிடும் வேட்பாளர்கள்  பற்றிய தகவல்கள் மற்றும் உள்ளாச்சி தேர்தல் சம்மந்தமான செய்திகள்  அனுப்பி தந்தாள் AIM வலைத்தளத்தில் பதிவிடுகிறோம்.

குழம்பிய குட்டையில் பதவி பிடிக்க மனு போட்டவர்கள்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

அதிரையின் உள்ளாட்சி தேர்தல் வரலாறான இருமுனை போட்டி இந்த முறை அடியோடு மாற்றி எழுதப்பட்டுள்ளது. பதவிகளை கொத்திச் செல்ல குழம்பிய குட்டையின் ஓரம் ஒற்றைக்கால் கொக்குகளாய் பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதிகள், அரும்பு மீசை அரசியல்கட்சியினர், புதிதாக கட்சிகளில் இணைந்து பல லட்சங்களை இழந்து சீட்டு வாங்கியோர், சுயேட்சைகள் என ஏகப்பட்ட பேர் ஆனால் உண்மையில் மக்கள் செல்வாக்கு பெற்றவரை 23ந்தேதிக்கு பிறகு தான் அடையாளம் காண முடியும் என்ற பரிதாப நிலை. 

சரி இப்போ தலையை எண்ணுவோம் வாங்க...

இதில ஒருத்தரு வருங்கால தலைவருங்கங்கங்கங்க...

1. மு. அகமது மொய்தீன் - சுயேட்சை - மேசை மின் விசிறி
2. ஷா. அப்துல் அஜீஸ் - அதிமுக - இரட்டை இலை
3. மு. அப்துல் முனாப் - சுயேட்சை - பேரூந்து (பஸ்)
4. தா. அப்துல் ஹலீம் - சுயேட்சை - சட்டை
5. சா.ஹ. அஸ்லம் - திமுக - உதய சூரியன்
6. அ. சேக் தாவூது - கம்யூனிஸ்ட் - கதிர் அரிவாள்
7. ரெ. தமிழ் செல்வம் - தேமுதிக - முரசு
8. ம.மீ.செ. பஷீர் அகமது - காங்கிரஸ் - கை
9. அ. பாரூக் - சுயேட்சை - கணிப்பொறி
10. மு.நைனா முகமது - சுயேட்சை - பேனா
11. மு.மு. ரஹ்மத்துல்லா - பகுஜன் சமாஜ் - யானை
12. ப. விஜயகுமார் - சுயேட்சை - புத்தகம்

எண் 456 – அதிராம்பட்டிணம் பேரூராட்சியின் மொத்த வார்டுகள் - 21


ஆதி திராவிடர் (மகளிர் வார்டு) - 1 (வார்டு எண் 20)


மகளிர் வார்டுகள் (பொது) - 6 (வார்டு எண்கள் 10,11,15,16,17,19)


பொது வார்டுகள் - 14

இதுவரை முடிவு தெரிந்தவை - 2 (வார்டு எண்கள் 5,6 அன்னபோஸ்ட்)

இது MAY BE கவுன்சிலர்ஸ் லிஸ்ட்டுங்கோவ்...

வார்டு எண் 1
1. ஜ.அப்துல் கலாம் - தேமுதிக - முரசு
2. செ.அப்துல் ரஹ்மான் - சுயேட்சை - தண்ணீர் குழாய் (பைப்)
3. கோ.அய்யப்பன் - அதிமுக - இரட்டை இலை
4. சு.அய்யாவு - திமுக - உதய சூரியன்
5. பா.சந்திரா தேவி - கம்யூனிஸ்ட் - கதிர் அரிவாள்
6. ப.தண்டபாணி - காங்கிரஸ் - கை
7. சா.ஜாபர் சாதிக் - மமக - வைரம்

வார்டு எண் 2
1. மீ.உதயகுமார் - அதிமுக - இரட்டை இலை
2. இராம.குணசேகரன் - திமுக - உதய சூரியன்

வார்டு எண் 3
1. சு.இன்பநாதன் - திமுக - உதய சூரியன்
2. சா.சண்முக வேல் - சுயேட்சை - தென்னை மரம்
3. த. சந்திர ஜோதி - தேமுதிக - முரசு
4. மு. சாகுல் ஹமீது - மமக - வைரம்
5. க. சிவக்குமார் - அதிமுக - இரட்டை இலை
6. கோ.திலகராஜ கட்டபொம்மன் - காங்கிரஸ் - கை

வார்டு எண் 4
1. மு.செல்வராஜ் - திமுக - உதய சூரியன்
2. அ.பிச்சை - அதிமுக - இரட்டை இலை
3. இ.ராமசாமி - காங்கிரஸ் - கை

வார்டு எண் 5
1. சி.விஜய ரெத்தினம் - போட்டியில்லை - அன்னபோஸ்ட் - well done

வார்டு எண் 6
1. ஜெ.பாஞ்சாலன் - போட்டியில்லை - அன்னபோஸ்ட்- well done

வார்டு எண் 7
1. நா.காளிதாஸ் - சுயேட்சை - மேற்சட்டை (கோட்டு)
2. ச.பாஜிலா பானு - அதிமுக - இரட்டை இலை

வார்டு எண் 8
1. ஹ.அகமது அன்சாரி - திமுக - உதய சூரியன்
2. அ.சாகுல் ஹமீது - சுயேட்சை - தென்னை மரம்
3. மு.முகமது இக்பால் - சுயேட்சை - அரிக்கேன் விளக்கு
4. மு.ஹாஜா முகைதீன் - சுயேட்சை - அசைந்தாடும் நாற்காலி

வார்டு எண் 9
1. கு.பசுல் கான் - திமுக - உதய சூரியன்
2. நூ.முகமது ராவுத்தர் - அதிமுக - இரட்டை இலை
3. சா.ரஹ்மத் கனி - தேமுதிக - முரசு
4. அ.லெ.மு.ஹசன் - கம்யூனிஸ்ட் - கதிர் அரிவாள்

வார்டு எண் 10
1. சே.ஆய்ஷா அம்மாள் -  மமக  - மேஜை விளக்கு
2. நை.சபுரன் ஜமீலா - காங்கிரஸ் - கை
3. இ.தீனுன்னிசா - திமுக - உதய சூரியன்
4. சே.மதார் பாத்திமா - தேமுதிக - முரசு
5. மு.ரகுமா பானு - மமக - வைரம்
6. ந.ரஹ்மத் நாச்சியார் - அதிமுக - இரட்டை இலை
7. அ.ஜெசிமா பேகம் - சுயேட்சை - தண்ணீர் குழாய் (பைப்)

வார்டு எண் 11
1. அ.உம்மல் மர்ஜான் - திமுக - உதய சூரியன்
2. பீ.தெசிமா -  மமக  - தண்ணீர் குழாய் (பைப்)
3. இ.பரிதா - அதிமுக - இரட்டை இலை
4. தே.ரூபிணி - சுயேட்சை - தென்னை மரம்
5. கி.ஜெயக்கொடி - சுயேட்சை - வைரம்

வார்டுஎண் 12
1. நூ.மு.செய்யது முகம்மது - திமுக - உதய சூரியன்
2. மு.அ.முகமது ஹனீபா  - வைரம்

வார்டு எண் 13
1. ஹ.அப்துல் காதர் - திமுக - உதய சூரியன்
2. கா.ஷே.முகமது இக்பால் - சுயேட்சை - தென்னை மரம்
3. ஜ.முகமது இலியாஸ் - சுயேட்சை - உலக உருண்டை
4. ஜ.முகமது சம்சுதீன்  - வைரம்

வார்டு எண் 14
1. மு.அகமது சலீம் - சுயேட்சை - உலக உருண்டை
2. அ.ஜ.அப்துல் லத்தீப் - அதிமுக - இரட்டை இலை
3. மு.அ.சேக் அப்துல்லா  - வைரம்
4. நெ.பாத்திமா - தேமுதிக - முரசு
5. மு.முகமது சரிபு - திமுக - உதய சூரியன்

வார்டு எண் 15
1. சா.அஜ்ரன் அலிமா - மமக - வைரம்
2. நெ.நூருல் பரிதா - திமுக - உதய சூரியன்
3. நி.ஜரினா அம்மாள் - காங்கிரஸ் - கை
4. ஷாஜஹான் பீவி - அதிமுக - இரட்டை இலை

வார்டு எண் 16
1. மு.நிலோபர் - சுயேட்சை - தண்ணீர் குழாய்(பைப்)
2. ஹைருன்னிசா - அதிமுக - இரட்டை இலை 

வார்டு எண் 17
1. அ.உம்மல் பௌசியா - அதிமுக - இரட்டை இலை
2. மு.ரபீக்கா - சுயே (மமக) - தண்ணீர் குழாய்(பைப்)

வார்டு எண் 18
1. நூ.அபுதாஹிர் - சுயேட்சை - அரிக்கேன் விளக்கு
2. மு.மொய்தீன் - திமுக - உதய சூரியன்
3. தூ.ஜெகபர் நாச்சியா - தேமுதிக - முரசு

வார்டு எண் 19
1. கௌஷர் நிஷா - சுயேட்சை - தண்ணீர் குழாய்(பைப்)
2. சௌதா - மமக - வைரம்
3. நெ.ஹாஜரா அம்மாள் - திமுக - உதய சூரியன்

வார்டு எண் 20
1. சித்ரா - திமுக - உதய சூரியன்
2. கா.பஞ்சவர்ணம் - தேமுதிக - முரசு
3. சீ.பானுமதி - அதிமுக - இரட்டை இலை
4. சு.ரேணுகா - காங்கிரஸ் - கை

வார்டு எண் 21
1. செ.பைசல் அகமது - தேமுதிக - முரசு
2. செ.முகமது இப்ராஹீம் - சுயேட்சை - வைரம்
3. அ.மு.க.முகமது ஹனீப் - சுயேட்சை - தண்ணீர் குழாய்(பைப்)

வேட்பாளர்கள் ஜெயிப்பாங்க ஆனா மிஸ்டர் பொதுஜனம் எப்போங்க ஜெயிப்பாங்க? எனிவே... நல்லவங்க ஜெயிக்கிறதுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

அஷ்ஹது வாப்பா

Monday, October 3, 2011

ஏரிப்புறக்கரை உள்ளாட்சியில் முஸ்லீம்கள்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

அதிரையை ஒட்டிள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சிக்கு முதன்முதலாக 2 முஸ்லீம் கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை முஸ்லீம்கள் யாரும் தேர்வு செய்யப்பட்டதேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மொத்த வார்டுகள் -9

8ம் வார்டுக்கு N. சிவசுந்தரராஜன் த/பெ. நாகூரான் என்பவரும்

9ம் வார்டுக்கு திருமதி. ரா.மோகனா என்பவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

எஞ்சிய 7 வார்டுகளுக்கும் தலைவர் பதவிக்கும் போட்டி நிலவுகிறது. இதில் முஸ்லீம்கள் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ள வார்டு எண்கள் 1 மற்றும் 2. 

தமிழக அளவில் நடைபெற்றுள்ள சதியின் அடிப்படையில் ஜெயிக்க வாய்ப்புள்ள இந்த இரண்டு முஸ்லீம்கள் வார்டுகளுமே பெண்கள் வார்டாக ஒதுக்கப்பட்டுள்ளது. பிலால் நகர் ரோட்டை மையமாக வைத்து கிழக்கு மேற்காக வார்டுகளை பிரித்துள்ளனர்.

வார்டு – 1 : பிலால் நகர் மற்றும் நண்டுவெட்டி வெப்பல் (பிலால் பள்ளிக்குக்கு பின்புறமுள்ள அனைத்து பகுதிகள்)

வேட்பாளர்கள் சின்னம்
1. சம்சுன் பீவி க/பெ. நாகூர் கனி சீப்பு
2. மெகருன்னிஷா க/பெ. சித்தீக் ரஹ்மான் திறவுகோல்
3. ஆயிஷா அம்மாள் க/பெ. கமாலுதீன் கட்டில்
4. ரஹ்மத் நிஷா க/பெ. பஷீர் அஹமது கார்

வார்டு – 2 : பிலால் நகர் (பிலால் பள்ளி முன்புற ஏரியா), எம்.எஸ்.எம்.நகர் மற்றும் நாகம்மாள் கோயில் தெரு 

வேட்பாளர்கள் சின்னம்
1. நூர்ஜஹான் க/பெ. சாகுல் ஹமீது திறவுகோல்
2. ரஹ்மத் நாச்சியா க/பெ. முஹமது அமீன கார்
3. விஜயா க/பெ. சுரேஷ் கட்டில்
4. மெல்ட்டா க/பெ. முத்துக்குமார் சீப்பு

முன்னறிவிப்பு:

அதிரை மேலத்தெருவின் சவுக்கு கொல்லை, சானா வயல் வரை நீண்டுள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வாக்காளர்களை எதிர்காலத்தில் இணைத்தால் ஊராட்சி தலைவர் பதவியும் முஸ்லீம்கள் வசம் வசமடையும். தற்போது இந்த வாக்காளர்கள் அனைவரும் மேலத்தெரு மற்றும் கீழத்தெருவிலிருந்து வந்த புதிய குடியேற்றக்காரர்கள் என்பதால் அதிரையின் 15, 16 மற்றும் 17 வது வார்டுகளின் வாக்காளர்களாகவே தற்போதும் நீடிக்கின்றனர்.


தொடரும்...