கடந்த மாதம் (அக்டோபர் 27,28,29,30 - 2014 ஆகிய தேதிகளில்) அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கும் ததஜவினருக்கும் இடையில் அதிரையில் 4 நாட்கள் விவாதம் நடைபெற்றதை தமிழ் இஸ்லாமிய உலகம் அறிந்ததே.
மேலும் ததஜவின் முந்தைய விவாத அளவுகோலின்படி விவாதத்தின் வெற்றியாக எதிர்தரப்பின் கூடாரம் காலியாவதையே வெற்றி! வெற்றி!! என குறிப்பிட்டு பக்கம் பக்கமாக எழுதி புளங்காங்கிதமடைவார்கள் என்பது வரலாறு. மேற்காணும் ததஜவின் அளவுகோலின்படி பீஜே என்பவரால் மிகப்பெரும் ஆய்வாளராக அவர்கள் மத்தியில் அடையாளம் காட்டப்பட்ட ததஜவின் முக்கியத்தூண்களில் ஒருவரான அப்பாஸ் அலி அவர்கள் அதிரை விவாதத்தின் எதிரொலியாக ததஜவிலிருந்தே அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக வெளியேறி அவர்கள் கூடாரத்தில் பெரும் பூகம்பத்தையே எழுப்பினார் இதை நமது வெற்றியாக ததஜ போல் இருமாப்புக் கொள்ளாமல் புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே என்று ஏகன் அல்லாஹ்விற்கே நன்றி செலுத்துகிறோம்.
அப்பாஸ் அலியின் முகநூல் தகவல்
நடந்து முடிந்த விவாதத்தில் தரப்புக்கு 5 பேர் என்பது இருதரப்பும் ஒப்புக் கொண்ட விஷயம் அதன் அடிப்படையில் அந்தந்த தரப்பினரின் ஒப்புதல் பெற்ற 5 பேர் விவாதித்து வந்தனர் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மேல் பேசவும், பார்வையாளர்கள் எந்த நிலையிலும் பேச அனுமதி இல்லை என்பதும் இருதரப்பாரும் ஒப்புக் கொண்ட விஷயம்.
விவாத ஒப்பந்த ஷரத்துக்களை படித்திட இந்த லிங்கை பாருங்கள்
சரி குத்து விளக்கு மேட்டருக்கு வருவோம், ததஜவினர் கொள்கையற்றவர்கள் என்பதை நிறுவுவதற்காக ததஜவினரின் தீவிர ஆதரவாளரான அதிரை பேரூராட்சி மன்றத் தலைவர் அஸ்லம் மல்லிப்பட்டிணம் அருகே நடைபெற்ற ஒரு தனியார் விழாவில் குத்து விளக்கு ஏற்றிய செய்தி தாருத் தவ்ஹீதினரால் சுட்டிக் காட்டப்பட்டது அந்த சமயத்தில் அஸ்லம் அவர்கள் சபையிலேயே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அஸ்லம் சம்பந்தமாக ஜமீல் காக்கா விவாதத்தில் எடுத்துச் சொல்லும் பகுதிகளை காண இந்த சுட்டிகளை பார்க்கவும்
(12 வது நிமிடத்திலிருந்து பார்க்கவும்)
(12 வது நிமிடத்திலிருந்து பார்க்கவும்)
ஜமீல் காக்கா ததஜவினரிடம் அஸ்லம் குத்து விளக்கு ஏற்றியதற்கான ஆதாரத்தை ததஜ விவாத குழுவினரிடம்
வழங்கும் காட்சியை காண...
(12 வது நிமிடத்திலிருந்து பார்க்கவும்)
வசைமாரியும், வரம்பு மீறியும் வார்த்தைகளை விட்டு பதில் சொல்ல இயலாமல் கடுப்புடன் விவாதத்தை ஒப்பேற்றிக் கொண்டிருந்த ததஜவினர் ஏற்கனவே இலங்கை மவ்லவிகளை விவாதத்திலிருந்து வெளியேற்ற காவல்துறை மற்றும் உளவுத்துறை மூலம் முயற்சி செய்து தோல்வி அடைந்திருந்தவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்களை எங்கிருந்தோ அழைத்து வந்து சலசலப்பை ஏற்படுத்தி விவாதத்தை பாதியிலேயே முறித்துக் கொண்டு ஓட எத்தனித்தனர்.
வசமாக வலிய வந்து சிக்கிக் கொண்டு மூச்சுத் திணறிக் கொண்டிருந்த ததஜவினர் மூலம் மேடையில் ஐவரில் ஒருவராக அமர்ந்து விவாதிக்க அஸ்லம் அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டும் பயன்படுத்திக் கொள்ளாமல் வெளியேறிவிட்டார் இதை தான் விழி பிதிங்கியது தொங்கியது என அவர்களின் வழக்கமான குலத் தொழிலான அவதூறை பரப்பி வருகின்றனர்.
மேலும் ததஜவினர் கேட்டபடி அஸ்லம் குத்து விளக்கு ஏற்றியதற்கான ஆதாரமும் தொடர்ந்து வந்த அமர்வுகளில் வழங்கப்பட்டு பிரச்சனை முடிவுக்கு வந்ததை மீண்டும் குரங்கு புண்ணை நோட்டி முகர்வது போல் இன்னும் அசிங்கப்படுவோம், நாங்கள் மானம் ரோசத்திற்கு சம்பந்தமில்லாதவர்கள் என நிரூபித்துக் கொண்டுள்ளனர் ஃபேஸ்புக் ததஜவினர்.
ஒப்பந்தத்தை மீறி அஸ்லம் அவர்கள் ததஜவினருக்காக சலசலப்பு ஏற்படுத்த முனைந்த காட்சிகளை காண இந்த சுட்டிக்குள் செல்லவும்
(12 வது நிமிடத்திலிருந்து பார்க்கவும்)
(12 வது நிமிடத்திலிருந்து பார்க்கவும்)
அஸ்லம் அவர்களின் ஃபேஸ்புக் பேட்டி பற்றி, அவரும் ஒரு அரசியல்வாதி என்பதும் அரசியல்வாதிகளுடைய வார்த்தைகளுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை என்பதும் சிறுகுழந்தைகளும் அறிந்த யதார்த்தம் ஆனால் இவர் 'கேடுகெட்ட எத்தகைய பொய் சத்தியத்திற்கும் துணிந்த ததஜவினருடன் கூடிக்குலாவுவதால்' இவருக்கும் அந்த ததஜவினருக்கு பீடித்துள்ள எபோலா நோய் ஒட்டிக் கொண்டுவிட்டதோ என சந்தேகிக்க வேண்டியுள்ளது.
பேட்டியை காண சொடுக்கவும்
பேரூராட்சி மன்ற தலைவரை ததஜவினர் பேட்டி காணும் தோரணையே விஷமத்தனமான பதிலையே கேள்வியாக கொண்டு ஆரம்பிக்கிறது மேலும் அஸ்லம் அவர்களும் கேள்விக்கு தேவையான பதிலை மட்டும் சொல்லாமல் தனக்கும் அதிரை தாருத் தவ்ஹீதுடன் உறவாடும் சிலருக்கும் உள்ள முன்பகையை பற்றி பேசுகிறார் இது ஒன்றே போதும் அவர் முன் விரோதத்தின் காரணமாகவும் ததஜவினர் விரும்பியபடியும் பொய் சொல்கிறார் என்பதை அறிந்து கொள்ள, அல்லாஹ்விற்கே புகழனைத்தும்.
பேரூராட்சி மன்ற தலைவர் அஸ்லம் அவர்கள் குத்து விளக்கு ஏற்றியது சம்பந்தமாக வந்துள்ள செய்தியை வாசிக்க இந்த சுட்டிக்குள் செல்லவும்.
மேலும் இந்த செய்தி வெளியான 10.09.2014 அன்று யதார்த்தமாக அவருக்கு குத்து விளக்கு ஏற்றுவது இந்துமத வணக்கம் என்பதை யாராவது அறிவுரை வழங்கிட வேண்டி எழுதிய கமெண்ட்டும் பதிவாகியுள்ளதையும் காண்க!
ஒருவேளை அதிரை நியூஸில் வந்த செய்தியை அஸ்லம் மறுப்பாரேயானால் இதற்கு என்ன சொல்லப் போகிறார்?
நிகழ்ச்சி நடைபெறுவதற்கு பல நாட்களுக்கு முன்பே பத்திரிக்கை அடிக்கப்பட்டும் நிகழ்ச்சி சம்பந்தமாக செய்தி வெளியாகி இரு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் 'ததஜவினரை கொள்கையற்றவர்கள்' என நிரூபிப்பதற்காக அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினர் சுட்டிக்காட்டியவுடன் எங்கிருந்தோ ஓடோடி வந்து கொந்தளிப்பது ஏன்? ததஜவுடன் உள்ள கூடா நட்பிற்கு நன்றிக்கடனா?
கிணறு வெட்டப்போய் பூதம் கிளம்பியதாக ஒரு கதை சொல்வார்களே அதுபோல் ததஜவை சேர்ந்த இன்னொருவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதும் சந்திக்கு வந்ததுள்ளது.
அஸ்லம் அவர்களே! தயவு செய்து ததஜவினருக்காக உங்களுடைய ஈமானை இழக்காதீர் மேலும் நீங்கள் செய்த செயலின் தன்மையை அறியாமல் செய்த செயலே என்றும் உங்கள் மீது நல்லெண்ணம் கொள்கின்றோம். தெரியாமல் செய்து விட்டதற்காக தவ்பா செய்து கொள்ளுங்கள் என உங்கள் சகோதரர்களில் ஒருவராக வேண்டிக் கொள்கின்றோம்.
மேலும் ததஜவினரோடு தங்களின் சகவாசம் எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டு விலக நினைத்தால் அதற்கு முன்பே பட்டியல் போட்டு உங்களுடைய மானம் அனைத்தும் அவர்களால் ஏலம் விடப்பட்டிருக்கும் என்பதை அவர்களுடன் இருந்து அனுபவப்பட்டவர்கள் என்ற முறையில் அன்புடன் எடுத்துச் சொல்கிறோம்.
இதற்கு மேலும் ததஜவினர் அடங்கவில்லையானால் முதலில் குத்து விளக்கு ஏற்றும் திருவாளர் என பத்திரிக்கை அடித்த 'டாக்டர் கலாம் சிட்டி நிறுவனம்' மற்றும் அதிரை நியூஸை தேடிப்போய் செய்தி கொடுத்தவர்களுடன் போய் மல்லு கட்டிக் கொள்ளுங்கள், முபாஹலா செய்து கொள்ளுங்கள் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை.
சில அப்பாவி ததஜ சகோதரர்கள் சிலர் புரியாமல் பேஸ்புக்கில் ஏதேதோ எழுதுகின்றனர், கேட்கின்றனர் அவர்களுக்கும் இந்த பதிலே போதுமானது. அவர்களும் ததஜ எனும் நவீன பகுத்தறிவுவாதிகளை விட்டும் ததஜ ஆய்வாளர் மவ்லவி அப்பாஸ் அலி அவர்கள் போல் அப்பாவிகள் அனைவரும் வெளியேற அல்லாஹ் அருள் செய்வானாக!
நாங்கள் இங்கே ததஜவினர் என்று குறிப்பிடுவதெல்லாம் இஸ்லாத்திற்குள் பகுத்தறிவு கொள்கையை புகுத்தும் கொடியவர்களை தானே தவிர அப்பாவி ததஜ தொண்டர்களை அல்ல மாறாக அவர்கள் மீது இரக்கம் கொள்கின்றோம்.
ததஜவினரின் சுயரூபத்தையும், அவதூறையும் தெளிவாக புரிந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.
முழு விவாதத்தையும் காண இந்த சுட்டிக்குள் சென்று பாருங்கள்
பிற்சேர்க்கை:
அன்பான சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அதிரை நியூஸ் இணைய தளத்தினர் நிர்பந்திக்கப்பட்டு மறுப்பு வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்க வாய்ப்பிருந்தாலும் அதிரை நியூஸ் தளத்தில் வெளியிடப்படும் செய்தியே ஆதாரமென எடுத்துக் கொள்ளப்படுமென்பதால் அவர்களின் விளக்கத்தை பத்திரிக்கை தர்ம அடிப்படையில் ஏற்றுக் கொள்கின்றோம்
அதிரை நியூஸ் இணைய தளத்தினர் நிர்பந்திக்கப்பட்டு மறுப்பு வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்க வாய்ப்பிருந்தாலும் அதிரை நியூஸ் தளத்தில் வெளியிடப்படும் செய்தியே ஆதாரமென எடுத்துக் கொள்ளப்படுமென்பதால் அவர்களின் விளக்கத்தை பத்திரிக்கை தர்ம அடிப்படையில் ஏற்றுக் கொள்கின்றோம்
அதிரை நியூஸில் இன்று வெளியிடப்பட்ட விளக்கத்தை வாசிக்க
ஆனால்
அதிரை நியூஸில் குத்துவிளக்கு ஏற்றிய செய்தி வெளிவருவதற்கு முன்பே ரியல் எஸ்டேட் நிறுவனத்தினரால் அடிக்கப்பட்ட அழைப்பிதழில் இவருடைய அனுமதியில்லாமல் தான் பெயர் போட்டார்களா?
மேலும் அழைப்பிதழில் பெயர் உள்ள செய்தியே தனக்கு தெரியாது என முழுப்பூசணிக்காயை ஒரு பருக்கை சோற்றுக்குள் மறைக்கப் போகிறாரா?
அழைப்பிதழ் மற்றும் அதிரை நியூஸ் செய்திகள் வெளியாகி 2 மாதங்கள் வரை சும்மா இருந்துவிட்டு திடீரென விவாத மேடைக்கு வந்து பொங்குவது ஏன்?
அழைப்பிதழில் குத்துவிளக்கு ஏற்றுவதாக சேர்மன் பெயர் போட்டு அவமானப்படுத்திய 'டாக்டர் கலாம் சிட்டி' நிறுவனத்தார் மீது என்ன நடவடிக்கை எடுத்தார் அல்லது எடுக்கப்போகிறார்?
இதற்கெல்லாம் மேல் அதிரை அன்வர் முத்தவல்லியாக இருந்தபோது தக்வா பள்ளியில் நிறுத்தப்பட்ட மௌலீது எனும் ஷிர்க் பாடல்களை மீண்டும் துவக்கி வைத்து நடத்தி வருகிறாரே இதைப்பற்றியும் தாருத் தவ்ஹீதினரால் சுட்டிக்காட்டப்பட்டதே அதைப்பற்றி சேர்மனும் அவரது ததஜ ஆதரவாளர்களும் இதுவரை மூச்சு விடவில்லையே ஏன்?
மறுக்கப்படும் ஸஹீஹான ஹதீஸ்களின் இடத்தை நிரப்ப மௌலீது எனும் ஷிர்க் பாடல்கள் தற்போது ததஜ தலைமையால் அங்கீகரிக்கப்பட்டுவிட்டதா? மௌலீது குப்பைகள் பகுத்தறிவுக்கு சரியென்று பட்டுவிட்டதா?
அதிரை தக்வா பள்ளியில் மௌலீது இணைவைப்பு பாடல்கள் பாடப்படுவதற்கு ஆதாரமாக ததஜவினர் மைக், ஊதுபத்தி, சாம்பிராணி போட்டோகளை கேட்பார்களோ?
இன்னொரு ததஜ ஆதரவாளர் பெயரும் குத்துவிளக்கு ஏற்றுவதாக அழைப்பிதழில் உள்ளதே அவர் ஏற்றினாரா? இல்லையா?
இதற்கெல்லாம் மேல் அதிரை அன்வர் முத்தவல்லியாக இருந்தபோது தக்வா பள்ளியில் நிறுத்தப்பட்ட மௌலீது எனும் ஷிர்க் பாடல்களை மீண்டும் துவக்கி வைத்து நடத்தி வருகிறாரே இதைப்பற்றியும் தாருத் தவ்ஹீதினரால் சுட்டிக்காட்டப்பட்டதே அதைப்பற்றி சேர்மனும் அவரது ததஜ ஆதரவாளர்களும் இதுவரை மூச்சு விடவில்லையே ஏன்?
மறுக்கப்படும் ஸஹீஹான ஹதீஸ்களின் இடத்தை நிரப்ப மௌலீது எனும் ஷிர்க் பாடல்கள் தற்போது ததஜ தலைமையால் அங்கீகரிக்கப்பட்டுவிட்டதா? மௌலீது குப்பைகள் பகுத்தறிவுக்கு சரியென்று பட்டுவிட்டதா?
அதிரை தக்வா பள்ளியில் மௌலீது இணைவைப்பு பாடல்கள் பாடப்படுவதற்கு ஆதாரமாக ததஜவினர் மைக், ஊதுபத்தி, சாம்பிராணி போட்டோகளை கேட்பார்களோ?
இன்னொரு ததஜ ஆதரவாளர் பெயரும் குத்துவிளக்கு ஏற்றுவதாக அழைப்பிதழில் உள்ளதே அவர் ஏற்றினாரா? இல்லையா?
சேர்மன் போல் அல்லாமல் அவர் ஓரளவு தவ்ஹீத் கொள்கையை ஒப்புக்கொள்பவர் ஆயிற்றே அவருக்காவது மார்க்கத்தை இதுவரை எடுத்து சொன்னீர்களா?
குத்துவிளக்கு ஏற்றும் பிற மதத்தினரின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது நபிவழியா?
என விடைதெரிய பல கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை என்று கூறி தற்போதைக்கு நிறைவு செய்கின்றோம்.
No comments:
Post a Comment