உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, November 30, 2014

பர்துபை மியூசியம் என்கிற அல் பஹீதி காவல் கோட்டை


2014 டிசம்பர் 2 ஆம் நாள் அமீரகம் தனது 43வது தேசிய தினத்தை கொண்டாட உள்ள நிலையில், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த துபையை பற்றியும் கொஞ்சம் எழுதுப்பா என நண்பர்கள் உசுப்பேற்ற, நவீன துபையை பற்றி எழுத அதிகமானோர் உள்ளதால் நாம் பழமையை போற்றுவோம் என தீர்மானித்தோம்.

பர்துபை மற்றும் தேரா பகுதியில் கைகெட்டிய (காலுக்கெட்டிய) தூரத்தில் பலப்பல வரலாற்று பொக்கிஷங்கள் நிறைந்திருந்தாலும், நம்மில் எத்தனை பேர் அவைகளைப் போய் ஆர்வமுடன் பார்த்திருப்போம் என்பது மிகப்பெரும் கேள்விக்குறியே!

பொதுவாக நகரங்களில் மியூசியம் இருக்கும் பார்த்திருப்போம் ஆனால் மியூசியங்களுக்கு நடுவில் அமைந்துள்ளதோர் நகரம் துபை என்றால் அது மிகையில்லை எவ்வாறெனில் பர்துபை மியூசியம், நைஃப் போலீஸ் மியூசியம், முர்ஷித் பஜார் மியூசியம், அஹமதியா ஹெரிடேஜ் ஸ்கூல் மியூசியம், ஷிண்டாகா ஹெரிடேஜ் வில்லேஜ் என்ற பிரம்மாண்ட மியூசியத் தொடர் என ஆங்காங்கே பல அருங்காட்சியகங்கள் அமைந்துள்ளன. 

அனைத்தையும் இனி ஒவ்வொன்றாக பார்க்கலாம்... 

முதலில் பர்துபை மியூசியம். 

இந்த அல் பஹீதி காவற்கோட்டையும் (AL FAHIDI FORT) அல் ஷிண்டாகா காவல் அரணும் அந்நியர்களின் கடல்வழி தாக்குதல்களிலிருந்து  காப்பதற்காக CREEKஐ முன்னோக்கி கட்டப்பட்டது. இக்கோட்டைகளை சுற்றியும் பின்னும் தான் ஆரம்பகால குடியேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த அரண்களின் பாதுகாப்பின் கீழ் தான் CREEKன் இருபுறமும் அன்றைய OLD SOUK மற்றும் முர்ஷித் பஜார் ஆகியவை உருவாகி இன்றும் அதன் பழமை மாற தோற்றத்துடன் துபை மாநகருக்கு பெருமையையும் மிகப்பெரும் பொருளாதாரத்தையும் வழங்கிக் கொண்டுள்ளது.
1822 ஆம் ஆண்டில் 'இவ்வளவு தான்' துபை

நம்ம ஊர் இப்ராஹிம் அன்சாரி காக்கா போன்ற வரலாற்று எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள் இவை. ஏனென்றால் துபையின் வரலாற்றை புரிந்து கொள்ள உள்ளே செல்லும் நாம் இந்தியாவின் பெருமைமிகு வரலாற்றை ஒரளவு அறிந்து கொண்டு வரலாம். ஆங்காங்கே இந்தியவுடனிருந்த கடல்வழி வணிக தொடர்புகள் குறிப்பிடப்பட்டுள்ளது. பண்டைய இந்தியாவும் இன்றைய இந்தியர்களும் இல்லை என்றால் துபை மாநகரம் இன்றும் ஒரு குக்கிராமமாகவே இருந்திருக்கும் அல்லது அதன் வளர்ச்சி இன்னும் பல ஆண்டுகள் தாமதப்பட்டிருக்கும்.

3 திர்ஹம் அனுமதிக்கட்டணம் வாங்கிக் கொண்டு அனுமதிக்கிறார்களே 3 திர்ஹம் வாங்கும் அளவிற்கு இங்கே என்ன இருக்கு? என்ற குழப்பத்தோடு மேல்மட்டத்தை மட்டும் பார்த்து உள்ளே சென்ற நமக்கு 10 நிமிடத்தில் வந்த வேலை முடிந்து விட்டதாகவே தோன்றியது ஆனால் இந்த மியூசியத்தை பார்வையிட 30 திர்ஹம் கூட தரலாம் என தோன்றியது நிலவறைக்குள் இறங்கிய பின்னரே, அதாங்க மண்ணுக்கு அடியில் ஒரு நவீன மின் அருங்காட்சியகத்தை நிர்மாணித்து பிரமிக்க வைத்துள்ளனர்.

நிலவறை உள்நுழையும்போதே நம்மை வரவேற்குமுகமாக 1930 முதல் 2010 வரையான துபையின் ஒவ்வொரு 10 ஆண்டின் வளர்ச்சியை காணொளி ஆவணப்படமாக காட்சிப்படுத்தியுள்ளனர் மேலும் 1960ல் தான் துபை பொருளாதார வளர்ச்சியின் பக்கம் முதல் அடியை எடுத்து வைத்து இன்று உலகின் ஒரு அசைக்க முடியாத பொருளாதார வல்லரசாய் உயர்ந்து நிற்கிறது என்ற உண்மையை அறியும் போது உள்ளங்கால் சில்லிடுகிறது.

ஆவணப்படம்


'இன்றைய நவீன மின் சாதனங்களின் துணை கொண்டு மிக அழகாக நம்மை பண்டைய துபைக்குள் பயணிக்க வைத்து', மீன்பிடித்தல் மற்றும் முத்துக்குளித்தலில் சிறந்து விளங்கிய துபை மக்களின் ஆட்சி, மக்கள், வணிகம், போர், பயணம், வெளியுலக தொடர்புகள், வாழ்க்கை முறை எவ்வாறு இருந்தது மற்றும் அகழ்வாய்வு பொருட்கள் மீதான நிறுவுதல்கள், இந்தியாவுடனிருந்த கடல் வணிகத் தொடர்பு குறித்த குறிப்புகள், துபை சர்வதேச கடல் வணிகர்களின் இளைப்பாருமிடமாக மாறியதால் ஏற்பட்ட தொழில் புரட்சி போன்ற வரலாற்றை ஒலி ஒளி வடிவில் வழங்கி அசரடித்து விடுகிறார்கள்.

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் என்றாலும் நேரில் பார்க்க விளைபவர்களின் ரசனைக்காக விட்டுவிட்டு புகைப்பட தோரணங்களாய் ரசிப்போம் வாருங்கள்...


 போர் மற்றும் இசைக்கருவிகள்

 நிலத்தடிக்குள் பழைய துபை பட்டண காட்சிகள்

அன்றும் இன்றும் நம் இந்தியாவை சார்ந்து தான் துபை, துபையை சார்ந்து தான் இந்தியா என்பதற்கான ஆதாரங்கள் அடுத்த தொகுப்பில் இன்ஷா அல்லாஹ். இங்கே மிகச்சிலவற்றை மட்டுமே புகைப்படங்களாய் தர முடிந்துள்ளது என்றாலும் இன்னும் காண வேண்டியவை, பதிய வேண்டியவை ஏராளம் உள்ளன.  

இன்ஷா அல்லாஹ், ஷிண்டாகா  அரண்  மியூசியத்தின் விபரங்களுடன் விரைவில் உங்களை சந்திக்கவிருப்பது....

அதிரை அமீன்

3 comments:

  1. சகோ. அமீன் காக்கா மற்றும் அதிரை நியூஸ் நிர்வாகிகளுக்கு

    இது போன்ற சிலைகள் வடிப்பது இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட *பெரும்பாவங்களில்* நின்றும் உள்ளது. இயல்பாகவே, சிலைகள், உருவச் சித்திரங்களை காணும்போது சரியான ஈமானுள்ள ஒரு முஸ்லிமின் உள்ளம் வெறுப்படையும். இது மாதிரியான சிலைகள் வணக்கத்திற்காக அல்லாமல் வெறும் கலையுணர்விற்காக படைக்கப்பட்டது என்றாலும் பெரும்பாவமே. இந்த சிலைகள் மக்களில் பலரை வழிகெடுத்துவிட்டது என்பதை மறக்க வேண்டாம்.

    கலையுணர்வு, வரலாறு என்பதெல்லாம் மார்கம் அங்கீகரித்த வரையறைக்குள் தான்.

    அல்லாஹ் நம் அனைவருக்கும், முஸ்லிம்களின் ஆட்சியாளர்களுக்கும் நேர்வழியின் மீதும் தவ்ஹீதின் மீதும் நிலைத்திருக்கும் பாக்கியத்தை தருவானாக.

    ReplyDelete
    Replies
    1. அன்புச்சகோதரர் அபு ஹாஜர் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

      தங்களுடைய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக் கொள்கின்றேன் அதே சமயம் நான் சிலைகளை பற்றி சிலாஹித்து பேசவில்லை மாறாக அவர்களுடைய பண்டைய வரலாற்று கலாச்சார தொடர்புகளை பதிவது மட்டுமே என் நோக்கம்.

      சகோதரர் சுட்டியது போல் சிலை வடிவங்களை கொண்டுள்ள படங்களை நீக்கிவிட்டேன்.

      Delete
    2. சகோ. அமீன் காக்கா அவர்களுக்கு

      வ அலைக்குமுஸ்ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. அல்லாஹ் உங்களுக்கு அழகிய கூலியை நிரப்பமாக தருவானாக. என்னையும் உங்களையும் நேர்வழியில் அதிகப்படுத்துவானாக.

      Delete