உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, November 20, 2014

கந்தூரிகளுக்குத் தடை வேண்டும்! ADT கலெக்டரிடம் கோரிக்கை

அன்பான சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தூய இஸ்லாத்திற்கு எதிரான கந்தூரி என்ற இணைவைப்பு திருவிழா நிறுத்திட வேண்டி வருடந்தோறும் சாத்வீகமான முறைகளில் அதிரை தாருத் தவ்ஹீத் போராடி வருவதை அனைவரும் அறிவோம். அதனடிப்படையில் கடந்த வாரம் கந்தூரியின் தீமைகளை உணர்த்தியும் அது உடன் நிறுத்தப்பட வேண்டிய காரண, காரியங்களை குறித்தும் அதிரையின் அனைத்து ஜூம்ஆ பள்ளிகளிலும் துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டது. 

http://adiraidaaruttawheed.blogspot.in/2014/11/14.html

மேலும் கடற்கரை தெரு சகோதரர்களே முகநூல் வழியாக மானம் ரோஷமிருந்தால் யாரும் எங்கள் தெரு கந்தூரிக்கு வராதீர்கள் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். தனிப்பட்ட முறையிலும் கடற்கரை தெரு சகோதரர்கள் தங்களின் ஆதங்கத்தையும் இணையதளங்கள் வழியாகவும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

http://adiraiaimuae.blogspot.ae/2014/11/blog-post_20.html

முத்தாய்ப்பாக, அமீரக கடற்கரை தெரு கூட்டமைப்பின் சார்பாகவும் கந்தூரிக்கு எதிரான நோட்டீஸ் ஒன்று வெளியிடப்பட்டு கந்தூரியை உடனே நிறுத்திட வேண்டுகோள் விடப்பட்டிருந்தது ஆனால் இவை அனைத்தும் விழலுக்கிறைத்த நீராகிப் போனதால் அடுத்தகட்ட நடவடிக்கையாக தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு கந்தூரியை தடை செய்திட வேண்டி கீழ்க்காணும் மனு அனுப்பப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் கந்தூரிக்கு எதிரான அறப்போர் தொடரும்..

http://adiraiaimuae.blogspot.ae/2014/11/blog-post_14.html

========================================================================================

அஸ்ஸலாமு அலைக்கும்.

கந்தூரிகளுக்குத் தடை வேண்டி, மாவட்ட ஆட்சியருக்குக் கடந்த 17.11.2014 அன்று கூரியரிலும் மின்னஞ்சலிலும் அனுப்பிய வேண்டுகோள் மனு:

இன்று 21.11.2014 மாலை 3 மணிக்குப் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு-வார்த்தை நடைபெற உள்ளது.

Thanks to News Source: 
http://adiraidaaruttawheed.blogspot.in/2014/11/blog-post_21.html

No comments:

Post a Comment