உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, November 28, 2014

அதிரைக்கு பெருமை சேர்த்த நேர்மையாளர் சகோதரர் இலியாஸ் (படங்களுடன்)

எதிர்வரும் அமீரகத்தின் 43வது தேசிய தின கொண்டாட்டங்களில் ஒன்றாக அதிரை சகோதரர் ஒருவர் நேர்மைக்காக பாராட்டப்பட்டுள்ளது அமீரக வரலாற்றில் ஒன்றாகிபோனது.

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மகனும் ஜாகிர் ஹீசைன், அப்துல் காதர் ஆகியோரின் சகோதரருமான இலியாஸ் அவர்களின் நேர்மையான ஒரு செயல் நாங்களும் அதிராம்பட்டிணம் தான் என நம்மையும் உளம்மகிழ செய்துள்ளது.



அப்படி என்ன செய்தார்!!!!!

மிகச்சில இடங்களில் சில்லறைகளுக்காக கொலை வரை செல்லும் ஒரு தேசத்திலிருந்து வந்துள்ள நமக்கு, காசு பணத்தை சம்பாதிப்பதை மட்டும் இலட்சியமாக கொண்டு கடல் கடந்து வந்துள்ள நமக்கு திடீரென ஒர் பணப்பை கிடைத்தால் இயற்கையாய் என்ன செய்வோம், குறைந்தபட்சம் மனதளவிலாவது சலனப்படுவோம் ஆனால் சகோதரர் இலியாஸ் அவர்களுக்கு அப்படி ஒரு நிலை ஏற்பட்ட பொழுது தான் அல்லாஹ்வுக்கு பயந்தவன் என்பதை செயலில் நிரூபித்தார்.

கடந்த 2014 ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி துபை கிளாக் டவர் அருகேயுள்ள EMIRATES NBD பேங்க் வெளிப்புறத்தில் ஒரு பையை கண்டெடுக்கின்றார், உள்ளே திறந்து பார்த்தால் 1000 திர்ஹம் நோட்டு கட்டுக்களாக 50,000 திர்ஹம் அனாதையாக கிடக்கின்றது. (சுமார் 8 ½ லட்சம் இந்திய ரூபாய்) பையுடன் பணத்தை கண்டெடுத்தவரின் கால்கள் உடன் முரக்கபாத் போலீஸ் ஸ்டேசனை நோக்கி விரைந்தது, அங்கே போலீஸாரிடம் பணத்தை ஒப்படைத்த பின்பே நிம்மதியை உணர்ந்துள்ளார்.

2014 நவம்பர் 25 ஆம் தேதி திடீரென முரக்கபாத் போலீஸ் ஸ்டேசனிலிருந்து அழைப்பு வர முரக்கபாத் போலீஸ் ஸ்டேசன் சென்றவருக்கு 43 வது தேசிய தின கொண்டாட்ட நிகழ்வில் இலியாஸ் அவர்களுக்கு போலீஸ் தலைவர் (முதீர்) அவர்கள் கையால் பாராட்டு சான்றிதழும் மொபைல் போன் ஒன்றையும் பரிசாக வழங்கி கவுரவித்தனர். அன்றைய நிகழ்வில் கவுரவிக்கப்பட்ட ஒரே வெளிநாட்டினர் இவர் ஒருவரே.

இவரது நேர்மையை கொண்டாட இந்தியனாக, தமிழனாக, தஞ்சை தரணியனாக, அதிரை மைந்தனாக ஒவ்வொருவருக்கும் உரிமையிருக்கிறது. இஸ்லாம் கற்பித்த வழியில் பிறருக்கு முன் மாதிரியாய் அமைந்த இந்த அழகிய நிகழ்வை போற்றும் விதமாக நாமும் அவருக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும் ஏகன் அல்லாஹ்விடத்தில் பிரார்த்திப்போமாக!

அதிரை அமீன்


1 comment: