அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
வாரந்தோறும் அபுதாபி முஸஃபா பகுதியில் நடைபெற்று வருகின்ற குர்ஆன் விளக்க மார்க்க வகுப்பு இந்த வாரமும் இறைவனின் அருளாள் 14.11.2014 வெள்ளிக்கிழமை இஷாவுக்குப்பின் நல்லமுறையில் நடைபெற்று முடிந்தது, அல்ஹம்துலில்லாஹ்.
இந்த வார அமர்வையும் வழமைபோல் பொறியாளர் ஜெய்லானி அவர்கள் சிறப்புடன் நடத்தினார்கள். இந்த வார அமர்வின் சிறப்பு கருப்பொருளாக ஹதீஸ் குத்ஸியின் இரண்டாவது ஹதீஸ் எடுத்துக் கொள்ளப்பட்டு அது தொடர்பான குர்ஆன் வசனங்கள் மற்றும் நபிமொழிகள் கொண்டு தெளிவான விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் சென்ற வார வகுப்பின் தொடர்ச்சியாக, ஹதீஸ் குத்ஸியின் முதலாவது ஹதீஸ், தினசரி வாழ்வின் துவக்கமாக அமைந்துள்ள 'தூக்கதிலிருந்து எழுந்தவுடன் ஒதும் துஆ', ஆயத்துல் குர்ஸி ஆகியவை பொருளுடன் மனனம் செய்யும் பயிற்சியுடன் அதன் சிறப்புக்களும் சொல்லித் தரப்பட்டன. பெரும்பாலான சகோதரர்கள் குறிப்பேடுகளுடன் வந்திருந்தனர். நடத்தப்பட்ட பாடத்திலிருந்து இடையிடையே கேள்விகளை எழுப்பி வகுப்பை சுவரஸ்யமாக கொண்டு சென்றார்கள்.
முஸஃபாவிலிருந்து
லால்குடி முஸ்தபா
No comments:
Post a Comment