உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Monday, November 24, 2014

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் தடாலடி அறிவிப்பு


சென்ற நவம்பர் 15ந் தேதி முதல் அமுலுக்கு வந்துள்ள புதிய அறிவிப்பின்படி இனி எமிரேட்ஸ் விமானங்களில் 300 செ.மீ (118 இன்ச்) (நீளம், அகலம், உயரம் என அனைத்து) சுற்றளவுள்ள பயண பொதிகள் (Check-In Free Baggage) மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவர் எனினும் எக்கானமி வகுப்பிற்கான 30 கிலோ எடையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை (அதேபோல் பிஸ்னெஸ் வகுப்பிற்கு 40 கிலோ, முதல் வகுப்பிற்கு 50 கிலோ என்ற நிலையிலும் மாற்றமில்லை). புதிய விதிமுறைக்கு மேலுள்ள பயண பொதிகள் அனைத்தும் இனி சரக்குப் பொதிகளாக கருதப்பட்டு அதற்குரிய மேலதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கனடா, வட மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கு எமிரேட்ஸ் விமானங்களில் பயணம் செய்பவர்களுக்கு பொருந்தாது.

இந்த புதிய நடைமுறைக்கு முன், அதாவது நவம்பர் 15க்கு முன் விமான டிக்கெட் வாங்கியவர்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதியாக 400 செ.மீ சுற்றளவுள்ள பயண பொதிகளை கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவர் என்றாலும் அவர்கள் பயண தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் முன் அனுமதி பெற்றாக வேண்டும்.

2 பயண பொதிகளாக பிரித்து கொண்டு வருபவர்களின் 2 பொதிகளும் சேர்த்து 300 செ.மீ என்ற அளவுக்குள் தான் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது (ஒவ்வொன்றும் 150 செ.மீ அல்லது 59 இன்ச்). நிர்ணயிக்கப்பட்ட புதிய அளவுக்கு மேலிருந்தால் கூடுதல் கட்டணம் செலுத்த நேரிடும் அல்லது சரக்குக் பொதியாக (Freight or Cargo) மட்டுமே அனுமதிக்கப்படும்.

நவம்பர் 15க்கு முன் டிக்கெட் வாங்கியவர்கள் 2 பொதிகளாக பிரித்து கொண்டு வரும்பட்சத்தில் அதன் ஒவ்வொன்றின் சுற்றளவும் 158 செ.மீ (அல்லது 62 இன்ச்) என்ற அளவுக்குள் மட்டுமே இருக்க வேண்டும். மூன்று வகை வகுப்பினருக்கும் இந்த புதிய விதிமுறை பொருந்தும்.

கைக்குழந்தையுடன் செல்பவர்கள் கூடுதலாக 10 கிலோ வரை எடுத்துச் செல்லலாம் என்றாலும் அதன் சுற்றளவு 55*38*20 என்ற அளவிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும் என எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் புதிய விதிமுறைகள் அறிவிக்கின்றன.

உலகத்தரம் வாய்ந்த சேவைகளை வழங்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் பயணிகளுக்கு சிரமம் தரும் இதுபோன்ற புதிய நடைமுறைகளை திரும்பப்பெற வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர்.

என்ன ஒன்னு, இதுவரை பயண பொதிகளை எடைபோட தராசுக்கு அலைந்தோம் இனி டேப்புக்கும் அலையனும் அவ்வளவு தான். 

தமிழில்
அதிரை அமீன்

Thanks to News Source:
http://gulfnews.com/news/gulf/uae/tourism/emirates-new-baggage-rules-1.1415084?utm_source=Facebook&utm_medium=Social&utm_campaign=Blog

No comments:

Post a Comment