உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Monday, September 7, 2015

அதிரையின் பெருமை 'கௌரவ மாஜிஸ்திரேட்' N.K.S.அப்துல் ரஜாக்

இன்று 'சமூக புற்றுநோய் கிருமிகள்' எல்லாம் 'சமூக ஆர்வலர்'களாகவும், தனது கைத்தடி என்பதற்காகவே இப்படிப்பட்ட நச்சுக் கிருமிகளுக்கு குடை பிடித்து தனது பொறுப்புக்கும் பதவிக்கும் இழுக்கை தேடிக்கொள்பவர்களும் இருந்து கொண்டுள்ள இதே அதிரையில் தான் பல நன்மக்களும் மறைந்தும் வாழ்ந்து கொண்டுள்ளனர். அப்படிப்பட்ட அதிரையின் மாணிக்கங்களுள் ஒருவராக, 'கௌரவ மாஜிஸ்திரேட்' பதவி வகித்த மர்ஹூம் N.K.S. அப்துல் ரஜாக் அவர்களைப் பற்றி மிகச்சில விஷயங்களையாவது இன்றைய தலைமுறையினர் தெரிந்து வைத்திருத்தல் நல்லது. 



N.K.S. அப்துல் ரஜாக் அவர்கள் ஒரு மிராசுதாராக, தேங்காய் மொத்த வியாபாரியாக, ஒரு அரசியல்வாதியாக, சுதந்திர இந்தியாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அதிரை நகரத்தின் முதல் தலைவராக, கவுன்சிலராக, அரசாங்க 'கௌரவ மாஜிஸ்திரேட்'டாக, அதற்கும் மேலே மனிதநேய நிறைகுடமாய் திகழ்ந்துள்ளார்கள்.

தான் கௌரவ மாஜிஸ்திரேட்டாக இருந்தபொழுது நீதிபதிகள் தீர்ப்பளிப்பதற்கு சிறுபான்மையினர் பிரச்சனைகளில் கருத்து மற்றும் நல் ஆலோசணைகளை வழங்கி உதவுவதுடன், அரசுப்பணிகளில் சேர்வதற்கு ஏதுவாக பலரும் நன்மையடையும் வகையில் நற்சான்று / சிபாரிசு கடிதங்களை நாடிவந்தோருக்கு வழங்கியுள்ளார்கள். அவர்களுடைய சிபாரிசின் அடிப்படையில் 1954 ஆம் ஆண்டு அரசாங்க வேலையில் சேர்ந்த ஒருவர் தான் மர்ஹூம் K.S.M. இஸ்மாயில் மாமா அவர்கள். 



பட்டுக்கோட்டையில் தற்பொழுது புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள இடம் முன்பு குளமாக இருந்ததும், MGR அவர்களுடைய ஆட்சி காலத்தில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராகவும், வருவாய்துறை அமைச்சராகவும் இருந்த திரு எஸ்.டி. சோமசுந்தரம் அவர்களின் முயற்சியால் குளம் தூர்க்கப்பட்டு பேருந்து நிலையம் கட்டப்பட்டது ஆனால் இந்த குளத்தை வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வந்தது N.K.S. அப்துல் ரஜாக் அவர்கள் தான்.

ஒருமுறை ஆந்திர மாநிலத்திலிருந்து பஞ்சம் பிழைக்கவந்த 'ஒட்டர்' இன மக்கள் கூட்டமாக பட்டுக்கோட்டையில் தங்கியிருக்க, அவர்களை பற்றி விசாரித்த N.K.S. அப்துல் ரஜாக் அவர்கள் தனது சொந்த செலவில் குளத்தை வெட்டுமாறு பணிக்க, உருவானது தான் 'தலையாரி குளம்'. பல வருடங்கள் மக்கள் குளிக்கப் பயன்பட்ட இந்தக்குளம் காலப்போக்கில் இன்று அதிரையின் "புதுக்குளம்" உள்ள நிலையை தலையாரி குளமும் அடைந்து நாறியது பொதுமக்களின் பொறுப்பற்றத்தனத்தால் விளைந்த விளைவே.

N.K.S. அப்துல் ரஜாக் அவர்கள் தான் அதிரை நகர காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தபொழுதே நேர்மையாளர்கள் கோஷ்டி அரசியலில் நீடிக்க முடியாது என்பதை உணர்ந்து பதவியையும் கட்சியையும் உதறித் தள்ளினார்கள்.

குடும்பம் குறித்த சிறுகுறிப்பு (நாங்கள் அறிந்த வரையில்):

1980 ஆம் ஆண்டு வஃபாத்தான அப்துல் ரஜாக் அவர்களுக்கு தாஜூதீன், சர்புதீன், இக்பால் என 3 ஆண் வாரிசுகளும், 2 பெண் வாரிசுகளும் உள்ளனர்.

ஆண் வாரிசுகள் வழிப்பேரர்கள் சபீர் (பட்டுக்கோட்டை ஒன்றிய முன்னாள் திமுக இளைஞரணி அமைப்பாளர்), அப்துல் ரஜாக், ரியாஸ் அகமது, அகமது அஜீம், நஸீர் அகமது ஆகியோர்களுடன், 

பெண் வாரிசுகள் வழிப்பேரர்கள் தான் டாக்டர் அப்துல் ஹக்கீம், பசுலுதீன், சேக்காதி, அஹமது கபீர், தவ்பீக் ஆகியோர்கள் என்பதும் கூடுதல் தகவல்.

புகைப்படங்கள், ஆவண நகல்கள் மற்றும் குறிப்புகள் வழங்கியோர்:
1. முஹமது யாக்கூப் (K.S.M. இஸ்மாயில் மாமா மகனார்)
2. N.K.S. சபீர்



ஆக்கம்:
S. அப்துல் காதர்
அதிரை அமீன்

No comments:

Post a Comment