உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Wednesday, September 9, 2015

அதிராம்பட்டிணம் சட்டமன்ற தொகுதி: ஓர் அரசியல் வரலாற்று பார்வை

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு கணக்குப்படி இன்னும் சுமார் 8 மாதங்களே உள்ள நிலையில் அதன் குளிர் காய்ச்சல் அனைத்து கட்சிகளையுமே பற்றிக் கொண்டுள்ளதை பார்த்து வருகிறோம். 

இன்று பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குள் ஓர் ஊராய் அடங்கிப்போயுள்ள 'நம்ம அதிராம்பட்டிணம்' சுதந்திர இந்தியாவில் சுமார் 10 வருடங்கள், முதல் சட்டமன்ற தேர்தல் நடந்த ஆண்டான 1952 முதல் 1962 வரை நடைபெற்ற 3 சட்டமன்ற தேர்தல்களில் தனித் தொகுதியாக திகழ்ந்து 3 சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்துள்ளது. 

1967 ஆம் ஆண்டு முதல் மறுவரையரை செய்யப்பட்ட பட்டுக்கோட்டை தொகுதியின் ஓர் பகுதியாய் அதிராம்பட்டிணம் இன்றும் இருந்து வருகிறது. அதேசமயம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியும் 1952 முதல் இருந்து வருகிறது.

1980களின் இறுதிவரை சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடும் பிரதான கட்சியினர் அனைவரும் அதிராம்பட்டிணம் சட்டமன்ற தொகுதியை மீண்டும் கொண்டு வர பாடுபடுவோம் என வாக்குறுதி அளித்து வந்தனர். காலப்போக்கில் வாக்குறுதி தந்தவர்களும் மறந்தனர், தேர்தலுக்கு தேர்தல் இதே வாக்குறுதியை கேட்டுக் கொண்டிருந்த மக்களும் மறந்தனர்.

அதேபோல், சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற முதல் பாராளுமன்ற தேர்தல் நடந்த ஆண்டான 1951 முதல் 2004 வரை புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதியின் ஒரு அங்கமாகவும், தொகுதி மறுசீரமைப்பு மூலம் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் முதல் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியின் ஒரு அங்கமாகவும் அதிராம்பட்டிணம் இருந்து வருகிறது.

கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம்:
முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக வாழும் அதிராம்பட்டிணம் வாக்காளர்கள் தான் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கி வருகின்றனர் என்றாலும் அதிராம்பட்டிணம் தனித்தொகுதியாக இருந்தபோதும் சரி பின்பு பட்டுக்கோட்டையுடன் இணைக்கப்பட்ட பின்பும் சரி, எந்த ஒரு பிரதான கட்சியும் இதுவரை முஸ்லீம்களை வேட்பாளராக நிறுத்தியதே இல்லை.
-------------------------------------------------------------------------
 
குறிப்பு:
இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் இந்திய அரசினரால் நடத்தப்பட்ட பொதுத்தேர்தல்கள் குறித்து மட்டுமே இங்கு அலசப்படுகிறது மாறாக 1920 முதல் நடைபெற்று வந்த மதராஸ் மாகாண கவுன்சில் தேர்தல்கள் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடத்தப்பட்டு வந்ததும், பின்பு கவுன்சிலுக்கு பதிலாக 1937 முதல் ஆங்கிலேய அரசால் நடத்தப்பட்ட மதராஸ் மாகாண சட்டமன்ற தேர்தல்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. 

மதராஸ் மாகாண சட்டமன்ற தேர்தல்: மொத்த தொகுதிகள்: 375

அதிராம்பட்டிணம் சட்டமன்ற தொகுதி:

1952 ஆம் ஆண்டு வெற்றிபெற்ற முதலாவது சட்டமன்ற உறுப்பினர் எஸ். வெங்கடராம ஐயர் - இந்திய தேசிய காங்கிரஸ்
 
எதிர்த்து தோல்வியுற்றவர் கே. முத்தையா - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
 
முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராஜாஜி என்கிற ராஜகோபாலச்சாரியார்
--------------------------------------------------------------------------------
 
இடையில், 1953 ஆம் ஆண்டு, அக்டோபர் 1 ஆம் தேதி, ஆந்திர மாநிலம் தனியாகவும், இன்றைய கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டம் அன்றைய மைசூர் மாகாணத்துடனும் இணைந்ததாலும், 1956 ஆம் ஆண்டு, நவம்பர் 1 ஆம் தேதி மதராஸூடன் இருந்த மலபார் மாவட்டம் கேரளாவுடன் சேர்க்கப்பட்டு பதிலாக கன்னியாகுமரி மாவட்டமும், செங்கோட்டை தாலுக்காவும் மதராஸூடன் இணைக்கப்பட்டதாலும் மதராஸ் மாகாணம் 'மதராஸ் மாநிலம்' ஆனது.
--------------------------------------------------------------------------------
 
மதராஸ் மாநில சட்டமன்ற தேர்தல்: மொத்த தொகுதிகள்: 205 

அதிராம்பட்டிணம் சட்டமன்ற தொகுதி: 

1957 ஆம் ஆண்டு வெற்றிபெற்ற 2வது சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர். மாரிமுத்து – பிரஜா சோஷியலிஸ்ட் பார்ட்டி

எதிர்த்து தோல்வியுற்றவர் என். சுந்தரேச தேவர் - இந்திய தேசிய காங்கிரஸ்
 
முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் காமராஜர்
---------------------------------------------------------------------------------
 
இடையில், 1959 ஆம் ஆண்டு, ஆந்திரா மாநிலத்திலிருந்து 1 தொகுதி திரும்பப் பெறப்பட்டு மதராஸ் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.
---------------------------------------------------------------------------------
 
மதராஸ் மாநில சட்டமன்ற தேர்தல்: மொத்த தொகுதிகள்: 206

அதிராம்பட்டிணம் சட்டமன்ற தொகுதி:
 

1962 ஆம் ஆண்டு வெற்றிபெற்ற 3வது சட்டமன்ற உறுப்பினர் தண்டாயுதபாணி பிள்ளை – இந்திய தேசிய காங்கிரஸ்
 
எதிர்த்து தோல்வியுற்றவர் ஏ.ஆர். மாரிமுத்து – பிரஜா சோஷியலிஸ்ட் பார்ட்டி
 
முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் காமராஜர்
----------------------------------------------------------------------------------
 
மேற்காணும் இதே வருடங்களில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்:
 
1952: நாடிமுத்து பிள்ளை - இந்திய தேசிய காங்கிரஸ்

1957: ஆர். சீனிவாச ஐயர் - இந்திய தேசிய காங்கிரஸ்

1962: வி. அருணாச்சல தேவர் - திராவிட முன்னேற்றக் கழகம்
---------------------------------------------------------------
 
1967 ஆம் ஆண்டு முதல் தொகுதி மறுசீரமைப்பு மூலம் அதிராம்பட்டிணமும் பட்டுக்கோட்டையும் ஒரே தொகுதியாக மாற்றப்பட்டும், தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 234 ஆக உயர்த்தப்பட்டும் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன.

2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பிலும் அதிராம்பட்டிணம் பட்டுக்கோட்டை தொகுதியிலேயே தொடர்ந்தது மேலும் 234 என்ற மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையிலும் மாற்றம் செய்யப்படவில்லை.

1967 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடித்த திரு. சி.என். அண்ணாதுரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு மதராஸ் மாநிலம் என்றிருந்த பெயரை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்தது.
---------------------------------------------------------------
 
1967 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டு நடப்பு சட்டமன்றம் வரை பட்டுக்கோட்டை தொகுதியில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல்:

1967: ஏ.ஆர்.மாரிமுத்து – பிரஜா சோஷலிஸ்ட் பார்ட்டி

1971 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மாநில சட்டமன்றம் என பெயர் மாற்றம் பெற்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

1971: ஏ.ஆர்.மாரிமுத்து – பிரஜா சோஷலிஸ்ட் பார்ட்டி
1977: ஏ.ஆர்.மாரிமுத்து – இந்திய தேசிய காங்கிரஸ்
1980: எஸ்.டி.சோமசுந்தரம் – அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1984: பி.என்.ராமச்சந்திரன் – அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1989: கே.அண்ணாதுரை – திராவிட முன்னேற்றக் கழகம்
1991: கே.பாலசுப்பிரமணியன் – அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1996: பி.பாலசுப்பிரமணியன் – திராவிட முன்னேற்றக் கழகம்
2001: என்.ஆர்.ரங்கராஜன் – தமிழ் மாநில காங்கிரஸ்
2006: என்.ஆர்.ரங்கராஜன் – இந்திய தேசிய காங்கிரஸ்
2011: என்.ஆர்.ரங்கராஜன் – இந்திய தேசிய காங்கிரஸ்
------------------------------------------------------------------
 
சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஜெயித்தவர்கள்:
 
புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதியின் கீழ்:
1951: கே.எம்.வல்லத்தரசு – கிஸான் மஸ்தூர் பிரஜா பார்ட்டி
1957: எப்.ராமநாதன் செட்டியார் - இந்திய தேசிய காங்கிரஸ்
1962: ஆர்.உமாநாத் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
1967: ஆர்.உமாநாத் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
1971: கே.வீரையா – திராவிட முன்னேற்றக் கழகம்
1977: வி.எஸ்.இளஞ்செழியன் - அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1980: வி.என்.சுவாமிநாதன் - இந்திய தேசிய காங்கிரஸ் (இந்திரா)
1984: என்.சுந்தர்ராஜ் - இந்திய தேசிய காங்கிரஸ்
1989: என்.சுந்தர்ராஜ் - இந்திய தேசிய காங்கிரஸ்
1991: என்.சுந்தர்ராஜ் - இந்திய தேசிய காங்கிரஸ்
1996: என்.சிவா – திராவிட முன்னேற்றக் கழகம்
1998: ராஜா பரமசிவம் - அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1999: எஸ்.திருநாவுக்கரசு – எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2004: எஸ்.ரகுபதி - திராவிட முன்னேற்றக் கழகம்
 
தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியின் கீழ்:
2009: எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் - திராவிட முன்னேற்றக் கழகம்
2014: கே.பரசுராமன் - அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
-----------------------------------------------------------
 
இதற்கு மேல் பொறுமை இழப்பீர்கள் என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கின்றோம்.
 
தொகுப்பு:
அதிரை அமீன்
அப்துல் காதர்

No comments:

Post a Comment