உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, October 27, 2011

உழ்ஹிய்யா எனும் குர்பானி & ஹஜ் வழிகாட்டி (குறிப்புகள்)

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!
கண்ணியமிக்க சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் மகனார் இஸ்மாயில்(அலை) அவர்களை அறுத்துப் பலியிடுமாறு அல்லாஹ் கனவின் மூலம் இப்ராஹீம்(அலை) அவர்களுக்குக் கட்டளையிட்டான். இறைவனின் இக்கட்டளையை நிறைவேற்ற முற்பட்டபோது அல்லாஹ் அதனைத் தடுத்து ஓர் ஆட்டைப் பலியிடுமாறு கட்டளையிட்டான். இவர்களின் இந்தத் தியாகத்தை நினைவு கூறும் வண்ணம் மற்றவர்களும் ஈதுல் அழ்ஹா தினத்தில் பிராணியைப் பலியிட வேண்டுமென அல்குர்ஆனில் பின்வருமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
'எனவே, சகிப்புத்தன்மை மிக்க ஒரு மகன் குறித்து அவருக்கு நாம் நன்மாராயம் கூறினோம்.
அவருடன் இணைந்து செயற்படும் பருவத்தை (இஸ்மாயீலாகிய) அவர் அடைந்த போது, 'என்னருமை மகனே! உன்னை நான் அறுப்பதாக நிச்சயமாகக் கனவில் கண்டேன். உனது அபிப்பிராயம் என்ன?' எனக் கேட்டார். அ(தற்க)வர், 'என்னருமைத் தந்தையே! உங்களுக்கு ஏவப்பட்டதை நீங்கள் செய்யுங்கள். இன்ஷh அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) என்னைப் பொறுமையாளர்களில் நீங்கள் கண்டுகொள்வீர்கள்!' என்று கூறினார்.
அவ்விருவரும் (அல்லாஹ்வுக்குக்) கட்டுப்பட்டனர். இன்னும் அவர் (மகனாகிய) இவரை நெற்றி நிலத்தில் படக் கிடத்திய போது, இப்றாஹீமே! நிச்சயமாக நீர் கனவை உண்மைப்படுத்திவிட்டீர் என நாம் அவரை அழைத்தோம். நிச்சயமாக நாம் இவ்வாறே நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குவோம்.
நிச்சயமாக இது ஒரு தெளிவான சோதனையேயாகும். இவருக்குப் பகரமாக, மகத்தான ஒரு பலிப் பிராணியை ஆக்கினோம். பின்வருவோரில் அவர் மீது (புகழை) விட்டு வைத்தோம்' (அல்குர்ஆன் 37:101-108)
உழ்ஹிய்யா (குர்பானியின்) நோக்கம் இறையச்சம் என்பதைத்தவிர வேறில்லை என்பதைப் பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள்; தெளிவு படுத்துகின்றன.
'குர்பானியின் மாமிசமோ, அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை அடைவதில்லை. எனினும், உங்களின் இறையச்சமே அவனை அடைகிறது' (அல்குர்ஆன் 22:37)
மற்றுமொரு திருமறை வசனம் நபி(ஸல்) அவர்களைக் குர்பானி கொடுக்குமாறும் கட்டளையிடுகிறது. நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் இக்கட்டளைக்கு அடிபணிந்து தமது வாழ்வில் குர்பானி எனும் அமலை நிறைவேற்றியுள்ளார்கள். இந்த வகையில் நபி(ஸல்) அவர்களின் உம்மத்தினரான நமக்கும் இக்கட்டளையை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.
'உமது இறைவனைத் தொழுது குர்பானி கொடுப்பீராக' (அல்குர்ஆன் 108:02)
'நபி(ஸல்) அவர்கள் கொம்புள்ள கறுப்புக் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளைத் தன் கரத்தால் அறுத்துப் பலியிட்டார்கள்' (அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்)
குர்பானிப் பிராணிகள்:
'ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் (ஆடு, மாடு, ஒட்டகம்) நாற்கால் பிராணிகளிலிருந்து அவர்களுக்கு அவன் உணவாக கொடுத்தவற்றின் மீது (அவற்றை அறுக்கும்போது) அல்லாஹ்வின் திருப்பெயரை அவர்கள் கூறுவதற்காக குர்பானியை நாம் ஏற்படுத்தினோம்' (அல்குர்ஆன் 22:34)
குர்பானிப் பிராணியின் வயது:
 'முஸின்னா'வைத் தவிர வேறு எதனையும் அறுக்காதீர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்' (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி)  நூல்: முஸ்லிம், அபூதாவூத், நஸஈ, இப்னுமாஜா, அஹ்மத்)
ஒட்டகத்திற்கு ஐந்து வயதும், ஆடு, மாடுகளுக்கு இரண்டு வயதும் பூர்த்தியடைந்திருக்க வேண்டும். இங்கு 'முஸின்னா' என்று கூறப்படும் வார்த்தை ஆடு மாட்டில் இரண்டு பல் முளைத்த பிராணிகளைக் குறிக்கும். ஒட்டகத்திற்கு ஐந்து வயதிலும், ஆடு-மாடுகளுக்கு இரண்டு வயதிலும் இரண்டு பற்கள் வரும் பருவம்.
அறுத்துப் பலியிடத் தகாதவைகள்:
வெளிப்படையாகத் தெரியக்கூடிய நோய், குருடு, ஊனம் மற்றும் மிகவும் மோசமாக மெலிந்திருத்தல் போன்ற குறைகள் இருத்தல் கூடாது. (நூல்: திர்மிதி)
பிராணிகளில் ஆணும், பெண்ணும்:
நம்மில் பலபேர் பெட்டை ஆடுகளையும், பசுக்களையும், வித்தியாசமாகவே பார்க்கின்றனர். அவைகளை குர்பானி கொடுப்பதற்கு அறவே தகுதியற்றவை என்று நினைக்கின்றனர். உண்பதற்கு அனுமதிக்கப் பட்டவைகளில் கிடாயும், பெண்ணாடும், காளையும், பசுவும், சேவலும், கோழியும் சமமானவைதான். பறவைகளில் இதை ஏற்கக் கூடிய மக்கள் கால்நடைகளில் மட்டும் ஏற்கத் தயங்குகின்றனர். குர்பானி கொடுப்பதற்குக் காளையும் கிடாயும்தான் தகுதியானவை என்று திருக்குர்ஆனிலும், நபி(ஸல்) அவர்களின் பொன்மொழிகளிலும் எங்கேயும் கூறப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால்,
'ஜத்உ' (கன்று) என்று ஆண் பாலிலும், 'ஜத்அத்' என்று பெண் பாலிலும் கூறப்பட்டுள்ளது. எனவே, ஆண் கால்நடை-களைத்தான் உழ்ஹிய்யாக் கொடுக்க வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இரண்டுமே ஏற்கத் தகுந்தவைகளே.
அறுத்துப் பலியிடும் நேரம்:
'நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில் 'யார் இத்தொழுகையை நிறைவேற்றி விட்டுக் குர்பானி கொடுக்கின்றாரோ, அவர்தான் அக்கடமையை நிறைவேற்றியவராவார். யார் தொழுகைக்கு முன்னால் அறுக்கிறாரோ, அவர் கடமையை நிறைவேற்றியவராக மாட்டார்' என்று குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: பரா(ரலி) நூல்: புகாரி)
ஹஜ்ஜுக் பெருநாளன்று குர்பானி கொடுக்க இயலாதவர்கள் அதைத் தொடர்ந்து வரக்கூடிய அய்யாமுத் தஷ;ரீக் நாட்கள் (பிறை 11,12,13) ஆகிய நாட்களில் குர்பானி கொடுப்தற்கு நபி(ஸல்) அவர்கள் அனுமதி அளித்துள்ளார்கள்.
 'அய்யாமுத் தஷ;ரீக் நாட்கள் முழுவதும் அறுப்பதற்கு ஏற்ற நாளாகும்' அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முதஇம்(ரலி), நூல்: இப்னு ஹிப்பான்.
அறுக்கும் முறை:
          ஆடு-மாடுகளை ஒருக்கணித்து படுக்க வைத்து அறுக்க வேண்டும். (முஸ்லிம்)
          ஒட்டகங்களை நிற்க வைத்து அறுக்க வேண்டும். (முஸ்லிம்)
          அறுக்கும்போது 'பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்' என்று கூறவேண்டும் (புகாரி)
          நபியவர்கள் அல்லாஹ்விற்காக அல்லாஹ்வின் பெயர் கூறித் தக்பீர் மொழிந்து 'இறைவா! எனக்காகவும், உழ்ஹிய்யாக் கொடுக்காத என் உம்மத்தினர்-களுக்காகவும்' என்று கூறி ஓர் ஆட்டை அறுத்தார்கள். (அபூதாவூத், திர்மிதீ)
          உழ்ஹிய்யாக் கொடுப்பவர் அறுக்கத் தெரிந்தவராய் இருந்தால் தனது பிராணியைத் தானே அறுத்தல் சுன்னத்தாகும்.
உழ்ஹிய்யா இறைச்சியை பங்கிடல்:
உழ்ஹிய்யாக் கொடுப்பவர் தனது உழ்ஹிய்யாவிலிருந்து தானும் சாப்பிட்டு, தனது உறவினர்களுக்கும் அன்பளிப்புச் செய்து, ஏழைகளுக்கு தர்மமாகக் கொடுத்தல் சுன்னத்தாகும். அல்லாஹ் தன் திருமறையில்...
'அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்: வறிய ஏழைகளுக்கும் வழங்குங்கள்' (அல்குர்ஆன் 22:28)
'(குர்பானிக்கான) ஒட்டகங்களை அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாக உங்களுக்கு நாம் ஆக்கியுள்ளோம். அவற்றில் உங்களுக்கு நன்மை உண்டு. எனவே, (அது உரிய முறையில்) நிற்கும் போது அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறி (அறுத்து) விடுங்கள். அது தனது விலாப் புறங்களின் மீது சாய்ந்து விட்டால் அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள். உள்ளதைக் கொண்டு திருப்தியடைபவனுக்கும், யாசிப்பவனுக்கும் உணவளியுங்கள். நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு இவ்வாறே அவற்றை உங்களுக்கு நாம் வசப்படுத்தியுள்ளோம்' (அல்குர்ஆன் 22:36)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்;...
'மாமிசத்தை நீங்களும் சாப்பிட்டுப் பிறருக்கும் உண்ணக் கொடுங்கள், உங்களுக்காகச் சேமித்தும் வையுங்கள்' (நூல்: புகாரி, முஸ்லிம், நஸாயி)
மரணித்தவர்கள் சார்பாக குர்பானி:
மரணித்தவர்கள் சார்பாக குர்பானி கொடுப்பதற்குச் சரியான ஹதீஸ் எதுவும் காணக்கிடைக்கவில்லை. இதற்கு சிலரால் எடுத்துக் காட்டப்படும் ஆதாரங்கள் அனைத்தும் சரியற்றதாகவும், பலவீனமாகவும் உள்ளது.
'ஆதமின் மகன் இறந்து விட்டால் மூன்று விசயங்களைத் தவிர மற்ற எல்லாத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. அவை, நிரந்தர தர்மம், பயன் தரும் கல்வி, தன் தந்தைக்காக துஆச் செய்யும்        நல்ல குழந்தை' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம்)
மரணித்தவர்களுக்கு நன்மை சேர்க்கும் வழி இந்த மூன்றும்தான். இது அல்லாத வேறு வழிகளில் நன்மை சேரும் என்றால் அதை நபி(ஸல்) அவர்கள் தெளிவாகச் சொல்லியிருக்க வேண்டும். குர்பானி விசயத்தில் நபி(ஸல்) அவர்கள் இறந்தவர்கள் சார்பாக குர்பானி கொடுக்கும்படி கூறவில்லை. ஸஹாபாக்களும் கொடுத்ததில்லை.
குர்பானியின் மூலம் அல்லாஹ் எதிர்பார்ப்பது இறையச்சம் மட்டுமே! இந்த இறையச்சம் அவரவர் கொடுக்கும் போதுதான் வெளிப்படும். இறந்தவருக்காக நாம் கொடுப்பது அவரின் இறையச்சத்தை வெளிப்படுத்தாது. எனவே, உழ்ஹிய்யா எனும் வழிமுறையை நபிவழி பேணி நாமும் கொடுக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக!
வெளியீடு: தவ்ஹீத் இல்லம் தஃவா குழு

No comments:

Post a Comment