உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, October 4, 2011

உங்கள் ஓட்டு யாருக்கு ? இறுதியாக களத்தில் நிற்கும் 12 வேட்பாளர்கள் முழுவிவரம்:

அன்பான‌ என் அதிரை சொந்தகளே, மண்ணின்  மைந்த‌ர்க‌ளே!
இறைவ‌னின் சாந்தியும், ச‌மாதான‌மும் ந‌ம் அனைவ‌ரின் மீதும் உண்டாக‌ட்டுமாக‌.
பொதுவாக அதிரை பேருராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மேலத்தெருவில் இருந்து ஒருவர், நடுத்தெரு அல்லது கடல்கரை தெருவில் இருந்து மற்றொருவர் நிற்பது வழக்கம் இந்தமுறை  10 க்கு மேற்பட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டி போடுவதை தவிர்த்து பொதுவான ஒரு வேட்பாளர் அல்லது குறைந்த எண்ணிக்கையிலான வேட்பாளர் களை நிறுத்தும் வகையில் அதிரை அனைத்து முஹல்லா சார்பில் ஆலிம்கள் தலைமையில் மரைக்கா பள்ளியில் 26/09/2011 அன்று நடைபெற்ற ஒருங்கிணைப்பு கூட்டத்தில் காங்கிரஸ், திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் இந்த ஒருங்கிணைப்பு முயற்சியை நிராகரித்தனர்.  சுயேச்சை  மற்றும் மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த 3 வேட்பாளர் கள் வாபஸ் வாங்கிவிட்டனர் அல்ஹம்துலில்லாஹ்.
வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் இறுதியாக களத்தில் நிற்கும் வேற்பாளர்கள்:
1.      காங்கிரஸ், கட்சிக்கு  கட்டுபடுவோம் என்று தெரிவித்துவிட்டு, குடும்பபாரம்பரியத்தை விட்டு கொடுக்காமல், மீண்டும் பேருராட்சி மன்ற தலைவர் பதவியை தக்கவைக்க வேண்டும் என்ற முயற்சியில் முஸ்லிம்கள்,  மாற்று மத சகோதரர்கள் மற்றும் கட்சி வாக்குகளை நம்பி களத்தில் நிற்கும் காங்கிரஸ் வேட்பாளர் MMS பஷீர் அஹமது.


2.      பாரம்பரியமாக திமுக கட்சிக்காக பாடுபட்ட திமுகவை சேர்ந்த முன்னோடிகளை பின்னுக்கு தள்ளிவிட்டு எப்படியும் பேருராட்சி மன்ற தலைவராகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் திமுகவில் புதிதாக தன்னை இணைத்து கொண்ட அஸ்லாம் என்பவர் தன் பணபலத்தை பயன்படுத்தி திமுக வேட்பாளராக களத்தில் நிற்கிறார். முஸ்லிம்கள் மற்றும் கட்சி வாக்குகளை நம்பி போட்டியிடுகிறார். மறைந்த பேருராட்சி மன்ற தலைவர் சாட்சா MMS அப்துல் வஹாப் அவர்களுடன் அல் அமீன் பள்ளிவாசல் விவகாரமாக அவருடன் இணைந்து கொண்டு தன்னை பிரபலமாக்கிகொண்டவர்..
3.      அதிமுகவில் காலம்காலமாக கட்சிக்காக உழைத்தவர்கள் இருக்கும் போது தன்னை அதிமுகவில் புதிதாக இணைத்து கொண்டு மக்களால் அதிகம் அறிமுகம் இல்லாத சென்னையில் தொழில் செய்து வரும் கொய்யப்பா அப்துல் அஜீஸ் என்பவர் தன் பணபலத்தை நம்பி எப்படியும் பேருராட்சி தலைவராகிவிடவேண்டும் என்ற எண்ணத்தில் ஆளும்கட்சியின் உதவியுடன் முஸ்லிம்கள் மற்றும் கட்சி வாக்குகளை நம்பி அதிமுக வேட்பாளராக  போட்டியிடுகிறார்.
4.      முன்பு அதிமுக பிறகு முஸ்லிம் லீக் கட்சி மற்றும் அதிரை பைத்துல்மாலில் தன்னை இணைத்துக்கொண்டு மக்கள் மத்தியில் அறிமுகம் ஆனவர் வழக்கறிஞர் A முனாப். அதிரையில் செல்வாக்கு இல்லாத முஸ்லிம் லீக் கட்சி சார்பாக நிற்காமல் முஸ்லிம்கள் வாக்குகளை நம்பி சுயேச்சையாக பேருந்து சின்னத்தில் போட்டியிடுகிறார்.



5. மேலத்தெருவைச் சார்ந்த சகோதர் அப்துல் ஹலீம் சுயேச்சையாக சட்டை சின்னத்தில் போட்டியிடுகிறார்.  
6.      இடது கம்யூனிஸ்ட் கட்சி சார்ப்பில் பெரிய நெசவுத்தெருவை சேக்தாவுத் கதிர்அருவாள் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
7.    தேமுதிக சார்பில் முஸ்லிம்கள் யாரும் போட்டி போட முன்வராததால் சுப்பிரமணிய கோவில் தெருவை சார்ந்த தமிழ் செல்வன் என்பவர் முரசு சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் பலன்செட்டி தெருவில் பூக்கடை மற்றும் டி கடை நடத்திவருகிறார்
8.      ரஹ்மத்துல்லா (பந்தா) பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் யானை சின்னத்தில் போட்டியிடுகிறார்
9.      B JP  சார்பில் விஜயகுமார் (பாஜக) என்பவர் புத்தகம் சின்னத்தில் போட்டியிடுகிறார்
10. முகமது மொய்தீன் (சுயே) மேசை மின்விசிறி சின்னத்தில் போட்டியிடுகிறார்
11.  பாருக் (சுயே) கணிபொறி சின்னத்தில்போட்டியிடுகிறார்
12. நெய்னா (சுயே) பேனா சின்னத்தில் போட்டியிடுகிறார்
உங்கள் ஓட்டு யாருக்கு ?
அரசியல் செல்வாக்கு, பணபலம், தனி மனித செல்வாக்கு இந்த தேர்தலின் பலப்பரிட்சை.
இப்படி இருக்கும் இந்த சூழ்நிலையில், நாம் ஊர் பாரம்பரியம், வாரிசு அரசியல், தெருப்பாகுபாடு, கட்சிகள் என்று வர இருக்கும் தேர்தலுக்காக‌ பிளவுபட்டு நிற்காமல் ஊருக்கு சேர்மன் ஒருவரே வர முடியும் என்ற சூழ்நிலை இருப்பதால் இவர் வந்தால்,
  • நிச்சயம் சுயநலமின்றி ஊருக்காக நல்லது செய்வார்.
  • ஊரின் பிரதான பிரச்சினைகளுக்கு வழி காண்பார்.
  • நமது ஊரின் அனைத்து மக்களும் எளிதாக அணுகக் கூடியவராக இருப்பார்.
  • அரசு மூலம் நம் ஊருக்காக ஒதுக்கப்பட்ட நிதி மூலம் நல்ல பல திட்டங்களை கொண்டு வந்து சேர்ப்பார்.
  • ஊர் அமைதிக்கு அவ்வப்பொழுது பங்கம் விளைவிக்கும் மதச்சாயம் பூசப்பட்ட கலவரங்கள் வராமல் துரித நடவடிக்கை மூலம் (ஆரோக்கியமான அமைதி பேச்சு வார்த்தை மூலம்) ஏற்பட இருந்த‌ உயிர், பொருள் சேத‌ங்க‌ளை த‌டுக்க‌ முய‌ல்வார்.
  • எல்லாவ‌ற்றிற்கும் மேலாக‌ ந‌ல்ல‌ காரிய‌ங்க‌ள் செய்ய‌ உள்ள‌ துணிச்ச‌ல் அதிக‌ம் கொண்ட‌வ‌ராக‌ இருப்பார்.
  • நீதி, நேர்மை தவறாது பாரபட்சம் இன்றி இறையச்சத்துடன் செயல்படுவார்.
  • ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல் 21 வார்டுகளுக்கும் சேவைகள் செய்பவராக இருப்பவர்.

இவர்களில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர் தகுதியற்றவர் என நினைத்தாள் அதற்கும் வழியிருக்கிறது 49o பயன்படுத்தி நடுநிலையாக வாக்களிக்கலாம்.
யார் வெற்றி பெற்றாலும் சுயனலமின்றி, கட்சிக்கு அப்பால்பட்டு ஊர் நலனில் அக்கறையுடன் செயல்படுபவராக இருக்க வேண்டும் என்பதே
நாம் எதிர்பார்ப்பது.
அபு அப்துல் ரஹ்மான்

உங்கள் வார்டில் போட்டியிடும் வேட்பாளர்கள்  பற்றிய தகவல்கள் மற்றும் உள்ளாச்சி தேர்தல் சம்மந்தமான செய்திகள்  அனுப்பி தந்தாள் AIM வலைத்தளத்தில் பதிவிடுகிறோம்.

No comments:

Post a Comment