உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, September 22, 2015

அதிரையில் பெருநாள் திடல் தொழுகை - ஈத் கமிட்டி அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...



அதிரையில் கடந்த பல்லாண்டு காலமாக குர்ஆன், ஹதீஸ் வழிகாட்டலின் அடிப்படையில் பெருநாள் தொழுகைகளை திடல்களில் ஏற்பாடு செய்து நடத்தி வரும் 'ஈத் கமிட்டி' எதிர்வரும் ஹஜ் பெருநாள் தொழுகையையும் மைதானத்தில் நடாத்திட பல்வேறு முன்னேற்பாடுகள் செய்து வருவதுடன், தொழுகை நேரம் சம்பந்தமான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 24.09.2015 வியாழன் அன்று காலை மிகத்துல்லியமாக 7.30 மணியளவில், குத்பா பள்ளி அருகே கீழத்தெரு பகுதியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான மைதானத்தில் 'தியாகத் திருநாள் திடல் தொழுகை' நடைபெறும். (கடந்த நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்ற அதே மைதானம்)

மிக முக்கிய அறிவிப்பு:
அறிவித்துள்ளபடி மிக மிகத் துல்லியமாக காலை 7.30 மணிக்கு தொழுகை துவங்கிவிடும் என்பதால் 7 மணிக்கெல்லாம் மைதானத்திற்கு வந்துவிடுமாறும், யாருக்காகவும் எதற்காகவும் தொழுகை தாமதப்படுத்தப்படாது என்பதால் குறித்த நேரத்திற்குள் வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
 
அழைப்பின் மகிழ்வில்...
ஈத் கமிட்டி
அதிரை


Monday, September 21, 2015

அதிரையில் ஈத்மிலன் கமிட்டி நடத்தும் மாபெரும் பெருநாள் சந்திப்பு - அனைத்து சமய நல்லிணக்க விழா !

கடந்த வருடங்களை போல் இந்த வருடமும் அதிரை ஈத் மிலன் கமிட்டியின் சார்பில் எதிர்வரும் 27-09-2015 அன்று காலை 10.30 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பவித்ரா திருமண மண்டபத்தில் அனைத்து சமுதாய பொதுமக்கள் பங்கேற்கும் மாபெரும் பெருநாள் சந்திப்பு - சமய நல்லிணக்க விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதில் பல்வேறுதுறைகளை சேர்ந்த கல்வியாளர்கள் - சமூக நல்லிணக்கவாதிகள் - ஜமாத்தார்கள் - கிராம பஞ்சாயத்தர்கள் - மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

அனைத்து சமுதாய மக்கள் கலந்துகொள்ள இருக்கும் சமூக நல்லிணக்க விழாவில் தாங்கள் கலந்துகொள்வதுடன் தங்களுக்கு அறிமுகமான அனைத்து அன்பர்களையும் அழைத்துவர அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
அதிரை ஈத் மிலன் கமிட்டி, அதிரை

இது தொடர்பாக அதிரை ஈத்மிலன் கமிட்டி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பில் கூறியிருப்பதாவது:
 

Thursday, September 17, 2015

சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும் சில வாட்ஸ்அப் கலகல கற்பனை

ஹரப்பா, மொகஞ்சதாரோவை விடுங்கள்.. நம்மூர் நாகரீகம் எப்படிப்பட்டது தெரியுமா? வாட்ஸ்அப் கலகல
 
சென்னை: வாட்ஸ்சப்பில் தற்போது வைரலாக சுற்றிவரும் ஒரு மெசேஜ் சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பதாக உள்ளது. அந்த தகவலை பாருங்கள்!
 
ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகத்தை தொல்பொருள் ஆராய்ச்சியால் கண்டறிவது போல், தற்போதைய நம்மூரு நாகரிகத்தை, அடுத்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் எழுதப்படும் வரலாறு எப்படிப் புரிந்துகொள்ளும் என சிந்தித்துப் பார்த்ததில் இருந்து சில சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும் கற்பனை.
 
பொதுச் சொத்துக்களை கொள்ளையடிக்கும் உரிமை அரசாங்கத்திடமே இருந்திருக்கிறது. அப்படி கொள்ளையடிக்க விருப்பமுள்ளவர்களை தேர்வு செய்யும் பொறுப்பு மட்டும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களை அடையாளம் காண்பதற்காக அவரவர்க்கென தனித்தனி சின்னங்களும் வண்ணக் கொடிகளும் இருந்திருக்கின்றன!
 
வாகனப் போக்குவரத்து மிகுந்து காணப்பட்டிருக்கிறது. அரசு பேருந்துகளின் படிக்கட்டுகளில் ஊஞ்சலாடியபடி இனிதே பயணிக்கும் முறை இருந்திருக்கிறது. நடத்துநர் என்றழைக்கப்பட்டவர், விசில் என்ற இசைக் கருவியை இசைப்பதில் தேர்ச்சி பெற்றவராக இருந்திருக்கிறார். அவரது இசைக்கேற்ப பேருந்துகள் பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டபடி இயங்கியிருக்கின்றன! 
 
சமையல் செய்வதற்கென மிக்ஸி, கிரைண்டர் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தியுள்ளனர். நீர் அருந்தப் பயன்படுத்திய பிளாஸ்டிக்கிலான பாட்டில் முதல், மிக்ஸி கிரைண்டர் வரை அனைத்திலும் ஒரு பெண்மணியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த உபகரணங்கள் அனைத்தையும் கண்டுபிடித்ததன் காரணமாக அவரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்! 
 
பொதுமக்களில் வயதால் மூத்தவர்கள் மட்டுமே அரசியல் தலைவர்களாக உருவாகியிருக்கிறார்கள். அந்த அரசியல் தலைவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ஊரெங்கும் சுவர்களில் அவர்களின் பெயர்களையும் உருவத்தையும் வரைந்து, மறக்காமல் அவர்களின் முதுமையை குறிக்கும்வகையில் ‘வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்!' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்! 
 
பிளெக்ஸ்கள், பிளாஸ்டிக்குகள் போன்றவை அக்காலத்தில் நிறைய பயன்படுத்தப்பட்டுள்ளன. டன் கணக்கில் தயாரிக்கப்பட்ட அவை மண்ணில் மக்காமல் கிடந்து உலகின் அழிவுக்கே காரணமாக இருந்திருக்கின்றன. 
 
பொதுமக்கள் சிறுநீர் கழிப்பதற்காக குட்டிக் குட்டி கழிப்பறைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கட்டப்பட்டுள்ளன. அவை தவிர, நகரின் முக்கிய வீதிகளில் மூத்திரச் சந்து என்ற திறந்தவெளிப் பகுதியில், எவ்வித நெருக்கடியுமில்லாமல் சிறுநீர் கழிக்கும் வசதி செய்து தந்திருக்கிறார்கள். அப்படி சிறுநீர் கழிக்கும் போது வேடிக்கை பார்ப்பதற்காக கவர்ச்சிப் பட சுவரொட்டிகளை மூத்திரச் சந்தின் சுவரெங்கும் ஒட்டும் முறையும் கையாளப்பட்டிருக்கிறது! 
 
சாலைகளனைத்தும் கருங்கற்களால் கட்டப்பட்டிருக்கின்றன. அந்த கருங்கற்களின் மீது, பயணிப்பவர்களை காத்து கருப்பு அண்டக் கூடாதென்பதற்காக தார் என்ற கறுப்பு பொருளை லேசாக தெளித்து வைக்கும் சாஸ்திரம் கடைபிடிக்கப்பட்டுள்ளது! 
 
ஒரு பக்கம் பசுமையான விவசாய வியாபாரம் அமோகமாக நடந்து வந்திருக்கிறது. இன்னொரு பக்கத்தில் விவசாய நிலங்களை பல வண்ணங்களில் அழகுபடுத்தி விவசாய நில வியாபாரமும் அமோகமாக நடந்து வந்திருக்கிறது! விவசாய நிலங்களில் வீடு கட்டி, மொட்டை மாடிகளில் தொட்டிச் செடிகளில் விவசாயம் செய்யும் அதிநவீன விவசாயத்தையும் கடைபிடித்து வந்திருக்கிறார்கள்! 
 
ஏரிகள் என்ற பெயரிலான அபாயகரமான நீர் நிறைந்த பள்ளத்தாக்குகளை மேடாக்கி வீடுகள் கட்டவும், அந்த வீடுகள் கட்டும் கற்களுக்காக, மலைகள் என்றழைக்கப்பட்ட மேடான பகுதியை வெட்டியெடுத்து சமப்படுத்துவதும் நடந்து வந்திருக்கிறது! 
 
மக்களின் பொழுதுபோக்குக்காக செல்வந்தர்களால் விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகள், உருண்டையான பந்து என்ற ஆயுதத்தாலும், பேட் என்றழைக்கப்பட்ட மரத்தினால் செய்யப்பட்ட ஆயுதத்தாலும் மோதிக்கொள்ளும் விளையாட்டு நடைமுறையிலிருந்தது. அவர்களில் யார் ஜெயிப்பார்கள் தோற்பார்களென பந்தயம் கட்டும் முறையும் இருந்து வந்திருக்கிறது! இவ்வாறு செல்கிறது அந்த வாட்ஸ்சப் மெசேஜ்.

News Source: http://tamil.oneindia.com/news/tamilnadu/whatsapp-message-regarding-tamil-culture-235833.html

17.09.2015 துபையில் இன்று சிறப்புரை "அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமாக்கும் செயல்கள்"

அன்பார்ந்த யுஏஇ வாழ் சகோதரர்களுக்கு 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்....

மதுக்கூர் தவ்ஹீத் தர்மஅறக்கட்டளையின் ( MTCT) துபை மண்டலம் சார்பாக, இன்ஷாஅல்லாஹ் இன்று (வியாழன் 17th Sep' 2015) இஷாவுக்குப்பின் மெளலவி T.முஹம்மது நாசர்   அவர்கள் "அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமாக்கும் செயல்கள்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற இருக்கின்றார்கள்.

சத்திய இஸ்லாத்தை சரியாக அறிந்து கொள்வோம்.மனித சமூகத்திற்கு படைத்த இறைவனால் வகுக்கப்பட்ட வாழ்க்கை நெறியான இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து அதன்படி செயற்பட அன்புடன் அழைக்கும்

For Madukkur Thowheed Charitable Trust


Tuesday, September 15, 2015

மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் தள்ளிவைப்பு: ADT அறிவிப்பு

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

எதிர்வரும் 18.09.2015 அன்று மாலை மஃரிப் தொழுகையை தொடர்ந்து, அதிரை தக்வா பள்ளி அருகே மவ்லவி. அப்பாஸ் அலி அவர்கள் கலந்து கொண்டு விளக்கவுரை நிகழ்த்தயிருந்த 'சமூக தீமைகள் எதிர்ப்பு' பொதுக்கூட்டம், பதட்டம் நிறைந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறவுள்ளதை காரணம் காட்டி காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்ததாலும், தொடர்ந்து புனித ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட உள்ளதாலும் அக்டோபர் மாதத்திற்கு பொதுக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இன்ஷா அல்லாஹ், அக்டோபரில் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறும் நாள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

எனினும் முன்னர் அறிவித்தபடியே, இன்ஷா அல்லாஹ் 18.09.2015 வெள்ளி அன்று ALM ஸ்கூல் பள்ளிவாசலில் நிகழும் ஜூம்ஆவில் மவ்லவி. அப்பாஸ் அலி அவர்கள் 'குத்பா பேருரை' நிகழ்த்துவார்கள்.

மேலும், 18.09.2015 வெள்ளி அன்று அஸர் தொழுகையை தொடர்ந்து, பிலால் நகர் தர்பியா சென்டரில் நடைபெறும் பெண்களுக்கான வாராந்திர அமர்வில் 'சிறப்பு சொற்பொழிவு' ஆற்றவுள்ளார்கள். 

சொற்பொழிவுக்குப்பின் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெறும். கேள்வி கேட்பதற்கு அனைத்து மதரஸா மாணவிகளுக்கும் முன்னுரிமை தரப்படும் என அதிரை தாருத் தவ்ஹீத் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Monday, September 14, 2015

18.09.2015 வெள்ளியன்று அதிரையில் மவ்லவி. அப்பாஸ் அலி அவர்களின் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

இன்ஷா அல்லாஹ் அதிரையில்,

மாபெரும் சமூக தீமைகள் எதிர்ப்பு பொதுக்கூட்டம்


ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.

நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்குர்ஆன் 5:90 & 5:91)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மாண்பும் வலிவுமிக்க அல்லாஹ் கூறினான்: என் அடியான் ஒரு நன்மையைச் செய்ய எண்ணி, அதைச் செய்யாமல் இருந்துவிட்டாலும் அதை அவனுக்கு ஒரு நன்மையாகவே நான் பதிவு செய்வேன். (எண்ணியபடி) அந்த நன்மையை அவன் செய்து முடித்தால் அதை நான் பத்து முதல் எழுநூறு மடங்கு நன்மைகளாகப் பதிவு செய்வேன். அவன் ஒரு தீமையைச் செய்ய எண்ணினான்; ஆனால், அதைச் செய்யவில்லை என்றால், அதை நான் ஒரு குற்றமாகப் பதிவு செய்வதில்லை. (எண்ணியபடி) அவன் அந்தத் தீமையைச் செய்து முடித்துவிட்டால் அதை ஒரேயொரு குற்றமாகவே நான் பதிவு செய்வேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லீம் : 204)

நாள்: எதிர்வரும் 18.09.2015 வெள்ளிக்கிழமை

நேரம்: மஃரிப் தொழுகையை தொடர்ந்து உடன் ஆரம்பமாகும்

இடம்: தக்வா பள்ளி அருகில்


சிறப்புரை:
மவ்லவி. அப்பாஸ் அலி Misc. அவர்கள்

நிகழ்ச்சி ஏற்பாடு
அதிரை தாருத் தவ்ஹீத்
அதிராம்பட்டினம்

தொடர்புக்கு: 9597841980 & 90031 27748

கூடுதல் தகவல்:
மவ்லவி. அப்பாஸ் அலி அவர்கள் 18.09.2015 அன்று ALM ஸ்கூல் பள்ளிவாசலில் நடைபெறும் ஜூம்ஆவில் 'குத்பா பேருரை' நிகழ்த்தவுள்ளார்கள்.