அதிரையில் ஜூம்ஆ மேடைகளை ஏகத்துவ அடிப்படையில் அமைத்துக் கொள்வதற்காக கடந்த சில வாரங்களாக பல்வேறு ஆலோசனை அமர்வுகள் நடத்தப்பட்டன. இந்த அமர்வுகளில் அதிரையின் பல்வேறு சமூக இயக்கங்கள், இயக்க சார்பற்றவர்கள், ஏகத்துவத்தை நிலைநாட்ட ஏங்கித்தவித்த தனி நபர்கள் என பலதரப்பட்ட மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு, இறுதியாக 12.02.2011 அன்று நடந்த மசூராவில் எதிர்வரும் 18.02.2011 வெள்ளிக்கிழமை முதல் நிரந்தர மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை தற்காலிகமாக EPS பள்ளிக்கூட வளாகத்தில் ஜூம்ஆ நடத்துவதென ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
கீழ்க்காணும் சகோதரர்கள் அதிரை ஜூம்ஆ செயல் கமிட்டியினராக தேர்வு செய்யப்பட்டனர்:
1. சகோதரர் லரிபுதீன்
2. சகோதரர் அப்துல் ரஹ்மான்
3. சகோதரர் (சாந்தா) சாகுல்
4. சகோதரர் முபீன்
5. சகோதரர் அப்துல் காதர்
6. சகோதரர் சாதிக் பாட்சா
7. சகோதரர் கமாலுதீன்
ஒருங்கிணைப்பு குழுவினராக கீழ்க்காணும் சகோதரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்:
1. சகோதரர் அதிரை அகமது
2. சகோதரர் அப்துல் ரஜாக்
3. சகோதரர் அதிரை அன்வர்
4. சகோதரர் அபுல் ஹசன்
ஒன்றாக இருந்து பின் பல கூறுகளாக பிரிந்து போன சகோதரர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நல்லிணக்கம் மீண்டும் ஒரு நன்மையின் பால் ஒன்று சேர்த்துள்ளது. இன்ஷா அல்லாஹ் இணக்கம் தொடரவும் இன்னும் பல நன்மைகள் வளரவும் எல்லாம் வல்ல ரஹ்மானிடம் பிரார்த்திக்கின்றோம்.
இது மற்றொரு குழுவாக உருவெடுக்காத வரை - அல்ஹம்துலில்லாஹ் !
ReplyDeleteசகோதரரே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... இன்ஷா அல்லாஹ் இந்த அதிரை ஜூம்ஆ மேடை எந்த அமைப்பின் கீழும் இயங்காது மாறாக குர்ஆன் ஹதீஸை மட்டும் ஆதாரமாக கொண்டு பேசக்கூடிய யாவருக்கும் பொதுவானதே.
ReplyDeleteஅதிரை ஜூம்ஆ குழுவின் சார்பாக
AIM