உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Saturday, February 26, 2011

இந்த வார (25.02.2011) அதிரை ஜூம்ஆ நிகழ்வுகள்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருநாமம் போற்றி 25.02.2011 அன்று நடந்த அதிரை ஜூம்ஆவில் மவ்லவி. அன்சாரி MA (அரபி) அவர்கள் கலந்து கொண்டு 'இஸ்லாம் ஒர் மென்மையான மார்க்கம்' என்ற தலைப்பின் கீழ் இஸ்லாம் வலியுறுத்தும் மனிதநேயம், சகோதரத்துவம் மற்றும் சகிப்புத்தன்மை குறித்து நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை தொகுத்து அழகுற விளக்கினார்கள்.

 

இரண்டாம் அமர்வில், இன்றைய சர்வதேச பிரச்சனைகளை குறித்து அலசினார்கள், சென்ற வாரத்தை விட பெருமளவில் ஆண்களும் பெண்களும் ஜூம்ஆவில் கலந்து கொண்டனர்.


''மக்கள் (தங்களது) ஜும்ஆத் தொழுகைகளை விட்டு விடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அல்லாஹ் அவர்களுடைய இதயங்களில் முத்திரை பதித்து விடுவான். அவர்கள் (பாவத்தில் மூழ்கி) மதி மறந்தவர்களாய் ஆகி விடுவார்கள்'' என நபி(ஸல்) அவர்கள் மிம்பர் கட்டையின் மீது (நின்று) கூற நாங்கள் கேட்டிருக்கிறோம் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) மற்றும் அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம் 470

 

நபி(ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தும் போது, அவர்களுடைய கண்கள் சிவந்து விடும். சத்தம் உயர்ந்து விடும். கோபம் அதிகரித்து விடும். காலையிலோ, மாலையிலோ தாக்குதல் நடத்த வரும் பகைவர்களின் ஒரு படையை பற்றி எச்சரிப்பவரைப் போன்று உரையாற்றுவார்கள். பின்னர் ''வேதத்தில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களது வழியாகும். (மார்க்கத்தில்) புதிதாக தோற்றுவிக்கப்படும் ஒவ்வொரு செயலும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழி கேடாகும்'' என்று கூறுவார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம் 476

 

முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில், வெள்ளிக்கிழமை உரையில், நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து பாராட்டி, அதற்குப் பின்னர் உரத்த குரலில் பேசுவார்கள் என உள்ளது.

முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில், ''யாரை அல்லாஹ் நேர்வழிப்படுத்திவிட்டானோ, அவரை வழி கெடுப்பவர் யாரும் இல்லை. இன்னும் யாரை அல்லாஹ் வழி கெடுத்து விட்டானோ, அவரை நேர்வழிப்படுத்துபவர் யாரும் இல்லை'' என உள்ளது.

நஸயீயில் ''ஒவ்வொரு வழி கேடும் நரகத்தையே சேரும்'' என்று உள்ளது.


தகவல்
அதிரையிலிருந்து
அப்துல் காதர்

No comments:

Post a Comment