உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, November 30, 2014

ததஜவிலிருந்து தொடர்ந்து ஆலிம்கள் வெளியேறி கொண்டு உள்ளனர் - அதிரை விவாதம் எதிரொலி?

தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து தொடர்ந்து ஆலிம்கள் வெளியேறி கொண்டு உள்ளனர்நபி வழியா? பிஜே வழியா? என சிந்திப்பவாகள் அவசியம் அந்த இயக்கத்தில் இருந்து வெளியேறுவார்கள்
========================================================

தவ்ஹீத் ஜமாத்தில் இருந்து ஆலிம்கள் தொடந்து வெளியேறி கொண்டிருக்கிறார்கள் அப்பாஸ் அலி யுசுப் பைஜி கே.எம்ஜெய்லானி ரியாஸ் என பட்டியல் தொடர்கிறது

 இன்னும் பலர்கள் வெளியேற தயாராக இருப்பதாகவும் த.த.ஜ.தலைமை அவர்களை மன்றாடி தடுத்துவருவதாகவும் சொல்ல படுகிறது

 எது எப்படி இருந்தாலும் நபிகள் நாயகத்தை மதிப்பவாகள் இனி அந்த இயக்கத்தில் இருக்க முடியாத சூழல் நபி மொழி மறுப்பு கொள்கையின் மூலம் உருவாக்கபட்டு விட்டது நபி வழியா பிஜே வழியா என்று சிந்திப்பவாகள் நிச்சயம் நபி வழியையே தேர்வு செய்வார்கள்


தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து தொடர்ந்து ஆலிம்கள் வெளியேறி கொண்டு உள்ளனர் நபி வழியா? பிஜே வழியா? என சிந்திப்பவாகள் அவசியம் அந்த இயக்கத்தில் இருந்து வெளியேறுவார்கள்
========================================================

தவ்ஹீத் ஜமாத்தில் இருந்து ஆலிம்கள் தொடந்து வெளியேறி கொண்டிருக்கிறார்கள் அப்பாஸ் அலி, யுசுப் பைஜி, கே.எம்.ஜெய்லானி, ரியாஸ் என பட்டியல் தொடர்கிறது

இன்னும் பலர்கள் வெளியேற தயாராக இருப்பதாகவும் த.த.ஜ.தலைமை அவர்களை மன்றாடி தடுத்துவருவதாகவும் சொல்ல படுகிறது.

எது எப்படி இருந்தாலும் நபிகள் நாயகத்தை மதிப்பவாகள் இனி அந்த இயக்கத்தில் இருக்க முடியாத சூழல் நபி மொழி மறுப்பு கொள்கையின் மூலம் உருவாக்கபட்டு விட்டது நபி வழியா பிஜே வழியா என்று சிந்திப்பவாகள் நிச்சயம் நபி வழியையே தேர்வு செய்வார்கள்.
Siddeek Srilanki shared Nabinesan Colachel's photo.
 https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/p235x350/1475924_1632279746999640_5977121852245116810_n.jpg?oh=0ebe92f194d6a05155f76ea65fe569ac&oe=54D47C47&__gda__=1426114977_2a8ecfe38bc40badb915b23d5a92eeba
 குறிப்பு: 
அதிரையில் நடைபெற்ற விவாதத்திற்கு பின் இந்த நல்ல மாற்றங்கள் ஏற்பட துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

துபையில் நடைபெற்ற மவ்லவி அப்துல் பாஸித் புஹாரி அவர்களின் பேரூரை

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

 அன்பர்களே ! பின்வரும் காணொளியை பாருங்கள் !
http://m.youtube.com/watch?v=ugQqpEEJ-ck


சென்ற 28.11.2014 வெள்ளிக்கிழமை பின்னேரம் இரவு சுமார் 7 மணியளவில் துபை அல் மனார் சென்டர் திறந்தவெளி அரங்கில் மவ்லவி அப்துல் பாஸித் புஹாரி அவர்கள் 'மண்ணறை முதல் மறுமை வரை' என்ற தலைப்பில் பேரூரையாற்றினார்கள்.


எதிர்பார்ப்பிற்கு மேல் ஆண்கள் திரண்டு வந்திருந்தனர். இடவசதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்திடும் வண்ணம் விரிப்புக்கள் விரிக்கப்பட்டு புரோஜக்டர் வழியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆண்களுக்கு நிகரான ஆர்வத்துடன் பெண்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில், அபுதாபியிலிருந்து சுய ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்ட பிற மத சகோதரர்களுக்கு அல் மனார் சென்டர் உள்ளரங்கில் பிரத்தியோக சிறப்பு தர்பியா நடத்தப்பட்டு இஸ்லாத்தை தழுவிட அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் குர்ஆன் தமிழாக்கமும் வழங்கப்பட்டது.

முஸ்லீம் சகோதரர்களை பொருத்தவரையில் அவர்களுக்கு இஸ்லாத்தை அறிந்து கொள்ள பல வழிகள் இருப்பதாலும் பிற மதத்தினருக்கு அத்தகைய வாய்ப்புக்கள் குறைவு என்பதாலும் எதிர்வரும் காலங்களில் பிற மத சகோரர்களுக்கென்றே சிறப்பு ஏற்பாடுகளை தமிழ் தஃவா குழுவினர் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு முன்னை விட அதிகம் அதிகரித்துள்ளது.

துபையிலிருந்து
S. அப்துல் காதர்

Friday, November 28, 2014

அதிரைக்கு பெருமை சேர்த்த நேர்மையாளர் சகோதரர் இலியாஸ் (படங்களுடன்)

எதிர்வரும் அமீரகத்தின் 43வது தேசிய தின கொண்டாட்டங்களில் ஒன்றாக அதிரை சகோதரர் ஒருவர் நேர்மைக்காக பாராட்டப்பட்டுள்ளது அமீரக வரலாற்றில் ஒன்றாகிபோனது.

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மகனும் ஜாகிர் ஹீசைன், அப்துல் காதர் ஆகியோரின் சகோதரருமான இலியாஸ் அவர்களின் நேர்மையான ஒரு செயல் நாங்களும் அதிராம்பட்டிணம் தான் என நம்மையும் உளம்மகிழ செய்துள்ளது.



அப்படி என்ன செய்தார்!!!!!

மிகச்சில இடங்களில் சில்லறைகளுக்காக கொலை வரை செல்லும் ஒரு தேசத்திலிருந்து வந்துள்ள நமக்கு, காசு பணத்தை சம்பாதிப்பதை மட்டும் இலட்சியமாக கொண்டு கடல் கடந்து வந்துள்ள நமக்கு திடீரென ஒர் பணப்பை கிடைத்தால் இயற்கையாய் என்ன செய்வோம், குறைந்தபட்சம் மனதளவிலாவது சலனப்படுவோம் ஆனால் சகோதரர் இலியாஸ் அவர்களுக்கு அப்படி ஒரு நிலை ஏற்பட்ட பொழுது தான் அல்லாஹ்வுக்கு பயந்தவன் என்பதை செயலில் நிரூபித்தார்.

கடந்த 2014 ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி துபை கிளாக் டவர் அருகேயுள்ள EMIRATES NBD பேங்க் வெளிப்புறத்தில் ஒரு பையை கண்டெடுக்கின்றார், உள்ளே திறந்து பார்த்தால் 1000 திர்ஹம் நோட்டு கட்டுக்களாக 50,000 திர்ஹம் அனாதையாக கிடக்கின்றது. (சுமார் 8 ½ லட்சம் இந்திய ரூபாய்) பையுடன் பணத்தை கண்டெடுத்தவரின் கால்கள் உடன் முரக்கபாத் போலீஸ் ஸ்டேசனை நோக்கி விரைந்தது, அங்கே போலீஸாரிடம் பணத்தை ஒப்படைத்த பின்பே நிம்மதியை உணர்ந்துள்ளார்.

2014 நவம்பர் 25 ஆம் தேதி திடீரென முரக்கபாத் போலீஸ் ஸ்டேசனிலிருந்து அழைப்பு வர முரக்கபாத் போலீஸ் ஸ்டேசன் சென்றவருக்கு 43 வது தேசிய தின கொண்டாட்ட நிகழ்வில் இலியாஸ் அவர்களுக்கு போலீஸ் தலைவர் (முதீர்) அவர்கள் கையால் பாராட்டு சான்றிதழும் மொபைல் போன் ஒன்றையும் பரிசாக வழங்கி கவுரவித்தனர். அன்றைய நிகழ்வில் கவுரவிக்கப்பட்ட ஒரே வெளிநாட்டினர் இவர் ஒருவரே.

இவரது நேர்மையை கொண்டாட இந்தியனாக, தமிழனாக, தஞ்சை தரணியனாக, அதிரை மைந்தனாக ஒவ்வொருவருக்கும் உரிமையிருக்கிறது. இஸ்லாம் கற்பித்த வழியில் பிறருக்கு முன் மாதிரியாய் அமைந்த இந்த அழகிய நிகழ்வை போற்றும் விதமாக நாமும் அவருக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும் ஏகன் அல்லாஹ்விடத்தில் பிரார்த்திப்போமாக!

அதிரை அமீன்


Thursday, November 27, 2014

அப்பாஸ் அலி Vs ததஜ விவாத வரைவு ஒப்பந்தம்


இ.முஹம்மது, மாநில செயலாளர், டி.என்.டி.ஜே அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சென்னை, தம்புச் செட்டித் தெரு, மெட்ரோ பேலஸ் 502ம் அறையில் கடந்த 19-11-2014 புதன்கிழமை அன்று காலை 10 மணியிலிருந்து தரப்புக்கு மூவர் வீதம் அமர்ந்து விவாத ஒப்பந்தம் குறித்து விவாதித்தோம். மாலை சுமார் 7.30 மணியளவில் அவ்விவாதம் முடிவுற்றது. சபையை முடித்து விட்டு எழுந்து செல்கிற நேரத்தில்; டி.என்.டி.ஜே தரப்பினர் விவாத ஒப்பந்த விபரங்களை எழுத்தில் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைப்பதாக குறிப்பிட்டனர். இது குறித்து 22.11.14 தேதியில் மின்னஞ்கல் மூலம் நான் நினைவூட்டிய பின்னர்தான் விவாத ஒப்பந்தம் குறித்த விபரங்களை எழுத்து மூலம் 25-11-2014 செவ்வாய்கிழமை அன்று மாலை 3 மணிக்கு மின்னஞ்சல் மூலம் எனக்கு அனுப்பியுள்ளீர்கள்.

விவாத ஒப்பந்தம்

முதல் தலைப்பு

டி.என்.டி.ஜே நிலைப்பாடு :
சூனியத்திற்கு எந்த ஆற்றலும் இல்லை என்று திருக்குர்ஆனும், நபிமொழியும் கூறுகின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் மூலம் பாதிப்பு ஏற்பட்டதாக வரும் செய்திகள் தவறானவை. மறுக்கப்பட வேண்டியவை. அல்லாஹ்வுக்கு இருக்கும் ஆற்றல் போல் சூனியக்காரர்களுக்கு ஆற்றல் இருப்பதாக நம்புவது இணைவைப்பாகும். அப்படி நம்பக்கூடியவர்கள் முஷ்ரிக்கள் ஆவர் என்பது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடாகும்.

அப்பாஸ் அலி நிலைப்பாடு :
சூனியத்தின் மூலம் பாதிப்பு ஏற்படலாம் என திருக்குர்ஆனும் நபிமொழிகளும் கூறுகின்றன. சூனியத்தின் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக நாங்கள் நம்புகிறோம். எனவே இவ்வாறு நம்பக்கூடியவர்கள் முஷ்ரிக்குகள் இல்லை என்பது அப்பாஸ் அலியின் நிலைப்பாடாகும்.

இரண்டாவது தலைப்பு
 
ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் திருக்குர்ஆனுக்கு முரண்படுமா?

டி.என்.டி.ஜேயின் நிலைப்பாடு :
நபி (ஸல்)அவர்களோடு தொடர்புபடுத்தி சரியான அறிவிப்பாளர் வரிசையுடன் பதிவு செய்யப்பட்டுள்ள சில செய்திகள் குர்ஆனோடு முரண்படுகின்றன. அத்தகைய செய்திகள் மறுக்கப்பட வேண்டியவை.

நபி(ஸல்)அவர்களுக்கும் அந்த செய்திகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடாகும்.

அப்பாஸ் அலி நிலைப்பாடு :
குர்ஆனுடன் மோதுகிறது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூறிய சில ஹதீஸ்களை குர்ஆனுக்கு முரணில்லாமல் விளங்க முடியும். அவற்றுக்கும் குர்ஆனுக்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை. எனவே அவை ஆதாரப்பூர்வமானவை.

அவை ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் திருக்குர்ஆனுக்கு முரண்படுமா? என்று அப்பாஸ் அலி எழுதிய நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸ்கள் ஆகும்.

குஸைமா தொடர்பான ஹதீஸ்

பிலால் தொடர்பான ஹதீஸ்

மாடு தொடர்பான ஹதீஸ்

2. விவாத இடம் : சுசிஹால், 24, கரூர் பைபாஸ் ரோடு,
சிந்தாமணி, திருச்சி-2

3. விவாத நாட்கள் : முதல் தலைப்பு : டிசம்பர் 21,2014
இரண்டாம் தலைப்பு : டிசம்பர் 27 & 28,2014

4. விவாத அமர்வின் முதல் நாள் கால அளவு :
முதல் அமர்வு : காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை விவாதம்
இரண்டாம் அமர்வு : பகல் 4.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை விவாதம்
மூன்றாம் அமர்வு : மாலை 7.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை விவாதம்

5. விவாத செலவு :
அரங்கம், ஒலி, ஒளி அமைப்பு, தண்ணீர், ஜெனரேட்டர் மற்றும் இரண்டு தரப்பும் சமமாக பயன்படுத்துபவைகளின் செலவுகளை இரு தரப்பினரும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்வது

6. அரங்க ஏற்பாடு :
1.இரு தரப்பிலும் பரஸ்பரம் எழுத்தில் ஒப்புக் கொண்ட செலவுகள் மாத்திரமே சமமாக பகிர்ந்து கொள்ளப்படும்.

2.அரங்கம் குறித்த மற்ற ஏற்பாடுகளை செய்திட தரப்பிற்கு ஒருவர் நியமிக்கப்படுவர்.

7. பார்வையாளர்கள் :
1.ஒவ்வொரு தரப்பிலும் தலா இருபது நபர்கள் வீதம் இரு தரப்பிலும் சேர்த்து மொத்தம் நாற்பது நபர்கள் மட்டுமே பார்வையாளர்களாக அனுமதிக்கப்படுவார்கள்.

2.ஒவ்வொரு அமர்வும் தொடங்குவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன் இருக்கையில் அமர்ந்து விட வேண்டும்.

3.விவாதத்தின் ஒவ்வொரு அமர்வும் முடிந்து ஐந்து நிமிடங்களுக்குப் பிறகுதான் அரங்கை விட்டு வெளியில் செல்ல வேண்டும்.

4.ஒவ்வொரு அமர்வின் போதும் இடையில் வெளியே எழுந்து செல்பவர் அந்த அமர்வு முடியும் வரை எக்காரணத்தை முன்னிட்டும் அரங்கினுள் அனுமதிக்கப்படமாட்டார்.

5.அரங்கினுள் செல்போன், வாக்மேன், ஒலி,ஒளிப்பதிவு கருவிகள் எதுவும் பயன்படுத்தக்கூடாது.

6.விவாதம் தொடங்கிய பின் இருக்கையை விட்டு எழுவதோ, பிறரிடம் பேசுவதோ, விவாதத்தில் குறுக்கிடுவதோ, கருத்துச் சொல்வதோ, துண்டுச் சீட்டுக் கொடுப்பதோ, கேலி கிண்டல் செய்வதோ, முகம் காட்டுவதோ, சைகை செய்வதோ, பேனர்கள் வைப்பதோ, பிரசுரங்கள் வினியோகிப்பதோ (அரங்கின் உள்ளும் வெளியும்) கூடாது. மீறுபவர்கள் அரங்கிலிருந்து வெளியேற்றப்படுவதுடன் எக்காரணம் கொண்டும் மீண்டும் அரங்கினுள் அனுமதிக்கப்படமாட்டார்.

7.ஒவ்வொரு தரப்பினரின் பார்வையாளர்களும் அமர்வதற்கு தனித்தனியாக இடம் ஒதுக்கப்படும்.

8.ஒவ்வொரு தரப்பின் பார்வையாளர்களும் அவரவர்களுக்குரிய அடையாள அட்டையுடன் மட்டுமே அரங்கினுள் அனுமதிக்கப்படுவர்.

9.அவரவர் பார்வையாளர்களால் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு அவரவர் அணியை சார்ந்தவர்களே பொறுப்பாவார்கள்.

8. தொண்டர்கள் :
1.அரங்கின் உள்ளே தரப்பிற்கு ஐந்தும்; வெளியே தரப்பிற்கு ஐந்தும் ஆக மொத்தம் உள்ளும் வெளியும் தரப்பிற்கு பத்து நபர்கள் நியமிக்கப்படுவார்கள்.

2.அவரவர் அணியின் பார்வையாளர்களை கண்காணிப்பதும், பாதுகாப்பதும் மற்றும் அவர்களின் உணவு, தண்ணீர் போன்ற இதர தேவைகளை நிறைவேற்றுவதும் அவரவர்களின் பொறுப்பாகும்.

3.இரு அணியினரின் தொண்டர்களும் தனித்தனியாக செயல்படுவார்கள்.

9. தனித்தனிப் பொறுப்புகள் :
அவரவர் அணியை சார்ந்த அறிஞர், உதவியாளர்கள், பார்வையாளர்கள், தொண்டர்கள், கண்காணிப்பாளர் போன்றோரின் உணவு மற்றும் இதர தேவைகளுக்கு அவரவர் அணியினரே பொறுப்பாவார்கள்.

10. வீடியோ :
வீடியோ பதிவின் போது தேதி நேரம் அதில் இடம் பெற வேண்டும். அவரவர் தனித்தனியாக வீடியோ பதிவு செய்து கொள்ள வேண்டியது.

11. நேரக் கண்காணிப்பாளர் :
1.விவாத நேரத்தை கண்காணிப்பதற்கு அணிக்கு ஒருவர் நியமிக்கப்படுவார்.

2.விவாதத்தின் போது விவாதிப்பவரின் துவக்க நேரத்தையும் முடிவு நேரத்தையும் கண்காணித்து சுட்டிக்காட்டுவது மட்டுமே இவரின் பொறுப்பாகும்.

3.விவாதத்தின் துவக்கத்தில் எழுத்து வடிவில் உள்ள விவாத ஒப்பந்தத்தை வாசித்துக் காட்டுவார்.

12. விவாதிப்போர் :
1. டிஎன்டிஜே சார்பில் ,,,,, (பெயர் குறிப்பிடப்பட வேண்டும்) மட்டும்.

2. அப்பாஸ் அலி தரப்பில் அப்பாஸ் அலி மட்டும்.

3. விவாதிக்கின்ற டிஎன்டிஜே சார்பில் ,,,,, (பெயர் குறிப்பிடப்பட வேண்டும்) அவர்களுக்கு இரு உதவியாளரும் அப்பாஸ் அலிக்கு இரு உதவியாளரும் மேடையில் உடனிருப்பர்.

4. நேரக் கண்காணிப்பாளர்கள், மின்சார, ஒலி, ஒளி அமைப்பாளர்களைத் தவிர வேறு எவரும் மேடையில் ஏற அனுமதி இல்லை.

5. டிஎன்டிஜே சார்பில் ,,,,, (பெயர் குறிப்பிடப்பட வேண்டும்), அப்பாஸ் அலி தவிர வேறு எவருக்கும் ஒலிபெருக்கியை உபயோகிக்க அனுமதி இல்லை.

13. விவாத ஒழுங்குகள் :
1. முதல் நாள் முதல் அமர்வில் வுழளள (பூவா, தலையா) போடப்பட்டு அதில் வெல்பவரே விவாதத்தைத் துவங்கவேண்டும்.

2. விவாதத்தின் போது இரு தரப்பினரும் 12 + 3 நிமிடங்கள் என்ற அடிப்படையில் சமமாக விவாதிக்கவேண்டும். முதல் 12 நிமிடங்கள் மட்டுமே விவாதம் நடைபெறும். எஞ்சிய 3 நிமிடங்கள் அமைதி காக்கவேண்டும்.

3. விவாதத்தின் போது இரு அணியினரும் பார்வையாளர்களை நோக்கியே பேசவேண்டும்.

14. பொதுவானவை :
1. விவாதிக்கும் இரு தரப்பும் ஒத்துக் கொண்டாலொழிய ஒப்பந்த விதிகளை ஒரு தலைப்பட்சமாக மாற்ற, திருத்த, சேர்க்க, நீக்க இரு அணியினரில் எவருக்கும் அதிகாரமில்லை.

2. விவாதம் நடைபெறும் மண்டபத்தின் உள்ளேயும் வெளியேயும் எந்த விளம்பரமும் வியாபாரமும் செய்யக் கூடாது.

கையெழுத்து
1. டிஎன்டிஜே சார்பில் (பெயர் குறிப்பிடப்படவேண்டும்)
2.அப்பாஸ் அலி

குறிப்பு : என்னோடு பிஜேதான் விவாதிக்கவேண்டும் என்று நான் வற்புறுத்தினேன். அவர் என் போன்றவர்களிடம் விவாதிக்கும் அளவிற்கு தரம் குறைந்தவர் அல்ல என்று உங்கள் தரப்பு மறுத்தது. முடிவில் அவருக்கு இயலாது என்றும் உங்கள் தரப்பு கூறியது. ஆதலால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஒருவர் மட்டுமே என்னுடன் விவாதிக்க வரவேண்டும் என்று கூறினேன். நீண்ட விவாதத்திற்குப் பிறகு உங்கள் தரப்பு அதை ஒத்துக் கொண்டது. விவாதிக்கின்ற நான் விவாத ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது போல என்னுடன் டிஎன்டிஜே சார்பாக விவாதிப்பவர்தானே கையெழுத்திடுவது முறை. எனவே, உங்கள் சார்பாக என்னுடன் விவாதிக்க வரும் அந்த ஒருவரே இந்த விவாத ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.

இப்படிக்கு,
அப்பாஸ் அலி

Monday, November 24, 2014

அதிரை பேரூராட்சி நிர்வாகத்திற்கு TIYA முஹம்மது மாலிக்கின் கனிவான வேண்டுகோள் !

அதிரை தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட மேலத்தெருவில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பயன் படுத்திவரும் பெண்கள் குளத்தில் பல ஆண்டுகளாக திறந்த வெளியில் பெண்கள் மலம் கழித்து வருவதை தடுக்கும் நோக்கில், அதிராம்பட்டினம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எங்கள் மஹல்லாவின் முன்னாள் தலைவருமான மர்ஹூம் ஹாஜி M.M.S. அப்துல் வஹாப் ( சாச்சா ) அவர்களின் முயற்சியால் திறந்த வெளியில் மலம் கழிப்பதை முழுமையாக தவிர்க்கும் பொருட்டில் நபார்டு திட்டத்தின் கீழ் கடந்த 2008-2009 ஆம் ஆண்டிற்கான நிதியில் ரூபாய் 6 லட்சம் ஒதுக்கீட்டில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் நவீன வசதியில் சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டது

கட்டி முடித்து பிறகு அதன் அருகில், இப்பகுதியில் வாழும் இளைஞர்களின் பெரும் முயற்சியால் ( TIYA ) அமைப்போடு சேர்ந்து வெளிநாடுகளிலிருந்து விடுப்பில் தாயகம் வரும் மேலத்தெரு மஹல்லா வாசிகளிடம் நிதி வசூல் செய்து அந்த ஏரியா முழுவதையும் தூய்மைப்படுத்தி சுத்தி முள்வேலி அமைத்து பெண்களும் சிறார்களும் பயன்படுத்தும் வகையில் சுமார் 5 லட்சம் ரூபாய் செலவில் ஒரு பூங்கா அமைத்து கொடுக்கப்பட்டது.

சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவர சம்மந்தப்பட்ட தேர்வுநிலை பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் ஆகியோரிடம் பல முறை எடுத்துச்சொல்லியும் இந்த விசயத்தில் யாரும் அக்கரை கொள்வதாக தெரியவில்லை. பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் பாழடைந்து உடைந்து நொருங்கிய நிலையில் தற்போது காணப்படுகிறது. இதற்காக போடப்பட்ட போர்வெல் நீர் மூழ்கி மோட்டாரையும் சமூக விரோதிகள் திருடி சென்றுவிட்டனர்.

கழிப்பிட வசதிகள் இல்லாத ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் இப்போதும் இப்பகுதியில் வாழ்கின்றனர். எனவே சம்மந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகள் பழுதடைந்து காணப்படும் இந்த கழிப்பிட வசதியை மறு சீரமைத்து விரைந்து திறப்பதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களின் சார்பாக சமூக ஆர்வலர் என்ற முறையில் இதை நான் உங்களின் பார்வைக்கு தருகிறேன்.

தவறினால் இது தொடர்பாக சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள், தமிழக முதல்வரின் (CM) செல் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு புகார் அளிக்கப்படும் என்பதை நினைவூட்டுகிறேன்.

என்றும் அன்புடன் அதிரை அல்மாஸ் என்கிற
K.M.N.முகமது மாலிக்
அபுதாபி ( 0097150-7914780 )
Kmmalik2009@gmail.com

Thanks to:
http://www.adirainews.net/2014/11/tiya.html?utm_source=dlvr.it&utm_medium=twitter


சுகாதார வளாகத்தின் அப்போதைய புகைப்படங்கள் 
 
சுகாதார வளாகத்தின் தற்போதைய நிலை

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் தடாலடி அறிவிப்பு


சென்ற நவம்பர் 15ந் தேதி முதல் அமுலுக்கு வந்துள்ள புதிய அறிவிப்பின்படி இனி எமிரேட்ஸ் விமானங்களில் 300 செ.மீ (118 இன்ச்) (நீளம், அகலம், உயரம் என அனைத்து) சுற்றளவுள்ள பயண பொதிகள் (Check-In Free Baggage) மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவர் எனினும் எக்கானமி வகுப்பிற்கான 30 கிலோ எடையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை (அதேபோல் பிஸ்னெஸ் வகுப்பிற்கு 40 கிலோ, முதல் வகுப்பிற்கு 50 கிலோ என்ற நிலையிலும் மாற்றமில்லை). புதிய விதிமுறைக்கு மேலுள்ள பயண பொதிகள் அனைத்தும் இனி சரக்குப் பொதிகளாக கருதப்பட்டு அதற்குரிய மேலதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கனடா, வட மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கு எமிரேட்ஸ் விமானங்களில் பயணம் செய்பவர்களுக்கு பொருந்தாது.

இந்த புதிய நடைமுறைக்கு முன், அதாவது நவம்பர் 15க்கு முன் விமான டிக்கெட் வாங்கியவர்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதியாக 400 செ.மீ சுற்றளவுள்ள பயண பொதிகளை கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவர் என்றாலும் அவர்கள் பயண தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் முன் அனுமதி பெற்றாக வேண்டும்.

2 பயண பொதிகளாக பிரித்து கொண்டு வருபவர்களின் 2 பொதிகளும் சேர்த்து 300 செ.மீ என்ற அளவுக்குள் தான் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது (ஒவ்வொன்றும் 150 செ.மீ அல்லது 59 இன்ச்). நிர்ணயிக்கப்பட்ட புதிய அளவுக்கு மேலிருந்தால் கூடுதல் கட்டணம் செலுத்த நேரிடும் அல்லது சரக்குக் பொதியாக (Freight or Cargo) மட்டுமே அனுமதிக்கப்படும்.

நவம்பர் 15க்கு முன் டிக்கெட் வாங்கியவர்கள் 2 பொதிகளாக பிரித்து கொண்டு வரும்பட்சத்தில் அதன் ஒவ்வொன்றின் சுற்றளவும் 158 செ.மீ (அல்லது 62 இன்ச்) என்ற அளவுக்குள் மட்டுமே இருக்க வேண்டும். மூன்று வகை வகுப்பினருக்கும் இந்த புதிய விதிமுறை பொருந்தும்.

கைக்குழந்தையுடன் செல்பவர்கள் கூடுதலாக 10 கிலோ வரை எடுத்துச் செல்லலாம் என்றாலும் அதன் சுற்றளவு 55*38*20 என்ற அளவிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும் என எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் புதிய விதிமுறைகள் அறிவிக்கின்றன.

உலகத்தரம் வாய்ந்த சேவைகளை வழங்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் பயணிகளுக்கு சிரமம் தரும் இதுபோன்ற புதிய நடைமுறைகளை திரும்பப்பெற வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர்.

என்ன ஒன்னு, இதுவரை பயண பொதிகளை எடைபோட தராசுக்கு அலைந்தோம் இனி டேப்புக்கும் அலையனும் அவ்வளவு தான். 

தமிழில்
அதிரை அமீன்

Thanks to News Source:
http://gulfnews.com/news/gulf/uae/tourism/emirates-new-baggage-rules-1.1415084?utm_source=Facebook&utm_medium=Social&utm_campaign=Blog

Saturday, November 22, 2014

ஸஹாபாக்களை “கிரிமினல்” என வசைபாடும் கொள்கை விஷக்கிருமிகள்‏

S.H.M.இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்)

அம்ரிப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் ஒரு கிரிமினலா?
 
அம்ரிப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் ஒரு சிறந்த நபித்தோழராவார். போர்த் திறமையும், தந்திரமும், தலைமைத்துவப் பண்பும் நிறைந்த இவரை நபி(ஸல்) அவர்கள் போர்களுக்குத் தளபதியாக நியமித்துள்ளார்கள். இவர் மூலம் பல வெற்றிகளை இஸ்லாமிய உலகு அடைந்துள்ளது. இவரின் தலைமையில்தான் எகிப்தும் கைப்பற்றப்பட்டது! இவரது வரலாறு, இவர் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்வு, இஸ்லாத்திற்கு முற்பட்ட இவரது வாழ்வு, இவரது மரணம் அனைத்தும் விரிவாகப் பார்க்கப்பட வேண்டிய அம்சங்களாகும்.
 
தமிழ் உலகில் தவ்ஹீதுக்கு ஏகபோக உரிமை கோரும் சிலரால் இவர், “கிரிமினல்என விமர்சிக்கப்பட்டு வருகின்றார். இவரைக் கிரிமினல் என விமர்சித்தவர், “எங்கள் ஊரில் புத்திசாலியையும் கிரிமினல்என்று கூறுவார்கள் என சமாளித்தார். இவர் செய்த வேலையை இன்றைக்கு வேறு ஒருவர் செய்தால் கிரிமினல் என்றுதான் சொல்வோம்; அதைத்தான் சொன்னேன்; யாருக்காகவும் எனது வார்த்தையை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லைஎன அடம்பிடித்தார்.
 
அவரின் அழைப்பாளர்களோ குர்ஆன், ஹதீஸின் வசனத்தைப் பாதுகாக்க வாதாடுவது போல் கிரிமினல்என்ற இந்த வார்த்தையைப் பாதுகாக்கப் பாடுபட்டு வருகின்றனர். அண்மையில் இவர்களின் அமைப்பின் மேலாண்மைக் குழு உறுப்பினர் ஒருவர் அம்ரிப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் பற்றி, “கிரிமினலைக் கிரிமினல் என்றுதானே சொல்ல வேண்டும்என்று கூறும் காணொளியைக் கண்ட போது இது குறித்து எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
 
பின்னணி என்ன?
அலீ(ரலி) அவர்களது ஆட்சியின் போது இடம்பெற்ற ஸிப்பீன் போரின் போது அலி(ரலி), முஆவியா(ரலி) ஆகிய இரு சாராருக்கு மிடையில் சமாதானம் ஏற்படுத்துவதற்காக இரு தரப்பையும் சேர்ந்த இருவரை நியமித்து அவர்களின் தீர்ப்புப் பிரகாரம் இரு சாராரும் நடப்பதாக முடிவு செய்யப்பட்டது.
 
அலி(ரலி) அவர்கள் சார்பில் அபூமூஸா அல் அஷ்அரி(ரலி) அவர்களும் முஆவியா(ரலி) அவர்கள் தரப்பில் அம்ரிப்னுல் ஆஸ்(ரலி) அவர்களும் நியமிக்கப்பட்டார்கள்.
 
இவர்கள் இருவரும் இணைந்து அலி(ரலி), முஆவியா(ரலி) இருவரையும் பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதிய ஒருவரைத் தெரிவு செய்தல் என்ற இணக்கப்பாட்டுக்கு வந்தார்கள். கூட்டத்திற்கு வந்த போது அபூமுஸா அல் அஷ்அரி(ரலி) அவர்கள் எனது கையில் இருந்து எனது மோதிரத்தைக் கழற்றுவது போல் ஆட்சியில் இருந்து அலி(ரலி), முஆவியா(ரலி) இருவரையும் நான் நீக்கிவிட்டேன் என்றார்கள்.
 
அம்ரிப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் எழுந்து எனது தோழர் சொன்னது போல் நானும் அலியை ஆட்சியை விட்டும் நீக்கிவிட்டேன். முஆவியாவை ஆட்சியில் அமர்த்திவிட்டேன் என்று கூறினார்களாம்.
 
இந்த சம்பவத்தை மையமாக வைத்தே அம்ரிப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் கிரிமினல்என விமர்சிக்கப்பட்டு வருகின்றார்கள். நபித்தோழர்கள் விடயத்தில் நாக்கு கொஞ்சம் நீண்டு போயுள்ள இந்த வழிகெட்ட போக்கு பற்றி தவ்ஹீத் சமூகம் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காகவே இது குறித்த சில அவதானங்களை முன்வைக்கின்றோம்.
 
அவதானம் – 01
இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் கூட அந்தச் செயல் தவறானது என்று கூறலாமே தவிர செய்தவரைக் கிரிமினல்என்று கூறுவது சரியானதல்ல. இறந்து போன முன்னோர் களுக்குத் தீர்ப்புச் சொல்ல இவர்கள் யார்? அவர் அந்தச் செயலைச் செய்திருந்து அதன் பின் தவ்பா செய்திருந்தால், அல்லாஹ் அவரை மன்னித்திருந்தால் அதன் பின் அவரைக் கிரிமினல் என்று கூறிய விஷக் கிருமிகளின் நிலை என்ன?
 
நபித்தோழர்கள் விடயத்தில் கண்ணியம் பேணாமல் இப்படித் தீர்ப்புக் கூறுவது அஹ்லுல் பிதஃஎனும் வழிகேடர்களின் வழிமுறையையே அன்றி நல்லோர்களின் வழிமுறை அல்ல.
 
அவதானம்- 02:
இட்டுக்கட்டப்பட்ட செய்தி:

இந்தத் தகவல் இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். இமாம் தபரி(ரஹ்) அவர்கள் இந்த செய்தியை தனது வரலாற்று நூலில் பதிவு செய்துள்ளார்கள். இமாம் தபரி அவர்கள் அறிவிப்பாளர் வரிசையுடன் வரலாற்றைப் பதிவு செய்யும் வழக்கமுள்ளவர். இருப்பினும் தனது முன்னுரையில்,
 
நான் எனக்குக் கிடைத்த தகவல்களைத் தந்துள்ளேன். அது ஸஹீஹானதா என்பது குறித்து நான் உறுதி செய்யவில்லைஎனத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
 
பெரும்பாலும் தபரியில் இடம்பெறும் நபித்தேழர்களைக் குறை காணும் அறிவிப்புக்களை ஆய்வு செய்தால் அந்த அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ராவீக்களில் ஒருவராக லூத் இப்னு யாஹ்யாஎன்பவர் அபூமிஹ்;னப்என்ற புனைப் பெயரில் இடம்பெற்றிருப்பார். இவரைப் போலவே அல்வாகிதி, ஸைப் இப்னு உமர் அத்தமீமீ, முஹம்மத் இப்னுஸ் ஸாயிப் அல்கல்பி போன்றவர்களது அறிவிப்புக்கள் நபித்தோழர் களைக் குறை காணும் அமைப்பில் இடம் பெற்றிருக்கும். அம்ர் இப்னுல் ஆஸ்(ரலி) அவர்களைக் கிரிமினல் என விமர்சிப்பதற்குக் காரணமாக அமைந்த இந்த வரலாற்றுச் சம்பவத்தில் அபூமிஹ்னப்எனும் அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார். இவர் குறித்து,
 
இமாம் முயீன், இவரிடம் நம்பகத்தன்மை இல்லை என்றும்,
இமாம் அபூஹாதம் அவர்கள், ஹதீஸ் வரிசையில் விடப்பட்டவர்,
இமாம் தாரகுத்னீ அவர்கள், ழயீப் பலவீனமானவர் என்றும்
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) அவர்கள், பலமான அறிவிப்பாளர் பெயரில் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவிக்கக் கூடியவர் என்றும்,
இமாம் தஹபி செய்தி சொல்லக் கூடியவர். இவரது செய்திகள் நம்ப முடியாதவை என்றும் குறிப்பிடுகின்றார்கள். (பார்க்க: அல்ஜரஹ் வத் தஃதீல் 7/182, மீஸானுல் இஃதிதால் 3/419, லிஸானுல் மீஸான் 4/492)
 
அபூமிஹ்னப், கல்பி ஆகிய இருவரை யும் இமாம் இப்னுல் கையிம் ஜவ்ஸி(ரஹ்) அவர்கள் பொய்யர்கள் என்று குறிப்பிடுகின்றார்கள். மற்றும் இவர் ஷியாக் கொள்கைக்காரர் என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளார்.
                                                                                                           
ஷிஆ சிந்தனையுடைய இவரது அறிவிப்புக்கள் எவ்வளவு மோசமானவை என்பதை விளக்குவதற்காக இவரால் இட்டுக்கட்டப்பட்ட இரண்டு தகவல்களைத் தருகின்றோம்.
 
அபூ மிஹ்னப் தனது அறிவிப்பாளர் வரிசையில் குறிப்பிட்டுள்ளதாக இப்னுல் கல்பிய்யி அவருடைய தந்தை மூலமாகக் கூறியதாக பலாதூரி தன்னுடைய புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
 
உஸ்மான் (ரலி) அவர்களை அப்துர் ரஹ்மான் (ரலி) பைஅத்” (சத்தியப்பிரமாணம்) செய்வித்த போது அலி (ரலி) நின்று கொண்டிருந்தார். அவ்வேளையில் அப்துர் ரஹ்மான் அலி(ரலி)யிடம் நீயும் பைஅத்” (சத்தியப்பிரமாணம்) செய்துவிடு. இல்லாவிடில் உன் கழுத்தை வெட்டிவிடுவேன் என்றார். அப்போது அப்துர்ரஹ்மானைத் தவிர வேறு எவரிடமும் வாள் இருக்கவில்லை. அலி(ரலி) கோபத்துடன் அவ்விடத்தை விட்டு வெளியேறினார். ஆலோசனை சபையிலுள்ளவர்கள் அலி(ரலி) அவர்களை சந்தித்து நீங்கள் பைஅத்” (சத்தியப்பிரமானம்) செய்துவிடுங்கள். இல்லா விட்டால் உங்களை எதிர்த்துப் போரிடுவோம் என்றார்கள். இதனால் அலி(ரலி) அவர்கள் சென்று உஸ்மான்(ரலி) அவர்களுக்கு பைஅத்செய்தார்;.” (ஷரஹு நஹ்ஜுல் பலாகா: 3529/1,இப்னு அபில் ஹதீத்)
 
அபூ மிஹ்னப் தனது அறிவிப்பாளர் வரிசையில் கூறியுள்ளதாக அப்பாஸ் இப்னு ஹிஷாம் அல்கல்பிய்யிஅறிவிக்கிறார். மதீனாவில் உள்ள பைதுல் மாலில் ஒரு மரப்பெட்டி இருந்தது. அதில் ஆபரணங்களும் மரகதங்களும் இருந்தன. உஸ்மான்(ரலி) அந்த ஆபரணங்களில் இருந்து எடுத்து தன் குடும்பத்தில் சிலருக்கு அணிவித்தார்கள். இந்தச் செய்தி மக்களிடம் அவரைப் பற்றிய தவறான கருத்தை ஏற்படுத்தியது. இது பற்றி மக்கள் உஸ்மான்(ரலி) அவர்களிடம் கடுமையாகக் கதைத்தார்கள். அதனால் உஸ்மான்(ரலி) அவர்களுக்குக் கடுமையான கோபம் ஏற்பட்டதும் மக்களுக்கு ஓர் உபதேசம் செய்தார்கள். அதிகமான கூட்டத்தினர் இதை வெறுத்தாலும் எமது தேவைகளை பைஉயுத்தத்தில் கிடைத்த சொத்திலிருந்து எடுப்போம் என்றதும், அலி(ரலி) அப்படி நீங்கள் செய்தால் நாங்கள் தடுப்போம். உங்களுக்கும் இச்சொத்துக்குமிடையில் திரையிடப்படும் என்றார்கள். அப்போது அம்மார்(ரலி), அல்லாஹ்வை சாட்சியாக வைத்துக் கூறுகின்றேன். இதை முதலில் நான் தடுப்பேன் என்றார். அப்போது உஸ்மான்(ரலி) யாஸீருடைய மகனே! நீரும் அலியாகிவிட்டீரா? என்று கேட்டுவிட்டு, அவரைப் பிடியுங்கள் என்று கூறி பிடித்து அவருக்கு அடித்தார்கள். அவர் மயக்கமுற்றுக் கிடந்தார். அவரை உம்மு ஸலமா(ரழி) அவர்களின் இல்லத்திற்குச் சுமந்து செல்லப்பட்டது. ழுஹர், அஸர், மஃரிப் ஆகிய தொழுகைகளை அவர் தொழவில்லை. மயக்கம் தெளிந்த பின் வுழூச் செய்து தொழுதார்கள். பின்னர், அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வுக்காக நாங்கள் நோவிக்கப்பட்டதில் இது முதல் முறை அல்ல என்று கூறினார்கள்.
 
மக்சூமி கிளையார்களில் முக்கிய நபராக அம்மார் இருந்ததால் மக்சூமி கிளையைச் சார்ந்த ஹிஷாமிப்னு வலீதிப்னு முகீறா, உஸ்மானே! அலியை நீங்கள் பாதுகாத்தீர்கள். எங்கள் மீது அடர்ந்தேறி எங்கள் சகோதரனை அடித்து அழித்துவிடப் பார்த்தீர்கள். அல்லாஹ் மீது சத்தியமாக அவர் மரணித்திருந்தால் உமைய்யாக் கிளையாளர்களில் முக்கியமான ஒருவரை நான் கொன்றிருப்பேன் என்றார்.
 
உடனே உஸ்மான்(ரலி) கஸ்ரியின் மகனே! என்றார்கள். அதற்கவர், இரண்டு கஸ்ரியின் மகன் என்றார். ஏனெனில், ஷிஹாமின் தாயும் பாட்டியும் கஸ்ரிக் கிளையைச் சேர்ந்தவர்கள். உஸ்மான்(ரலி) அவரை ஏசினார். வெளியே அனுப்பும்படி உத்தரவிட்டார். அதன் பின் அவர்களை உம்மு ஸலமா(ரழி) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அம்மாருக்கு நடந்த இந்த நிகழ்வைப் பார்த்து உம்மு ஸலமா(ரலி) மிகவும் கோபமடைந்தார்கள். அம்மாருக்கு நடந்த இந்த நிகழ்வு ஆயிஷா(ரழி) அவர்களுக்கும் எத்தி வைக்கப்பட்ட போது அவர்களும் மிகவும் கோபமடைந்தார். பின்னர் ரஸூலுல்லாஹ்வின் முடி, செருப்பு, ஆடை இவைகளை எடுத்து வந்து இவைகள் இன்னும் அழிந்து விடவில்லை; அதற்கு முன் நீங்கள் உங்கள் நபியுடைய சுன்னாவை விட்டுவிட்டீர்களா? என்று கடிந்து கொண்டார்கள். (ஷரஹு நஹ்ஜுல் பலாகா: 693/1,இப்னு அபில் ஹதீத்)

இஸ்லாமிய வரலாற்றுச் சம்பவங்களில் குழப்பத்தை உண்டு பண்ணும் விதத்தில் இவர் இட்டுக்கட்டிய இது போன்ற செய்திகள் ஏராளம். இது குறித்து கலாநிதி யஹ்யா அல் யஹ்யா அவர்கள்,
தபரியின் வரலாற்று நூலில் இடம் பெற்றுள்ள அபூமிஹ்னபின் அறிவிப்புக்கள்என்ற பெயரில் தனி ஆய்வொன்றினை வெளியிட்டுள்ளார்.
இந்தத் தகவல்களின் படி அறிவிப்பாளர் வரிசையில் இட்டுக்கட்டக்கூடியவர் இடம் பெற்றிருப்பதால் அம்ரிப்னு ஆஸ்(ரலி) சம்பந்தப்பட்ட இந்த அறிவிப்பு இட்டுக்கட்டப் பட்டதாகும்.
 
தாம் சொன்ன கிரிமினல்என்ற வார்த்தையை உறுதிப்படுத்துவதில் கண்ணும் கருத்துமாக இருந்த இவர்கள், இந்த செய்தி உண்மையானதுதனா? என்பதை உறுதிப்படுத்து வதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் ஒரு நபித்தோழரைக் கிரிமினலாக மக்கள் மனதில் பதிந்த குற்றத்தில் இருந்து தப்பியிருக்க முடியும்.
இந்தக் கதையின் அறிவிப்பாளர் வரிசையில் மட்டுமன்றி அது கூறும் தகவல்களிலும் பல குறைபாடுகளும் குளறுபடிகளும் காணப்படுகின்றன.
 
அவதானம் – 03:
ஆட்சி என்பது அடிப்படை அல்ல:
அலி(ரலி), முஆவியா(ரலி) ஆகிய இரு நபித்தோழர்களுக்குமிடையில் யார் கலீபா என்பது பிரச்சினையே அல்ல. இது பற்றி விரிவாகப் பேசப்பட வேண்டிய அவசியம் இருந்தாலும் சுருக்கமான ஒரு தெளிவைத் தர வேண்டியுள்ளது.
இது குறித்து இமாமுல் ஹரமைன் அல் ஜுவைனி அவர்கள் தமது லம்உல் அதில்லாவில் குறிப்பிடும் போது,
முஆவியா(ரலி) அவர்கள் அலி(ரலி) அவர்களுடன் போரிட்டாலும் அலி(ரலி) அவர்களது இமாமத்தை மறுக்கவும் இல்லை. தனக்கு அந்தத் தலைமைத்துவம் இருப்பதாக வாதிடவும் இல்லை. உஸ்மான்(ரலி) அவர்களின் கொலைக்கு நீதி கேட்டுத்தான் அவர் போரிட்டார். தான் இருப்பது சரியென அவர் நம்பினார். ஆனால், இந்த முடிவு விடயத்தில் அவர் தவறில் இருந்தார் என்று குறிப்பிடுகின்றார்.
 
இது குறித்து இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள் கூறும் போது, முஆவியா(ரலி) அவர்கள் கிலாபத்தைக் கோரவில்லை. அலி(ரலி) அவர்கள் கொல்லப்படும் வரை அவருக்கு கிலாபத்துக் குரிய பைஅத் செய்யப்படவும் இல்லை. தான் ஒரு கலீபா என்றோ, அதற்குத் தகுதியானவர் என்றோ அவர் போராடவும் இல்லை. தன்னிடம் இதுபற்றிக் கேட்பவர்களிடம் இதை ஏற்றுக் கொள்பவராகவே அவர் இருந்தார். (பதாவா: 35/72)
 
அபூதர்தா, அபூ உமாமா(ரலி) ஆகியோர் முஆவியா(ரலி) அவர்களிடம் வந்து அலி(ரலி) அவர்களுடன் போராடுகின்றீர்களே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக உம்மையும் உமது தந்தையையும் விட அவர் இஸ்லாத்தை ஏற்றதில் முந்தியவர்; நபியவர்களுக்கு உம்மை விட நெருக்கமானவர்; உம்மைவிட ஆட்சிக்கு அவரே உரிமையானவர் என்று கூறினர். அதற்கு முஆவியா(ரலி) அவர்கள்,உஸ்மானின் இரத்தத்திற்காக அவருடன் போராடுகின்றேன். அவர் உஸ்மானைக் கொன்றவர்களை அரவணைக்கின்றார். நீங்கள் இருவரும் அலீ(ரலி) அவர்களிடம் சென்று உஸ்மானைக் கொன்றவர்களை எம்மிடம் ஒப்படைக்கச் சொல்லுங்கள். ஷாம் வாசிகளில் முதல் நபராக நான் அவருக்கு பைஅத் செய்கிறேன் என்று கூறுங்கள் என்றார். (அல் பிதாயா வன்னிஹாயா)
 
இந்தச் செய்திகள் ஆட்சிக்குரியவர் யார் என்பதல்ல பிரச்சினை. ஆனால், அம்ர் இப்னுல் ஆஸ்(ரலி) சம்பந்தப்பட்ட செய்தி யார் ஆட்சியாளார் என்பதுதான் அவர்களுக் கிடையில் இருந்த பிரச்சினை என்பது போல் சித்தரிக்கப்படுகின்றது. இது இக்கதையில் உள்ள வரலாற்றுத் திரிபாகும்.
 
அவதானம் – 04:
தனி நபர் நீக்க முடியுமா?

ஒரு ஆட்சியாளரைத் தனி நபரோ குழுக்களோ நீக்க முடியாது. இதனால்தான் உஸ்மான்(ரலி) அவர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி நடந்தபோது அவர்கள் மரணிக்கத் தயாரானார்கள். ஆட்சியை விட்டும் நீங்கத் தயாராகவில்லை.
 
நான் அலியைப் பதவியிலிருந்து நீக்குகின்றேன் என அறிவும் தெளிவும் உள்ள அபூ மூஸா அல் அஷ்அரி(t) அவர்கள் கூறியிக்கமாட்டார்கள். கலீபாவை இப்படிப் பதவி நீக்க முடியாது.
 
அவதானம் – 05:
இல்லாதவரை நீக்க முடியுமா?
அலியையும் முஆவியாவையும் அபூ மூஸா அல் அஷ்அரி நீக்குவதென்பது சாத்தியமற்றதாகும். முஆவியா(ரலி) அவர்கள் கலீபாவாக இல்லாத நிலையில், இல்லாத கலீபாவை நீக்குகிறேன் என எப்படி அபூ மூஸா அல் அஷ்அரி அவர்கள் கூறமுடியும்?
 
அவதானம் – 06:
தனி நபர் எப்படி நியமிப்பார்?
நான் அலியை நீக்கி முஆவியாவை பதவியில் அமர்த்துகின்றேன் என எப்படி அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அவர்கள் கூற முடியும்? பதவியல் நியமிப்பது என்பது தனிநபர் கையில் உள்ளது அல்லவே!
 
நடந்த உடன்பாடு என்ன?
இரு நபித்தோழர்களுக்குமிடையில் நடந்த உடன்பாடு என்னவென்றால், இரு தரப்பும் போரை நிறுத்த வேண்டும். அலி(ரலி) அவர்கள் கூபாவில் கலீபாவாக இருப்பார்கள். முஆவியா(ரலி) அவர்கள் ஏற்கனவே சிரியாவின் கவர்னராக இருந்து அலி(ரலி) அவர்களால் நீக்கப்பட்டார்கள். அவர் தொடர்ந்தும் சிரியாவின் அமீராக இருப்பார்கள்.
 
இந்த உடன்பாட்டின் பின்னர் அலி(ரலி), முஆவியா(ரலி) தரப்பில் போர் நடை பெறவில்லை. அதே வேளை, முஆவியா(ரலி) அவர்கள் தன்னைக் கலீபாவாக அறிவிக்கவும் இல்லை. அலி(ரலி) அவர்கள் கொல்லப்பட்ட பின்னர் முஆவியா(ரலி) அவர்கள் கலீபாவாக பைஅத் செய்யப்பட்டார்கள்.
 
ஆனால், இந்த உடன்பாடு எட்டப்பட்டால் உஸ்மானைக் கொலை செய்தவர்களுக்குத் தண்டனை அளிக்கப்படும். முஆவியா, அலி அணிகள் இணைந்துவிட்டால் குழப்பக்காரக் கூட்டம் நசுக்கப்பட்டுவிடும். எனவே, அலி(ரலி) அவர்கள் தரப்பில் இருந்த சிலர் அல்லாஹ்விடம்தான் தீர்ப்புக் கேட்க வேண்டும். மனிதர்களிடம் தீர்ப்புக் கேட்டு விட்டால் இது குப்ராகும் எனக் குழப்பம் விளைவித்தனர். அதுமட்டுமல்லாது, அக்குழு கொடூரமான கொலைகளையும் செய்தது. எனவே, அலி(ரலி) அவர்கள் படை திரட்டி அவர்களின் கொட்டத்தை அடக்கினார்கள். இவர்கள் வரலாற்றில் கவாரிஜ்கள்என அடையாளம் காணப்படுகின்றனர்.
 
அலி(ரலி) அவர்கள் இவர்களை ஒடுக்கும் பணியில் இருந்ததால் உஸ்மான்(ரலி) அவர்களின் கொலையாளிகளை இணங்கண்டு அவர்களுக்கான தண்டனையை வழங்க முடியாது போனது!
 
அபூ மிஹ்னப் எனும் ஷிஆ இட்டுக் கட்டிய செய்தியை வஹீயாகக் கருதி அம்ர் இப்னுல் ஆஸ்(ரலி) அவர்களைக் கிரிமினல்என இன்றுவரை குற்றம் சாட்டக்கூடிய ஒரு நிகழ்ச்சி நடந்திருந்தால் கவாரிஜ்கள்இந்த மோசடியைத்தான் பெரிய பிரச்சினையாக ஆக்கியிருப்பார்கள். ஆனால், அப்படி நடக்கவில்லை.
 
எனவே, அம்ர் இப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் கிரிமினல் எனக் குற்றம் சாட்டுவோர் கூறும் இந்த சம்பவம் இஸ்லாத்தின் எதிரிகளால் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான தகவலாகும்; வரலாற்றுத் திரிபாகும். இதுவரை நபித்தோழரை நாக்கூசாமல் கிரிமினல் எனக் கூறியவர்களும் தலைவர் மொழிந்த வார்த்தையை வேதமாக நம்பி நியாயப் படுத்துவதற்காக வாதிட்டு வந்த தொண்டர்களும் மனம் திருந்தி மக்களுக்கு அறிவித்துத் தமது தவறில் இருந்து மீண்டு விடுவார்களா?

--
Received via email & thanks to:
with peace,
Shajahan Mohamed Umer
"Help People"
 
"Worship the Creator not his creations"

"There is none worthy and worship the God except the one. We can't create idols or statues of the God because No one has seen the God" (Logic)