உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Wednesday, March 14, 2012

வஹியை முரண்பாடாக்கி காட்டும் வழி தவறியவர்கள்

சில காலம் 'பகுத்தறிவு' நாத்திகம் பேசி

இரு மகாமகம் குர்ஆன் ஹதீஸ் போதித்து

இப்போது 'பட்டறிவு' நாத்திகனாய்

டார்வினுக்கு புது உருவம்

நம்பணும் தான் ஆனா.. நம்ப முடியல எனும் புதிய பரிணாமக் கோட்பாடு

ஆபத்தான சிந்தனை செருக்கர்களை அடையாளங்காட்டுகிறார்

இலங்கை மவ்லவி. SM. அப்துல் ஹமீது ஷரயி அவர்கள்

சுட்டிக் கேளுங்கள்...

http://www.srilankamoors.com/WAHIYAI-MURANPADAKI-KATUM-WALITHAWARIYAWARKAL.html

Thanks to : www.srilankamoors.com

Saturday, March 10, 2012

அதிரை தாருத் தவ்ஹீத் டிரஸ்ட் (ADT) 2ம் அமர்வு

அல்லாஹ்வின் அருளால் 09.03.2012 வெள்ளி மாலை மஃரிப் தொழுகைக்குப்பின் துபை மாநகரில், தவ்ஹீத் இல்லத்தில் கூடியது. சுமார் 4 மணி நேரம் நீண்ட அமர்வில் முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட்டன.

சிறப்பாக, அதிரையிலிருந்து மையப்படுத்தப்பட்டு குர்ஆன் ஹதீஸை பின்பற்றும் சகோதரர்கள் ஒலியலை ஊடாக ஓரலையாய் நேரலையில் சென்னை, துபை, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிலிருந்தும் இணைக்கப்பட்டு மசூரா நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அலசப்பட்ட விஷயங்கள், முடிவுகள் குறித்து நிர்வாகிகள் மூலம் ADT குழுமத்தில் இன்ஷா அல்லாஹ் வெளியிடப்படும்.







இன்ஷா அல்லாஹ் ADT யின் அடுத்த தொடர் அமர்வு எதிர்வரும் 15.03.2012 வியாழன் பின்னேரம் இஷா தொழுகைக்குப்பின் தவ்ஹீத் இல்லத்தில் கூடும் என்றும், குர்ஆன் ஹதீஸை பின்பற்றும் அமீரகம்வாழ் அனைத்து அதிரை சகோதரர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

செய்தியும் நிழற் பதிவும்
S. அப்துல் காதர்

இஸ்லாத்தை வாழ்வியலாக ஏற்ற சகோதரர்கள்

திருமங்கலக்குடி, எளிதில் யாரும் மறக்கும் ஊரல்ல, பரம்பரை கதை பேசி பள்ளிக்குள் சக முஸ்லீமை விட மறுக்கும் ஓர் கூட்டம், மறுப்போரை மறைந்தோராக்கும் இன்னொரு கும்பல் என அவர்தம் இழிச் செயல்கள் இஸ்லாத்தின் மீது பழியாய் படர, ஆனால் அல்லாஹ்வோ அவனை மட்டும் வணங்கும், அவனுக்கே கட்டுப்படும் மனிதர்களை அவர்களிலிருந்தே வெளிப்படுத்துகிறான்.

எண்ணங்களில் இல்லா எண்ணிக்கை முஸ்லீம்களுக்கு மத்தியில் இரு சகோதரர்கள் இஸ்லாத்தை உணர்ந்து உள்ளங்களில் ஏந்தினர்.

 முஹமது யாசீர்

கடந்த வாரம் 02.03.2012 வெள்ளியன்று, துபை மாநகரில் ஒரு தனியார் நிறுவனத்தில் அக்கவுண்டன்டாக பணியாற்றும் சகோதரர் தமிழ்வாணன் (27) முஹமது யாசிர் என்றும்,

 முஹமது இப்ராஹிம்

இந்த வாரம் 09.03.2012 வெள்ளியன்று, அபுதாபியில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஏசி டெக்னீஷியனாக பணிபுரிகின்ற சகோதரர் கலையமுதன் (23) முஹமது இப்ராஹீம் என்றும்,

உடன்பிறப்புக்களான இவ்விருவரும் இஸ்லாத்தை உள்வாங்கி, உணர்ந்து, உண்மை முஸ்லீமாய் வாழும் உன்னத நோக்குடன் தங்களின் வாழ்வியலாக இஸ்லாத்தை தெரிவு செய்து கொண்டனர்.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருமங்கலக்குடி என்ற ஊரைச் சேர்ந்த சகோதரர்கள் இவ்விருவரும், சுமார் 5 வருடங்களுக்கு முன் இஸ்லாத்தை ஏற்ற தங்களின் மூத்த சகோதரர் முஹமது அவர்கள் மூலம் குர்;ஆன் தமிழாக்கம், ஹதீஸ் நூற்கள், புத்தகங்கள் பெற்று படித்தும், இஸ்லாத்தின் ஓப்பற்ற ஓரிறை கோட்பாடு, ஏற்ற தாழ்வற்ற சமத்துவம் பிடித்தும், தாங்கள் இருக்க வேண்டிய சரியான மார்க்கம் இஸ்லாமே என உணர்ந்தும், எத்தகைய நிர்பந்தங்களுமின்றி முஸ்லீம்களாய் மாறியதற்கான காரணிகளாய் ஒர் குரலில் கூறினர்.

 முஹமது

இன்ஷா அல்லாஹ், தங்களுடைய பெற்றோருக்கும், தங்கைக்கும் இஸ்லாத்தை எத்தி வைத்து வருவதாகவும் விரைவில் அவர்களும் இஸ்லாத்தை ஏற்பார்கள் என இறையருள் மீது நம்பிக்கை தெரிவிக்கும் சகோதரர்கள் மூவருக்கும் ஓர் குறை, அது உள்ளத்தில் இத்துத்துவா காவிப் புழுதி படர்ந்து திரியும் தங்களின் மற்றொரு சகோதரனுக்கும் இஸ்லாம் சென்றடைய வேண்டும் என்பதே.

அவர்களின் சகோதரனுக்கும், பெற்றோர் மற்றும் தங்கைக்கும் தூய இஸ்லாம் கிடைத்திட, முன்மாதிரி முஸ்லீம்களாய் வாழ்ந்திட, அவர்கள் தொடர்ந்து செய்ய விரும்பும் தஃவா பணியில் வெற்றியடைந்திட நாமும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இறைஞ்சுவோமாக!

வேண்டுதல் :
அபுதாபி, முஸஃபா, ஐகாட் சிட்டியில் தங்கியுள்ள சகோதரர் முஹமது இப்ராஹிம் அவர்களுக்கு தொழுகை முறை, தூஆக்கள், குர்ஆன் ஒத பயிற்சி, சிறிய சூராக்கள் மனனம் போன்ற விஷயங்களில் உதவிட, தங்களுடைய ஒய்வு நேரத்தில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் மட்டும் போதிக்க ஆர்வமுள்ள, வாய்ப்புள்ள சகோதரர்கள் எங்களை (aimuaeadirai@gmail.com)தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

இவ்வேண்டுதல் இயக்கரீதியாக செயல்படுபவர்களுக்கு அல்ல.

சந்திப்பு மற்றும் புகைப்படம்
அதிரை அமீன்

Thursday, March 8, 2012

தொழுகை முறை

நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. (அல்குர்ஆன் 4:103)

தொழுகைகளையும், நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள்! (அல்குர்ஆன் 2 : 238)

(முஹம்மதே!) வேதத்தி­ருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான். (அல்குர்ஆன் 29:45)

இணைவைப்பு மற்றும் இறை மறுப்புக்கும் (முஸ்­மான) அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி­) நூல் : முஸ்­லிம்

நமக்கும், அவர்களுக்கும் (இறை மறுப்பவர்களுக்கும்) உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும். அதை விட்டவர் காஃபிராகி விட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: புரைதா (ரலி­) நூல்: நஸயீ

என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : மா­க் பின் ஹுவைரிஸ் (­லி) நூல் : புகாரீ

(சரியான முறை)                                  (சரியான முறை)
இந்த நபி மொழியைக் கவனத்தில் கொண்டு அடிப்படையில் நாம் எவ்வாறு தொழ வேண்டும் என்பதை நபிகளார் காட்டித் தந்த அடிப்படையில் அறிந்து கொள்வோம்.

Monday, March 5, 2012

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை தனது சில வழித்தடங்களில் இயங்கும் விமானங்களின் நேரம் மற்றும் வழித்தடங்கள் மாற்றம் செய்து உள்ளது. அதிலும் குறிப்பாக தமாம், துபாய், குவைத், ஜித்தா, ரியாத் மற்றும் பஹரைன் ஆகிய வளைகுடாவில் இருந்து செல்லும் விமானங்களின்  கால நேரம் மாற்றி அமைகப்பட்டுள்ளது. 

இதனால் குவைத்திற்கான பயண நேரம் 3 மணி அளவிற்கு குறையும் என் எதிர்பற்க்கபடுகிறது . என் என்றல் இது நாள் வரைக்கும் கொலும்புவில் இருந்து துபாய் வழியாக குவைத்திற்கு சென்றுகொண்டு இருந்த விமானம் இனி வரும் 2012 மே 1ன்னு முதல் கொழும்புவில் இருந்து நேரடியாக குவைத்திற்கு சென்று வரும்.
இங்கு பர்க்கவும்

கொலும்பு - பஹரைன் விமான சேவை மிஹின் லங்கா மூலம் இயக்கப்படும்

இனி கொழும்புவில் இருந்து திருச்சி வரும் விமானம்களை பார்க்கலாம்
இனி திருச்சியில் இருந்து கொழும்புசெல்லும் விமானம்களை பார்க்கலாம்

கொழும்பு - துபாய் ( இனி துபாயில் இருந்து குவைத் செல்லாது)
கொழும்பு- குவைத் ( இனி துபாய் செல்லது)

குவைத்தில் இருந்து திருச்சி செல்லும் பயணிகளுக்கு சில சவுகரியங்களும், சில அசவ்கரியங்களும் உள்ளன.
மேலுள்ள அட்டவனை பார்த்தல், அதில் குவைத்தில் இருந்து இனி தினமும் இரவு 10:15 புறப்படும் விமானம் துபாய் செல்லாமல் நேராக கொழும்பு செல்வதால் காலை 06:05 வந்து சேரும், கொழும்புவில் இருந்து 07:30 மணிக்கு புறப்பட்டு 08:30 திருச்சி வந்தடையும் , இதை விட்டல் மதியம் 13:40 க்கும் 14:30க்கும் ஆக மொத்தம் தினம் 3 சேவைகள் உள்ளன.
அதேபோல் திருச்சியில் இருந்து குவைத் வரும்போதும் காலை 09:20 புறப்படும் விமானத்தில் செல்லாமல் மதியம் 15:30 கும் 16:30கும் புறப்படும் விமானத்தில் சென்றால் கொழும்புவில் இருந்து மாலை 18:15 க்கு புறப்பட்டு இரவு குவைத் நேரப்படி 21:20 வந்து சேரும். இதனால் பாக்கத்து மாவட்டத்தில் இருந்து வரும் பயணிகள் இனி அதிகாலையில் புறப்படாமல், மதியம் வந்து சேர்வதுபோல் புறப்படலாம். 
குவைத்தில் இருந்து புதன் கிழமை இரவு புறப்படும் பயணிகளுக்கு மறுநாள் வியாழக்கிழமை காலை கொழும்புவில் இருந்து 07:30 மணிக்கு புறப்பட்டும் சேவை கிடையாது. இதனால் மதியம் 13:40 கும் 14:30கும் புறப்படும் விமானத்தில் தான் வரவேண்டும்.


இது எல்லாம் இருந்தாலும் நமக்கு என்று குவைத்தில் இருந்து நேரடி திருச்சி சேவை இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். எலி வலை ஆனாலும் தனி வலை ..............

Thanks to : http://edumalai.blogspot.com/2012/03/blog-post_05.html

Sunday, March 4, 2012

கோவை தடா ரபீக் அவர்களுடன் நேர்காணல் (AUDIO)

தடா, அரச பயங்கரவாதத்தின் ஒர் முகம். அந்த அகோர முகம் ஏன் நம் சகோதரனுடன் ஒட்டி உறவாட வேண்டும்? இது அவர் பயின்று வாங்கியதோர் பட்டமா? இல்லையில்லை, இந்த சகோதரனும் கோவையில் ஓர் முஸ்லீமாய் பிறந்ததற்காக அதிகார வர்க்கம் அவர் விரும்பாமலேயே திணித்த பெயர். கடந்து சென்ற கண்ணீர் காலத்தின் ஓர் அடையாளமாய் அவருடன் இன்றும் தேங்கி நிற்கின்றது.


அதெல்லாம் சரி, பேட்டி காணும் அளவுக்கு தடா ரபீக் என்ன சமுதாயத் தலைவரா என சிலர் நினைக்கலாம் ஆனால் ஒரு சில (இயக்க) சமுதாயத் தலைவர்களால், சமுதாயத்தின் பாராமுகத்தால் பாதிக்கப்பட்டவர் என்பது உள்ளம் சுடும் நிஜம்.


அவருடைய சிறைவாழ்வையோ, அதன் காரண காரியங்களோ இங்கே அலசவில்லை மாறாக அவர் உள்ளே செல்லுமுன் அவருடைய குடும்ப நிலை வெளியே வரும் போது அவர் கண்ட குடும்ப நிலை என்ற கோணத்தில் மட்டுமே அவர்களுடன் ஓர் சிறிய நேர்காணல்.




"கோவை சிறைவாசிகள்" ஆனதால் வாழ்ந்து கெட்ட (பொருளாதாரத்தால் சீரழிந்த) நூற்றுக்கணக்கான குடும்பங்களை உணர்ந்து கொள்ள, சகோதரர் தடா ரபீக் ஒரு சோற்றுப்பதம். 


பேட்டியின் போது உடனிருந்த சகோதரர்கள்

தனிப்பட்டதோர் குறுகிய பயணமாய் துபை வருகை தந்துள்ள சகோதரர் தடா ரபீக் அவர்களுடன் AIM வலைதளத்திற்காக உரையாடியது

அதிரை அமீன்

புகைப்படங்கள் : பொறையார் ஜக்கரியா

Friday, March 2, 2012

ஆமா, இவரு பெரிய விஞ்ஞானி!

தன்னை பார்த்து ஏளனமாக சொல்லப்பட்ட மேற்படி தலைப்பையும் தாண்டி 'ஆமாம், இவர் நல்ல மனிதர்' என்ற நிலையில் நம்மை விட்டும் கடந்த வருடம் மறைந்துவிட்ட KSM முஹம்மது இஸ்மாயில் அவர்களை குறித்த ஒரு சிறிய நினைவலை.

நாங்கள் அறிந்து மேலத்தெருவிலிருந்து முதன்முதலில் SFO(Social Forest Officer), Acting Deputy BDO-வாக அரசாங்க உத்தியோகம் பார்த்தவர். முறைகேடாக தானும் சம்பாதிக்காமல் மற்றவர்களையும் சம்பாதிக்கவிடாதவர் (பிழைக்கத் தெரியாதவர்) என்று சக அலுவலர்கள் மத்தியில் சிறப்புப் பெயர் பெற்றவர்.

விருப்ப ஓய்வுக்குப்பின்னும் வீட்டோடு முடங்கிவிடாமல் அதிரை பைத்துல்மால், தேசிய லீக், மேலத்தெரு சங்கம், அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பள்ளிவாசல் நிர்வாகம் என பறந்த தேனீ.

அதிலும் தன் இறப்புக்கு முன், அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பள்ளிவாசலுக்காக நிலம் வாங்குதல், கட்டுமானம், நிர்வாகம் என அனைத்து வகையிலும் தான் முறையாக பாரமரித்து வந்த பள்ளியின் கணக்கு வழக்குகளை முறைப்படி ஒப்படைத்த நம் சம காலத்திய அதிரையின் ஒரே நேர்மையாளர். இறுதி மூச்சு வரை உண்மையை மட்டுமே எங்கும் பேசியதால் இயற்கையான எதிர்ப்புகளின் சொந்தக்காரர். தன்னை எதிரியாக பாவித்த தெருத்தலைவர்களை கூட முகத்துக்கு முகம் மட்டுமே சந்தித்தவர், அதே தலைவர்களை சகோதர வாஞ்சையுடன் தெருவின் நன்மைக்காக மீண்டும் மீண்டும் வலியச்சென்று சந்திக்கத் தயங்காதவர்.

எங்கள் நட்பு வட்டாரத்தால் இஸ்மாயில் மாமா என அன்புடன் அழைக்கப்பட்டவர், தன் இரத்த சொந்த பந்தங்கள் மட்டுமின்றி மேலத்தெரு குடும்பங்களின் தலைமுறை கடந்த உறவுகளையும் புள்ளி பிசகாமல் எடுத்து சொல்லும் நினைவாற்றல் மிக்கவர்.


(செடியன்குளம் இந்த வருட மழைநீரால் நிரம்பிய போது எடுத்த படம்) நன்றி : சேக்கனா M. நிஜாம்

அதெல்லாம் சரி, தலைப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? இருக்கிறது சகோதரர்களே! நமக்காக, நமது வாரிசுகளுக்காக ஒருமுறை தனி மனிதராக போராடியபோது கிடைத்த அவமரியாதை சொல் ஆனால் பொருந்தியதோ தெருகூடிச் செய்த பாவத்தில் பங்கில்லா நம் சந்ததிகளுக்கு.

குளிரிலும் இதமான, சுற்றிலும் பனை, தென்னை, மூங்கில், தாழை, கருவை, மருதம், அழிஞ்சி, வேப்பை என மரங்கள் நிறைந்த பசுஞ்சோலைக்கு நடுவே ஏரியின் பொழிவில் ஓர் குளம், ஒன்றாம் கரை, இரண்டாம் கரை, மூன்றாம் கரை, பெரிய கரை (ஐந்தாம் கரை), (பாதுகாப்பான) பெண்கள் கரை எனவும், காலை முதல் மாலை வரை பல்லாயிரக்கணக்கானோர் விரும்பி குளித்த நிலையிலும் தெளிவான தண்ணீராக வருட முழுவதும் நிறைந்திருந்த செடியன்குளம் காட்சிகளை உங்கள் மனத்திரையில் சற்றே ரீவைண்ட் செய்து பாருங்கள், நம் சந்ததிகள் நிரந்தரமாய் இழந்துவிட்ட அருமை புரிகிறதா?

சில வருடங்களுக்கு முன், ஜூம்ஆ பள்ளியில் செடியன்குளத்தை புல்டோசர் இயந்திரம் மூலம் ஆழப்படுத்த, சுத்தம் செய்ய ஒரு ஆலோசணை நடைபெறுகிறது. விஷயத்தை கேள்விப்பட்ட KSM இஸ்மாயில் மாமா அவர்கள் அழைப்பின்றி விரைந்தோடுகின்றார். புல்டோசர் வேண்டாம் என மன்றாடுகிறார், வேண்டுமானால் குளத்தின் மத்தியில் உரையும் சேற்றை அப்புறப்படுத்த மட்டும் புல்டோசரை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கெஞ்சுகிறார்.

காரணம், அழுக்கை உண்டு நீரை சுத்தம் செய்யும் வேலம் பாசிகளை ஒருமுறை அடியோடு அப்புறப்படுத்தினால் மீண்டும் அதே இடத்தில் வளரச் செய்ய இயலாது. புல்டோசர் மூலம் ஆழப்படுத்தினால் தண்ணீரை சுத்தப்படுத்தும் பாசிகளும் குளத்து மண்ணுள் கலந்திருக்கும் பாசியின் விதைகளும் அப்புறப்படுத்தப்பட்டுவிடும், கரைகள் மறைந்துவிடும், மரங்கள் அழிந்துவிடும் இதனால் தண்ணீர் கெட்டுவிடும் என சுற்றுச்சூழலை அனுபவத்தில் படித்த மேதை பதறுகிறார் அப்போது குழுமியிருந்தோரில் ஒரு சில கருத்துக் குருடர்கள் வழங்கிய பட்டம் தான் 'ஆமா! இவரு பெரிய விஞ்ஞானி'

மீன் வளர்ப்பு மற்றும் மண் வளத்தை சுரண்டுவதன் மூலம் வரும் லாபத்தை மட்டுமே பார்த்தவர்களால் புல்டோசர் கொண்டு அனைத்தும் முற்றாக அழிக்கப்பட்டன. இன்று செடியன்குளம் என்பது பாசியில்லா, கரைகளில்லா, மரங்களில்லா, தண்ணீர் வரத்திற்கு வழியற்ற, குளிக்க லாயக்கற்ற, நாதியற்ற, அசுத்த நீர் தேங்கியுள்ளதோர் பிரமாண்ட பள்ளம்.

இது மழை நீரால் வருடந்தொறும் ஒருமுறை நிரம்பும் மீண்டும் இருமாதங்களுக்குள் நாற ஆரம்பித்துவிடும், தானாக நாற தாமதித்தாலும் மீன்களின் இரட்சகர்கள் நாறவைத்துவிடுவார்கள்.

நமதூர் CMP வாய்க்கால் நீர் வரத்தின்றி தூர்ந்தது போலவே CMP லைனிலிருந்து தென்னந்தோப்புகள் வழியாக செடியன்குளத்திற்கு தண்ணீர் வந்த பாதைகளின் மேல் மார்க்கத்தற்கு மாற்றமாய் மகளுக்கு சீதனம் கொடுக்க காங்க்ரீட் புதர்காடுகள் வேறு மண்டிவிட்டன.

நமக்காக நல்லுள்ளம் கொண்டு மறைந்த KSM இஸ்மாயில் மாமாவிற்காக நாமும் வல்ல ரஹ்மானிடம் பிரார்த்திக்கலாமே.

இங்கு நீச்சல் பழகி தான் சென்னையில் நான் பயின்ற பள்ளியில் நடந்த ஒரு நீச்சல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வெல்ல முடிந்தது என்ற நன்றியுடனும், நெஞ்சம் நிறைந்த வலியுடனும், சகோதரர் யாக்கூப் அவர்களின் தகவல் உதவியுடன்

அதிரை அமீன்