உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Wednesday, February 15, 2012

17.02.2012 துபையில் சகோதரர் கோவை அய்யூப் சிறப்புரை

கடந்த வாரம் 10.02.2012 அன்று அல்லாஹ்வினுடைய மாபெரும் அருளால் துபை அல்கூஸ் பகுதியில் அமைந்துள்ள அல்மனார் குர்ஆன் ஸ்டடி சென்டர் அரங்கில் துபை அரசின் அனுமதியுடனும் ஆதரவுடனும் நடைபெற்ற நிகழ்வில் தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் கலந்து கொண்டு 'இஸ்லாம் - அன்றும் இன்றும்' என்ற பொருளின் கீழ் பயனுள்ளதோர் சொற்பொழிவினை நிரம்பிய அரங்கினர் மத்தியில் வழங்கினார்.

கடந்த வார நிகழ்வின் எதிரொலியாய் நம்மை தேடிவந்த வாய்ப்பில், இந்த வாரம் 17.02.2012 அன்று மாலை மஃரிபுக்குப் பின், அமீரக வரலாற்றில் முதன்முறையாக தமிழ் இஸ்லாமிய நிகழ்ச்சியொன்று துபை அவ்காஃப் வளாக அரங்கில் நடைபெற எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் செய்துள்ளான், அல்ஹம்துலில்லாஹ்.

நிகழ்ச்சி நிரல்

நாள் : 17.02.2012 வெள்ளிக்கிழமை

நேரம் : மாலை 6.30 மணி
(மஃரிப் தொழுதவுடன்)

இடம் : துபை அவ்காஃப் வளாக அரங்கம்
  மம்ஜார், Century Mall அருகில்


சிறப்புரை
சகோதரர். கோவை S. அய்யூப்

தலைப்பு
அந்த நாள் வரும் முன்

மேலும் விபரங்களுக்கு
050-5275373       050-3509345        055-2177618

என்றும் உங்களுடன் ஏகத்துவப் பணியில்
தவ்ஹீத் இல்லம்
நைஃப் ரோடு, தேரா, துபை

Tuesday, February 14, 2012

தென்காசியில் எலுமிச்சம் பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்த 6ம் வகுப்பு மாணவர்

தென்காசி: எலுமிச்சம் பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்து தென்காசியைச் சேர்ந்த பள்ளி மாணவர் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.


தென்காசி வடக்கு கீழ கொய்க்கால் தெருவைச் சேர்ந்தவர் காதர் முகைதீன். மெக்கானிக்கல் என்ஜினியர். அவரது மனைவி ஷமீமா. கம்ப்யூட்டர் என்ஜினியர். அவர்களின் மகன் முகமது ஹம்தான் (11). இவர் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இம்மாணவர் எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்து சாதனை படைத்துள்ளார்.

அவர் நான்கு எலுமிச்சம் பழங்களை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பழத்திலும் இரும்பு ஆணி மற்றும் காப்பர் கம்பியை செருகினார். அதன் பின்னர் காப்பர் கம்பியை தனி வயரிலும், இரும்பு ஆணியை தனி வயரிலும் இணைத்து 2 வோல்ட் திறன் கொண்ட சிறிய பல்பினை எரிய வைத்தார்.

இது பற்றி மாணவர் முகமது ஹம்தான் கூறுகையில், எலுமிச்சை, பல்லாரி, உருளைக்கிழங்கு, தக்காளி, கத்தரிக்காய், ஆரஞ்சு, வாழைப்பழம் உள்ளிட்டவைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என வேதியியல் ஆசிரியை கூறினார். அதனை நான் செயல்படுத்தி மின்சாரம் கிடைப்பதை உறுதிபடுத்திக் கொண்டேன். ஒரு எலுமிச்சம் பழத்தில் 0.5 வோல்ட் மின்சாரம் கிடைக்கும் என்றார்.

News Source : Thatstamil 15, 2012, 9:31 [IST]

Monday, February 13, 2012

காதல் முக்கியமா? உறவு முக்கியமா?

Post image for காதல் முக்கியமா? உறவு முக்கியமா?
இந்த காதல் நம் இஸ்லாமிய பெண்களையும் விட்டுவைக்கவில்லை, பள்ளிக்கு போய் கல்விக்கு பதிலாக கலவியை தான் கற்றுக்கொண்டு வருகிறார்கள் என்பது சிலரின் கருத்து.

காதலர் தினம் என்ற பெயரிலே எவ்வளவு கூத்து கும்மாளம் நடக்கிறது, மேற்கத்திய நாடுகளிருந்து வந்தது தான் இந்த காதலர் தினம் .நம்முடைய இஸ்லாமிய சகோதரிகளிடம் இந்த காதல் நோய் தொற்றிகொண்டது என்பது தான் மிக பெரிய கவலை.

பெற்றோர்கள் தன பெண் பிள்ளைகளை நம்பி பள்ளிக்கு அனுப்புகிறார்கள். ஆனால் இவர்கள் காதல் வலையில் சிக்கி, பெற்றோர்களை தலை குனிய வைக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் தவறான வழியில் போவதற்கு நிறைய வழிகள் இருக்கிறது. வயதும் மற்றும் சூழ்நிலையும் தவர் செய்வதற்கு வழி வகுக்கிறது என்பது உண்மை.

ஒரு காலத்தில் பெண் பிள்ளைகளுக்கு பாலியல் பற்றி தெரிய வாய்ப்பு இல்லை அவர்கள் அதிகமாக வீட்டில்தான் இருப்பார்கள். பொழுதுபோக்கு என்பது ரேடியோ மட்டும்தான் இருக்கும். டிவி இருக்கும் வீடு விரலைவிட்டு எண்ணும் அளவுக்கு தான் இருக்கும். இன்றைய காலத்தில் வீட்டில் இருந்தப்படியே எல்லாம் பார்க்கலாம் ,பேசலாம் எதுவேண்டுமானாலும் செய்யலாம். ஒரு பெண்ணை படிக்கவைத்து, படிப்புக்கு பிறகு அவளுக்கு திருமணம் செய்வதற்கு பேசி முடித்து, பெற்றோர்கள் சந்தோஷமாக இருக்கும் நிலையில், அந்த பெண் திடிரென்று யாரோ ஒருவனுடன் ஓடிவிடுகிறாள் இப்படியெல்லாம் நடக்கிறது என்பது உண்மைதானே?

உறவை விட காதல் தான் முக்கியம் என்று கொஞ்சம் கூட சிந்திக்காமல் சில நாட்கள் பழகிய ஒருவனுடன் இப்படி ஓடும் எதனை பெண்கள் ,அந்த குடும்பத்தின் நிலை என்ன? அந்த குடுபத்தில் இன்னுரு பெண் இருந்தால் அவள் நிலை என்ன? சிந்திக்க வேண்டாமா? அன்பு சகோதரிகளே! அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள்! பெற்றோரை கண்ணிய படுத்துங்கள்! ஆசை அறுபது நாள் மோகம் நுப்பது நாள் என்று சொல்வார்கள். வேண்டாம் இந்த காதல். விபரிதம் தெரியாமல் இந்த காதலில் சிக்கி விடாதீர்கள்!

உங்கள் குடும்பத்தை தலை குனிய வைத்துவிடாதீர்கள், உறவு தான் முக்கியம் அது தான் கடைசி வரை வரும் என்பதை மறந்து விடாதீர்கள்!
அந்த காதல் இந்த காதல் கள்ள காதல் சொல்லாத காதல் சுகமான காதல் ஊரை சுற்றும் காதல் இப்படி பலவகை காதல் இருக்கிறது. உண்மையான காதல் என்பது எது என்று புரிந்து கொள்ளுங்கள். திருமணத்திற்குப்பிறகு உங்கள் துணையுடன் கொள்ளும் காதலே உண்மையானது, நிலையானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
பள்ளிக்கு போனால் படிப்பை மட்டும் கவனியுங்கள். பெறோர்கள் உங்களை நம்ம்பி அனுப்புகிறார்கள் அவர்களுக்கு மோசம் செய்யாதீர்கள்! மாற்று மத பெண்களுடன் ரொம்ப கவனமாக இருங்கள். யாருக்கு உங்கள் செல் போன் நம்பரை கொடுக்காதீர்கள்! அல்லாஹ் எங்களுக்கும் உங்களுக்கும் நற்கிருபை செய்வானாக, ஆமீன்.

ABDUL RASHEED
Thanks to readislam.net

Thursday, February 9, 2012

ஒரே இடத்துல உட்கார்ந்து வேலை பாக்கறீங்களா? கொஞ்சம் எழுந்து நடங்க!

 
அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது உடல் நலனிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஒரு நாளில் பெரும்பாலான நேரம் உட்கார்ந்தே இருப்பவர்களில் 54 சதவீதம் பேருக்கு மாரடைப்பு தாக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாக எச்சரிக்கின்றது அந்த ஆய்வு முடிவு.

ஒரே இடத்தில் உட்கார்ந்தே இருப்பவர்களுக்கு உடல் பருமன், டைப் 2 நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் புதிதாக நடைபெற்ற ஆய்வில் அதிக நேரம் அமர்ந்த நிலையில் வேலை பார்ப்பது உயிருக்கே ஆபத்தாகும் என்று தெரியவந்துள்ளது. லூசியானாவிலுள்ள பென்னிங்டன் பயோ மெடிக்கல் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக 13 ஆண்டுகள் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பவர்களைப் பற்றி மருத்துவர் டேவிட் கேவன் தலைமையிலான குழு ஆய்வு நடத்தியது. ஆண், பெண் என மொத்தம் 17 ஆயிரம் பேரிடம் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாரடைப்பு ஏற்படும்

ஒரு நாளில் பெரும்பாலான நேரம் உட்கார்ந்தே இருப்பவர்களில் 54 சதவீதம் பேருக்கு மாரடைப்பு தாக்க ஏராளமான வாய்ப்புகளுண்டு என்கிறது ஆய்வு. இது சிகரெட் புகைப்பதைப் போல உயிருக்கு மிகவும் அபாயகரமானது.

சிகரெட் புகைப்பதால் இருதயத்திலும், மூச்சுக் குழாயிலும் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தும். இது உயிருக்கு மிக ஆபத்தானது. அதேபோல உட்கார்ந்தே இருப்பதாலும், அதே அளவுக்கு உடலில் ஆபத்து ஏற்படுமாம்.

உயிருக்கு ஆபத்து

ஒரு நாளைக்கு ஆறு மணி நேரத்திற்கும் மேல் ஒரே இடத்தில் உட்கார்ந்தே இருப்பவர்களில் 54 சதவீதம் பேரின் உயிருக்கு ஆபத்து மிக அதிகம். அவ்வாறு உட்கார்ந்தே இருக்கும் போது உடலின் செயல்பாடுகள் ஸ்தம்பித்து ஸ்டோரேஜ் தன்மையை அடைந்து விடுகிறதாம். புளி மூட்டையை தூக்கி வைத்தது போல உடல் செயலிழந்து தேக்க நிலையில் இருக்குமாம். அது செயல்படும் திறனை இழந்துவிடுகிறது. இதனால் உடலின் முக்கியமான உறுப்புகள் பாதிக்கப்பட்டுவிடும். மொத்தத்தில் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையை ஏற்படுத்திவிடும் என்கிறது ஆய்வு.

Action-Tips for Healthy Employees
அடிக்கடி நடங்க

நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை பார்க்க வேண்டாம். அதையும் மீறி உட்கார வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் இடையிடையே சில நிமிடங்கள் எழுந்து நின்று கொள்ளுங்கள். சிறிது தூரம் நடக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் உடலில் ரத்த ஓட்டம் சீரடையும். உடலில் ரத்த ஓட்டம் ஸ்டோரேஜ் நிலையை அடையாது, உயிருக்கும் ஆபத்தில்லை என்று டிப்ஸ் தருகிறார் டாக்டர் டேவிட் கேவன்.
Thanks to Thatstamil.com

பொய்யும் மெய்யும்

Post image for பொய்யும் மெய்யும்  பொய் சொல்வது தான் சுலபம் என்கிற மாயக்கருத்து நமக்குள் வியாபித்து இருக்கக்கூடும். ஆனால் அது உண்மையா என்றால் பொய் என்பதே பதிலாகக் கிடைக்கும். ஏனெனில், நமது உள்ளம் பொய் சொல்வதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல!

யாரிடத்தில் என்னென்ன பொய்கள் சொல்லி வைத்தோம் என்பதை நாம் நீண்ட பட்டியல் தயாரித்து வைத்திருந்தால் கூட அந்தந்த நபர்களிடம் இருந்து அந்தந்த பொய்யை நீடித்த நாள் வாழ வைப்பது என்பது மிகவும் கடினமான காரியமாகவே இருக்கும். அந்த நபர் அங்கு இல்லை என்று நினைத்துக் கொண்டு வேறொரு நபரிடம் உண்மையைச் சொல்லிக் கொண்டிருப்போம். அதே நபரிடம் கூட வேறொரு விஷயத்துக்காக உண்மையைச் சொல்வதே ஆதாயம் என்ற நிலைக்குத் தள்ளப்படுவோம்.

ஒருமுறை பொய் சொல்லி மாட்டிக் கொள்வோமேயானால் அதன்பின் நாம் உண்மை சொன்னால் கூட பொய் சொல்வதாகவே கருதும் இவ்வுலகம். அதுமட்டுமல்ல, நமக்கு பொய்யன் என்ற பட்டத்தையும் சூட்டி மகிழ்ந்து கொண்டிருக்கும்.

உண்மை நம்மை தீமை செய்வதிலிருந்து காப்பாற்றுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். முதலில் சிறு இழப்பைத் தருவது போல் தோன்றினாலும், போகப்போக உண்மை நமக்குப் பெருமையாகவும், இலாபத்தையும் அள்ளித்தருகிறது.]

மெய்யும் பொய்யும் நம்முடைய வாழ்க்கையோடு கலந்து விட்டனவைகளாகவே இருக்கின்றன. நமக்கு எது ஆதாயம் தருகின்றதோ, அதை தேர்வு செய்ய நாம் தயங்காதவர்களாகவே இருக்கின்றோம். அது பொய்யாக இருந்தாலும் சரி, மெய்யாக இருந்தாலும் சரி.ஆனால் உண்மை என்னவென்றால், பொய் சொல்வது என்பது நமக்கு பிடிக்காத ஒன்றாகவே இருக்கிறது என்பதுதான்.

இந்த உண்மையை எண்ணிப் பார்க்கிறபோது நமக்கு மிகவும் வியப்பாகத் தோன்றும். பிடிக்காத விஷயமாகிய ஒன்றை – அதாவது பொய் சொல்வதை நாம் வாழ்க்கையில் அதிகம் கடைப்பிடிக்கிறோம் என்பதுதான் அது.பொய் சொல்வதா? உண்மையைச் சொல்வதா என்பதை நாம் சூழ்நிலையைப் பொறுத்தே முடிவு செய்கிறோம். எதைச் சொல்வதனால் அந்த நேரப் பொறுப்பிலிருந்து, சுமையிலிருந்து விடுதலை கிடைக்கின்றது என்பதுகூட நாம் சொல்ல வேண்டியது பொய்யா? மெய்யா? என்பதை நிர்ணயித்து விடுகின்றது. மேலும் நாம் ஆதாய நோக்கம் உடையவர்களாகவும் இருக்கின்றோம். எனவேதான் அப்படி இப்படிப்பட்ட வேளைகளில் நாம் பொய் சொல்வதற்கு தயங்குவதில்லை. ஆனால் பொய், மெய் இரண்டில் எதைச் சொல்வது சுலபம் என்ற கேள்வி எழுமானால் நாம் கூறும் விடை என்னவாக இருக்கும்?

பொய் சொல்வது தான் சுலபம் என்கிற மாயக்கருத்து நமக்குள் வியாபித்து இருக்கக்கூடும். ஆனால் அது உண்மையா என்றால் பொய் என்பதே பதிலாகக் கிடைக்கும். ஏனெனில், நமது உள்ளம் பொய் சொல்வதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல என்பதே! ஆம்! உள்ளத்தில் உண்மைகளே பதிவு செய்து வைக்கப்படுகின்றன. பொய்யை நாம் தான் தூக்கி அதில் ஒரு சுமையை வைக்கின்றோம். அந்த சுமையை உள்ளம் மெல்ல மெல்ல இறக்கி தூர எறிந்து விடக்கூடும். ஆம்! பொய்ச்சுமைக்கு உள்ளத்தில் நீடித்த இடப்பிடம் கிடையாது என்பதை நாம் புரிந்து கொள்ள வெண்டும். எனவே தான் சொல்லி வைத்தாற்போல் பொய்கள் எல்லாம் விரைவில் மறந்து போய் விடுகின்றன.

 உண்மைக்கு இயற்கையே சாட்சியாக அமைந்து விடுகின்றது. ஆனால், பொய்யை நிரூபிக்க சாட்சியை ஜோடிக்க வேண்டியதாக இருக்கிறது. அந்த சாட்சியும் அந்த நிமிடத்துக்கு மட்டும்தான் மேடையேற உதவும். காட்சி முடிந்தபின் கழன்று கொண்டு போய்விடும். பின்பொரு சூழ்நிலையில் அந்த நாடகத்தைப் போடும் போது முன்பு வந்த பொய்சாட்சியே காட்டிக் கொடுக்கும் சாட்சியாக மாறிப்போய் விடுகிறது.

எனவே நீர்க்குமிழிகள் போன்றவையே பொய்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் பொய் சொல்வதில் இருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

ருமுறை பொய் சொல்லி மாட்டிக் கொள்வோமேயானால் அதன்பின் நாம் உண்மை சொன்னால் கூட பொய் சொல்வதாகவே கருதும் இவ்வுலகம். அதுமட்டுமல்ல, நமக்கு பொய்யன் என்ற பட்டத்தையும் சூட்டி மகிழ்ந்து கொண்டிருக்கும். எனவே நாம் சொல்லும் உண்மைகள் ஏற்கப்படாத நிலைமை வருமேயானால், அது நம்முடைய வளர்ச்சிக்கு மிகுந்த பாதகத்தை ஏற்படுத்தும். இதற்குக் காரணம், நாம் முன்பு ஏதோ ஓர் ஆதாயம் கருதி கூறிய பொய்தான். ஆனால் அப்போது கிடைத்த ஆதாயத்தைவிட இப்போதும், இனிமேலும் கிடைக்கின்ற இழப்பு மிக மிக அதிகமானதாகவே இருக்கின்றது என்பதை உணர்ந்து பார்ப்போமேயானால் வலி தான் மிஞ்சும்.

எனவே தான் முன்பு ஏதோ ஒரு சூழலில் தவிர்க்க முடியாமல் நாம் ஒரு பொய்யைச் சொல்ல நேர்ந்திருந்தால் அப்போது அப்பொய்யை சொல்லியிருந்தால், அப்பொய்யை பொய்யல்ல என்று கட்டிக் காக்க வேண்டிய பொருப்பு நம்மை வந்து சேர்ந்து விடுகின்றது. அந்த பொய் நன்மையைக் கருதியும் கூறப்பட்டிருக்கலாம் அல்லது தீமையைக் கருதியும் கூறப்பட்டிருக்கலாம். எதைக் கருதி கூறப்பட்டிருந்தாலும் சரி பொய்யன் என்ற பழியிலிருந்து நாம் மீள முடியுமா?
பொய் அற்ப ஆயுள் கொண்டது. அப்படிப்பட்ட பொய்யை நாம் கட்டிக்காக்க முடியுமா என்ன? பொய் வெளிப்படும்போது அது விளைந்த தீமைக்கேற்ப நமக்கு அழிவைத் தந்துவிடும். எனவே நல்லதொரு சூழ்நிலையில் அப்பொய்யை நாமே நயமாக வெளிப்படுத்துவது என்பதே சாலச் சிறந்ததாக இருக்கும். அப்போது அது தீமையைத் தந்தால்கூட ஏற்க சித்தமாக இருக்க வேண்டும்.
பொய் சொல்வது என்பதே மிகவும் சிரமமானது. அப்படியெனில் உண்மையைச் சொல்வது மிகவும் சுலபமானதா? என்ற கேள்வியும் எழுகிறது.

இதற்கும் சிந்தித்தே விடைகாண வேண்டியிருக்கிறது. உண்மையைச் சொல்வதே சுலபம் என்றால் நமக்குப் பொய் கூற வேண்டிய அவசியம் பெரும்பான்மையான சூழ்நிலைகளால் ஏற்படாதே என்பதுதான்.
ஆனால், நாம் பல நிலைகளில் உண்மையை மறைப்பதில் குறியாக இருக்கின்றோம். உள்ளத்தை உள்ளபடி கூறுகின்ற மனத்திண்மை பல நேரங்களில் நம்மிடம் இல்லாமல் போய் விடுகிறது.
இதற்கு என்ன காரணம்?

ஒன்று அதனால் நாம் பெரிய இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும். மற்றொன்று மிகவும் முக்கியமானது. நாம் அவமானத்துக்கு உள்ளாக நேரிட்டு விடக் கூடும். ஒரு தவறை நாம் செய்து விட்டோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த தவறை ஒப்புக் கொள்கிற மனநிலை நமக்கு வந்து விடுகிறதா என்ன? அதை உள்ளபடியே கூறிவிட்டால் மிகப்பெரிய கேவலத்தை அடைய வேண்டியதிருக்கும். அதுவரை ஊராரிடம் சேர்த்து வைத்திருந்த மதிப்பு மரியாதை எல்லாம் காலவதியாகப் போய்விடும்.
நாம் எப்பொழுதும் உண்மையே பேசும் மன உறுதியை கொண்டவராக இருப்போமேயானால் எந்த சூழ்நிலையிலும் தவறான செயலை நமக்கும், பிறருக்கும் தீமை தருகின்றன செயலை செய்ய விழையவே மாட்டோம்.
இதிலிருந்து உண்மை நம்மை தீமை செய்வதிலிருந்து காப்பாற்றுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். முதலில் சிறு இழப்பைத் தருவது போல் தோன்றினாலும், போகப்போக உண்மை நமக்குப் பெருமையாகவும், இலாபத்தையும் அள்ளித்தருகிறது.

ஒரு பொய்யை காப்பாற்ற நாம் பல பொய்களை சொல்லிக் கொண்டு போக வேண்டியதாகி விடுகிறது. அதே போல உண்மைகளை தொடர்ந்து சொல்லச் சொல்ல உண்மையைச் சொல்வது என்பது இனிமையாகிப் போகிறது.

பொய் சொல்வதற்கு நிறைய ஞாபக சக்தி இருக்க வேண்டும். உண்மையை சொல்பவர்களுக்கு நிறைய தைரியம் இருக்க வேண்டும். நாம் தைரியசாலிகளாகவே இருப்போம்.

அஷ்ஷரீஅத்துல் இஸ்லாமியா
கா. அலியார்
nidur.info


Thanks to readislam.net

Monday, February 6, 2012

10.02.2012 அன்று துபையில் சகோதரர் கோவை அய்யூப் சிறப்புச் சொற்பொழிவு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கடந்த ஆண்டு 13.08.2011 அன்று அல் மனார் சென்டரில் அமீரக வரலாற்றில் முதன்முறையாக இஸ்லாமிய நிகழ்ச்சி ஒன்று தமிழில் துபை அரசாங்க அனுமதியுடனும் ஆதரவுடனும் முஃப்தி உமர் ஷரீஃப் காஸிமி அவர்களின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றதை அனைவரும் அறிவீர்கள்.
.
தொடர்ந்து இஸ்லாமிய தமிழ் அமர்வுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த 2வது சந்தர்ப்பத்தில், வரும் வெள்ளிக்கிழமை 10.02.2012  மாலை சரியாக 5 மணியளவில் அல் மனார் சென்டரில் தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் கலந்து கொண்டு இஸ்லாம் - அன்றும் இன்றும் என்ற தலைப்பின் கீழ் கருத்தாழமிக்க, இம்மை மறுமைக்கு பயனுள்ளதோர் சிறப்புரையாற்றவுள்ளார்கள்.



அனைவரும் கலந்து பயனடைய அன்போடு அழைக்கின்றோம்.

குறிப்பு : பெண்களுக்கு தனியிட வசதியும். வாகன வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

Sunday, February 5, 2012

ரபீஉல் அவ்வல் மாதம்

Post image for ரபீஉல் அவ்வல்

    ரபீஉல் அவ்வல் மாதம் முஸ்லிம் சமுதாயம் நாடு முழுவதும் மீலாது விழாக்கள் நடத்துவதையும், வீடுகள் தோறும் மவ்லூது ஓதுவதையும் கொண்டு நபி صلى الله عليه وسلم அவர்கள் மீது தங்களுக்குள்ள அன்பையும், பிரியத்தையும் வெளிப்படுத்துவதாக நம்பிக் கொண்டிருக்கிறது. இந்த சடங்கு, சம்பிரதாயங்கள் எல்லாம் நபி صلى الله عليه وسلم அவர்களின் மறைவிற்கும் 600 ஆண்டுகள் கழித்தே மக்களின் மனோ இச்சைகளுக்கு ஏற்றவாறு தோற்றுவிக்கப்பட்டவையாகும்.
  
  மற்ற மதத்தவர்கள் எப்படி தங்கள் வேதங்களையும் மதச்சிறப்புகளையும் வேதாந்தமாகவும் வெற்று முழக்கங்களாகவும் ஆக்கி விட்டரனரோ அதே போல் முஸ்லிம்களும் இஸ்லாத்தின் தூய வாழ்க்கை நெறி முறைகளையும் வெற்று முழக்கங்களாகவும், பஜனை பாடுவதாகவும் ஆக்கிவிட்டார்கள் என்பதை இந்த மீலாது விழாக்களும் மவ்லூது சபைகளும் தெள்ளத் தெளிவாகப் பறை சாற்றுகின்றன. மாற்று மதத்தினரை அடி பிசகாமல் அப்படியே பின்பற்றி நடக்க ஆரம்பித்து விட்டனர் முஸ்லிம்களும்.
     நபி صلى الله عليه وسلم அவர்கள் இந்த சமுதாயத்தின் வழிகேட்டைப்பற்றி இவ்வாறு கூறுகின்றார்கள்.

“நீங்கள் உங்கள் முன்னோர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் முழத்திற்கு முழம் பின்பற்றுவீர்கள். எதுவரை என்றால் அவர்கள் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் நீங்களும் அதனுள் நுழைவீர்கள்” என்று.அதற்கு நாங்கள் (நபித்தோழர்கள்) “அவர்கள் யகூதி, நஸரானிகளா? என்று கேட்டதற்கு, வேறு யார் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்: அபூஸயீதுல் குத்ரீ(ரலி) நூல்: முஸ்லிம்-இல்ம், புகாரி-இஃதிஸாம்.
  
   முஸ்லிம்கள் தாங்கள் நடத்தும் இந்த மீலாது விழாக்களில் மாற்று மதத்தினரையும் அழைத்து அவர்கள் இஸ்லாத்தைப் பற்றியும், நபி صلى الله عليه وسلم அவர்களைப் பற்றியும் ஏற்றிப் போற்றிப் பேசுவதை பெருமையாக எண்ணும் துரதிஷ்ட நிலையும் இன்று நாடு முழுதும் பரவிவிட்டது. நாங்கள் போடுவது வெற்றுக் கோஷங்கள்தான் -வீண் முழக்கங்கள்தான் என்பதை இது கொண்டு உறுதிபடுத்துகின்றனர்.
  
   உள்ளும் புறமும் ஒருங்கே சீராகச் செயல்படும் உண்மையாளர்கள் ஒரு போதும் இவ்வாறு நடக்க முடியாது; பேச முடியாது. மேடைப் பேச்சு, கற்பனைப் பேச்சு, நயவஞ்சகப் பேச்சு என்பதுபோல் பீலாது மேடைகளையும் ஆக்கி வருகிறது இந்த முஸ்லிம் சமுதாயம். இது வேதனைக்குரிய விஷயமா இல்லையா?

    அல்லாஹ்வும் அவனது ரஸூலும் காட்டித்தராது, மனித கற்பனைகளைக் கொண்டும், யூகங்களைக் கொண்டும் நல்லவைகயாகக் கருதப்பட்டு செயல்படுத்தும் காரியங்கள் அனைத்தும் இறுதியில் சமுதாயத்திற்கு கேடு விளைவிப்பவையாக அமையுமே அல்லாமல் சமுதாயத்திற்குப் பலன் தரும் செயல்களாக ஒரு போதும் அமையாது.
    
உண்மையில் நபி صلى الله عليه وسلم அவர்கள் மீது உறுதியான அன்புள்ளவர்கள், அவர்களை அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட உண்மைத் தூதர் என்று மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் இப்படிப்பட்ட வெற்றுச் சடங்குகளில் ஈடுபடமாட்டார்கள். ரபீஉல் அவ்வல் மாதம் மட்டும் மேடைகளை அமைத்துக் கற்பனைக் கவிதைகளான மவ்லூதுகளை ஓதுபவர்களாகவும் மீலாது மேடைகள் அமைத்து நுனி நாவில்  புகழ் பாடுபவர்களாகவும் இருக்க மாட்டார்கள்.
    
நபி صلى الله عليه وسلم அவர்களுக்குப் பிறகு மனிதர்களால் உருவாக்கப்பட்டவற்றை மார்க்கமாக ஒரு போதும் எடுத்துச் செயல்படுத்தமாட்டார்கள். மாறாக வருடம் 365 நாட்களும், நபி صلى الله عليه وسلم அவர்களைத் தமது வழிகாட்டியாக மனப்பூர்வமாக ஏற்று அவர்களின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றி, குர்ஆனைக் கொண்டும் மட்டும் நிலை நாட்டப்பட்டுள்ள காரியங்களை மட்டும் மார்க்கமாக ஏற்றுச் செயல்படுவார்கள். அப்படிப்பட்ட உண்மை முஸ்லிம்களாக நாம் அனைவரும் வாழ அல்லாஹ்வின் அருள் கிட்டுமாக!

Thanks to readislam.net