உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, November 8, 2013

துபையில் வியாழன் அன்று நடந்த ஷைஹ். S. கமாலுதீன் மதனி அவர்களின் மார்க்க விளக்க நிகழ்ச்சி

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

07.11.2013 துபையில் ஷைஹ். S. கமாலுதீன் மதனி அவர்களின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி துபை தமிழ் தஃவா குழு ஏற்பாட்டில் மிகச்சிறப்பாக நடந்தேறியது, அல்ஹம்துலில்லாஹ்.

இரவு 8.30 மணியளவில் துவங்கிய நிகழ்ச்சியில் ஷைஹ். கமாலுதீன் மதனி அவர்கள் கலந்து கொண்டு சுமார் 1 மணி நேரம் 'இஸ்லாத்தில் வணக்க வழிபாடுகள்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அதில் எத்தகைய வழிபாடுகள் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும், எவையெல்லாம் நிராகரிக்கப்படும் குர்ஆன் ஹதீஸிலிருந்தும், இஸ்லாமிய வரலாற்று பக்கங்களிலிருந்தும் ஆதாரங்களை கூறி உரையாற்றினார்.
 









 
 
பின்பு அரைமணி நேரம் கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமானோர் குடும்பத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இரவு சுமார் 10 மணியளவில் அனைத்தும் இனிதே நிறைவுற்றது.
 
பயானுக்குப்பின், தேரா துபையில் அமைந்துள்ள MTCT எனும் மதுக்கூர் தவ்ஹீத் மர்க்கஸில், MTCT சகோதரர்களுக்கு மட்டும் இரவு 10.30 மணிமுதல் 12 மணிவரை சிறப்புத் தர்பியா வகுப்பு நடைபெற்றது.
அதிரைஅமீன்
 

Tuesday, November 5, 2013

செயற்கைக்கோளுக்கு ஏன் தேங்காய் பூஜை?

 

 
ஊர்ப் பக்கத்தில் பொருள்களைத் தொலைத்தவர்கள் குறிசொல்பவர்களைத் தேடிச் செல்வார்கள். பொருள்களைத் தொலைத்ததைத் தவிர, குறிசொல்பவனிடமும் பணத்தைத் தொலைத்துவிட்டு, கையைப் பிசைந்து நிற்கும் நூற்றுக் கணக்கானோர் கதைகளை நாம் ஒவ்வொருவரும் கேட்டிருப்போம்.
தனிமனிதர்கள் இப்படிச் செய்தால் பரிதாபப்படலாம்; ஓர் அரசாங்கமே செய்தால் என்ன செய்வது? உத்தரப் பிரதேசத்தில் நம்முடைய தொல்லியல் துறை நடத்தும் தங்க வேட்டை அப்படித்தான் இருக்கிறது.
 
ஷோபன் சர்க்கார் என்ற சாமியார், “மன்னர் ராஜாராவ் ராம்பக்ஸ் சிங் என் கனவில் தோன்றினார். தம் கோட்டையில் 1,000 டன் தங்கத்தைப் புதைத்துவைத்துள்ளதாகக் கூறினார்” என்று மத்திய அமைச்சர் சரண் தாஸிடம் சொல்ல, நம்முடைய தொல்லியல் துறையினர் தங்கத்தைத் தேடி அங்கே பள்ளம் தோண்டிக்கொண்டிருக்கின்றனர்.
 
மூடநம்பிக்கை மட்டுமே காரணமா?
இதற்கெல்லாம் மூடநம்பிக்கைகளே காரணம் எனச் சொல்லி ஒரே வரியில் ஒதுக்கிவிட முடியாது. அறிவியலிலும் அறிவியல் தொழில்நுட்பத்திலும் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும், இந்தியச் சமூகம், அறிவியல் மனப்பான்மையில் இன்னமும் பின்தங்கியிருப்பதே காரணம்.
 
நாம் அறிவியல் அறிவில் முன்னேறியிருக்கிறோம். சரி... அறிவியல் மனப்பான்மையைப் பெற்றிருக்கிறோமா? ஏனென்றால், இரண்டும் வேறு வேறு. எந்த ஒரு நிகழ்வையும் உணர்ச்சிகள் அல்லது நம்பிக்கை அடிப்படையில் அல்லாமல், நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளின் வாயிலாகப் பார்ப்பதே அறிவியல் மனப்பான்மை. பொதுவாக, நம் சமூகத்தில் அறிவியல் மனப்பான்மை குறைவு என்றே தோன்றுகிறது.
 
விண்வெளி அறிவியலில் இந்தியா வியத்தகு முன்னேற்றத்தைப் பெற்றிருக்கிறது. ‘இஸ்ரோ’ஏவும் ஒவ்வொரு செயற்கைக்கோளும் இதற்கான சான்று. ஆனால், செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு முந்தைய நாள் இஸ்ரோ தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் திருப்பதி அல்லது காளஹஸ்திக்குச் செல்வதும், ஏவப்படவுள்ள செயற்கைக்கோளின் மாதிரியை வைத்து பூஜை செய்வதும் எதனுடைய முன்னேற்றத்துக்குச் சான்று? ‘இஸ்ரோ’அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் கோயில் செல்வதும் வழிபடுவதும் அவர்கள் உரிமை. ஆனால், செயற்கைக்கோள் மாதிரிக்குத் தேங்காய் உடைத்து பூஜை செய்வதை உரிமை என்று சொல்ல முடியாது அல்லவா? கோடிக் கணக்கான மக்களுக்கு இத்தகைய செய்திகள் சென்றடையும்போது, சமூகத்தில் அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
 
சட்டம் சொல்வதென்ன?
நாட்டின் குடிமக்களின் அடிப்படைக் கடமைகள்குறித்து வலியுறுத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 51-வது பிரிவு, “மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கப் பாடுபடுவதும் பிரதான கடமை” எனக் கூறுகிறது. ஆனால், அது பாடத்திட்டங்களில்கூட இன்னும் தொடங்கவில்லை. குறைந்தபட்சம், அதுகுறித்து நாம் இன்னும் யோசிக்கக்கூடத் தொடங்கவில்லை. அதன் விளைவைத்தான் சாமியார்களின் கனவை நம்பித் தங்கம் தேடுவோரிடம் பார்க்கிறோம்!
 
வி. தேவதாசன் - தொடர்புக்கு: devadasan1973@gmail.com
 
நன்றி
Return to frontpage
என்றென்றும் அன்புடன்,
நூர்தீன்

Monday, November 4, 2013

இவரது பெயர் நபிலா

இந்த பெண் யார் என்று தெரிகிறதா..மலாலா என்று என்று தினமும் செய்திகளை வெளியிடும் எந்த ஒரு அமெரிக்க சார்பு ஊடகங்களாவது இவரை பற்றி செய்திகளை வெளியிட்டிருக்குமா?இவரது பெயர் நபிலா பாகிஸ்தானின் வர்ஜிச்தான் மாகாணத்தை சேர்ந்தவர்.அமெரிக்காவின் கோரமான தாக்குதலுக்கு எதிராக விவரித்தவர். . மலாலவை போலத்தான்..ஆனால் என்ன மலாலாவை தூக்கி பிடிக்கும் எந்த ஒரு மீடியாவும் இவரை பற்றிய எந்த ஒரு செய்தியையும் வெளியிடுவதே கிடையாது..காரணம் மலாலாவின் குற்றசாட்டுக்கள் அனைத்தும் அமெரிக்க எதிரியான தாலிபான்களை பற்றியது.அதில் கூட பல சர்சைகள் உள்ளன இருந்தும் அதை பற்றி எந்த ஒரு ஊடகமும் கண்டுகொள்வதில்லை...ஆனால் இவரின் குற்றசாட்டுக்கள் அமெரிக்காவின் கோரமான தாக்குதலால் கொல்லப்பட்ட அமெரிக்காவுக்கு எதிரான செய்திகள்..அக்டோபர் 2012 ஆம் ஆண்டு ஊடகங்களில் வெளிவந்த செய்தி அமெரிக்காவின் ஆளில்லா விமாங்கள் மூலம் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது .ஆனால் இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் மூன்று பேர் பெண்கள் .இதில் இவரது குடும்பத்தினரும் அடக்கம் ..வழக்கம் போல எந்த ஒரு ஊடகமும் இந்த செய்தியை வெளியிடவே இல்லை..ஊடகங்கள் என்றைக்கும் அவர்களின் எஜமானனுக்கு ஆதரவான செய்திகளை மட்டும் தான் வெளியிடும்..இது தான் இன்று நடந்து வருகிறது..உலகின் பெருமான்மை ஊடகங்களை கட்டுப்படுத்துவது அமேரிக்கா தான்..அப்படி இருக்கும் போது எப்படி இந்த ஊடகங்கள் அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான செய்திகளை மக்கள் மன்றத்தில் வெளியிடும்..

இதனால் தான் அமெரிக்க ஆதரவு ஊடகங்கள் தலிபான்களை பென்னடிமைவாதிகள் , தீவிராவதிகள் என்ற பொய்யை மீண்டும் மீண்டும் வெளியிட்டுவருகிரார்கள்..அப்பொழுது தானே மக்களும் தலிபான்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்ற மனநிலைக்கு வருவார்கள்..அங்கு கொல்லப்பட்ட இலட்சக்கணகான பெண்கள் குழந்தைகளை பற்றி கொஞ்சம் கூட வருத்தப்பட மாட்டார்கள்..இது தான் இன்று நடந்து வரும் எதார்த்த உண்மையும் கூட..இதை பற்றியெல்லாம் நாம் என்றைக்காவது சிந்தித்து இருப்போமா? இல்லை என்பதே உண்மை..ஊடகங்கள் நம்மை சிந்திக்கவும் விடப்போவதில்லை என்பதே உண்மையும் கூட.உலகின் மிகப்பெரிய முட்டாள் யார் என்றால் ஊடகங்களில் வரும் செய்திகளை அப்படியே எந்த வித சிந்தனையும் இல்லாமலா நம்புபவன் தான்..
-இரா.சேக்தாவூது ரில்வான்.

தஃவா பயிற்சி தொடர் வகுப்பு அறிவிப்பு (Dawah Training Course)

அன்பான சகோதரர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும்!

நமது ராக்காஹ் இஸ்லாமிய மையத்தில் பொறியாளர் ஜக்கரியா அவர்களால் நடத்தப்படுகின்ற "தஃவா பயிற்சி தொடர் வகுப்பு" இன்ஷா அள்ளாஹ் இனி ஹிஜ்ரி மாதங்களின் இரண்டாவது வாரம் செவ்வாய் கிழமையில் தொடர்ந்து நடத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏனைய வாரங்களின் செவ்வாய் கிழமைகளில் அல்-குர்ஆன் தஜ்வீது மற்றும் தப்ஸீர் வகுப்பு ராக்காஹ் இஸ்லாமிய மையத்திலும் அனைத்துத் திங்கள் கிழமைகளிலும் சாமி துகைர் ஹாலில் அகீதத்துத் தஹாவிய்யா தொடர் வகுப்பும் மௌலவி முஜாஹித் அவர்களால் நடத்தப்படுகிறது.

சகோதரர்கள் அனைவரும் மேற்குறிப்பிட்ட அனைத்து வகுப்புகளிலும் பங்குப் பெற்று பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
ராக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையம் - தமிழ் மற்றும் சிங்களப் பிரிவு
Rakah Islamic Cultural Center - Tamil & Sinhala language section
Islam_Design_4

படிக்கவும்...பகிரவும்...


Thanks to: Engr. Sulthan

07.11.2013 துபையில் ஷைஹ். S. கமாலுதீன் மதனி சொற்பொழிவு

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

இன்ஷா அல்லாஹ்,
நாள் : 
 
07.11.2013 வியாழன் பின்னேரம்

நேரம் : 
 
இரவு 8 மணி

இடம் :
 
அல் மனார் சென்டர்
அல் பரஹா, 
தேரா, துபை
 
சிறப்புரை :

தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள

ஷைஹ். S. கமாலுதீன் மதனி அவர்கள்

மேலும் விபரங்களுக்கு
055 2829759
050 5275373
056 7371442

 

Sunday, November 3, 2013

சென்ற வார இஸ்லாமிய நிகழ்ச்சிகள்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

துபை நிகழ்ச்சி

அல்லாஹ்வின் அருளால் கடந்த 31.10.2013 வியாழன் பின்னேரம் இஷாவுக்கு பின் தேரா, துபையில் அமைந்துள்ள மதுக்கூர் தவ்ஹீத் மர்க்கஸில் தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள சகோதரர் A.G. முஹம்மது அவர்கள் 'அழைப்புப் பணியின் அவசியம்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர் தனதுரையில், அழைப்புப்பணி என்றால் என்ன? அது யார் மீதெல்லாம் கடமை? அதனை எங்கிருந்து துவங்க வேண்டுமென சிறப்புடன் எடுத்துரைத்தார்கள்.
 
 




 
 

அதேபோல், தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள ஷைஹ். S. கமாலுதீன் மதனி அவர்கள் 'மரண வேதனை' என்ற தலைப்பில் மரணத்தை நினைவூட்டி, ஒரு மனிதன் தான் பிறக்கும் போதே தன்னுடன் கொண்டு வருவது மரணத்தை மட்டுமே, அது இறுதியாக எவ்வாறு, எப்படி நிகழும்? ஸகராத்து நிலையில் மனிதன் படும் மரண வேதனை, ஓர் முஃமீனின் மரணம் எவ்வாறு அமைய வேண்டும் என குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கினார்கள்.
 
முஸஃபா - பனியாஸ் நிகழ்ச்சி

கடந்த வெள்ளி பின்னேரம் 01.11.2013 இஷாவுக்குப்பின் அபுதாபி, முஸஃபா, பனியாஸ், சைனா கேம்ப் பகுதியில் அமைந்துள்ள MBM கேம்ப் பள்ளி வளாகத்தில் இஸ்லாமிய அறவுரை வகுப்புக்கள் இனிதே நடந்தேறின. நிகழ்ச்சியின் ஆரம்பமாக, A.G. முஹம்மது அவர்கள் 'பிரார்த்தனை' என்ற தலைப்பில் விளக்கவுரை நிகழ்த்தினார்கள்.





 

தொடர்ந்து உரையாற்றிய ஷைஹ். S. கமாலுதீன் மதனி அவர்கள் 'நேர்வழி எனும் அருட்கொடை' என்ற தலைப்பில் சிறப்பானதொரு விளக்கத்தை வழங்கினார்கள்.

இவ்விரு நிகழ்வுகளிலும் ஏராளமான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து பயன்பெற்றனர்.

அபுதாபியிலிருந்து
அதிரைஅமீன்