உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Saturday, August 20, 2011

இலங்கை முஹம்மது நாஸர் அவர்களின் சிறப்புப் பேட்டி

அளவற்ற அருளாளனும்,  நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...





இலங்கை ஏகத்துவ தஃவா களம் குறித்தும்,

மூடிமறைக்கப்பட்ட, உலகின் கவனத்திற்கு இன்னும் கொண்டு வரப்படாத இலங்கை முஸ்லீம்களின் முள்ளிவாய்க்கால்கள் குறித்தும் மவ்லவி இலங்கை முஹம்மது நாஸர் அவர்கள் நமது வலைதளத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டி.

இன்று உலகின் பலமுனைகளிலிருந்தும் ஈழத்தமிழர்களுக்காக வலிமையான குரல் எழுப்பப்படுகின்றன,  எழுப்பிக்கொள்ளட்டும்


ஆனால்

ஈழத்தமிழ் தீவிரவாதிகளால், புலிகளால் படுகொலை செய்யப்பட்டும், சொத்துக்கள் சூறையாடப்பட்டும், சொந்த மண்ணிலிருந்தும் விரட்டி அடிக்கப்பட்ட இலங்கை முஸ்லீம்களோ சுமார் 20 ஆண்டுகளாக இன்னும் உள்நாட்டு அகதி முகாம்களில், இவர்களுக்காக ஓர் ஈனக்குரல் கூட சர்வதேச சமூகம் மத்தியில் எழும்பவில்லையே ஏன்?

சுண்ணாம்பு நியாயம் தேடியோரால் தடம் தெரியாமல் அழிக்கப்பட்ட முஸ்லீம் கிராமங்கள் எண்ணிலடங்கா!

ஆயுதம் தூக்காத, போரிடாத, தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை முஸ்லீம்களின் அவல நிலையை உலகுக்கு உணர்த்திட ஓர் சிறு பேட்டி, அல்ல! அல்ல!! ஆறாத காயங்கள் நிறைந்த ஓர் கலந்துரையாடல்!!!

குறிப்பு : பேட்டியின் இடையில் மவ்லவி அன்சார் தப்லீகி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ள இடத்தில் மவ்லவி அப்துல் ஹமீது என்று திருத்திக்கொள்க!

AIM வலைதளத்திற்காக
அபுதாபியிலிருந்து
அதிரை அமீன


வேண்டுகோள் :

வலைத்தள நேயர்களே! குறிப்பாக இலங்கை முஸ்லீம்களே, இது தொடர்பான உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வாருங்கள் என அன்புடன் வேண்டுகிறோம்.

புலிகள், ராணுவம், அரசுத் தரப்பு என அனைத்து அநியாயங்களையும் உலகிற்கு அறியத் தாருங்கள்.

அல்லாஹ்விற்கு பயந்து உண்மையை மட்டும் பதியுங்கள் என வேண்டுகிறோம்.

2 comments:

  1. முஸ்லீம்கள் வடக்கில் இருந்து விரட்டபட்டார்கள் -அதை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒத்துக்கொண்டுள்ளார் நாங்கள் எங்கள் காலத்தில் செய்த மிகப்பெரும் தவறு என்று.
    ஆனால் காத்தான்குடியில் தொழுகையில் இருந்த பலர் கொல்லப்பட்டார்கள்- அதற்கு காரணமான 'முன்னாள் விடுதலை புலியின்' கிழக்கு மாகாண பொருப்பாளார் கருணா- இப்போழுது இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர் பதவியில் சுகமாக உள்ளார்.

    இது போன்ற என்னற்ற சம்பவங்கள் 'கிழக்கில்' நடந்துள்ளது, எல்லவற்றிற்கும் காரணமானவர்கள் ' கிழக்கு' மாகாண அரசியலில் ,இலங்கை அரசியிலிலும் பொறுப்பில் உள்ளார்கள்.(கருணா, இன்னும் சிலர்...)

    இந்த பாவிகளுக்கு இலங்கை அரசு , அனுசரனையாக உள்ளது.

    விடுதலை புலிகள் தோல்வியே சந்திப்பதற்கு பல வருடங்கள் முன்னால் கூட யாழ்பாணம் இலங்கை அரசு படைவசம் தான் இருந்தது, ஆனால் விடுதலைபுலிகளால் துரத்தப்பட்ட முஸ்லிம்கள் மீள்குடியமர்த்தபடவில்லை.

    அன்று முஸ்லிம்கள் துன்பம்/துயரம் பட்ட போது , தாயக 'தமிழ் நாட்டில்' குரல் கொடுக்க முஸ்லிம் அமைப்புகள் களம் இறங்கவில்லை.

    இன்று ஈழ தமிழர்களுக்கு, குரல் கொடுக்க 'தமிழ் நாட்டில்' தமிழர் அமைப்புகள் உள்ளது.

    அப்படி என்ன தான் ' ஈழ தமிழர்களுக்கும் , முஸ்லிம்களுக்கும் பிர்ச்சனை?
    தமிழ் இந்து, தமிழ் கிருஸ்துவர்கள், தன்னை ஈழ தமிழர்கள் என்று சொல்லும்போது.
    ஏன் தமிழ் முஸ்லிம் கள் மட்டும், நாங்கள் தமிழர் இல்லை, முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொள்ளவேண்டும்.

    இங்கு தமிழ் நாட்டில் ' தமிழர்' என்ற பேணரில் அனைவரும் அழைக்கப்படும் போது. இலங்கையில் ஏன் பிரிவிணை?

    ReplyDelete
  2. முஸ்லிம்கள் மீது நடந்த கொடுமைகளில் சரிபாதி புலிகள் செய்தது.
    மீதி சரிபாதி அரசு சிங்களபடைகள் செய்துவிட்டு, புலிகள் மீது போட்டது.
    தமிழ் மொழிபேசும் மக்களை பிரிப்பதற்காக, அரசு தரப்பு செய்த சதியின் விளைவு தான்.
    இரு தரப்புகளாலும் முஸ்லிம்கள் பலிகடா ஆக்கப்பட்டார்கள் என்பதே உண்மை

    ஒரே மொழிபேசும் மக்களிடையே எப்படி பிரிவினை வந்தது!!!
    கிருத்துவர்களும், இந்துகளும் இணக்கமாக புலிகளுக்கு ஆதரவாக இருக்கும் போது.
    முஸ்லிம்களும் ஆதரவு நிலை எடுத்துவிட்டால், நாட்டின் பிரிவினை தவிர்க முடியாதாகிவிடும் என்பதால், அரசு தரப்பு திட்டம் போட்டு- இந்தியாவில் வெள்ளக்கார அரசு செய்தது போல்.அங்கும் செய்துள்ளார்களோ என்று எண்ண தோன்றுகின்றது

    துரோகம் இழைக்கப்பட்டு, இழப்புகளை சந்தித்தோம் என்பதற்காக. (இழுப்புகளின் தாக்கம் இன்றும் தொடருகின்றது.)

    தற்போது நிர்கதியாகி பாதிப்புக்கு உள்ளாகி யிருக்கும் 'ஈழ' மக்களின் உரிமைகுரலை எதிர்கவேண்டியதில்லை.
    நடுநிலை பேணுவோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம்/நிம்மதியான வாழ்வு கிடைக்கவேண்டும் , அது முஸ்லிம்,இந்து, கிருத்துவராக இருந்தாலும் சரியே

    ReplyDelete