உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, June 16, 2015

அதிரையில் ADT வழங்கும் புனித ரமலான் மாத தொடர் பயான் நிகழ்ச்சிகள்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

கடந்த வருடங்களைப் போல் இந்த வருடமும் புனிதமிகு ரமலானுடைய இரவுகளிலும், பகலிலும் ஈமானுக்கு வலுசேர்க்கும் பல பயனுள்ள இஸ்லாமிய மார்க்க விளக்க வகுப்புக்களை குர்ஆன் ஹதீஸ் ஒளியில் நடத்திட அதிரை தாருத் தவ்ஹீத் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது, அல்ஹம்துலில்லாஹ்.

இன்ஷா அல்லாஹ், இந்த வருட தொடர் மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சிகள் கீழ்க்காணும் வகையில் நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் வழமைபோல் தவறாது கலந்து கொண்டு நற்பயன் அடைய வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.

இன்ஷா அல்லாஹ், அதிரையில் ரமலான் பிறை அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து தினசரி தொடர் பயான் நிகழ்ச்சிகள் துவங்கும்.

ஆண்களுக்கு

நேரம்: தினமும் இரவு 10 மணிமுதல் 11 வரை (இரவுத் தொழுகைக்குப்பின்)

இடம்: EPMS பள்ளிக்கூடம் அருகில்

நடுத்தெரு, அதிரை
 
குறிப்பு: 
இஷா தொழுகையை தொடர்ந்து ரமலான் 30 நாட்களும் CMP லேன் பகுதியில் அமைந்துள்ள ALM பள்ளிக்கூட மஸ்ஜிதில் 8+3 என்ற சுன்னத்தின் அடிப்படையில் இரவுத் தொழுகை நடைபெறும்.

********************************************************
பெண்களுக்கு

நேரம்: தினமும் காலை 10.45 முதல் பகல் 12 மணிவரை

இடம்: இஸ்லாமிய பயிற்சி மையம் (ITC)

பிலால் நகர், அதிரை.

குறிப்பு: 
பெண்களுக்கு, இஷா தொழுகையை தொடர்ந்து ரமலான் 30 நாட்களும் பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் 8+3 என்ற சுன்னத்தின் அடிப்படையில் இரவுத் தொழுகை நடைபெறும்.

அனைவரையும் அன்புடன் அழைக்கிறது
அதிரை தாருத் தவ்ஹீத்


Saturday, June 6, 2015

'கணினித்தமிழ் அறிஞர்' ஜமீல் அவர்களின் இல்லத் திருமண விழாவில் 'நபிமணியும், நகைச்சுவையும்' நூல் வெளியீடு !

 
பிரபல இணையதள ஆசிரியரும், இணையத்தோடு தொடர்புடையோர்களால் 'கணினித்தமிழ் அறிஞர்' என அன்புடன் அழைக்கப்படுபவருமாகிய முஹம்மது ஜமீல் M. ஸாலிஹ் அவர்களின் இல்லத்திருமணம் இன்று காலை பட்டுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள லாவண்யா திருமண மஹாலில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முஹம்மது யூஸுப் அவர்கள் தலைமை வகித்தார். இதில் பொறியாளர் அப்துர் ரஹீம் மணமகனுக்கும், நயீமா மணமகளுக்கும் திருமணம் நடைபெற்றது. இதில் ஏகத்துவ அழைப்பாளர் அப்துல் ஹமீத் அவர்கள் மண உரை (குத்பா) நிகழ்த்த, மணமகளின் தந்தை முஹம்மது இக்பால் M. ஸாலிஹ் வலீயாக இருந்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

நிகழ்ச்சியின் முன்னதாக அப்துல் பாசித் கிராத் வாசித்தார். நசுருதீன் M. ஸாலிஹ் வரவேற்புரை ஆற்றி நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொகுத்து வழங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், 'பிறை மேடை' ஆசிரியருமாகிய எம். அப்துர் ரஹ்மான், சமூக நீதி அறக்கட்டளை நிறுவனரும், 'சமூக நீதி முரசு' ஆசிரியருமாகிய சிஎம்என் சலீம், சென்னை காயிதே மில்லத் கல்லூரி பேராசிரியர் ஜே. ஹாஜா கனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

விழாவில் 'கவிஞர்' சபீர் அஹமத் அபூ ஷாருக் அவர்கள் 'அதிரை நிருபர்' வலைத்தளம் குறித்து அறிமுக கவிதை வாசித்தார். இதை தொடர்ந்து 'எழுத்தறிஞர்' அதிரை அஹ்மத் அவர்கள் எழுதிய வாழ்த்து கவிதையை 'எழுத்தறிஞர்' இப்ராஹீம் அன்சாரி வாசித்து வாழ்த்துரை வழங்கினார்.

முன்னதாக பிரபல சமூக ஆர்வலரும், அதிரை நிருபர் வலைத்தளத்தில் 'நபிமணியும், நகைச்சுவையும்' என்ற தொடரை எழுதி பலரின் பாராட்டை பெற்றவருமாகிய முஹம்மது இக்பால் M. ஸாலிஹ் அவர்கள் எழுதிய ''நபிமணியும், நகைச்சுவையும்' என்ற நூல் வெளியிடப்பட்டது. அதிரை நிருபர் பதிப்பகத்தின் முதல் வெளியீடாக எழுத்தறிஞர் இப்ராஹீம் அன்சாரி அவர்கள் எழுதிய 'மனு நீதி மனிதகுலத்திற்கு நீதியா ? என்ற நூல் வெளியிடப்பட்டது. இதைதொடர்ந்து இரண்டாவது வெளியீடாக இந்த நூல் வெளியிடப்படுகிறது.

இந்த நூலை 'எழுத்தறிஞர்' அதிரை அஹ்மத் வெளியிட, முதல் பிரதியை பிறை மேடை' ஆசிரியர் எம். அப்துர் ரஹ்மான், சமூக நீதி அறக்கட்டளை நிறுவனரும், 'சமூக நீதி முரசு' ஆசிரியருமாகிய சிஎம்என் சலீம், சென்னை காயிதே மில்லத் கல்லூரி பேராசிரியர் ஜே. ஹாஜா கனி ஆகியோர் பெற்றனர். இதன் பின்னர் விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் இந்த நூல் அன்பளிப்பு செய்யப்பட்டது.

விழா முடிவில் 'கணினித்தமிழ் அறிஞர்' முஹம்மது ஜமீல் M. ஸாலிஹ் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் உறவினர்கள், நண்பர்கள், இணையதள பங்களிப்பாளர்கள், ஊர் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். லுஹர் தொழுகை மண்டபத்தின் முதல் மாடியில் ஏற்பாடு செய்யப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட பெண்கள் உட்பட அனைவருக்கும் வலீமா விருந்தளித்து உபசரிக்கப்பட்டனர்.


Monday, June 1, 2015

அமீரகத்தில் காணாமல் போன அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு...?



பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த கடிதத்தின் நோக்கம் யாருடைய மதையும் புண்பட செய்வது அல்ல எனது மற்றும் என்னை போன்றோரின் மனவேதனையை அதிரைவாசிகள் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் மேலும் நடந்து விட்ட தவறுகள் இனிவரும் காலங்களில் சரி செய்யப்படவேண்டுமென்ற நோக்கில் இது எழுதப்படுகிறது.

அமீரகத்தில் காணாமல் போன அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு...?

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'  நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள். நூல்: புஹாரி 7138.

அதிரை வாழ் அனைத்து தரப்பு மக்கள் மற்றும் அமீரகம் வாழ் அதிரைவாசிகளின் ஒற்றுமை, பாதுகாப்பு மற்றும் சமூக அரசியல் நலன்களின் மேன்மைக்காக பாடுபடுவதும். அதிரை முஸ்லிம் சமூகத்தில் நிலவுகிற கருத்து வேறுபாடுகளை களைந்திடவும், ஒற்றுமையை வலியுறுத்தியும், மனிதநேயம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உயரிய குறிக்கோள்கள் மேன்மையுடன் வெற்றியடைய அல்லாஹ்வின் உதவியோடும், தூய எண்ணங்களோடும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதே AAMF-ன் தலையாய நோக்கமாக கொண்டு கடந்த 30.09.2011 அன்று பிரமாண்டமாக தொடங்கப்பட்டது அனைத்து முஹல்லா கூட்டமைப்பு.

கடைசியாக கடந்த 27.12.2013 அன்று துணைத்தலைவர் முஹம்மது இஸ்மாயில் அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தோடு அனைத்து முஹல்லாவிற்கு அறிவிக்கப்படாத மூடுவிழா செய்யப்பட்டுள்ளது. கடந்த 17 மாதங்களாக எந்த ஒரு செயல்பாடுமில்லாமல் செயல் இழந்து கிடப்பதன் காரணம் என்ன?

17 மாதங்களாக செயல்பாடு இழந்து காணப்பட்டதால் கூட்டமைப்பிலிருந்து அமீரக கடற்கரை தெரு முஹல்லா நிர்வாகம் அனைத்து முஹல்லா நிர்வாகத்திலிருந்து வெளியேறுவதாக அறிவிப்பு செய்து வெளியேறிய உடனானவது விழித்திருக்க வேண்டும் ஆனால் அப்படி எதுவும் அதிசயம் நடக்காமல் போனதன் மர்மம் என்ன?.

இதன் நிர்வாகிகள் செயல்பாடுகள் இல்லாமல் இருப்பதன் நோக்கம் தான் என்ன?

இதில் அரசியல் பின்னனி எதுவும் உண்டா? அரசியல்வாதிகளுக்காக முடக்கப்பட்டதா?

நிர்வாகிகளின் இயலாமையா? ஆம் எனில் அடுத்தோருக்கு வழிவிடாமல் இன்னும் ஏன் குறுக்கே படுத்திருக்க வேண்டும்?

தனி நபர்கள் மத்தியில் ஏற்படும் அற்ப கருத்து வேறுபாடுகள் ஏதும் காரணமா?

வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதை மாதிரி அவரவரின் பாழாய்போன தெரு பாசம் மீண்டும் உச்சத்தலையில் யாருக்காவது ஏறிக்கொண்டதா?

வேறு ஏதாவது வெளியில் சொல்ல முடியாமல், வெட்கப்படும்படியான காரணங்கள் ஏதுமிருக்கின்றதா?    

இந்த நிலை நீடித்தால் விரைவில் அனைத்து முஹல்லாக்களும் இதிலிருந்து வெளியேறும் நிலை தான் வரும்மென்பதில் சந்தேகம் கிடையாது. மீண்டும் இப்படி ஒரு உன்னதமான கூட்டை கட்டுவதென்பது சாத்தியப்படாமலேயே போகலாம்.

எனவே, அமீரக அனைத்து மஹல்லா நிர்வாகிகளின் கவனத்திற்கு அல்லாஹ்வுடைய கலாமை கொண்டும் அவனது ரசூல் (ஸல்) அவர்களின் வழிமுறையை கொண்டும் இறுதியாக எச்சரிக்க விரும்புகிறோம்.

இன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள்; (அவன்) தூதருக்கும் வழிபடுங்கள்; எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்; (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், (நம் கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அல்குர்ஆன்: 5:92.

(வீண் விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்) அவர்களுடைய (செய்கைகளின்) கணக்கில் பயபக்தியுடையவர்களுக்கு யாதொரு பொறுப்பும் இல்லை; எனினும் அவர்கள் பயபக்தியுடையவர்களாகும் பொருட்டு, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்வது பொறுப்பாகும். அல்குர்ஆன்: 6:69.

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஏதேனும் பதவி வழங்கக் கூடாதா?" என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், தமது கையால் எனது தோள்மீது அடித்துவிட்டு, "அபூதர்! நீர் பலவீனமானவர். அது (பதவி) ஒரு கையடைப் பொருளாகும். அதை முறைப்படி அடைந்து, அதில் தமக்குரிய பொறுப்புகளை நிறைவேற்றியவரைத் தவிர மற்றவர்களுக்கு அது (மறுமையில்) இழிவும் துயரமும் ஆகும்" என்று கூறினார்கள். நூல்: முஸ்லீம் 3729.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.  நபி(ஸல்) அவர்கள் மிம்பர் மீது ஏறினார்கள். தம் தோள் புஜத்தின் மீது மேலாடையைச் சுற்றிக் கொண்டு, கருநிறத் துணியால் தலையில் கட்டுப் போட்டுக் கொண்டு அவர்கள் அமர்ந்த கடைசி அமர்வாகும் அது. பிறகு அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றி, 'மக்களே என்னருகே வாருங்கள்" என்றதும் மக்கள்அவர்களை நோக்கி விரைந்து நகர்ந்தனர். பிறகு 'அம்மா பஃது' எனக் கூறினார்கள். அதன் பின்னர் 'மற்ற மக்கள் பெருகும்போது, இது அன்ஸார்கள் எண்ணிக்கையில் குறைவார்கள். முஹம்மதுடைய சமுதாயத்தவர்களில் பொறுப்புக்கு வருகிறவர் யாருக்காவது நன்மையோ, தீமையோ செய்ய சக்தி பெற்றால் நல்லவர்களிடமிருந்து (நல்லவதை) ஏற்று அவர்களில் கெட்டவர்களை அலட்சியம் செய்து விடவும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புஹாரி 927.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு கிராமவாசியிடம்), 'நம்பகத்தன்மை பாழ்படுத்தப்பட்டால் மறுமைநாளை நீ எதிர்பார்க்கலாம்.' என்று கூறினார்கள். அவர் 'இறைத்தூதர் அவர்களே! அது எவ்வாறு பாழ்ப்படுத்தப்படும்?' என்று கேட்டதற்கு '(ஆட்சியதிகாரம், நீதி நிர்வாகம் போன்ற) எந்தப் பொறுப்பும் அதற்கத் தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்படும்போது மறுமை நாளை எதிர்ப்பார்த்துக் கொள்' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். நூல்: புஹாரி 6496.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'  நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள். நூல்: புஹாரி 7138.

சிந்திக்கும் மனிதர்களுக்கு இவையே போதுமானது.

இன்ஷா அல்லாஹ், அதிரை அனைத்து முஹல்லாவின் அமீரக கிளை மீண்டும் விரைவில் கூடும் என்ற நம்பிக்கையுடனும், இயலாதோர் இளையோருக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொள்வர் என்ற நன்நம்பிக்கை கொண்டவர்களாக நிறைவு செய்கின்றோம்.

மன வேதனையோடு

என்றும் அன்புடன்
K.M.N. முகமது மாலிக்
அமீரக அனைத்து முஹல்லாவின் தாஜுல் இஸ்லாம் சங்க உறுப்பினர்
என் அலைபேசி : 0097150 -7914780

ADT வழங்கும் தொடர் தாவா பயிற்சி! வரும் வெள்ளி 05.06.2015ல் நடைபெறும்!! அனைவரும் வருக!!!

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்


கடந்த இரு வாரங்களாக அதிரை தாருத் தவ்ஹீத் ஏற்பாட்டில், அதிரை பிலால் நகரில் அமைந்துள்ள தர்பியா மையத்தில் சென்னை மஸ்ஜிதுல் முஃமீன் தாவா குழுவைச் சேர்ந்த சகோதரர் செங்கிஸ்கான் அவர்கள் 'தாவா ஏன்? எப்படி? என்ற தலைப்பிலும், சகோதரர் அப்துல் ஹமீது அவர்கள் 'தாவா செய்ய நம்மை நாமே தயார் செய்து கொள்வது எவ்வாறு? என்ற தலைப்பிலும் இளைஞர்கள் மற்றும் தாவா ஆர்வலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

சென்ற வாரத்தின் தொடர்ச்சியாக, வரும் வெள்ளிக்கிழமை 05.06.2015 அன்றும் மஃரிப் தொழுகையை தொடர்ந்து சகோதரர் அப்துல் ஹமீது அவர்களின் பயிற்சி வகுப்புக்கள் தொடரவுள்ளன. இந்த பயிற்சி களத்திற்கு வரும் சகோதரர்கள் மறவாமல் தங்களுடன் தமிழாக்க குர்ஆன் பிரதி ஒன்றையும் குறிப்பெடுக்க ஏதுவாக நோட்டு புத்தகம் ஒன்றையும் தங்களுடன் எடுத்து வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

கடந்த வாரத்தை போன்றே வரும் வெள்ளிக்கிழமை 05.06.2015 அன்றும் கீழ்க்காணும் வகையில் ஏகத்துவ அழைப்பாளர் அப்துல் ஹமீது அவர்களின் நிகழ்ச்சிகள் நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.

1.    ALM ஸ்கூல் ஜூம்ஆ உரை
2.    பிலால் நகரில் அஸருக்குப் பின் பெண்களுக்கான பயான்
3.    மஃரிப் தொழுகைக்குப் பின் பிலால் நகரில் 'தஃவா பயிற்சி வகுப்பு'

கடந்த வாரம் நிகழ்ந்த தாவா பயிற்சி வகுப்பின் புகைப்படங்கள்



இம்மை மறுமைக்கு நன்மை சேர்க்கும் இதுபோன்ற பயனுள்ள பயிற்சிகளில் அவசியம் கலந்து கொள்ள வேண்டுமாய் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.

அதிரை தாருத் தவ்ஹீத்


Sunday, May 31, 2015

கண்காட்சியில் கவர்ந்திழுக்கும் அதிரை வரலாறு !

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பட்டுக்கோட்டை டிவிசன் சார்பில் புதுமனைத்தெரு சித்திக் பள்ளி அருகில் நடைபெறும் வரலாற்று கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அதிரை குறித்த அபூர்வ வரலாற்று தகவல்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் ஒவ்வொன்றாக பார்த்து வியந்து வருகின்றனர்.

இதோ வாசகர்களுக்காக கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அதிரை குறித்த அறிய தகவல்கள்:

Wednesday, May 27, 2015

ADT சார்பாக 29.05.2015 வெள்ளியன்று அதிரையில் தாவா பயிற்சி! இளைஞர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு அழைப்பு!!

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்


சென்னை மாநகரில் மஸ்ஜிதுல் முஃமீன் தாவா குழுவின் சார்பாக எண்ணற்ற தாவா அழைப்புகள், திருக்குர்ஆனை பரப்புதல், காது மற்றும் வாய் பேச இயலாதோருக்கு சிறப்பு தாவா நிகழ்ச்சிகள் என்றெல்லாம் நடத்தி மாற்றுமத சகோதரர்கள் மத்தியில் இஸ்லாம் குறித்த நல்லெண்ண வெளிச்சத்தை ஏற்றி வருவதை அறிந்திருப்பீர்கள்.



அதனடிப்படையில் கடந்த (22.05.2015) வெள்ளியன்று சகோதரர் செங்கிஸ்கான் அவர்கள் கலந்து கொண்டு அதிரை தாருத் தவ்ஹீதின் பிலால் நகர் மர்கஸில் சிறப்பு தாவா வகுப்பை நடத்தினார்கள். இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், மேலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என கருத்து மேலோங்கியதன் தொடர்ச்சியாக இந்த வாரம் 29.05.2015 வெள்ளியன்று மஸ்ஜிதுல் முஃமீன் தாவா குழுவின் முக்கிய அழைப்பாளர்களில் ஒருவரான சகோதரர் அப்துல் ஹமீது அவர்களை கொண்டு கீழ்க்காணும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன இன்ஷா அல்லாஹ்.

அழைப்பாளர் அப்துல் ஹமீது அவர்களின் 29.05.2015 வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி நிரல்

1. ALM பள்ளிகூட பள்ளிவாசலில் ஜூம்ஆ உரை

2. அஸருக்குப்பின் பிலால் நகர் தர்பியா சென்டரில் பெண்களுக்காக வாராந்திர பயான்

3. மஃரிப் தொழுகையை தொடர்ந்து, தாவா என்றால் என்ன? ஏன் தாவா செய்ய வேண்டும்? எப்படி தாவா செய்ய வேண்டும்? என்ற பொருளின் அடிப்படையில் தாவா பயிற்சி ADTயின் பிலால் நகர் தர்பியா சென்டரில் நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.

தாவா ஆர்வலர்கள், இளைஞர்கள், நண்பர்கள் குழு என அனைவரும் இந்நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்து பயனடைய வேண்டுமாய் அன்புடன் அழைக்கிறது.

அதிரை தாருத் தவ்ஹீத்