உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Saturday, May 21, 2016

அதிரையில் ADT நடத்தும் கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் !


இவ்வருட கோடைக்கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் வழமை போல் எதிர்வரும் 21.05.2016 முதல் 30.05.2016 வரை தினமும் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை அதிரை CMP லேன் பகுதியில் அமைந்துள்ள AL மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தகுதி வாய்ந்த ஆலிமாக்களை கொண்டு நடைபெறவுள்ளது.

விண்ணப்பப் படிவங்கள் பிலால் நகர் தர்பியா சென்டரிலும், நாளை காலையில் முகாம் நடைபெறும் AL மெட்ரிக் பள்ளி வளாகத்திலும் கிடைக்கும்.

மாணவிகள் அனைவரும் இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றது.

அதிரை தாருத் தவ்ஹீத்
அதிராம்பட்டினம்.

பிலால் நகர் இஸ்லாமியப் பயிற்சி மைய ஆண்டு விழா நிகழ்ச்சியில் சிறுவர், சிறுமிகள் கெளரவிப்பு !




அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் ஒரு அங்கம் இஸ்லாமியப் பயிற்சி மையம். இந்த மையம் கடந்த 4 ஆண்டுகளாக பிலால் நகரில் இயங்கி வருகிறது. இங்கு தினமும் சிறுவர் சிறுமிகளுக்கு அடிப்படை இஸ்லாமியக்கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. இந்த கல்விக் கூடத்தில் சுமார் 136 சிறுவர் சிறுமிகள் இஸ்லாமிய மார்க்க கல்வி கற்று வருகின்றனர். தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 5 மணி முதல் 6 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்த மையத்தில் குரான் ஓதும் பயிற்சி, குர்ஆன் எழுத்துப்பயிற்சி, சூரா மனனம், துஆ மனனம், பேச்சு பயிற்சி, இஸ்லாமிய வரலாறு உள்ளிட்டவை தகுதி வாய்ந்த ஆலிமாக்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு கல்வி பயிலும் சிறுவர் சிறுமிகளின் அறிவுத்திறனை வளர்க்கும் நோக்கில் ஆண்டு இறுதியில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் பிலால் நகர் இஸ்லாமியப் பயிற்சி மையத்தில் இரண்டாம் ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு பயிற்சி மையத்தின் தலைமை ஆசிரியை ஆலிமா செளதா அஹமது ஹாஜா தலைமை வகித்தார்.

இதில் கிராத் போட்டி, சூரா மனனம், துஆ மனனம், பேசுக்கலை போட்டி, வினாடி-வினா, இஸ்லாமிய வரலாறு உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர் சிறுமிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டன. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அதிரை தாருத் தவ்ஹீத் செயலர் ஜமீல் M. ஸாலிஹ், பொருளாளர் மீடியா மேஜிக் நிஜாமுதீன், பயிற்சி மையத்தின் ஆசிரியைகள் செளதா அஹமது ஹாஜா, ஜாஸ்மீன் கமாலுதீன், ஹைருனிஷா அஹமது, பெமினா அஹமது நலீம் உள்ளிட்ட ஆலிமாக்கள் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

இதில் ஆறுதல் பரிசுகள் உட்பட மொத்தம் 130 பரிசுகள் சிறுவர் சிறுமிகளுக்கு வழங்கப்பட்டன. மேலும் கடந்த 3-1/2 ஆண்டுகளாக இஸ்லாமிய பயிற்சி மையத்தில் வெள்ளிக்கிழமை தோறும் நடந்து வரும் இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்துகொண்ட 40 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, இவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.






Thursday, April 21, 2016

துபையில் 24.04.2016 அன்று கோவை அய்யூப் அவர்களின் மார்க்க விளக்க சொற்பொழிவு


அன்பார்ந்த யுஏஇ வாழ் சகோதரர்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.....

மதுக்கூர் தவ்ஹீத் தர்மஅறக்கட்டளையின் ( MTCT) துபை மண்டலம் சார்பாக மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி ஒவ்வோர் மாதமும் சிறப்பாக நடைபெற்று வருவது தாங்கள் அறிந்ததே.

அதே போல் இன்ஷாஅல்லாஹ் இந்த மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை 24th Apr' 2016 அன்று

தாயகத்திலிருந்து வருகை தரும் கோவை அயூப் அவர்கள் "நல்லோர்களின் பிரார்த்தனைக்கு ஆளாகுவோம்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற இருக்கின்றார்கள்.

சத்திய இஸ்லாத்தை சரியாக அறிந்து கொள்வோம்.மனித சமூகத்திற்கு படைத்த இறைவனால் வகுக்கப்பட்ட வாழ்க்கை நெறியான இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து அதன்படி செயற்பட அன்புடன் அழைக்கும்

For Madukkur Thowheed Charitable Trust



Wednesday, April 20, 2016

மதுக்கூரில் 25.04.2016 திங்கள் அன்று உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி


மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை சார்பாக இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 25 ஏப்ரல்' 2016 திங்கள் கிழமை அன்று மஸ்ஜித் இஃலாஸ் பள்ளி வளாகத்தில் கல்வி குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

மாணவர்கள் +2 வில் எந்த வகையான கோர்ஸ்களை தேர்தெடுப்பது அதன் தொடர்ச்சியாக என்ன படிக்கலாம் எங்கே படிக்கலாம் உயர் கல்வி வழிக்காட்டு மற்றும் ஆலோசனை என்பது தொடர்பாக மிக அவசரமான கண்ணோட்டம் செலுத்த வேண்டிய நிலை எழுந்துள்ளது.

மேலும் அடிப்படை ஸ்போகன் இங்கிலீஸ் இரண்டு மணி நேர வகுப்பாகவும் ஏற்படுத்த இருக்கின்றோம்.

மனிதவள மேலாண்மை பயிற்சியாளர் அபுதாலிப் அவர்களை கொண்டு மேற்கூறிய நிகழ்ச்சியை நடத்த உள்ளோம்.

10, +1 & +2 வகுப்பு மாணவர்களே பெற்றோர்களே உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.


For Madukkur Thowheed Charitable Trust

Wednesday, April 13, 2016

அதிரையில் புதிய பள்ளிவாசல் இயங்கத் துவங்கியது

அதிரையில் இன்று (14.04.2016) சுபுஹ் தொழுகை முதல் தனிநபர் ஒருவரால் கட்டப்பட்ட புதிய பள்ளிவாசல் (முஸல்லா எனும் தொழுகை கூடம்) புதிய குடியிருப்புக்கள் நிறைந்த சானா வயல் பகுதியில் இயங்கத் துவங்கியது. 

இந்தப்பள்ளி குர்ஆன் சுன்னா அடிப்படையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் எந்த ஒரு இயக்கத்தினரையும் சார்ந்ததல்ல, மேலும் இப்பள்ளி தொடர்ந்து இப்பள்ளியை கட்டிய தனிநபர் குடும்பத்தின் நிர்வாகத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் என தெரிவதை தொடர்ந்து இம்முடிவை இப்பகுதி மக்கள் முழுமனதோடு வரவேற்கின்றனர். எந்த இயக்கத்திற்கும் இப்பள்ளியை தாரைவார்க்கக்கூடாது என்கிற முடிவில் இப்பள்ளியை கட்டியவர் தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும் எனவும் விரும்புகின்றனர்.





Photo credit: TIYA WhatsApp Group

துபையில் நாளை (15.04.2016) மாபெரும் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)