உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, August 23, 2015

உலகை மாற்றிய குர்ஆன் - எதிர்ப்பும், சூடான பதிலும்

புகழ்பெற்ற பிரேசில் நாட்டு எழுத்தாளரும், "The Alchemist" என்ற பிரசித்தி பெற்ற நூலின் ஆசிரியருமான 'பவ்லோ கோயல்ஹோ' என்பவர் கடந்த 08.08.2015 அன்று தனது முகநூல் பக்கத்தில், உலகை மாற்றிய நூற்கள் என்ற பொருளின் கீழ் புனித திருக்குர்ஆனின் புகைப்படத்தை பதிவேற்றியிருந்தார்.


இந்த பதிவிற்கு கடந்த 20.08.2015 வரை சுமார் 40 ஆயிரம் 'லைக்குகளும்' சுமார் 5 ஆயிரம் 'ஷேர்களும்' கிடைத்துக் கொண்டிருந்த பொழுது,

இஸ்லாத்தை பற்றியும் அல்குர்ஆனை பற்றியும் தவறான கருத்துக்களை உள்வாங்கியிருந்த ஒருவரிடமிருந்து மட்டும் 'ஆமாம், இந்த புத்தகம் வன்முறை மற்றும் கொலைகளை கற்பிக்கும் நூல்' என்ற அபாண்ட சாடலும் வந்தது. (அவர் குர்ஆனை குற்றம் காணும் நோக்கிலாவது வாசித்திருந்தால் அவ்வாறு சொல்லியிருக்க மாட்டார் என்பது வேறு விஷயம்)


இனி தான் விஷயமே உள்ளது, லைக்குகளாலும் ஷேர்களாலும் 'பவ்லோ கோயல்ஹோ' மெய்மறந்து கனவுலகில் சஞ்சரித்துவிடாமல், அல்குர்ஆன் குறித்து தவறான எண்ணம் கொண்டிருந்தவருக்கு கீழ்க்காணும் மிக அருமையான பதிலை தந்துள்ளார்.


'உங்களுடைய கருத்து உண்மையில்லை' நான் ஒரு கிருஸ்தவனாக இருந்து கொண்டு சொல்கிறேன், 

பல நூற்றாண்டுகள் 'சிலுவை போர்கள்' என்ற பெயரில் கிருஸ்தவத்தை வாளின் முனையில் வலுக்கட்டாயமாக பரப்பியது யார்?

பெண்களை சூனியக்காரிகளாக கருதி கொலை செய்து வந்தது யார்?

இயற்பியல் விஞ்ஞானி கலீலியோ கலிலீ போன்றோருக்கு தண்டனைகள் வழங்கியதன் மூலம் அறிவியல் புரட்சியை தடுக்க முனைந்தது யார்?

இதற்கு காரணம் மதங்கள் அல்ல மாறாக அதை பின்பற்றுவோர் தங்களுக்கு சாதகமாக வளைக்க முற்படுவதால் ஏற்படும் விளைவுகளே என சூடாக பதிலளித்துள்ளார்.

அல்லாஹ் அவர்கள் இருவரையும் இஸ்லாத்தை விளங்கி பின்பற்றக்கூடிய மக்களாக ஆக்கியருளவானாக!

தமிழில்
அதிரை அமீன்

மூலம்
அல் அரபியா

Tuesday, August 18, 2015

அதிரையில் ஒர் கூகுள் ஸ்ட்ரீட் மனிதர் - நெய்னா முகமது தம்பி


அவ்வப்போது நாம் சாமானிய மனிதர்களின் சாதனைகளையும், சேவைகளையும் நினைவுகூர்ந்து வருகிறோம். அதன் வரிசையில் நம் சமகால சாமானிய சாதனையாளராக வாழ்ந்துவரும் கீழத்தெருவைச் சேர்ந்த மூத்த சகோதரர் நெய்னா முகமது தம்பி அவர்களை பற்றிய மிகச்சில விபரங்களை பகிர்ந்து கொள்வது நம்மில் மூத்தோருக்கு பசுமையான நினைவுகளாகவும், இளையோருக்கு உத்வேகம் தரும் ஒருவரை பற்றி அறிந்து கொண்ட புத்துணர்வும் கிடைக்கலாம்.

உலக முஸ்லீம்களால் பெரிதும் போற்றப்படும் ஹதீஸ்கலை அறிஞர், ஸஹீஹ் அல் புஹாரி மற்றும் பல கிரந்தங்களின் ஆசிரியர் இமார் புகாரி அவர்கள் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹதீஸ்களை அதன் அறிவிப்பாளர் தொடர் மற்றும் அறிவிப்பாளர்களில் சுமார் 1800 பேருடைய வரலாற்றுடன் பிழையற மனனம் செய்து வைத்திருந்ததை அறிந்து வியக்கின்றோம்.

சுமார் 13 நூற்றாண்டுகளுக்கு முன் கம்ப்யூட்டர் என்ற நாமம் கூட இவ்வுலகில் இல்லாத நேரத்தில் இமாம் புகாரி போன்ற சூப்பர் மனித கம்ப்யூட்டர்களை அல்லாஹ் உலகிற்கு அளித்தான். இன்று குறைமதியாளர்கள் அறிஞர்களாக அறியப்படும் காலத்தில் கம்ப்யூட்டர்கள் மனிதர்களுக்கு பதிலாக கோலோச்சிக் கொண்டுள்ளன என்ற சிறு ஒப்பிடுதலுடன் 'கூகுள் தம்பி' மன்னிக்கவும் 'நெய்னா முகமது தம்பி' அவர்களின் நினைவாற்றல் பற்றி சிறிது அசைபோடுவோம்.


சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக... நம் அதிரையின் மேலத்தெரு, கீழத்தெரு மற்றும் நெசவுத்தெருவில் நடைபெறும் அனைத்து திருமணம், கத்னா போன்ற சுன்னத்தான காரியங்களுக்கும் அழைப்பிலும், அழைக்கப்படுவதற்கும் தவிர்க்க முடியாத ஒருவர் தான் நமது நெய்னா முகமது தம்பி (வயது 80) அவர்கள். ஏனெனில் நமது ஒவ்வொருவர் குடும்பத்தின் பிரதிநிதியாக நமக்கு வேண்டியவர்களை வீடு வீடாக சென்று அழைப்பவரே அவர் தான். ப்பூ.. இதிலென்ன ஆச்சரியம் என அலட்சியம் வேண்டாம். அவருடைய சேவை தொடர்வாரின்றி நிற்கும்போது தான் அவருடைய அருமையை, தேவையை முழுமையாக உணர முடியும்.

நெய்னா முகமது தம்பியின் நினைவும், சிறப்பும்:
1. மேலத்தெரு, கீழத்தெரு, நெசவுதெருவை சேர்ந்த சுமார் 800 குடும்பங்கள்.

2. அவர்களின் குடும்ப பெயர்கள் அந்தக்கால தமிழ் இனிஷியலுடன்.

3. அவர்களின் தற்போதைய குடும்பத்தலைவரின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கில இனிஷியலுடன்.

4. அவர்களின் சந்ததிகளின் பெயர்கள் ஆங்கில இனிஷியலுடன்.

5. இறந்தோர்களை நினைவு பதிவிலிருந்து அகற்றுதல்.

6. புதிய இளைஞர்களை நினைவில் சேர்த்தல்.

7. வெளிநாட்டு சபுராளிகளின் பெயர்களை அவர்களின் வருகை மற்றும் புறப்பாடுக்கேற்றவாறு அப்டேட் செய்து கொள்ளுதல்.

8. புதிய வீடுகளை, புதிய குடியிருப்புகளை நினைவேற்றல்.

9. மேற்படி 3 தெருக்களின் ரோடுகள், சந்துகள், கொல்லைபுற வீடுகள் பற்றி அறிந்திருத்தல்.
10. ஒரே வீட்டுக்குள் வாழும் 2 அல்லது மேற்பட்ட குடித்தனங்களை பற்றிய அறிவு.

11. திருமண பத்திரிக்கை வைக்க தகுதி கொண்ட ஒரே வீடடிற்குள் இருக்கும் ஒன்றுக்கு மேற்பட்டவர்களை நினைவில் வைத்திருத்தல்.
.
12. மேற்படி 3 தெருக்களின் விரிவாக்க பகுதிகளை அறிந்திருத்தல்.

13. மேற்படி 3 தெருவை சேர்ந்தவர்கள் அதிரையின் வேறு தெருக்களில் குடியேறி இருந்தால் அதையும் நினைவில் சேர்த்தல்.

14. பத்திரிக்கை கொடுக்கும் எண்ணிக்கையை வைத்தே எத்தனை பேர் வலீமாவிற்கு வருவார்கள், எவ்வளவு சஹனிற்கு சாப்பாடு ஏற்பாடு செய்ய வேண்டும் என துள்ளியமான ஆலோசணை.

15. எத்தனை காலம் கழித்தும் சந்திக்கும் எந்த நபரையும் புன்முறுவலுடன் பெயரை சரியாக கூறி அழைத்தல்.

16. & சன்ஸ், & பிரதர்ஸ் என எழுதி திருமண அழைப்பிதழின் விரயத்தை ஒரளவு கட்டுக்குள் கொண்டுவந்தவர்.

17. இந்த தள்ளாத வயதிலும் நடந்தே அனைத்து பகுதிகளுக்கும் செல்வதுடன் இன்னும் அழகிய நினைவாற்றலுடன் 'ஓர் சதாவதானிக்கு ஒப்பாக' இருப்பது அல்லாஹ் அவருக்குச் செய்துள்ள மகா அருளே அன்றி வேறில்லை.

என இன்னும் பல சிறப்புக்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

யாரால்? எப்படி சாத்தியமாயிற்று!!!!

ஒரு முறை இளைஞனாக இருக்கும் பொழுது, கம்புக்கட்டு கணக்கப்பிள்ளை அப்பா என அன்புடன் அழைக்கப்பட்ட அ.மு.மு.முகமது சேக்காதி அப்பா அவர்களுடன் திருமண பத்திரிக்கை விநியோகம் செய்ய சென்ற போது தெரு பற்றிய விபரங்கள், குடும்பம் பற்றிய விபரங்கள், இனிஷியல் பற்றிய விபரங்கள் என திருமண பத்திரிக்கை விநியோகத்திற்கு தேவையான அனைத்து விபரங்களையும் அல்லாஹ்வின் நாட்டத்தல் இயற்கையாக உள்வாங்கிக் கொண்டுள்ளார். கணக்கப்பிள்ளை அப்பா அடுத்த மாதமே இன்னொரு தேவைக்கான பத்திரிக்கை விநியோகத்திற்கு உதவ வேண்டி அழைத்தபோது தனது நினைவிலிருந்து பெயர்களை சொல்லி, வீட்டையும் விலாசத்தையும் வரிசை கிரமமாக சொன்னவுடன் கணக்கப்பிள்ளை அப்பா திருமண பத்திரிக்கை எழுதி விநியோகிக்கும் பொறுப்பை மகிழ்வுடன் ஒப்படைத்தாராம், அன்று தொடங்கிய நடை இன்றும் தொடர்கிறது,  வாகனங்களை தொட்டதில்லை.

மேற்படி 3 தெருக்களும் இன்று கிளைவிட்டு, சவுக்கு கொல்லை, சானா வயல், கிராணி நகர், மொந்தங்கொல்லை, கொக்குகொல்லை, காட்டுப்பள்ளி தர்கா, பிலால் நகர், கொசவங்கொல்லை என விரிவாக்கம் அடைந்துள்ளதையும், 400 தலைகட்டுகள் இன்று 800 தலைக்கட்டுகளாக மாறியுள்ளதையும் அவருக்கேயுரிய புன்முறுவலுடன் சிலாகித்து சொல்கிறார் கேட்ட நமக்குத்தான் தலைசுற்றல் ஏற்பட்டது. ஒரு சில விரிவாக்க பகுதிகளை பற்றி அவர் சொல்லித்தான் நாங்கள் அறிந்தோம் ஆனால் அவரோ அங்குள்ள ஒவ்வொரு செங்கல்லின் பெயரையும் அறிந்து வைத்துள்ளாரே என்ற வியப்பால் ஏற்பட்ட தலைசுற்றல் அது.

திருமண பத்திரிக்கை விநியோகத்தின் போது புதிதாக ஏதாவது புதிதாக வீடுகள் கட்டப்பட்டால் அப்போதே அந்த வீடுகள் குறித்த விபரங்களை சேகரித்து விடுவேன் என தான் கற்றுக்கொள்ளும் நினைவாற்றலின் ரகசியத்தை வெள்ளந்தியாக சொன்னார்.


தனக்குப்பின் தன்னுடைய சேவையை தொடர வேண்டும் என்பதற்காக கடந்த ஒரு வருடமாக தனது பேரன் பாபு என்கிற தையூப் அவர்களுக்கு செயல்முறை பயிற்சியும் அளித்து வருகிறார் என்றாலும் இதுவரை எதிர்பார்த்த பலனில்லை ஆனாலும் நம்பிக்கையுடன் பயிற்சியளிப்பை தொடர்கின்றார். அதேவேளை தனது நினைவிலுள்ள ஆவணத்தை சம்பந்தப்பட்ட தெருக்களை சேர்ந்த சங்கங்கள் பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும் எனவும் மனதார விரும்புகிறார்.

பலரிடமும் பெற்றுள்ள நல்ல பெயரையும், பாராட்டையும் நினைவுகூறும் நெய்னா முகமது தம்பி அவர்கள் ஒருமுறை கடற்கரை தெருவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவருக்கு திருமண பத்திரிக்கை விநியோக விடயத்தில் உதவியதையும் அதனால் திருப்தியுற்ற அந்த பிரமுகர் தன்னை கண்ணியப்படுத்திய நிகழ்வையும் பூரிப்புடன் உள்ளத்திலிருந்து வந்த வார்த்தைகளால் பகிர்ந்து கொண்டார்.

மேலும் ஆங்கில மருத்துவர்கள் கத்னா செய்யும் இன்றைய காலத்திலும், பாரம்பரிய முறைப்படி கத்னா செய்து கொள்ள தன்னை நம்பி வருவோரும் இருக்கிறார்கள் என பெருமிதம் கொள்கிறார்.

புகழ்பெற்ற பாரம்பரிய பிள்ளைபேறு மருத்துவரான மரியம் கனி அவர்களின் மருமகனும், பள்ளிப்படிப்பை தாண்டாதவருமான இந்த அனுபவ மேதை, தனது சேவை பயணத்தில் ஒரே ஒரு சலனத்தை தவிர மற்ற அனைத்தும் சுகமே என்பதுடன் 1980ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஏகத்துவ மறுமலர்ச்சியின் தாக்கம் கூட தன்னை பாதிக்காத அளவிற்கு முஹல்லாவாசிகள் அனைவரின் அன்பையும் பெற்றுள்ளதாக திருப்தி அடைந்துள்ளார்.

இறுதியாக, இன்று பள்ளி, கல்லூரி என நீக்கமற நிறைந்திருக்கும் மனப்பாட உலகினருக்கு கூட கிடைக்காத நினைவாற்றலை அல்லாஹ் நெய்னா முகமது தம்பி அவர்களுக்கு விலைமதிப்பற்ற பொக்கிஷமாக வழங்கி இருக்கின்றான் என்ற உண்மையை அவரும் உணர்ந்தேயுள்ளார்.

அவரின் நினைவாற்றலில் பதிந்துள்ள நம் குடும்பங்கள் குறித்த குறிப்புக்களை கணிணிமயப்படுத்த மேலத்தெரு, கீழத்தெரு மற்றும் நெசவுத்தெரு சங்கங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள் முன்வர வேண்டும் என்ற அவர்தம் விருப்பத்தையே நாங்களும் மீண்டும் ஒருமுறை அழுத்தமாக வழிமொழிகிறோம்.

இப்போது சொல்லுங்கள், நெய்னா முகமது தம்பி அவர்களை நாம் 'கூகுள் ஸ்ட்ரீட் வீயூவின் முன்னோடி மனிதர்' என்று விளிப்பது தானே சாலச் சிறந்தது.

இவரை போன்ற சாமானிய சாதனையாளர் அதிரையின் பிற பகுதிகளிலும் கண்டிப்பாக இருப்பார்கள் என நம்புகிறோம். அறிந்தோர் அறியத் தாருங்கள்.

சந்திப்பு மற்றும் புகைப்படங்கள்
அதிரை அமீன் & S. அப்துல் காதர்

புகைப்படங்களாய் இறை இல்லங்கள் சில...

பாத்திமா மஸ்ஜித் - முஸஃபா - அபுதாபி

 
பாத்திமா மஸ்ஜித் உட்புறம்

பலூஸி மஸ்ஜித் - கண்டூட் - துபை அபுதாபி நெடுஞ்சாலை


 ஜாமிவுஸ் ஸூன்னா - அக்கரைபற்று - இலங்கை

 ஜாமிவுஸ் ஸூன்னா உட்புறம்

 மீரா ஜூம்ஆ பெரிய பள்ளி - காத்தான்குடி - இலங்கை


மஸ்ஜித் ஜாமியுல் அல் ஃபார் (சம்மான் கோட்டு பள்ளி / சிவப்பு பள்ளி) - கொழும்பு - இலங்கை



இயற்கை காட்சிகள் - மாதம்பை - இலங்கை







படங்கள்:
ஜமால் & அதிரை அமீன்

Sunday, August 16, 2015

உமி, வைக்கோல் மூலம் மின்சாரம் - வழிகாட்டும் இலங்கை


மின்சாரம், தமிழகத்தை பொருத்தவரை ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் மக்களை ஏமாற்றவும், தங்களுக்குள்ளே வசைபாடவும் பயன்படுத்தும் ஓர் சொல், இதுவே மத்திய கட்சிகளின் நண்பர்களுக்கு லாபத்தை வாரி வழங்கும் ஒரு தொழில்.

மக்களுக்கோ யார் ஆட்சிக்கு வந்தாலும் இலவசமாக தரப்படும் ஓர் வெற்று வாக்குறுதி மற்றும் நிரந்தர இம்சை.

மின்சாரம் என்பது நீர், அணு, காற்று, கடல் அலை, அனல் என அனைத்து பொருளின் மீதும் உலகெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் எடுக்க எடுக்க குறையாத ஒரு சுரபி. இதை உற்பத்தி செய்து முறைப்படுத்தி விநியோகிக்க தேவை ஒரு மக்கள் நல அரசு என்பதை பாலர் பள்ளி குழந்தையும் அறிந்த ஒன்று.

நமது நாட்டில், நமது மாநிலத்தில் நிலவும் மின் வெட்டு பிரச்சனைகளுக்கு மிக எளிய தீர்வை தருகின்றது நமது அண்டை நாடான இலங்கையில் இயங்கும் ஓர் சிறிய மின் உற்பத்தி நிலையம்.


கத்தார் நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் ஷேக் அலி அப்துல்லா அல் சுவைதி என்பாரின் முதலீட்டிலும், நமது சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் மற்றும் இரு இலங்கை நிறுவனங்களின் வடிவமைப்பிலும் இந்த மின் ஆலை கட்டமைக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் என்ற ஊரில் விவசாய கழிவுப் பொருட்களான உமி, வைக்கோல் மற்றும் எந்த நிலத்திலும் செழித்து வளரும் தன்மையுடைய ஒரு வகை வாகை மரம் ஆகியவற்றை எரிபொருளாக கொண்டு மின்சாரம் தயாரிக்கின்றனர்.


(இந்த மரத்தின் சரியான பெயரை அறியத் தந்தால் திருத்திக் கொள்வோம்)

முன்னெச்சரிக்கையாக சுமார் 5 ஆண்டுகளுக்குத் தேவையான உமி மற்றும் வைக்கோல் சேமித்து வைக்கப்பட்டு, 2009 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டு, 2011 ஆம் ஆண்டு 2.5 மெகாவாட் மின் உற்பத்தியுடன் செயற்பாட்டுக்கு வந்த இந்த மின் ஆலை 2015 ஆம் ஆண்டு இறுதிக்குள் 5 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கவும், 2016 ஆம் ஆண்டுக்குள் நீராவி கொதிகலன்கள் உதவியுடன் 10 மெகாவாட் உற்பத்தி செய்யவும் இந்த மின் ஆலை இலக்கு நிர்ணயித்துள்ளது. 


சுமார் 1000 பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாவும் வேலைவாய்ப்பை வழங்கி, விவசாய கழிவுப் பொருட்களுக்கும் சந்தை மதிப்பை ஏற்படுத்தி, மாசில்லா சுற்றுச்சூழலுக்கும் வாய்ப்பேற்படுத்தியுள்ளதுடன் வாகை மர தழைகளின் அபரிமித விளச்சலால் கால்நடைகளுக்கு உணவும் தாராளமாக கிடைக்கும் நிலையை இந்த மின் ஆலை திட்டம் ஏற்படுத்தியுள்ளது.

இது ஒருபுறம் செயல்பட, மன்னார் வளைகுடாவை ஒட்டியுள்ள புத்தளம் கடற்கரை பிரதேசங்களில் காற்றாலைகளை நிறுவியும் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றனர்.

அரசு நினைத்தால் மக்களை பங்குதாரர்களாக ஏற்று ஒவ்வொரு விவசாயம் மற்றும் கடற்சார் பிரதேசங்களில் இத்தகைய எளிய ஆனால் பலன் நிறைந்த மின் ஆலைகளை அமைக்கலாம்.

தமிழகத்தில் உமி, வைக்கோலுக்கு தான் பஞ்சமா? அல்லது கடற்கரைகள் தான் இல்லையா?  இதுபோன்ற சிறு சிறு மின் உற்பத்தி ஆலைகளை நிறுவினாலேயே காலப்போக்கில் மின்மிகை மாநிலமாக மாறலாம். மாறுமா? தன்னலமற்ற மக்கள் நல தலைவர்கள் கிடைப்பார்களா?

நம்பிக்கையுடன்
அதிரை அமீன்

படங்கள்: ஜமால்

Wednesday, August 12, 2015

6 வளைகுடா அரபு நாடுகளை இணைக்கும் ரயில் 2018 ஓடும் - புதிய திட்டம் அறிவிப்பு



வளைகுடா ஒத்துழைப்பு நாடுகள் என அழைக்கப்படும் குவைத், சவூதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய 6 எண்ணெய் வளமிக்க அரபு நாடுகளை இணைக்கும் புதிய இரயில் திட்டம் 2018 ஆம் ஆண்டில் ஓடத் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்திலிருந்து துவங்கும் இரயில் சவூதி வழியாக பஹ்ரைன், கத்தார் நாடுகளை கடந்து அமீரகத்தை தாண்டி ஓமனின் மஸ்கட் நகரை சென்றடையும் எனவும், இடையிலுள்ள பஹ்ரைன் தீவும் கத்தார் நாடும் தனியான துணை பாதை மற்றும் கடல்வழி பாலங்கள் மூலம் சவூதி இரயில் வழித்தடத்துடன் இணைக்கப்படும்.

சுமார் 15.4 பில்லியன் டாலர் செலவில் 2117 கி.மீ தூரத்திற்கு கட்டமைக்கப்படவுள்ள இந்த இரயில்வே திட்டத்தில் பயணிகள் இரயில் 220 km/hr வேகத்திலும், சரக்கு இரயில்கள் 80 முதல் 120 - 220 km/hr வேகம் வரை செல்லும். இந்த இரயில்கள் அனைத்தும் டீசலை எரிபொருளாக கொண்டு இயங்கும்.

நன்றி
குவைத் டைம்ஸ்
http://news.kuwaittimes.net/website/gulf-railway-project-to-be-completed-in-2018/

தமிழில்
அதிரை அமீன்


அதெல்லாம் சரி, இல்லாத ஊருக்கெல்லாம் இரயில் வருது ஆனா இருந்த ஊருக்கு இனி எப்போ இரயில் வரும், பேசாம அதிரையை அரபு நாட்டுக்கு எழுதி கொடுத்துருவோமா! அட்லீஸ்ட் இருந்த ரயிலாவது திரும்ப கிடைக்கலாம்!!

நம்மவூரு பக்கத்திலே ஒரு அக்குபஞ்சர் டாக்டர்

இதுவோர் பரிந்துரையே அன்றி வர்த்தக விளம்பரமல்ல!

ரம்மியமான ஒரு மாலை பொழுதில், சிலுசிலுவென தூவிய சாரலில் இன்பமாய் நனைந்த நிலையில் 'முஹமது ரஃபி' என்ற இந்த இளைஞரை அவரது அறந்தாங்கி வீட்டில் சந்தித்தோம், ஏன்?


மாற்றுவழி மருத்துவமாக உலகிற்கு அறிமுகமான ஆங்கில மருத்துவம் இயற்கை மருத்துவ முறைகளை பின்னுக்குத் தள்ளி, பக்கவிளைவுகள், பொருளாதார விரயம், வலியுடன் கூடிய ரண சிகிச்சை, அலைச்சல் என பல தீமைகளை தன்னகத்தே கொண்டிருந்தாலும் இன்றைய உலகில் மனிதர்களால் முதன்மை  மருத்துவமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது மனித முரணே.


நாட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம், உணவே மருந்து, ரெய்கி, மூலிகை மருத்துவம், உடற்பயிற்சி போன்று பக்க விளைவுகள் அற்ற, பணத்திற்கும் உடலுக்கும் பாதுகாப்பான மருத்துவ முறைகளில் ஒன்றே சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவம். (தொடு அக்குபஞ்சர் மருத்துவம் என்ற பெயரிலும், ஒரு சில நாள் மட்டும் அக்குபஞ்சர் மருத்துவத்தை கற்று விட்டும் பல போலிகள் உலா வருவது குறித்தும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது) இவர் அந்த தொட்டு விளையாட்டு மருத்துவரல்ல மாறாக சித்த வைத்திய பரம்பரையில் பிறந்து தனது தந்தையுடன் மும்பையில் மருத்துவ தொழில் செய்து கொண்டிருக்கையில், மும்பை மாநகரில்,


"THE BAREFOOT ACUPUNCTURISTS PROJECT" என்ற சர்வதேச திட்டத்தின் கீழ் உலகின் தலைசிறந்த வெளிநாட்டு அக்குபஞ்சர் மருத்துவர்களிடம் நேரடியாக பயின்றவர். மஹாராஷ்டிரா அப்பல்லோ மருத்துவமனையில் அக்குபஞ்சரிஸ்டாக பணியாற்றியவர்.





இலங்கையில் சில ஆண்டுகளாக பல்வேறு அக்குபஞ்சர் மருத்துவ முகாம்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளார், கற்று கொள்வதற்கு மிக எளிமையான அக்குபஞ்சர் மருத்துவத்தை கற்றுத் தருவதற்கும் அவர் தயாராகவுள்ளார். 

மேலும் இந்த மருந்தில்லா மருத்துவத்தின் மூலம் 'மூட்டு வலி', கை கால் கடுப்பு, கழுத்து பிடிப்பு, முதுகுவலி, குழந்தைகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் என பல்வேறு நோய்களுக்கும் இந்த சீன குத்தூசி வைத்திய முறையின் மூலம் தீர்வு காண்கிறார், அத்தகைய தீர்வுகளும் அல்லாஹ்வின் நாட்டத்தால் மட்டுமே ஏற்படுகின்றன என்பதையும் சேர்த்து சொல்ல அவர் மறப்பதில்லை.

பல்லாயிரக்கணக்கில் செலவு செய்தும் ஊர் ஊராக சென்றும் அல்லோபதி (ஆங்கில) வைத்தியம் பார்க்கத் தயாராகவுள்ள நாம் ஏன் இந்த எளிய, பொருளாதார விரயமில்லாத, அடாவடி கட்டணமில்லாத, மருந்தில்லாத மருத்துவ முறையை ஒரு முறை முயற்சிக்கக்கூடாது?

மாதத்தில் 3 வாரம் தமிழக முழுவதும் சுற்றுப்பயணத்திலும், ஒரு வாரம் மட்டும் அறந்தாங்கியிலும் தங்கி இருந்து அக்குபஞ்சர் வைத்தியம் செய்யும் மருத்துவர் முஹமது ரஃபி அவர்களை 80 98 66 11 60 என்ற எண்ணில்  தொடர்பு கொண்டு முன்பதிவின் மூலம் நேரடியாகவோ அல்லது நமது வீட்டிற்கே வரவழைத்தும் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த எளிய மருத்துவ முறையை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் சமுதாய அமைப்புக்கள் ஊர்தோறும் சிறப்பு அக்குபஞ்சர் மருத்துவ முகாம்களை நடத்த முன்வர வேண்டும்.

சந்திப்பில் உதவி
அப்துல் ஹக்கீம் - அறந்தாங்கி

புகைப்படம்
ஜமால் முஹமது - அதிரை

தோள்பட்டை வலிக்கு ஒரு நாள் அக்குபஞ்சர் வைத்தியம் மூலம் குணமடைந்தவன் என்ற வகையில் நன்றியுடன் பரிந்துரைப்பது

அதிரை அமீன்

Tuesday, August 11, 2015

14.08.2015 அன்று துபையில் மவ்லவி அப்துல் பாசித் அவர்களின் மார்க்க விளக்க நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ்... 
மௌலவி. அப்துல் பாஸித் புஹாரி அவர்களின் 
மார்க்க விளக்க நிகழ்ச்சி
 
 
அன்புடன்,
தவ்ஹீத் இல்லம் தஃவா குழு,
டெய்ரா, துபை
Tel: 00971 4 2981931